My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

30.10.12

முனி ரத்தினம். சாரி, மணி ரத்தினம்... எனது முகநூலிலிருந்து... 18


'செயற்கையான' சிரிப்புன்னு குழந்தைகூட சொல்லிடும்!

000

"அருண் பாண்டியனுக்கு சான்செல்லாம் வாங்கிக் கொடுத்தேன்." 

சரிய்யா. அதுக்கு என்ன இப்போ? அவரு நல்லாத்தானே நடிக்கிறாரு?!

000

'எழுபதுகள்ல வந்த மட்டமான தமிழ்ப் படங்கள் தான், டேய் நீயாவது வந்து தமிழ் சினிமாவைக் காப்பாத்துடான்னு கூப்பிட்டமாதிரி இருந்ததாலதான் நான் சினிமாவுக்குள்ளேயே காலடி எடுத்து வச்சேன்’ - முனி ரத்தினம். சாரி, மணி ரத்தினம். 

நீங்க எவ்வ்ளோ பெரிய டைரடக்கர்? உங்க டைரக்டர்ஸ் டச்சைத்தான் 'இருவரில்' பார்த்தோமே. மறக்க முடியுமா? 
ஐநூறு நாள் ஓடியிருக்கவேண்டிய படம். அஞ்சே நாள்ள தூக்கிட்டானுங்க, பொறுக்கிப் பசங்க!!

000

வந்திருந்த மேன்மக்கள் 'புஃபே' சிஸ்டத்துக்குள் புகுந்துவிட்டதால், திருமண மண்டபம் காலியாகிக் கிடந்தது. 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்' பாடலை அட்சரம் பிசகாமல் மிகமிக நேர்த்தியாக பாடி முடித்த அமெச்சூர் இசைக் குழுவுக்கு நான் ஒரு ஆள் மட்டும் கைதட்டியதா
ல் அவர்கள் மிரண்டு போனார்கள். மெல்ல அவர்களிடம் சென்று "நான் தேடும் செவ்வந்திப் பூவிது... பாட்டுப் பாடுங்கண்ணே," என்று ஒரு வேண்டுகோள் வைத்தேன். அடுத்த நொடி, வயலின், கீபோர்டு, கிதார் வாசிப்போரிடம் நோட்ஸ் கொடுக்கப்பட்டது. "மற்ற இசையமைப்பாளர் பாட்டுகளை நோட்ஸ் இல்லாமலே வாசிச்சு ஒப்பேத்திடலாம். ஏ ஆர் ரகுமானையும் சேர்த்து. ஆனா, ராசா சாரோடது அப்படி முடியாது தம்பீ. சின்னச் சின்ன துணுக்குளா எல்லா இன்ட்ருமெண்ட்டும் இடையால வந்துகிட்டே இருக்கும். ஒண்ணு மிஸ் ஆனாலும் நல்லா இருக்காது," என்று கிதாரிஸ்ட் ஒரு விளக்கம் கொடுத்தார்.

ராசா மேஸ்ட்ரோ பட்டத்துக்கு பெருமை சேர்க்கிறார்!


000





சாண்டி பெரும் புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் 13 பேர் மட்டுமே. அந்த ஊர் வானிலை அறிக்கையின் துல்லியம் அப்படி. ஆனால் இங்கே மூணு நாள் தூரலுக்கே முப்பது பேர் சாகிறார்கள். நம்மூர் வானிநிலை அறிக்கை இப்படி!!





000





அமெரிக்காவில் 'சாண்டி' புயலால் நியூ ஜெர்சியில் இருக்கும் ஓய்ஸ்டர் அணுமின் நிலையம் குறித்து அச்சப் படுகிறார்களாம் அமெரிக்கர்கள். நம்முடைய வில்லேஜ் விஞ்ஞானி அப்துல் கலாமையும், தூக்குத் தூக்கி நாராயணசாமியையும் அங்கே அனுப்பி அமெரிக்கர்களின் அச்சதைப் போக்க இந்தியா முயற்சி எடுக்கலாம்!!





000





'இளைய ராசா ரசிகர்கள் யாரும் நம்மோட தேவர் குரு பூஜைக்கு வரக்கூடாது. அது நம்மோட டிக்னிட்டிகு ரெம்ப கொரைச்சல்...' அப்படீன்னு ஒரு கண்டிசன் போட்டா, குருபூஜை காத்தாடிடும்!





000





தெனம் பட்டையடிச்சிட்டு கோயிலுக்கு போறவுங்க; புரட்டாசியில கறி திங்காதவங்க; பெரியவங்களைப் பார்த்தா தபால்னு கால்ல வுழுவுறவுங்க... இத்யாதி கேசுங்கதான் பெண்ணடிமையை பேணி வளர்க்கிறவுங்க. ஆணாதிக்கவாதிங்க. டெஸ்ட்டு வச்சிப் பார்த்துக்கிடுங்க!





000





மை டாட்ஸ் கிஃப்ட்... மை மம்ஸ் கிஃப்ட், காட்ஸ் கிஃப்ட்...

