My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

11.8.10

ஹைய்யா...! ஆகஸ்டு பதினஞ்சி...!

ஹைய்யா...! ஆகஸ்டு பதினஞ்சி...!

எனக்கொண்ணும் தலகால் புரியலீங்க,

இந்தா அந்தான்னு வந்துருச்சி
ஆகஸ்டு பதினஞ்சி.
சொதந்தரம் வாங்கி எத்தனியோ வருஷமாச்சாம்.
இந்தப் பாமரனுக்குப் புல்லரிக்குதுங்க...

தீவாளி, பொங்க மதிரி,
நல்ல வேளையா செலவு வைக்காத பண்டிகை.
தீவாளின்னா சங்கராச்சாரி சாமி
சன் டிவில வந்து
இன்னைனைக்குத்தான் தீவாளி,
இன்னின்னைக்கு கறி சாப்பிடலாம் / சாப்பிடகூடாது
அப்படீன்னு தெள்ளத் தெளிவா
மொத நாளே, முக்கிய அறிவிப்பா,
அற்புதமா சொல்லிப்போடுவாரு.

நல்லவேளை,
நேத்தைக்குத்தான் ஒரு குடிகாரன்
அறிவிச்சிக்கிட்டே, ஒளரிக்கிட்டே போனான் :
"டேய், தீவிரவாதிங்க
டெல்லியில ரெண்டுபேர் மாட்டிகிட்டாங்களாம்,
சுதந்திர தின விழாவிலே
குண்டு போடப்பாத்தாங்களாம்,
எண்டிடிவில சொல்றாங்களாம்.
கைது பண்ணிட்டாங்களாம்.
உளவுத்துறை செய்திடா,
எச்சரிக்கையாயிருங்க..."
அவன் உளருகிறான் என்றாலும்
அந்த உளரல் சரிதானோ?
எப்பவும் போல உளவுத்துறை அறிக்கைவிட்டால்...
அடுத்து வரப்போவது ஆகஸ்ட்டுப் பதினஞ்சி.
கண்றாவி - அந்தப்பக்கம் பாகிஸ்தான் இருக்குறதால
நம்பாம இருக்கமுடியுமா?
அட ராமா... காலங்கெட்டுப்போச்சிடா.

***

எது எக்கேடும் கெட்டுப்போகட்டும்,
டாஸ்மாக் மூடலைன்னா சரிதான்,
ஆஊன்னா, காந்திஜெயந்தி
மகாவீரு மண்ணாங்கட்டீன்னு
கடைய மூடிரானுவோ...


ஆகஸ்டுப் பதினஞ்சண்ணிக்கி
வந்தேமாதரம் - புது தொனியிலே
புத்தம்புது மெட்டுல
ஏஆர் ரகுமான் பாடும்போது
ஏகப்பட்ட இந்தியாவும்
என் கண்முன்னே
கலர் கலராய் கிளர்ந்தெழும்.

சன் டிவிய திருப்பினா
சாலமன் பாப்பைய்யா.
'சந்தோஷம் கொடுப்பது
ஆணா அல்லது பெண்ணா'
பட்ட்டிமண்டபத்தை நினைத்தாலே
பட்டா, கிளுகிளுப்பூட்டுது.
பிளஸ் - திரைக்குவந்த சில நாட்களேயான
புத்தம்புது திரைப்படம்.

கலைஞ்சர் டிவில முழு நேரத்துக்கும்
மானாட - மயிலாட.
நேரம் அனுமதித்தால்
பேரன்மார்களின் புத்தம்புது,
திரைக்கு வந்த சில நாட்களேயான...
புரியலன்னா... போடாங்கொய்யா!

ராஜ் டிவில எப்பவும்போல
வீரபண்டிய கட்டபொம்மன்.

சிறப்பு ஒளிபரப்பாக
டில்லியிலிருந்து
காலங்க்காத்தாத்தால,
டாஸ்மாக் தொறக்கரதுக்கு முன்னாலயே
உயிருள்ள ஒலிபரப்பு.
தூர்தர்ஷன்லதான்.
நாட்டுப் பற்றுள்ளவங்க
கண்டிப்பாப் பாத்தேயாகணும்.
ஜன நாயகத்தின் ஜனாதிபதி
ஓரிரு உரையாற்றுவார்.
அவரைப் பின்னூட்டமிட்டு
பிரதமரும் பிரமாதிப்பார்.
அந்தப் பேருரையில்
பாகிஸ்தான் வெட்கங்க்கெட்டுப் போகும்.
எதிரிகளை எச்சரிப்பதிலேயே
பேருரையிருப்பதால்
எதிரில் அமர்ந்திருக்கும்
சீட்டுப் பிடித்தவர்கள்
சற்று நெளிந்துதான் போவார்கள்.
நல்ல வேளையாக எலிகாப்டரும் ஏரொப்ளானும்
எமகாதக வேகத்தில் பூவைத்தூவும்போதுதான்
புளகாங்கிதமடைவார்கள்.

