My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

29.3.11

இந்தியாவில் கிரிக்கெட் தடை செய்யப்பட வேண்டும்




கிராமத்திற்குச் சென்றிருந்தபோது சிறிது நேரம் கிரிக்கெட்டை பார்க்க நேர்ந்தது. அவர்கள் பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் ஃபீல்டிங்கிலும் காட்டிய வேகத்தைப் பார்த்தால் பிரமிப்பூட்டுவதாயிருந்தது. அவர்களுக்கு மட்டும் ஓரளவு பயிற்ச்சி கொடுத்துவிட்டால், நமது ஆஸ்தான இந்திய டீம் ஒருமுறை கூட அவர்களை ஜெயித்துவிட வாய்ப்பேயில்லை. இவர்கள் ஆடுவது தனது நாட்டுக்காகவவோ, தனது கிராமத்துக்காகவோ அல்ல. அந்த விளையாட்டில் அவர்கள் லயிக்கிறார்கள். அவ்வளவுதான்.
இரவெல்லம் போதையில் பெண்களுடன் கூடி கும்மளமிட்டுவிட்டு, பகலில் நாட்டுக்காக ஆடுகிறேன் என்று முட்டி செத்த முடங்களெல்லாம் நம் இந்திய டீமில் இருக்கின்றன. அல்லது கை நீட்டி காசு வாங்கிவிட்டு சும்மணாங்காட்டியும் ஆடுகிற கில்லாடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். யாரும் உண்மையில் நாட்டுப்பற்றுடன் ஆடுவதில்லை. அரசியல்வாதிகளின் அல்லது ராஜபரம்பரை வாரிசுகளின் நிழல்கள்தாம் இன்றைய கிரிக்கெட் டீமில் இருக்கிறார்கள். யாரும் குக்கிராமங்களிலிருந்தோ, படிக்காத, உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடத் தெரிந்த இளைஞர்கள் இங்கு தேர்ந்தெடுக்கப்படுவதேயில்லை. எந்தத் தகுதியில் வீரர்களை கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கிறது என்பது புரியாத புதிர்.
இரண்டாவர்தாக பெப்சி – கோக்கு விளம்பரப் படங்களுக்கு தேவையான கவர்ச்சிகரமான முகவெட்டு இருக்கவேண்டும். நுனி நாக்கு ஆங்கிலம் வேண்டும். இவை யாவும் கிராமத்தானுக்கு பொருந்துவதில்லை.
மிக முக்கியமான தகுதி : ‘தேவடியாப்பையா’, ‘சொறி நாய்’ போன்ற அறுவருக்கத்தக்க காது கூசும் வார்த்தைகளை வெள்ளைக்காரன் நம் இந்தியாவிலிருந்து கொண்டே திட்டினாலும் அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடவேண்டும். சுரணையென்பதே கூடாது. ஒரு உதாரணத்துக்கு ஒரு தமிழகத்து கிராமத்து விளையாட்டு வீரர் இந்திய டீமில் இருந்து, இந்த வசவுகளைக் கேட்க நேர்ந்தால், வெள்ளைக்காரனின் தவடை கோணிக்கொண்டு போக நேரிடும்.
மொத்தத்தில் சூடு சுரணையற்ற விளையாட்டு. மற்ற விளையாட்டுக்களை குழிதோண்டிப் புதைக்கின்ற விளையாட்டு. தேசிய விளையாட்டாகிய ஹாக்கி வீரர்கள் தங்களது சம்பளத்தைக்கூட போராடி வாங்கவேண்டிய சூழ்னிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள். காரணம் கிரிக்கெட்டு.
உடனடியாக இந்தியாவில் தடை செய்ய்யப்படவேண்டிய விளையாட்டு இது…!

2 comments:

ஊரான் said...

"ஆடுவது தனது நாட்டுக்காகவவோ, தனது கிராமத்துக்காகவோ அல்ல. அந்த விளையாட்டில் அவர்கள் லயிக்கிறார்கள்.

இதற்கும் மேலே விளையாட்டு உடல் நலத்தைக் காக்க வல்லதா எனப் பார்க்க வேண்டும். அந்த வகையில் பிற விளையாட்டுகளைவிட மிகவும் கீழ்நிலையில் உள்ளதுதான் கிரிக்கெட்.

விளையாட்டு இரசனைக்கானதா?
http://hooraan.blogspot.com/2010/10/blog-post.html

Anonymous said...

கிரிக்கெட்டை தடை செய்வது சாத்தியமில்லை. கிராமத்தான் கிரிகெட் அணியில் இடம்பெறப் போவதும் இல்லை .... !!! ஆனால் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் மரியாதையை பிற விளையாட்டுக்களுக்கும் கொடுக்க வேண்டும் ...............

Post a Comment