My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

14.8.12

எனது முகநூலிலிருந்து... 11


'ஃபார் பிராமின்ஸ் ஒன்லி' அப்படீன்னு அபார்ட்மெண்ட்டு விளம்பரத்துல போட்றாங்களே? வன்கொடுமைச் சட்டத்துல இவுங்கள உள்ளதள்ள ஏதாவது வழியிருக்கான்னு பாத்துச் சொல்லுங்கண்ணே!

##

கருமம், இண்டிபெண்டன்ஸ் டேன்ன உடனே ஞாபகத்துக்கு வருது. எதுக்கும் ஒரு வாட்டி, அசோகச் சக்கரத்துல இருவத்து நாலு கோடு இருக்கான்னு எண்ணிப் பாக்கணும். திருட்டுப் பயலுவல நம்பவே முடியாது.

##

தமிழினத் தலைவரே... 'டெசோ'வில் உங்கள் வீர உரையைக் கேட்டு இலங்கையே அதிர்ந்துபோய்க் கிடக்கிறது. கோத்தபய பத்து நிமிடத்துக்கு ஒரு வாட்டி, பாத்ரூமுக்கு ஓடுவதாக பேசிக்கொள்கிறார்கள். உங்கள் 'ப்ரெஷரில்' மத்திய அரசு செய்வதறியாது, கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது. அடுத்த பிறவியிலும்கூட நீங்களே கருணாநிதியாகப் பிறந்து, டெசோவை நடத்தி, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடவேண்டும். உங்களை விட்டா, இந்தத் தமிழ்ப் பன்னாடைகளுக்கு வேற யாரும் நாதியே இல்லீங்கையா. கண்கள் பனிக்கின்றன!!

##


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அன்பளிப்பு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

மார்க்சிஸ்ட் கட்சி வருமானம் ரூ.76 கோடியாக உயர்ந்தது!

தொழிலாளர்களை 'ரெண்டு தட்டு' தட்டி வெச்சதுக்காக, கார்ப்பரேட்டு கம்பேனிங்க அன்பளிப்பு கொடுத்திருக்கலாம்... இதையெல்லாம் யாரும் வேணாம்பாங்களா?! இதுவே ரெம்ப கம்மி.

##


கல்லூரி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி:
ஐகோர்ட்டில் ஜேப்பியார் ஜாமீன் மனு.

நம் கல்வித் தந்தையாம், மதிப்பும், மரியாதையும், பெருமையும் மிக்க, சொக்கத் தங்கம் ஜேப்பியார் அய்யா அவர்களுக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, அட்வான்சு சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

##

லண்டன்ல 17 டிகிரி குளிரு. வெதர் ஒத்துக்கலை. அதான் கோல்டு மிஸ்ஸிங். அடுத்த ஒலிம்பிக்குல அள்ளிடுவோம். வர்ட்டுங்களா?!!

##

"டெசோ' மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன செய்ய வேண்டும்?'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி.

தீர்மானத்தில் கையெழுத்து போடவேண்டும். போட்டீங்களா, இல்லே, அன்னைக்குப் பயந்து வெற்றிடமா விட்டுட்டீங்களா?!

##

'இறுதி கட்டத்தில் போர் முடிந்ததாகக் கூறி இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றியதாகவும், அத்தகவலை நம்பி தான் உண்ணாவிரதத்தை அப்போது முடித்துக் கொண்டதாகவும்' கருணாநிதி 'டெசோ' மாநாட்டில் தெரிவித்தார்.

பப்ளிக்கா போட்டு உடைக்கிறார். இவரின் அப்பாவித்தனத்தை சந்தேகப்படலாம்; நேர்மையை அல்ல!

##

தனிஈழம் உருவாக மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்: ராமதாஸ்.

இவர்தான் 
'ஈழத் தந்தை.' 
என்னா ஒரு 
சிந்தனை?!!

##

காவிரி ஆற்றில் நீர்வரத்து. அம்மாவின் ஆணைப்படி, மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்த்தப்பட்டது!!

##

எங்கள் கோரிக்கைகள் ஏற்காவிடில் மிகப்பெரும் புரட்சி வெடிக்கும்: ராம்தேவ் எச்சரிக்கை.

'கொண்ட கடலைய' அதிகமா தின்னிருப்பார் போல. எதுக்கும் எல்லாம் சித்த தள்ளியே நில்லுங்க!

##

"ஈமு பண்ணைக்கு அனுமதியே இல்லை' தூங்கிய அதிகாரிகள் "திடீர்' விழிப்பு...

ஈமுவுக்கு எதுத்தாப்புல நின்னு, அது தலைல அடிச்சி சத்தியம் பண்ணுங்கடே, நம்பறோம்!

##

கிட்டி-புள்ளுவை ஒலிம்பிக்கில் சேர்த்துத் தொலைத்தாலொழிய, 'கோல்டு' என்கிற பேச்சுக்கே இந்தியாவில் இடமில்லை!

##

ஈமுவ ஓடவிட்டு, போலீசும் அரசாங்கமும் விரட்டி விரட்டி புடிக்கிறாங்க. முதலீட்டாளர் அக்கவுண்ட்டுல முட்டை!

##

மேற்குவங்க மாநிலம், பெல்பாகாரி பகுதியில், கடந்த 8ம் தேதி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், மம்தாவை பார்த்து, "விவசாயிகள் செத்து மடிகின்றனர்; அவர்களை காப்பாற்ற என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்; உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது; வெற்று வாக்குறுதிகள் அளித்தால் போதாது' என, தெரிவித்தார்.
அதைக் கேட்ட முதல்வர் மம்தா, போலீசாரை பார்த்து, "அவர் மாவோயிஸ்ட். அவரை கைது செய்யுங்கள்' என, உத்தரவிட்டார். உடனே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர்.

நம்ம மண்ணாங்கட்டி நாட்டுக்கு மம்தாக்கள் வேணுமா அல்லது 'மாவோயிஸ்ட்டுகள்' வேணுமா?

##

திமுகவின் கிரானைட் கோல்மால்களுக்கு 'டெசோ' கண்டிப்பா ஒரு மருந்தாத்தான் இருக்கும். ஒரு ஸ்பூன் அளவுக்கு உள்ளங்கைல வாங்கி நக்கிக் குடிங்க.

##

சாக்குப்பை இல்லாமல், ஆண்டுக்கு ஐந்து மில்லியன் டன் அரிசி கோதுமை வீண்.

கோணி வாங்கறதுக்கே இங்கே வக்கு இல்லை. இதுல ஒலிம்பிக்குல கோல்டு வாங்கலைன்னு புலம்பல் வேறு. போங்கடா டேய்.

##

ராகுல் அமைச்சரானால் வரவேற்பேன்: பிரதமர்.

'வாலாட்டுவேன்' என்று திருத்திப் படிக்கவும். சங்கிலிய பிடிச்சு 'தரதரன்னு' இழுத்துக்கிட்டுப் போகிற எஜமான்தான் வேற. மத்தபடி அதே பழைய சொறி பிடிச்ச நாய்தான்!!

##

அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும்: கருணாநிதி அறிவிப்பு.

மாநாட்டை அப்படியே, பக்கத்து பில்டிங்குல இருக்குற கலைஞர் டிவில 'லைவா' காட்டுவாங்கன்னு எதிர்பாக்காதீங்க. கலைஞர் பிரியாரிட்டி எப்பவுமே மானாட மயிலாடதான்!!

##




No comments:

Post a Comment