***

என் குழந்தைகளுக்கு
இனிக்கும் மிட்டாய்கள்.

என் மனைவியும் தயங்கித் தயங்கி
கையேந்தி ரெண்டு மிட்டாய்கள்
தவராமல் வாங்கிவிடுவாள்.
ஒன்று அவளுக்கு.
இன்னொன்று எனக்கு.
ஆனால் திரை மின்னல்காளாலும்
சின்னத்திரைச் சீரல்களாலும்
குவார்ட்டர் போதையினாலும்
மறுதலித்துக் குறட்டை விட்டதால்.
மறு நாள் காலைவரை
அதாவது -
ஆகஸ்டுப் பதினாறு காலைவரை
ஈ மொய்த்துக்கொண்டிருக்கும்
அந்த மிட்டாய்.
மறு நாள், யாரும் பார்க்காதவாறு,
அதைக் காலால் எட்டி உதைத்துவிட்டு
எப்பவும்போல 'வேலைக்கு ஓடு'.


***

ஆகஸ்ட்டுப் பதினஞ்சி -
ஒரு நாள் உற்சாகம்;
நாளை எப்போதும்போல
வாழ்க்கை ஒரு 'சாகசம்'.

- புதிய பாமரன்.

4.8.10

ச்சே... சீ...செம்மொழி மண்டப உலா

கோவைப் பந்தலிலே,
கோடிகளிலே
தமிழுக்குக் காப்பு.
முன்வரிசையில் முதல்வர்;
பாராட்டுகளில் திகட்டிப் போனார்
அடுத்த தேர்தலில்
தமிழ்க் குடிகளின்
ஓட்டுகளில் மூழ்கிப் போவார்
முதல்வருக்குப் பக்கத்தில்அமைச்சர் பெருமக்கள்;
ஆடி, ஓடி, ஆய்ந்து, ஓய்ந்து, அலுத்து,
முதல்வர் சிரித்தால் இவர்களும் சிரித்து,
அவர் அழுதால், இவர்கள் மூக்குச்சிந்தி,
அரங்கத்தில் ஓய்வெடுக்கிறார்கள்.
பாராட்டும் பதவிகளும்
அவர்களின் வாரிசுகளுக்கும்உண்டென்றரிக.
பின் வரிசயில்
பாதம் நக்கிப் பாவலர்கள்.
எச்சிலால் பாதம் கழுவி
பரிசில் வாங்க்கிப் போவார்கள்.
பணமுடிப்பும் உண்டு.
சிலருக்கு மகாபலிபுரத்தில்
நிலவொளியில்
அடிவருட
வருடாந்திர வாய்ப்புமுண்டு.
பிற்பாடு பேச்சாளர்கள்.
”தமிழே, இலக்கியமே,எங்களை வாழ வைக்கும்எம்குலத்தாயே”
என்றுசிலேடையில் சிலாகிப்பார்கள்.
ஆனால், தன்னைப் புகழ வேண்டாமெனக் கையமர்த்தும் முதல்வர்.
பெருந்தன்மயே, உன் பேர்தான் கருணா நிதியா?
அதற்கும்பின்னே அதிகாரிகள்,
அலுவலர்கள்.
’அடுத்த பிரமோசனுக்கு?’
கண்டிப்பாக ஆகட்டும் பார்க்கலாம் -
கருணா நிதி ஆட்சியிருந்தால்.
கண்டிப்பாக உங்களுக்கு ‘எஸ்மா’ -
மண்புமிகு மேடம் வந்தால்.
அதற்குப் பின்னால்
கூஊஊஊட்டம்.
கட்டுக்கடங்கா உடன்பிறப்புக்கள்.
தமிழ் வெறி தலைக்கேறி,
டப்பாங்க்குத்து ஆடினால் தேவலைஎன்னும் நிலையிலும்,
அரங்க நாகரீகமும்,
அரசியல் நாகரீகமும்,
தமிழ்ப் பண்பும்,
வட்டத்தின் முறைத்தலும்,
அவர்களைத் தடுத்தாள்கிறது.
அதர்கப்பாலே
கூர்ந்து பார்த்தால்,
நூற்றுக்கணக்கில்
அலைகடலெனத் திரண்டு
காற்று வாங்கிக்கொண்டிருக்கும்
பூர்வத் தமிழ்க்குடிகள்.
ஒரு ரூபாய் அரிசியின்
செரிமானத்துக்காக
காலாட நடந்துவந்தவர்கள்.

