My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

11.8.13

மிஸ்டர். கோய்பீ நாத்...!!

"எனக்கு அது கிடைக்குமா?" ஏக்கத்தோடு கேள்வி கேட்கும் நித்தியாவின் குரல். ஒரு முகம் சுளிக்க வைக்கும் பக்கா லோக்கல் அட்வர்டைஸ்மெண்ட்.
பூச்சி மருந்து செண்ட்டு அடித்தாலே காம உணர்வோடு கும்பலாகக் குவிந்துவிடும் பெண்கள்... இண்டர்னேஷனல் டிரேட் மார்க் 'ஆக்ஸ்' அட்வடைஸ்மெண்ட். 

அப்புறம் இந்தியாவையே வரி ஏய்ப்புச் செய்து கொள்ளையடிக்கும் இந்துஸ்தான் ஊனிலீவர். 

அதையும் தாண்டி, தாவாங்கட்டையைத் தடவும் ஜில்லெட் பெண்கள்...

ங்கொய்யால..., 

இத்தனைக்கும் நடுவில் பெண்ணடிமைத் தனத்தைப்பற்றி விஜய் டிவியில் சுடச்சுட சூடான விவாதம் நடாத்திக்கொண்டிருப்பார் மிஸ்டர். கோய்பீ நாத்.



பல குடும்பத்தின் படுக்கையறை ரகசியங்களையும், பிரச்சினைகளையும், புரிதலற்ற வாழ்கை முறைகளையும் அல்லது காதலையும், முற்போக்கு சிந்தனைகளையும், லஞ்ச லாவண்யங்களையும்... சிம்பிளாகச் சொல்லப்போனால், இந்தப் பூவுலகில் நிகழ்ந்திடும் பல்வேறு கடவுளாலேயே தீர்க்க முடியாத அனைத்து பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாகக் குதறிவிடும் கோபீ நாத்!! 

பார்வையாளர்களின் அறியாமையும், கண்ணீரும், கவலையும், கையறு நிலையும்தான் இந்தக் கோபீ நாத் & கோ கும்பல் கயவர்களின் முதலீடு.

அவர் செய்வது நல்ல விஷயம்தானே எனச் சொல்லும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேயொரு கேள்வி :

கோபீ நாத்தின் ஒரேயொரு 'மாமியார் வைஸ் மருமகள்' விவாதத்தில், அவரின் மனைவியோ மாமியாரோ கலந்துகொள்ள வைக்க அவரால் முடியுமா? முடியாது. ஏனென்றால் அவரே அவரது சொந்தப் பிரச்சினையை நடுத் தெருவுக்கு கொண்டுவர விரும்ப மாட்டார்.

அதையும் மீறி, அதிகப் பிரசங்கித் தனமாக கோபீ அவரின் மனைவியையும் மாமியாரையும் வற்புறுத்தினால், நாலு பேர் பார்க்காமல், சொந்த வீட்டுக்குள்ளேயே அவருக்கு செருப்படி கண்டிப்பாகக் கிடைக்கும்!

நீயா நானா விவாதத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். வியாபார நோக்கோடு நடத்தப்படும் அந்த நிகழ்வில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடக்கவே கிடக்காது.

உலகின் மிகச்சிறந்த 'பேக்கு' எனும் பேரெடுத்துகொள்வதைத் தவிற, இந்த விவாத்தில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முனைவது மிகவும் வெட்கக்கேடாது.

இதற்குப் பதிலாக, ஏதாவது பவர் ஸ்டார் படத்தைப் பார்த்தாலாவது, ஏதாவது பிரச்சினைக்குத் தீர்வு காண சுளுவான வழி கிடைக்கலாம்.

முயன்று பாருங்கள்.

