My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

13.4.11

வினவு மண்டைக்கு விளங்காத பொருளாதாரக் கொள்கை


இரு விரல் காட்டினால்
இரட்டையிலை.
ஐந்து விரல் காட்டினால்
அஞ்சுகத்தாய்ப் பெற்ற
புதல்வனின்
புராதனச் சின்னம்.
கையை ஆசீர்வதித்து
காட்டினால் அது
கைச் சின்னம்.
இதில் எங்கே எங்களுக்கு
‘ரெண்டு ரெண்டாய்’ தெரிகிறது
என்கிறீர்கள்?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
விழுந்தால் வீட்டுக்கு.
விழாவிட்டால் நாட்டுக்கு.
எங்கேயோ கேட்ட குரல்.
லாட்டரிக்குப் பொருந்தும்போது
பாட்டிலுக்குப் பொருந்தாதா?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
வீட்டுக் கடனுக்கே
வருமானம் கேட்கும்போது,
நாட்டுக் கடன் வாங்க
நாம் காட்டும் வருமானம்.
‘Liquidity’ பேலன்ஸ் ஷீட்…
லிக்கர் அடிக்கும் வருமானத்தில்.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
நாள் முழுக்க நாம் உழைத்து
நானூறு கூலி வாங்கி,
அதிலிருந்து நூறெடுத்து
நாட்டுக்கே அர்ப்பணிப்போம்.
போதையும் ஏறும்;
பொருளாதாரமும் ஏறும்.
போதை தந்த
பொருளாதாரத் தத்துவம்.
மன்மோகனும் சிதம்பரமும்
மூக்கின்மீது விரல் வைக்கும்போது,
வினவின் மூக்கு மட்டும்
வியர்ப்பது ஏன்?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
குடி குடியைக் கெடுக்கலாம்.
குடியிருக்கும் நாடு
கெடுவதில்லை.
குடியால் குடியரசு
கோபுரம்போல் வளர்வது
வளர்ச்சிப்பாதையன்றி
வீழ்ச்சிப்பாதையா?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
ஒரு ரூபாய் அரிசி
வேண்டும்.
ஒரு கிரைண்டர் மிக்சி
வேண்டும்.
நாள்முழுக்க நாடகங்கள்
நாம் கண்டு,
தொல்லை மறந்திட
தொலைக்காட்சியும் வேண்டும்.
இத்தனையும் கொடுத்தது
என் தாய்த்திரு நாடு.
நானென்ன செய்தேன்
அதற்கு?
நாட்டுக்கு அற்பணிப்போம்
நம் உயிரை.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
கதறியழுது
காரி மூஞ்சியில் துப்பி
துடைப்பக் கட்டையால்
துவைத்தெடுக்கும்
பொருளாதாரம் தெரியாத
போக்கற்ற மனைவி மக்கள்.
அவர்களிடமிருந்து நமைக்காக்க
அரசு வழங்கும் திட்டம்
மருத்துவக் காப்பீடு.
அதையும் தாண்டி
கை மீறிப் போனால்
நூத்திஎட்டு.
காது குத்தினால்
போதை வேண்டும்.
கருமாந்திரம் செய்தாலும்
போதை வேண்டும்.
இன்பத்திலும்
போதை வேண்டும்.
துன்பத்திலும்
போதை வேண்டும்.
குடித்துக் கிடக்க வேண்டும்.
அதற்கொரு காரணம்
வேண்டும்; வேண்டும்.
‘குவாட்டர்’ மூடியைத் திருகினால்
நாம் மந்தமாகி விடலாம்.
நாட்டின் பொருளாதாரம்
மந்தமாக வாய்ப்பில்லை.
நம் ஈரல் வீங்குவதால்
நம் நாட்டின்
பண வீக்கம்
பறந்து போகும்.
காரணம் கிடைத்துவிட்டது…
இனி
குடித்தே கிடப்போம்.
Ref :

3 comments:

Anonymous said...

அற்பணிப்போம்.....
vallina rakaram illai. idaiyina rakaram..

ஊரான் said...

நாள் முழுக்க நாம் உழைத்து
நானூறு கூலி வாங்கி,
அதிலிருந்து நூறெடுத்து
நாட்டுக்கே அற்பணிப்போம்.
போதையும் ஏறும்;
பொருளாதாரமும் ஏறும்.
போதை தந்த
பொருளாதாரத் தத்துவம்.
மன்மோகனும் சிதம்பரமும்
மூக்கின்மீது விரல் வைக்கும்போது,....

"கவிதை எழுதுவதில் வெற்றியடைய வேண்டுமானால் திறமை மட்டும் இருந்தால் போதாது, தான் வாழும் காலத்தைப் பற்றிய அறிவைக் கலைஞன் வளர்த்துக் கொள்ள வேண்டும்".

இது பெலின்ஸ்கியின் கூற்று.

புதிய பாமரன் மேலும் வளர வாழ்த்துக்கள்!

புதிய பாமரன் said...

திரு. அனானிமஸ்,
எழுத்துப் பிழை சுட்டியமைக்கு நன்றி.
- புதிய பாமரன்...

Post a Comment