1.8.10

கதையல்ல...

30 பைசா டிக்கெட்டு!

காம்பவுண்டுக்கு வெளியே குடையாய்க் கவிழ்ந்திருந்த செம்பருத்திச் செடியின் கீழே சைக்கிளை நிறுத்திவிட்டு வாழையிலைக் கட்டை கேரியரிலிருந்து எடுத்துக்கொண்டு பெரிய இரும்புக் கேட்டைத் திறந்தேன்.

டி.ஆர். அனந்த கோபாலய்யர். பி.ஏ. வழக்குறைஞ்சர் என்ற பெயர்ப் பலகை சலிப்பைக் கொடுத்தது. இங்கிருந்து பார்க்கும்போது, மாடியில், சன்னல் வழியாக ஐய்யர் தெரிந்தார். கீழே குடித்தனம், மேலே அலுவலகம்.
வீட்டின் அழைப்பு மணியைத் தொட்டுக் காத்திருந்த போது, வேலைக்காரப் பெண் வந்தாள். வாழையிலைக் கட்டைக் கொடுத்துவிட்டு மேலே சென்றேன்.
"வணக்கம் ஐய்யர் சார்", என்று சொல்லி முடிப்பதற்குள்
"இலைக்கட்டு கொண்டுவந்தியோ" என்றார் ஐய்யர், வாய் நிறைய வெற்றிலைக் குதப்பலோடு.
"கீழே கொடுத்தாச்சு" என்றேன்.
"வெயிட் பண்ணு" என்றார்.

இந்த முறை அவ்வளவு கூட்டமில்லை. மார்கழியில் ஐய்யப்பன்மார்கள் அதிகமாகிவிட்டதால், ஜோதி தரிசனத்துக்குப் போயிருப்பார்கள். ஐய்யர்கூட மாலை போட்டுக்கொண்டுதானிருந்தார்.
"எவ்வளவு நேரமா காத்துகிட்டிருக்கீங்க?" என்று பக்கத்திலிருந்த பெரியவரிடம் கேட்டேன்.
"காத்தால ஏழு மணிக்கெல்லாம் வந்தாச்சு; மணி ஒண்ணாகுது. இன்னும் எங்களைக் கண்டுக்கவேயில்லை," என்றார் அலுப்புடன்.
அப்படியானால், எனது கணிப்புப்படி, நான் இவரைப் பார்துவிட்டுபோக, இரவு பத்து மணியாகிவிடும்.