ஆனா எப்பவாவது, எங்கேயாவது 'மை மாமனார்ஸ் கிஃப்ட்' அப்படீன்னு ஒரு நம்பர் பிளேட்டாவது பார்த்திருக்கீங்களா?

டேய், மாப்பிள்ளைகளா, கண்டிப்பா உங்களை கடவுள் கண்ணைக் குத்திங்!!





000





கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது - கருணாநிதி.

ஐய்யகோ, கலைஞரே... உங்கள் உடம்பு இடம் கொடுக்கவில்லையென்றாலும், 'தேவை' கருதி, தாங்கள் தங்கள் தள்ளு-வண்டியிலேயே டெல்லிக்கு அவ்வப்போது சென்று வந்ததை எந்த மானமுள்ள தமிழனும் மறந்திடமாட்டான்.

கடமை... கண்ணு கலங்குது தலைவா!





000





தஞ்சாவூர் : சோழ மன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா அழைப்பிதழில் பெயர் போடப்பட்டும், விழாவில் கலந்துகொண்டால் பதவி பறிபோய்விடும் எனும் 'நம்பிக்கையில்' அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகினர் - செய்தி.

கோயில் கட்ட கல் சுமந்த தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றிய கொற்றவனுக்கு ஏற்பட்ட கதி இது.

மவனே, அறம் கொல்லும்!





000





கடவுள் எனும் கற்பனையை நம்புபவன் மட்டும் மூடனல்ல. நாட்டுப் பற்று எனும் புதை மணலுக்குள் தலையை விட்டுக்கொள்பவனும் மூடன்தான்!





000





தினமலர் ரமேஷ் என்கிற அந்துமணி தன் அலுவலகப் பணியாளரிடம் எல்லை மீறியபோது நடவடிக்கை எடுக்க தொடை நடுங்கிய போலீசு, சின்மயி விவகாரத்தில் மட்டும் மார் தட்டிக்கொண்டு தடாலடி ஆக்சன் எடுத்திருப்பதின் மர்மம் என்னவாயிருக்கும்?

வேறு என்ன?

பூணூல் கோத்திரம் தான்! பூணூல் இருந்தால் சட்டத்தை நொறுக்கி, மாவாக்கி, குழாய்ப்புட்டு செய்யலாம்.





000





"டெசோ தீர்மானத்துக்குப் பிறகாவது இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுக்காலம் கிடகிக்காதா என தாய்த் தமிழகம் தவியாய்த் தவிக்கிறது." - மறத் தமிழர் கருணாநிதி.

தமிழரின் கழுத்தைப் பிடித்து 'கரகரன்னு' அறுத்துப்போட்ட ராஜபகேசவைக்கூட மன்னிக்கலாம். உன்னைப்போல், தமிழர்களின் முதுகில் துருப்பிடித்த கத்தியைப் பாய்ச்சும் பச்சோந்திகளை மன்னிக்கவே முடியாது!





000





தமிழ் நாட்டுல மர்மக் காய்ச்சலாம். டெங்குன்னு சொல்றதுக்கு பதில் மர்மக் காய்ச்சல். 'அம்மாஃபோபியா' டெர்ரர் அனைத்து பத்திரிக்கை, டிவிக்களையும் பிடித்து ஆட்டுது.





000





"இந்திய ஏழைகள் மிகவும் நல்ல கடனாளிகள். அவர்களை நம்பி வங்கிகள் கண்டிப்பாக கடன் கொடுக்க வேண்டும்." - சிதம்பரம்.

நூறு ரூவா பேலன்ஸ் வச்சிட்டாலும் நோண்டி நுங்கெடுத்து, வட்டிக்கு வட்டி போட்டு தாளிச்சு, தெருவுக்கு இழுத்து, ஜெயில்ல தள்ளி, குடும்பத்தையே தற்கொலை பண்ண வச்சிடலாம். வாங்காம சும்மா விட்டுடறதுக்கு இவங்க என்ன விஜை மல்லையாவா? என்ன சிதம்பரம், நான் சொல்றது?!





000





"எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்." - கருணா நிதியின் கேவல்.

அதாவது விஜயகாந்துக்கு இருக்கிற தெரவீசுகூட நம்ம கிட்ட இல்லையேன்னு புலம்பறாரு.

எண்டே அம்மே, நிண்டே 'புஞ்சிரி' எந்தா காது வரைக்கும் நீண்டுபோயி?!

000

சுவிஸ்ல யாராவது பொரி பாக்கீட்டோட டென்சனா அலைஞ்சிக்கிட்டு இருந்தா, அவரு இந்தியாவுல இருந்து தன்னோட லாக்கருக்கு ஆய்தாபூஜை போட ரகசியமா வந்துருக்காருன்னு அர்த்தம்!

000

'பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது.' - கொங்கு வேளாள கவுண்டர் தீர்மானம்.

சட்டம், கோர்ட்டு இதெல்லாம் எங்க சொம்புக்கு** கீழேதான் அப்படீன்னு சொல்ல வற்ராங்ணோவ்! கோய்ம்தூர்னா கொஞ்சமாவது குஸ்ம்பு இருக்குமுங்!!

