My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

7.9.12

தீபாவளி - கொலைகளும் கொண்டாட்டங்களும்...


முடிஞ்சிது. ஏழாம் நாள் இழவு இலை போட்டு, பதினாறாம் நாள் கருமாதி முடிஞ்சவுடனே, முதலாளி முருகேசன் ஜாமீனில் வெளிய வந்துடுவார். அதுக்காக, ராம் ஜெத்மலானி கூட சிவகாசி கோர்ட்டுக்கு வந்து வாதாட, சிவகாசி பட்டாசு ஆலை முதலாளிகள் சங்கம் ஆவன செய்யலாம். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து, புதுப்பொலிவுடன் ஓம் சக்தி பட்டாசு ஆலை எப்பவும்போல இனிதே துவங்கிவிடும். இறந்துபோனவர்களின் மனைவியோ, கணவனோ, அக்காளோ, தம்பியோ,
 அம்மாவோ அல்லது அப்பனோ தாத்தனோ அதே வெடிமருந்து குடோனில் வெடிமருந்தை பிசைந்துகொண்டிருப்பார்கள்.

அடுத்த தீபாவளிக்கு முன்னர், மீண்டும் ஏதாவது ஒரு 'தனியார் பட்ட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து...' என்று பெரிய பெரிய கலர் படங்கள் போட்டு, தினங்களும் மலர்களும் ஒரு வாரத்துக்கு செய்தி போட்டு காசு பார்க்கும். இறந்துபோனவுங்களுக்கு தலா 2 லட்சம் அம்மா கொடுப்பாங்க.

ஆனா, எந்தக் காரணங்கொண்டும் பட்டாசு ஆலைகளை மூடிவிட முடியாது. பட்டாசுகளை ஒழிச்சிட முடியாது. பட்டாசு இல்லைன்னா தீவாளி இல்லை. தீவாளி இல்லைன்னா பத்தே நாள்ள பலகோடி யாவாரம் இல்லை. தீவாளி என்பது உற்சாகக் கொண்டாட்டம் அப்படீன்னு பன்னாட்டுக் கம்பேனிக்காரங்கூட கூவுறானுங்க. ஒரு நாட்டோட மகிழ்ச்சியே தீவாளி கொண்டாட்டம்தானே? இங்கே மகிழ்ச்சிதான் முக்கியம். துக்கம் எல்லாம் சும்மா ரெண்டு நாளைக்கு.

இதோ, தீவாளி எப்போன்னு சங்கராச்சாரி பஞ்சாங்கத்தை பொறட்டி டிவில சொல்லிடுவாரு. நாமெல்லாம் புத்தாடை உடுத்தி, புதுசு புதுசா தினுசு தினுசா பட்டாசு வெடிச்சி தீவாளி கொண்டாடுவோம்.

மீண்டும் இன்னொரு வெடி விபத்துல சந்திக்கலாம்
!!

No comments:

Post a Comment