"டேய்..." ஐய்யர் கூப்பிட்டார்.
"என்ன சார்?" என்றேன்.
"ஒன்னையில்லைடா, அந்தாளைக் கூப்பிடு..." என்றார்.
என்னுடன் பேசிக்கொண்டிருந்த அந்த 65 வயதுப் பெரியவர் எழுந்து போனார்.
"மணி ஒண்ணாகுது, நீயும் உன்னாத்துக்காரியும் போய் சாப்பிட்டு வந்துருங்கோ, அதுக்குள்ள நான் பூஜை போட்டுட்டு ஒரு நாலு மணிக்கு வந்துடறேன்" என்றார்.
"சார், எங்களைப் பார்துட்டுப் போயிடுங்க சார், காலயிலிருந்து காத்துக் கிடக்கிறோம்" என்று பதறினார் பெரியவர்.
"உனக்காக தெய்வம் காத்துக் கிடக்குமாடா? போடா, போய் சாப்பிட்டுட்டு வந்துடு" என்றார்.
தயங்கிய படியே திரும்பவும் இருக்கயில் வந்து உட்கார்ந்துகொண்டார்.
ஐய்யர் தனக்கு எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கட்சிக்காரரிடம் பத்தாயிரம் ரூபாய் காசு எண்ணி வாங்கிக்கொண்டார்.
"இங்கப் பாருங்கடா, நாங்களெல்லாம் சீரங்கத்து ஐய்யர்வாள். எங்கக் குலமே ஜட்ஜும் வக்கீலுமாதானிருக்காங்க. டில்லியிலயும், எலக்ஷன் கமிஷன்லயும், ஜனாதிபதி ஆபீசிலயும் நாங்கதனிருப்போம், நாங்க சொல்றதுதான் அம்புட்டும். பெரிய பெரிய பணக்காரன், அரசியல்வாதிங்க, ரவுடி, போலீசு, ராணுவம் சாதிக்கமுடியாததையெல்லாம் நாங்க ஒரு சிட்டிக்கயிலே சாதிச்சிடுவோம். நாங்க அதிகாரம் படைச்சவுங்க. ஆரியங்கடா.நாங்க சொன்னா கடவுளே கேட்டுக்கணும்.
நீங்கள்ளாம் அடிச்சுக்கிறவா. பகையில்லன்னா தூக்கம் வராது. அதனால எங்களுக்கும் சோத்துக்குப் பஞ்சமில்ல...ஹாஹாஹா, உங்களுக்கு வீரம்னா, எங்களுக்கு சாணக்கியம்டா. இதான் சூட்சுமம்.
ஒரு சிட்டிகயிலே இந்த ஜட்ஜ்மென்ட வங்கிகுடுத்திற்றேன் பாரு. நானிருகேன்ல. கடவுள்மேல பாரத்தபோட்டுட்டு, நிம்மதியாப் போங்கடா. அடுத்த வாய்தாவுக்கு சொல்லியனுப்பறேன்..." என்றவாரே எழுந்துகொண்டார்.
காசு கொடுத்த கட்சிக்காரர்கள் "கோபிசுக்க வேண்டாம் ஐய்யர் சார், கொஞ்சம் சீக்கிரம் முடிச்சாத் தேவலை" என்று கை தொழுதார்கள்.
"சரிடா, ஆகட்டும்..." என்று அவர்களை அனுப்பிவைத்தார்.
"வரவாள்ளாம் அவசரப்பட்டா எப்படியாம்?" என்று எங்களைபார்த்து கூறிக்கொண்டே படியிறங்கிப் போனார். கூடவே இரண்டு ஜூனியர் வக்கீல்களும்.
அவர் சிரித்தால் அவர்கள் சிரிப்பார்கள். அவருக்குப் பசியெடுத்தால்தான் இவர்களுக்கும் பசியெடுக்கும். அவருக்குப் பின்னலேயே இவர்களும் படியிறங்கிப் போனார்கள்.

***

"பாத்தியா தம்பி, ஒரு மனிதாபிமானம் இல்லே. நம்மை உக்காரவச்சிப் பேசும்போது ரெண்டொரு வார்த்தை சொல்லி வாய்தா சொல்லப்போறாரு. அதுக்காக இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிக்கெடக்கு" என்று பெரியவர் சலித்துக் கொண்டார்.
"என்ன பண்றது, கோபாலைய்யர் வச்சதுதான் சட்டமாகிப்போச்சு. தப்பிப் பொழைச்சாப் போதும்னு இருக்கு" என்றார் இன்னொருவர்.
"என்னதான் இந்தாளுகிட்ட கொட்டிக் கெடக்குதுன்னு ஜனங்க வந்து குவியுதுங்க, ஒண்ணும் புரியலை!" என்று இன்னொருவர் அங்கலாய்த்தார்.
"ஒண்ணு தெரியுமா சார், நீங்களும் சரி, நானும் சரி, வக்கீல்னா ஐய்யர் ஜாதியா இருக்கணும்னு பாக்கறோம். அவங்களாலதான் சரியா பாயிண்ட புடிச்சி வாதாட முடியும்; அதால நமக்கு ஜெலிப்பு கெடச்சிடும்னு நெனைச்சிக்கிறோம். ஐய்யராயில்லாத மத்த ஜாதி வக்கீலுங்கண்ணா, நம்ம கணக்குப்படி,அவுங்க தேங்காமூடி வக்கீலுங்க அப்படீன்னு ஸ்டாம்ப் குத்தியாச்சு. பொதுவா சிவில் கேசுன்னா ஐய்யர்மார் வக்கீலுங்க; கிரிமினல்னா மத்த ஜாதிக்காரன்ங்க. குத்தம் நம்மபேர்லதான்யா இருக்கு" என்று இன்னொருவர் விளக்கம் கொடுத்தார்.