9.8.13

தலைவா... தலைவா... எனது முகநூலிலிருந்து... 32

## தன்னோட படம் வெளியாகவில்லையென்றால் நான் அமெரிக்காவுக்கு ஓடிப்போய்விடுவேன் என்று ரோஷத்தோடு சொன்ன தமிழ்த் திரைத் தூண், தன் சகநடிகன் அதே போன்றதொரு பிரச்சினையில் இருக்கும்போது ஒரு மாரல் சப்போர்ட்டாக ஒரு சின்ன தும்மலைக்கூட தும்மவில்லை. கமல் சுயநலவாதியாக நடிக்கவில்லை; வாழ்ந்து காட்டுகிறார்.

## ஒரு பிரஸ் மீட் போட்டு, அம்மாவிடம் ஒரு பகிரங்க மன்னிப்புக்கேட்டுவிட்டு, வடிவேலு இருபத்து நாலே மணி நேரத்தில் திரும்பவும் நடிக்க வந்துவிடலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

ஆனால், தலைவா ஓடவேண்டும் என்பதற்காக அப்பனும் மகனும் இனிமேல் யார்யார் காலிலெல்லாம் விழப்போகிறார்கள் பாருங்கள். (குசேலன் எனும் ஒரு தருத்திரப் படம் கர்நாடகாவில் வெளிவரவேண்டும் என்பதற்காக, ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பல்ட்டி அடித்தது நினைவிலிருக்கிறது).

வடிவேலுதான் ஊருக்கெல்லாம் உண்மையான ஹீரோ.
'இதுகள்' எல்லாம் வெறும் வெத்துவேட்டு ஜீரோ!


## இனிமே, திரைக்கதை எழுதி, ஹீரோவை தேர்வு செய்த கையோட, ஏமாளி மக்கள் மனசுல ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, படத்தைப் பப்பிளிசிட்டி செய்ய, இன்னொரு கதையையும் ரெடி செஞ்சு வச்சுக்கணும். பிற்பாடு, திரைக்கதையை இயக்கணும்; பப்ளிசிட்டி கதையை தைரியமா பப்ளிக்குல வுடணும். 

திரைக் கதையை விட பப்ளிசிட்டி கதை பக்காவா சும்மா தில்லா இருக்கணும். சாதி மதக் கலவரம் இருந்தா இன்னும் விசேசம். கலக்சனுக்கு உத்தரவாதம் இதுதான். தசாவதாரம், தலைவா எல்லாம் ஒரு முன் மாதிரிகள். வாழ்க வளமுடன்.

##  கோட்டையிலும், பாராளுமன்றத்திலும் நிற்பது போலவும், நாளைய, வருங்கால போன்ற அரசியல் வார்த்தைகளை யூஸ் பண்ணக்கூடாது என்றும் தலைவர் அறிக்கை விட்டு இருக்கிறார். அவருக்குத்தான்எவ்வளவு பெருந்தன்மை? அது அவரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. 
அஜீத்துக்கு வருமா இதுபோன்ற பணிவு?!

ஆனால் தொண்டர்கள் எனும் முறையில், தலைவர் கோட்டையின் முன்னால் நிற்பதுபோல ஒரு படம் போட்டு, 'வருங்கால முதல்வரே' என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டுவோம்.

தலைவர் பாராளுமன்றத்துக்கு முன்னால் நிற்பதுபோல ஒரு படம் போட்டு, 'வருங்கால பிரதமரே, ஜனாதிபதியே' என்றும் போஸ்டர்கள் ஒட்டுவோம்.

வெள்ளை மாளிகை முன்னால் நிற்பதுபோல ஒரு படம் போட்டு, 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே' எனும் போஸ்டர் போட்டு தெருவுக்குத் தெரு, சந்துதுக்குச் சந்து ஒட்டி வைப்போம்.
ஒரு மூத்திரச் சந்தைக்கூட விட்டுவிடக் கூடாது.

மேலும் நற்பணி மன்றக் கழகக் கண்மணிகள் யாவரும் குடும்பத்துக்கு ஒரு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, ஐ-நாக்ஸ் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து தலைவரை மகிழ்விக்க வேண்டும். எவன் குண்டு வைக்கிறான் என்று ஒரு கை பார்த்துவிடலாம்.