**ஆலமரப் பஞ்சாயத்தோட பிராபர்ட்டி.

000

"பிரிட்டனைச் சேர்ந்த, "வேதாந்தா' குழுமத்திடம் இருந்து, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள், கோடிக்கணக்கில் நன்கொடை பெற்ற விவகாரத்தை விசாரிக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனம், தன், 2011 - 12 ஆண்டறிக்கையில், இந்திய அரசியல் கட்சிகளுக்கு, 28 கோடி ரூபாய், நன்கொடை வழங்கியுள்ளதாக, வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.

"வேட்டை நாய்களை ஏவிவிட்டு, தண்டகாரண்யா ஆதிவாசிகளை விரட்டியடிக்க எக்கச்செக்கமா செலவு செய்திருக்கோம். எல்லாம் உங்களுக்காகத்தானே எஜமான்? இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுங்க!"

000

'தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.' - - ஜெயலலிதா.

மவராசி..., சத்திய வாக்கு தொண்டர்களைக் காப்பாத்த மட்டும்தானா? மக்களைக் காப்பாத்த சத்தியவாக்கு இல்லையா? அப்போ, நம்ம எம்ஜியார் வெறும் டுபுக்கு எம்ஜியார்தானா?!

000

‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கிறேன்.' - ஜெயலலிதா.

இந்த அட்வைஸ் 100% உங்க மினிஸ்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். நாங்க என்னமோ வெறும் சட்டியைத்தான் வழிச்சு நக்குறோம்!

000

டெங்குவுக்கு பயப்படத் தேவையில்லையாம். அம்மா சொல்றாங்க.

அந்தம்மாவ, ரொட்டி வாங்கிக்கிட்டு போயி ரெண்டு பேர ஆசுபத்திரில பயப்படாம நலம் விசாரிக்கச் சொல்லுங்க பார்ப்போம். (ஒரு கொய்ந்திக்கு முத்தம் குடுக்குறதுக்கே கிருமி தொத்திக்குமுன்னு, கையை நடுவுல வச்சி கொஞ்சின மவராசிதானே?!)

000

சகட்டுமேனிக்கு வழக்கு போடுகிறார் ஜெயலலிதா - கருணாநிதி.

அம்மா கேசு போட்டா அது சகட்டுமேனி. இவுரு அம்மாமேல கேசு போட்டா அது பழிவாங்குதல். அப்ப உங்க ரெண்டு பேருல யாருதான் யோக்கிய சிகாமணி?!

000

வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளித்த 900 தேசிய பாதுகாப்பு படையினர் விடுவிப்பு.

அந்தத் 900 விஐபீ வூட்டுக்கும் புதுசா வாசிங் மிசின் வந்திருக்கும்!

000

" தா.பாண்டியன், "தமிழகத்தில் போலீசார் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன' என, தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க., வுடன், அன்பும், நட்பும் பாராட்டி, நெருக்கமாக இருந்து வரும் பாண்டியன், இப்படி கடுமையான கருத்தை தெரிவித்திருப்பதிலிருந்தே, தமிழக போலீசாரின் செயல்பாடுகள், எந்த திசையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை, யூகித்துக் கொள்ளலாம்." - கருணாநிதி.

தாபா, தன்னோட வீட்டு கக்கூசுல, தனக்குத் தானே பேசிக்கிட்டதையெல்லாம் கருணாநிதி கணக்குல எடுத்துக்கிட்டா எப்படி?

000

"சல்மான் குர்ஷித், அறக்கட்டளை மூலம், 71 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக, வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். 71 லட்சம், ஒரு தொகையா; 71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தால் தான், கவலைப்பட வேண்டும். இந்த அற்ப தொகைக்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,'' மத்திய உருக்குத் துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, பெனி பிரசாத் வர்மா.

நம்ம 'தோயர்' தனாபானாவிடம் மைக்கை நீட்டியிருந்தாலும், இதே கருத்தைத்தான் சொல்லியிருப்பார்!

000

அம்மா, உங்க நல்லாட்சி மேல கண்ணு வச்சிட்டாங்க. அதான் இந்த டெங்கு சொங்கு எல்லாம். கண்டிப்பா எதிர் கட்சி ஏவிவிட்ட சதிதான். மாவுல குட்டிச் சைத்தான் செய்ஞ்சி, கருணானிதி வீட்டு மின்னாடி இருக்கிற கூட்டுரோட்டுல நடு ராத்திரி பன்னெண்டுக்கு, நம்ம பன்னீரை வெச்சிட்டு ஓடிவந்துடுடச் சொல்லுங்க. டெங்கு எல்லாம் சும்மா பிச்சிக்கிட்டு ஓடிடும்!!

000

மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டோம்: அன்புமணி ராமதாஸ்.

ஆமாம். இனிமே 'பொட்டியோட' மட்டும்தான் கூட்டணி. அதைக் கொடுக்குறவுங்க யார இருந்தா எங்களுக்கென்ன?!



000



2 comments:

எருமை said...

தொடர்க!

Anonymous said...

Very Nice sir..


by-Maakkaan.

Post a Comment