"அய்யா, இருவத்தோரு வருஷமாகுது, இந்த ஐய்யர் என்னோட கேச எடுத்து. வாய்தா பாத்துப் பாத்தே வயசாகிப்போச்சு. கேட்டா, கோர்ட்டு போட்ற வாய்தாவுக்கு நான் எப்படிடா பொருப்பாக முடியும்னு ஐய்யர் கேக்கறார்" என்றார் பெரியவர்.
"இதோ, இந்த மாடிக்கு மேலயும் ஒசரமா வளந்து நிக்குதே இந்த பலா மரம், கைக்கு அண்டாத அளவுக்கு மரம் பெறுத்து, பூவும் காயுமா காய்ச்சித் தொங்குது. இந்த மரத்தப் பார்தாவது என் கேசை சீக்கிரமா முடிக்கலாம், மனசு வச்சா.. ஏன்னா, அந்த பலாக் கண்ணை கட்டைக் கொடுக்கும்போது நான்கதான் கொண்டுவந்து நட்டுவச்சோம்" என்று அந்த பெரியவரின் மனைவி சொன்னார்.
"கட்டை முதல்ல வாங்கும்போது வாய் கிழியப் பேசுறாரு; 'டேய், இந்த கோபாலய்யர்னா ஜட்ஜே ஆடிப்போய் தீர்ப்பு உனக்கு சாதகமா சொல்லியாகணும். பார்த்தியோ எவ்வளவு சட்டபுஸ்தகம் அலமாரிலே அடுக்கி வச்சிருக்கேன்? எல்லாம் ஷோவுக்குன்னு நெனைச்சியா? பொரட்டிப் பார்த்து புடிச்சிடமாட்டேன் பாயிண்டை!', அப்படியிப்படீன்னு சொல்றார்" என்று புலம்பினார் இன்னொருவர்.

அப்பொழுதுதான் எனக்குள் ஒரு பொறி தட்டியது. என் தந்தை ஒருமுறை என்னிடம் சொல்லியிருந்தார்.
"டேய் மணி, அந்த ஐய்யர் வக்கீல் என்னவோ அங்கே அடுக்கி வச்சிருக்கிற பொஸ்தகங்களையெல்லாம் பொறட்டிப் பொறட்டிப் பார்த்து கேசு நடத்துரதா சொல்றாரே, அதெல்லம் கதைடா, நம்பாதே!
நான் நம்ம கேசு விஷயமா முப்பது வருசத்துக்கு முன்னால அவரப் பார்க்கப் போனப்போ, என்னை அங்கே காத்துக் கிடக்கவச்சார். அப்போ பாக்கெட்டிலிருந்த பஸ் டிக்கெட்டை எடுத்து காது குடைஞ்சுகிட்டு இருந்தேன்... ஏதோ நெனைப்புல அந்த ரோஸ் கலர் டிக்கெட்ட என் கை எட்டும் புஸ்தகங்களுக்கு நடுவிலே, பாதி தெரியுராப்ல செருகி வச்சிருந்தேன். அதுக்கப்புரம் நான் எப்ப போனாலும் அந்த பஸ் டிக்கெட்டு இருக்கான்னு பர்ப்பேன். இருக்கு, இன்னைக்கு வரைக்கும். நீ போனாக்கூட இருக்கான்னு பாரேன்!" என்று சொல்லியிருந்தார்.

புத்தக அலமாரியை ஒரு நோட்டம் விட்டபோது, அது இருந்தது. அந்த ரோஸ் கலர் டிக்கெட்டு 'இந்திய சிவில் சட்டம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் -பாகம் ஒன்றுக்கும் பாகம் ரெண்டுக்கும் நடுவிலே, என்னைப் பார்த்து சிரிப்பதுபோலிருந்தது. துள்ளி எழுந்து அந்த டிக்கெட்டை மெல்ல உருவி எடுத்தேன். காய்ந்த சருகு போல இருந்தது. கவனமாக அதைப் பிரித்துப் பார்த்தேன்.

'ஸ்ரீ ராம ஜெயம் பஸ் சர்வீஸ் .... தேதி : 10.03.1970
புற : கடம்பூர் சேர் : ஆடுதுறை
ரூ : 0.30'
என்று இருந்தது.

என் வயதைச் சொல்லும் பயணச்சீட்டு அது. கோர்ட்டுகளின் அழிச்சாட்டியத்தையும் அது எனக்கு சொல்வதுபோலிருந்தது. திரும்ப மடித்து அதே இடத்தில் வைத்து அலமாரிக்கண்ணடியை இழுத்து மூடினேன்.
நடந்ததை மற்றவர்களிடம் சொல்லி முடித்தபோது அந்தக் காத்திருக்கும் அறை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
குறை சொல்லி, பேசி அலுத்துப்போன அவரவர்கள் இருக்கைகளிலேயே தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூங்கிப்போனார்கள்.