அப்படியும் குண்டு வைத்து, வெடித்து நாம் உயிரிழந்தால்...,
நம் உடல் மண்ணுக்கு;
உயிர் தலைவருக்கு;
சோத்துப் பானை, அண்டா குண்டா, துருப் பிடித்த பீரோலு எல்லாம் தலைவரின் அப்பனுக்கு.

வாழ்க வருங்கால அமெரிக்க ஜனாதிபதி. 

## உடனடியா ரவுடி ஆகணும்னா, ஒரு பத்து ரூவா கட்டிட்டு பாமகவுல உறுப்பினர் அட்டை வாங்கிடுங்க. கல்லால் அடிப்பது, கம்ப்யூட்டர் உடைப்பது, கொட்டாய் கொளுத்துவது போன்ற ரவுடித் தொழில் நுட்பங்களை அவங்களே இலவசமா சொல்லிக் கொடுப்பாங்க.

## ஒரு அப்பார்ட்மெண்ட் லைஃப் 35 வருஷம்தானாம். ஒரு பிரபல பில்டர் செய்தி விவாதத்தில் போட்டு உடைத்தார்.

ஒரு மனக் கணக்கு : 

ஒரு சிங்கிள் பெட் ரூம் 25 லட்சம்னு வச்சிக்குவோம்.

35 வருஷத்துக்கு, தோராயமாக, 365 X 35 = 12775 நாட்கள்

ரூ.25 லட்சத்தை 12775தில் வகுத்தால் 196 ரூபாய். ஒரு நாளைக்கு.

196 நX 30 நாட்கள் (ஒரு மாதத்துக்கு) 5880.

சிங்கிள் பெட் ரூமுக்கு ஒரு மாசத்துக்கு சொந்த செலவு ரூ.5880.

மொத்தத்துல சொந்த செலவுல சூனியம்.

## 1. சென்னை மெட்ரோ ரயில் விபத்துக்களில் போதிய பாதுகாப்பு உபகரணமின்றி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த உழைப்பாளிகளுக்கு கோயம்பேடு ரயில் நிலையத்தில் ஒரு நினைவுத் தூண் அமைக்கப்பட வேண்டும். 

2. மேலும் பசியாலும் பட்டினியாலும், தாகத்தாலும், வெயில் மழைக் கொடுமைகளிலும், கூலி ஏய்ப்புகளிலும், இரவு பகல் பாராமல் உழைத்து ரயில் பாதைகளை உருவாக்கிய வட இந்திய தொழிலாளர்களின் நினைவாக ஒரு உழைப்பாளர் சிலையும் கோயம்பேடு ரயில் நிலையத்தில் வைக்கப்பட வேண்டும். 

அதுவும் முதல் ரயில் வெள்ளோட்டம் விட ரிப்பன் வெட்டுவதற்கு முன்னால் அமைக்கப்பட வேண்டும்!

## தலைவர்...தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்... சுப்ரமண்யசாமி ஈகைப் பெரு நாள் வாழ்த்துச் சொல்லுவதுபோலவே நினைக்கத் தோன்றுகிறது! மனசுல ஒட்டலை வாத்தியாரே.

## இந்தியாவா அல்லது அமெரிக்காவா அப்படீன்னு ஒரு 'ஜனநாயக' வாக்கெடுப்பு நடத்திப் பாருங்க....?

மாம்பலம், மயிலாப்பூர், வேளச்சேரி, திருச்சி சிரிரங்கம் அத்தனை ஏரியாரியாவிலும் நூத்துக்கு நூறு சதவிகிதம் வாக்கு விழுந்திருக்கும்.

வண்ணாரப்பேட்டை, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, குணகரம்பாக்கம்... இந்த ஏரியக்களில் ஓட்டு பூத்து மொத்தமும் காத்து வாங்கும்.