இப்போது அதே பஸ் டிக்கெட்டின் விலை ஐந்து ரூபாய். என் ஊரிலிருந்து ஆடுதுறை கோர்ட்டுக்கு வர பதினைந்து கிலோமீட்டர்கள். டவுன் பஸ் நிறைய இருந்தாலும் நான் சைக்கிளிலேயே வந்துவிடுவேன். ஏனென்றால், இந்த வக்கீலைப் பார்த்துவிட்டு திரும்பிப் போக இரவு பத்து மணிக்குமேலாகிவிடும். கடைசி பஸ்ஸைப் பிடிக்கமுடியாது.

சரக்சரக் என்று படிகளில் காலடியொசைகள் கேட்டன. எல்லோரும் எழுந்துகொண்டோம். ஜூனியர்களோடு ஐய்யர் உள்ளே வந்தார்.
"டேய் மணி"
நான் உள்ளே சென்றேன்.
"பன்னீர் புகயிலை மூணு பாக்கெட் வாங்கிட்டு ஓடியா.." என்றார்.
'போச்சு, ஒரு பதினைந்து ரூபாய் எப்பவும்போல தண்டம்' என்று எண்ணிக்கொண்டே கடைக்கு நடையைக் கட்டினேன்.

கோபாலைய்யர் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காலி மனை.
'சென்னை 220 கிமீ' என்று ஒரு பர்லாங்குக் கல் இருக்கும். அதற்குப் பக்கத்தில், ஒரு தள்ளுவண்டியில் பிரியாணிக்கடை. இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து பதினோறு மணிவரைக் கூட வியாபாரம் நடக்கும். எப்போதும் தள்ளுவண்டியைச் சுற்றி கூட்டம்.

அந்தத் தள்ளுவண்டிக்காரனை எப்படியாவது அந்த இடத்திலிருந்து காலி செய்துவிட வேண்டும் என்பதில் ஐய்யர் ஒரே வெறியாயிருந்தார். அவனை பொறுக்கிகளை வைத்து மிரட்டிப் பார்த்தார். செல்வந்தர்களை வைத்து பேசிப் பார்த்தார். அரசியல்வாதிகளை அனுப்பி 'கொன்றுவிடுவேனென்று' மிரட்டிப்பார்த்தார். போலீஸைக் கூட அனுப்பி மிரட்டினார். அவன் அங்கிருந்து போகவேயில்லை.
அழுக்கு லுங்கி, கிழிந்த பனியனில் வேர்க்கவிருவிருக்க பிரியாணி விற்றுக்கொண்டிருப்பார்.

எனக்கு அந்த தள்ளுவண்டிக்காரரைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு ஐயம் எழும். 'இப்பேர்ப்பட்ட பட்டணத்து பெரிய வக்கீல், தனக்கு தொந்தரவாய் நினைக்கிற ஒரு சாதாரண தள்ளுவண்டிக்காரனை அப்புறப் படுத்த முடியவில்லை. போலீஸ், அரசியல்வாதி, பொறுக்கிகள் பருப்பு வேகலைன்னாலும், குறைந்தபட்சம் ஒரு கேஸைப் போட்டு உள்ளே தள்ளிவிட அவரால் ஏன் முடியவில்லை' என்று நினைப்பதுண்டு.

புகையிலை வாங்கி திரும்பிவரும்போது அந்த தள்ளுவண்டிக்காரர் வந்துவிட்டிருந்தார். வெங்காயம் நறுக்கிக் கொண்டே நட்புடன் புன்னகைத்தார்.


பத்து நாட்களுக்கு முன் இந்த கேஸ் சார்பாக கோர்டில் ஆஜராக உத்தரவானது. நானும் எனது தந்தையும் சென்றிருந்தோம். எப்பவும் ஆஜராகிர எதிர் பார்ட்டி அன்றைக்கும் வந்திருக்க வேண்டும். ஏதோ காரணத்திற்காக வரவில்லை. எங்களின் நல்ல நேரம், அன்றைக்கு நீதிபதி ரொம்பவே 'மூடு அவுட்'.
"எதிர் கட்சி ஆஜராகாததாலே, இந்த கேஸை தள்ளுபடி செய்கிறேன்" என்று முப்பத்தி ஐந்து வருட கேஸை பட்டென்று முடித்து விட்டார். அந்த கோர்ட்டு ஜட்ஜ்மெண்ட் காப்பியை வாங்கிவிட்டால், இன்றோடு இந்த ஐய்யருக்கு முழுக்குப் போடவேண்டியதுதான்.

யோசனயோடு புகையிலையை அவரிடம் கொடுத்துவிட்டு ஒரு இயந்திரம்போல திரும்பி வந்து இருக்கயிலமர்ந்தேன்.

ஒவ்வொருவராகப் பேசி அனுப்ப மணி பத்துக்குமேல் ஆகிவிட்டது. மதியப் பட்டினியால் பசி குடலை இறுக்கியது. எனக்கு முன்னால் இன்னும் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்கள் போனபின்புதான் நான் அவரைப் பார்க்கமுடியும்.

'ஐய்யர் சார்" என்றேன்.
"என்னடா?"
"பத்து நிமிஷத்துல சாப்பாடு முடிச்சிட்டு வந்துடறேனே, கடையை மூடிடுவாங்க..." என்றேன்.
"சரி" என்றார்.
சரக்கெனப் படிகளில் பாய்ந்து வெளியில் வந்தேன். பிரியாணி வாடை மூக்கைத் துளைத்தது. வக்கீல் என்னைப் பார்க்காதவாறு, தள்ளுவண்டிக்கும் பின்னால் மறைந்துகொண்டு, பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தேன்.
"கோழி பிரியாணி இல்லை தம்பி, தீர்ந்து போச்சு. பீப் தானிருக்கு, பரவயில்லைய?" என்று தள்ளுவண்டிக்காரர் என்னைக் கேட்டார்.
"சரி, கொடுங்கள்" என்று சொல்லிவிட்டு, எனது ஐய்யத்தை தயக்கத்துடன் அவரிடம் கேட்டேன்.
"ஓ, அதுவா? லோகல் அரசியல்வாதிங்களை வச்சு மெரட்டினான். போலீஸை வச்சும் மெரட்டினான். ஒரு நாள் பூரா லாக் அப்ல கூட வச்சான். எவ்வளவு பணம் கொடுத்தான்னு தெரியலை, என்னை செம மொத்து மொத்திட்டானுங்க. காலையிலே 'ஓடிப்போடா நாயே, இண்ணையிலிருந்து வக்கீல் வீட்டுக்குப் பக்கத்திலே உன் தள்ளுவண்டியப் பார்த்தோம், நீ உயிரோடு இருக்க மாட்ட' என்று என்னைத் துரத்தி விட்டார்கள். சரி என்று சொல்லிவிட்டு வந்தேன். வெளியில வந்ததும் என்னால ஆத்திரத்தைக் கட்டுப்படுத்டமுடியலை. ஒரு ரவுண்டு ராவா ஏத்திக்கிட்டு வந்து ஐய்யர் வீட்டுக்கதவைத் தட்டினேன். ஐய்யர் தான் வந்து கதவைத் தொறந்தான்.
"டேய் உன்னை..." என்று நான் முடிப்பதற்குள் ஐய்யர் முகம் மிரண்டுபோயிருந்தது.
"அடேய், அடேய், உனக்கு காசு கூடக் குடுத்திடறேன். தொந்தரவு பண்ணாம அடுத்த தெருவுக்குப் போயிட்றா." என்று என்னிடம் கெஞ்சினார்.
நான் நின்ரு நிதானமாக அந்தாளுக்கு காதிலே நல்லா உரைக்கிறப்ல சொன்னேன். 'இதப்பருடா ஐய்யர், நான் உண்டு, என் வியாபாரம் உண்டுனு இருந்தேன். உன்னை எந்த விதத்தில் தொந்தரவு செய்தேன்? நீதான் என்னைத் தொந்தரவு செய்யுற. திரும்பவும் என்னை போலீசுக்கு அனுப்பினா, உன்னை நான் திரும்பி வந்து அடிக்க மாட்டேன், மிரட்டமாட்டேன். ஆனா ஒண்ணு செய்வேன்; பிரியாணிக்கு வெட்ற பசுமாட்டோட தலையையும் வாலையும் உன் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ள வீசி எறிஞ்சிடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இனிமேல உன்னால முடிஞ்சதை பார்த்துக்க' என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று திரும்பி வந்துவிட்டேன். அன்று அடங்கிப்போன ஆள், இன்னைக்கு வரைக்கும் எம்பக்கம் தலைவச்சுக்கூட படுக்கறதில்லை. என்னைப் பார்த்தாலே தலையக் குனிஞ்சுக்குவான்" என்று விளக்கினார் புன்சிரிப்புடன்.