அறிவாளித் தனத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் ஆன ஆக மொத்த வித்தியாசம் இதுதான். 

## இருட்டுக்கடை அல்வாக் கடைக்கு தொடு திரையில் வழிகாட்டி, 
புளூ டூத்து, 
சர்ரௌண்டு சௌவுண்டு டிடிஸ் சிஸ்டம், 
டில்ட்டு ஸ்டீரிங், 
சென்டர் லாக்கிங் சிஸ்டம், 
தூரல் போட்டால் தானே இயங்கும் வைப்பர், 
கால அளவைக்கேற்ற ஏர்-கண்டிசன், .... 
இத்தனைக்கும் நடுவில் இன்றைக்கும்கூட, ஹெட் லைட் டூமிற்கு தார் கேனைத் தூக்கிக்கொண்டுவந்து புள்ளி வைப்பது என்பது, அட்வான்சுடு ஆட்டோ-மொபைல் எஞ்சினீரிங் தொழில் நுட்பத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறதே?!

## அட்றா அவள
வெட்றா அவள...

காதலிக்க மறுக்கும் பெண்களையெல்லாம் தேடிப்பிடித்து வெட்டிக் கொலை செய்யச்சொல்லி, இளைஞர்களைத் தூண்டிவிடும் பாடல். பெண்களைக் கொச்சைப்படுத்தி, கொடுமையான வார்த்தைகளால் வன் கொடுமை செய்யும் பாடல்களாகப் பார்த்துப் பார்த்துப் பாடி, ஹிட் ஆவதில் தனுஷ் முதன்மையானவர். ஆனாலும் இந்த சோப்ளாங்கிக்கும் காதல் வந்தது. கணக்குப் பார்த்து, பணத்துக்குப் பணம் பொருந்திவந்ததால், ரஜினியும் எதையும் யோசித்துப் பார்க்காமல் சம்மதம் கொடுத்துவிட்டார்.

சந்துருவும் தனுஷ் போல ஒரு பெரிய நடிகனாய் இருந்தால், சேரன் தன் மகளின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கலாம். ஏனென்றால் ஹோரோக்களின் பொறுக்கித் தனங்கள் சினிமாவில் சட்டை செய்யப்படுவதில்லை! பொறுக்கித் தனமாவது, சாதியாவது, மதமாவது...

## நாம் தமிழர் கட்சி அபரிமிதமாக வளர்ந்துந்துகொண்டே வருகிறது. 

'போட்டோஷாப்' மட்டும் இல்லையென்றால் கட்சியின் வளர்ச்சியில் ஒரு எண்பது சதவிகிதம் குறைந்துபோயிருக்கும். 

தமிழர்களின் சார்பாக, நன்றி போட்டோஷாப்...!

## லார்டு லபக்கு ரோடு....

இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் ஏதாவது ஒரு நீண்ட நெரிசலான சாலைக்கு வலுக்கட்டாயமாக எம்.ஜி ரோடு (மகாத்மா காந்தி ரோடு) என்று நாமகரணம் சூட்டி இருப்பார்கள். அத்தகைய முக்கியமான 'கமர்சியல்' சாலையில்தான் நைக், ரீபாக், ரோலக்ஸ், லா-கோஸ்ட் போன்ற மேலை நாட்டு நுகர்வுப் பண்டங்களின் ஷோரூம் ஜகஜ்ஜோதியாய் ஜொலித்துக்கொண்டிருக்கும். இந்த 'மகாத்மா காந்தி ரோடு' என்று எழுதியிருக்கும் பலகையில் கரியைப் பூசி விட்டு, ஏதாவது 'லார்டு-லபக்கு' இங்கிலீஷ்காரன் பேரை வைத்தால் பொருத்தமாக இருக்கும்.

## "ராமதாஸ், அன்புமணிக்கு 24 மணி நேர, போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை; அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை' என, சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை இந்தக் கும்பல்தான் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க கனம் கோர்ட்டார் அவர்கள் உத்தரவிடவேண்டும்!

5.8.13

சேரன் உப்பைத் தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கிறார்...


இந்த சேரனைப் பார்த்து, "ஆட்டோகிராஃப் படம் காதலைத்தானே சொல்லியது? நீங்கள் இந்தக் காதலைப் பிரித்துவிட்டால், எங்கள் மகன் சந்துரு, விக்ரம் சேது போல இளைத்துப்போய், கை கால்களில் சங்கிலி பிணைத்து ஏர்வாடிக்குப் போக நேரிட்டால் அதற்க்கு சேரன் தானே பொருப்பு?" எனக் கேள்வி கேட்டால் சேரனால் என்ன பதில் சொல்ல முடியும்? ஏனென்றால் அவரின் கதை அமைப்புகள் யாவுமே ஆண்களை உயர்த்தியே அல்லவா சொல்லப்பட்டிருக்கிறது?

சினிமாவின் தாக்கங்களால், எத்தனையோ படக்கதைகளை உதாரணங்களாகக் கொண்டு, பொருந்தாக் காதலில் விழுந்து தத்தளித்த இளம்பெண்கள் இந்தத் தமிழகத்தில் மிகமிக அதிகம். சமூகம் எக்கேடும் கெட்டுபோகட்டும்; நமக்கென்ன; நமக்குத் தேவை பணம், புகழ், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்து எனும் கேவலமான குறிக்கோள்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, சமூகக் கேடுகள் நிறைந்த படங்களை வியாபாரத்துக்காகவே வெளியிடுகிறார்கள் இயக்குனர்கள். இத்தகைய கேவலமான புனைவுக் கதைகளில் காதல்தான் முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய கேவலமான சினிமாக் கதை காட்சிகளின் தாக்கங்களாலும், கேரக்டர்களாலும் மன அழுத்தம் கொண்டு பொருந்தாக் காதலில் விழுந்து கருகிப்போன இளம்பெண்கள் தமிழகத்தில் ஏராளம். காதலில் விழுந்த பெண்களின் பெற்றோர்கள் நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்து, புத்திர சோகத்தில் கதறுவதும் இங்கே ஏராளம். அத்தகைய ஏராளமான பெற்றோர்களில் சேரனும் ஒருவர். அத்தகைய பொருந்தாக் காதலில் விழுந்த பெண்களில் சேரனின் பெண்ணும் ஒருவர்.

சேரன், பாலா போன்ற (உயர் ரக?!) இயக்குனர்கள் கூட காதலை ஆண்களுக்கு சாதகமாகவே ஆக்கிவைத்து கதைகளை எழுதுகிறார்கள். அதாவது ஒரு ஆண் கண்ணடித்துவிட்டால், பெண் அவன் பின்னால் சென்றாக வேண்டும். பெண் மறுத்துவிட்டால், காதலன் சோகத்தில் சேதுபோல உருகிவிடுவார். இந்த உலகமே அந்தப் பெண்ணைத் தூற்றும். இயக்குனர்களுக்கு பாராட்டும் பணமும் கிடைத்துவிடும். பெண்களின் நிலை, அவர்களின் பெற்றோர்களின் நிலை, காதல் எனும் மோகத்தால் அலையும் பொறுக்கிகளின் நிலை... இவைகளைப் பற்றி இத்தகைய இயக்குனர்களுக்கு கவலை இருந்ததே இல்லை.

தேர்ஃபோர், செய்த பாவத்துக்காக, சேரன் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பொருந்தாக் காதலில் விழுந்த பெண்ணின் பெற்றோர்கள் எப்படியெல்லாம் அழுதுத் தீர்ப்பார்கள் என்பதையெல்லாம் அணுவணுவாக அனுபவிக்கிறார். உப்பைத் தின்றவன் தண்ணி குடித்துத்தானே தீரவேண்டும்?!