அந்த அமைதியான இரவில் தள்ளுவண்டிக்காரரின் பேச்சு வக்கீலின் காதுகளுக்கு கேட்டுவிடுமோ என்ற நினைத்த நேரத்திலேயே, புகையிலை எச்சில் துப்புவதற்காக எழுந்து வெளியில் வந்த ஐய்யர் நான் தள்ளுவண்டிக்காரனிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார்.
நான் பதறிப் போனேன். போச்சு, எல்லாம் வீணாகி முடிந்தே போச்சு. ஐய்யர் வாள் வாள் என்று கத்தப் போகிறான். ஜட்ஜ்மெண்ட் காப்பியக் கண்ணுலக் கூடக் காட்டமாட்டான் என்கிற சந்தேகம் எனக்குள் வலுத்தது.
"பயப்படாத தம்பீ, நல்லதாவே நடக்கும் போ" என்று அனுப்பிவைத்தார் வண்டிக்காரர். காசைக்கொடுத்துவிட்டு தயங்கித்தயங்கி படியேறினேன். என் இருக்கயில் திரும்பவும் இயந்திரமாய் அமர்ந்தேன்.
"யோவ், அந்தப் பயலைக் கூப்பிடு; டேய், உன்னைத்தாண்டா, இங்கே வா..." என்று உச்சக் குரலில் கத்தினார். ஒரு கணம் தரை பிளந்து நான் கீழே விழுந்துவிடுவதுபோல் தடுமாறினேன். முப்பத்தைந்து வருட அலைச்சல் வீணாகப் போகப்போகிறது. போய் அவர் எதிரில் நின்றேன்.
"இங்க பாரு தம்பி, உன் போக்கிடம், சவகாசம் எனக்குப் பிடிக்கலை. அவன் என் எதிரின்னு தெரிஞ்சும் அங்கே போயிருக்கிறாய். உன் சங்காத்தமே வேண்டாம். இந்தா உன்னோட கட்டு, இதுக்குள்ள ஜுட்ஜ்மெண்ட் காப்பியும் இருக்கு. எடுத்துக்கிட்டு இந்த இடத்தை உடனே காலி பண்ணு. இனிமேல் என் மூஞ்சில முழிக்காத. ஓடு, ஓட்றா..." என்று கிறீச்சிட்டார்.
கட்டை அதிர்ச்சியுடன் பிரித்துப் பார்த்தேன். ஜட்ஜ்மெண்ட் காப்பி அதில் இருந்தது.
"சார், இதுக்காக பத்தாயிரம் காசு கேட்டிருந்தீங்க. கொண்டாந்திருக்கேன்..." என்று முடிப்பதற்குள்,
"முதல்ல இங்கிருந்து ஓடிப்போ. காசும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம், நீ நாசமாப் போடா" என்று கண்களில் கண்ணீர் தளும்ப கதறினார்.
எல்லொரும் என்னை பரிதாபமாகப் பார்தார்கள். நான் நிதானமாக படியிறங்கி, கேட்டைத் திறந்து வெளியில் வந்தேன்.
தள்ளுவண்டிக்காரர் "எல்லாம் முடிஞ்சுதா" என்று உரத்த குரலில் வினவினார்.
"முடிஞ்சுதண்ணே, எல்லாமே முடிஞ்சுது," என்று சொல்லிக் கொண்டே செம்பருத்திச் செடியின் கீழே பனியில் சில்லிட்டுக் கிடந்த என் சைக்கிளை வெளியே உருவியெடுத்தேன். கேஸ் கட்டுப் பையை முன்னால் மாட்டிக் கொண்டேன்.
"பார்த்து, பத்திரமாப் போ தம்பி..." என்றார் வண்டிக்காரர்.

என்றுமில்லத வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு பிசாசு மாதிரி இருட்டில் பறந்து வேகமெடுத்தது எனது மிதிவண்டி.

***

இந்த அபூர்வ கேஸின் அட்ச்சரமாக அந்த ரோஸ் கலர் பஸ் டிக்கெட் கோபாலையரின் சட்டப் புத்தகங்களுக்கிடையே சுருண்டு கிடக்கிறது.

கோபாலைய்யர், அவரது கோர்ட்டு ஆகியவட்றின் லட்சணத்துக்கான ரசீது அது!