இன்று சேரன். நாளை பாலாவின் குடும்பத்திலுக் கூட இது நடந்துவிடலாம்.

ஆதாலால் இயக்குனர்களே... காதல் மட்டும்தான் சினிமா எனும் கேவலமான இழிவான ஃபார்முலாவை தூக்கி எறியுங்கள். மார்கழி மாதத்து நாய்களை மரத்தைச் சுற்றவைக்க உங்களைப் போன்ற இயக்குனர்கள் தேவையில்லை.

ஒரு 2ஜி ஊழலைப் பற்றி படம் எடுங்கள்.
ஒரு கோயிலின் கருவரை புகமுடியாமல் தீட்டில் கிடக்கும் தமிழனைப் பற்றி படம் எடுங்கள்.
நம் தாய் நாடு அமெரிக்காவுக்கு விற்பனையாவதைப் பற்றி படம் எடுங்கள்.
இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தைப் பற்றி படம் எடுங்கள்.
தமிழகத்துக்குக் காவிரித் தண்ணீர் மறுக்கப்படுவதைப் பற்றி படம் எடுங்கள்.

சமூகம் உருப்படட்டும். கூடவே காதலும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு உருப்பட்டுப்போகும். அப்போது தன் மகள் காதலித்துவிட்டாள் எனும் குற்ற உணர்வோடு 'சேரன்கள்' இங்கே ஒப்பாரிவைக்க வேண்டி இருக்காது!

1.8.13

முச்சந்தியின் வரலாறு


"சலாசலா சலசலா, சல்லாசா சலசலா; மல்லிகா..."

அந்தி சாயும் நேரத்தில் ஒரு 'ஹாட்டான' ரெகார்டு டேன்ஸ். கிராமத்து திருவிழாவில் இல்லை. ஒரு நகரத்தில். நெருக்கடியோ நெருக்கடியில், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் ஒரு அவசரமான முச்சந்தியில் ஒரு படு ஆபாசமான ரெக்கார்டு டேன்ஸ். 

'அய்யோ அய்யய்யோ' என்று அலறும் ஒரு அவசர ஆம்புலன்ஸ் வருவதற்குக்கூட வழியில்லை,. ஏன், சக்கிளை உருட்டிக்கொண்டுவந்த எனக்கும்கூட வழி கிடைக்கவில்லை.

"லெப்ட்ல போயி, ரைட்டுல திரும்பி, திரும்பவும் லெப்டுல திரும்பினா..." கவன சிரத்தையான டிராபிக் போலீசின் வார்த்தகளையும் மீறி நான் சொன்னேன். " மீட்டிங்கு நடக்குற ஸ்டேஜுக்கு பக்கத்து சந்துலதான் என்னோட வீடு. நான் போய்ட்றேன் சார்.விட்டுடுங்க."

"இல்ல. வழி இல்ல. ஒண்ணு, சைக்கிளை திருப்பு. இல்லைனா கூட்டத்துல போயி உக்காந்துக்க." என்று என் பிடரியைத் தள்ளி, ஒரு ஒரு சவுக்குக் கொம்பைத் தூக்கியவாறு வழிவிட்டார்.

இப்போது கூட்டத்தில் நானும்.

"ஜர்தா பீடாக்கூட மெல்லுவா..." என்று பாட்டு காதைப் பிளந்தது.

கூட்டத்துத் தலைகளினூடே கொஞ்சமாக எட்டிப் பார்த்தபோது ரோட்டையே அடைத்துக்கொண்டு, வெறும் தலைகளாகவே தெரிந்தது. ஏதோ கட்சி மீட்டிங்காம். வட்டம், மாவட்டம், தொகுதி எம்எல்யே, அப்புறம், அந்தக் கட்சியின் பிரச்சார பீரங்கி. இதுங்களெல்லாம் பேச வருவதற்கு முன்னால், கூட்டம் சேர்ப்பதற்காக இம்மாம்பெரிய ரெகார்டு டேன்ஸ். கூட்டம் நடக்கும் மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாலேயே டிராபிக்குகள் திருப்பிவிடப்பட்டன. ஏனென்று எதிர்த்துக் கேட்டவர்களிடம் 'ஏதோ முக்கியமான மீட்டிங்காம். அதோ, அந்த லெப்டுல திரும்பி ரைட்டுல போயி, திரும்பரும் லெப்டுல திரும்பினா, மெயின் ரோடு வந்துடும். போங்க, போங்க. போங்கடா...!!" என்று அதே பல்லவியை டிராபிக் போலீசும் லோக்கல் போலீசும் படாதபாடு பட்டு, டிராபிக்கை 'ஒயுங்கு' படுத்திக்கொண்டிருந்தார்கள்!

ஜெ ஜே என கூட்டம் சேர்ந்த ஒரு மணி நேரத்துக்கும் பிற்பாடு அந்த ரெகார்டு டேன்ஸ் குரூப்பு மேடையை விட்டு இறங்கியதும், வட்ட மாவட்டங்கள் மேடையேறத் துவங்கின. சொல்லிவைத்தாற்போல, சரக்கு வாசனை முச்சந்தியைப் பிளக்க, கரைவேட்டி தொண்டரடிப்பொடிகள் கூட்டத்துக்குள்ளே நுழைந்தார்கள்.

"நான் போகணும்ணே. கொஞ்சம் அர்ஜெண்ட்டு..." என்று புலம்பிய என்னை என் தோளைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கி உட்காரவைத்தார்கள். "மீட்டிங் நடுவுல போவக்குடாது. நமக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கில்லே...?" என்று ஒரு கட்சி ஆள் என் தோளைப்பிடித்து அமுக்கி உட்காரவைத்தான்.

நான் அவனை நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.அது ஒரு தெய்வம். 'எங்கத் தெரு சொக்கத்தங்கம்' கரை வேட்டி வடிவில் எனக்கு முன்னே நின்றுகொண்டிருந்தது.

"என்னா முனியாண்டி, டேன்சு பார்க்க வந்தியா? சூப்பரா இருக்குல்லே?!"

"இல்லே. சும்மா வந்த ஆளை அள்ளிப்போட்டு கூட்டத்துக்குள்ள தள்ளிட்டாங்க. பசிக்குது நண்பா. வூட்டுக்குப் போகணும்." என்று கரை வேட்டியின் முகவாயைப் பிடித்து கெஞ்சினேன்.

"சரி. எம் பின்னலியே வா. யோவ் எஸ் ஐ, இந்த ஆளுக்கு வழி விடுய்யா. நமக்கு தெரிஞ்ச ஆளுதான். போகட்டும்." என்று மிரட்டியவுடனே ஒரு போலீஸ்காரர் எனக்கு பவ்வியமாக வழி ஏற்படுத்திக்கொடுத்தார்.

'எலக்சன் நேரம் இது. நாமதான் எக்குத்தப்பா கூட்டத்துக்குள்ள மாட்டிக்காம கவனமாப் போகணும்...' என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டே நகர்ந்துகொண்டேன்.

வீட்டுக்கு வந்து சைக்கிளை ஸ்டேண்டு போடும்போது, என்னையும் அறியாமல் நான் முணுமுணுத்தேன். 'சலாசலா சலசலா..."

என் மனவி சிரித்தாள். "என்னாங்க இவ்வளவு உற்சாகம்?"

"இல்லை; யாருமே தொடப்பக்கட்டையை எடுத்து விளாசறதுக்கு இங்கே ஆளே இல்லை." என்று முணுமுணுத்துக்கொண்டே குடிசையின் உள்ளே நுழைந்தேன்.ஏதோ விபரீதமான விலங்கைப்போல என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் என் மனவி.