My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

2.11.12

அப்பாவி தலைல மொளகா பட்டாஸ்... எனது முகநூலிலிருந்து... 19

நித்தி ஆசிரமத்தை அரசு ஏற்க முடிவு!

அப்போ ரஞ்சிதா?

000

'மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடுவேன்' அப்படீன்னு விஜயகாந்த் சொன்னா நம்புவீங்களா? 

அதுபோலத்தான் இதுவும்.

பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக மாற்றுவேன்: புது வரவு மத்திய அமைச்சர் சிரஞ்சீவி.

000

வழக்கு போட்டால் கோர்ட்டுக்குத்தான் செல்ல முடியும் : முதல்வருக்கு தே.மு.தி.க., பதில்.

இல்லைன்னா... அப்பொல்லோவுக்கு போகணும். மூக்குல சளின்னுட்டு மாவுக்கட்டு போட்டு பிடிவாரண்ட்டு முடியிற வரைக்கும் படுக்க வச்சிருவாங்க!

000

"நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்தினால், தமிழகத்திலும் அமல்படுத்துவதற்கு தயார். ஆனால், பக்கத்து மாநிலங்களில், அனுமதித்து விட்டு, இங்கே அனுமதி மறுத்தால், கள்ளச்சாராயம் பெருகும்,'' - அமைச்சர் விஸ்வநாதன். 

குடிகாரன் பேச்சு மாதிரி தெரியலாம். ஆனா 'பொழுதுவிடிஞ்சா போச்சு' இல்லை. 'அம்ச்சர்' அரசாங்கத்தோட வாய்மையை அப்படியே பிழியிறாரு!

000

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு.

அவங்களால முடியலைன்னா, 'அண்ணா ஆர்ச் புகழ்' எஞ்சினீயருங்களைக் கூப்பிடுங்க. எல்லாம் நல்லபடியா ஆய்டும்!

000

"தீபாவளி பண்டிகை நேரத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப் படும்,'' - அமைச்சர் செந்தில் பாலாஜி.

தீபாவளி வரத்தான் போவுது; ஆம்னிக்காரவுங்க அப்பாவி தலைல மொளகா பட்டாஸ் வெடிக்கத்தான் போறானுங்க; நாங்களும் பாக்கத்தானே போறோம்... எத்தனை ஆம்னி பஸ் உரிமம் ரத்தாவுதுன்னு?

000

அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை : சு.சாமிக்கு ராகுல் எச்சரிக்கை.

கோந்தே, நீ ஆளும் கட்சின்னுட்டு அந்தாளுமேல பாயாத. அவரு அதுக்கும் மேல. அதிகார வர்க்கம். வணங்கிப் போகலைன்னா, உனக்கும் திகாருக்கு வழி சொல்லிப்பிடுவாரு!

000

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று தவறுதலாக அனுப்பி...

பட்டாபட்டியோட பத்து நாளைக்கு பெஞ்சுமேல நிக்கவைக்கணும். இவங்களை நம்ப முடியாது, சோனியாஜி.

நீங்க இனிமே 'அன்னை அன்டொனியோ மைனா...' அப்படீன்னே காங்கிரஸ்காரவுங்களை கூப்பிடச் சொல்லுங்க!

000

சட்டசபைக்கு வைர விழா. 

அம்மே, அந்த டிபன்-பாக்ஸ் பில்டிங்கை சுத்தி, முல்லைக் கொடியை ஏற்றிவிடுங்க. 
'முல்லைக்குச் சட்டசபையையே ஈன்றுவிட்ட கொடை வள்ளல் இந்தத் தமிழ்த்தாய்...' என்று நீங்கள் அன்போடு அழைக்கப்படுவீர்கள்!

000


சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள் - -மத்திய மந்திரிகளுக்கு மன்மோகன் அறிவுரை.

திருடினா, நாலு பேரு கெட்டகெட்ட வார்த்தைல வையத்தான் செய்வான். அதையெல்லாம் நைசா தூக்கிப் போட்டுட்டு, கருமமே கண்ணாயிருக்கணும்னு சொல்றாரு!

000

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவது தேசிய அவமானம்: பால்தாக்கரே.

இன்னொரு முறை சொன்னீங்கன்னா, 'போய்யா யோவ், எங்களுக்கு தேசியமும் வேணாம்; ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம். இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் இருந்தா போதும்...' அப்படீம்பாங்க. அப்புறம் சிங்கத்துக்கு அசிங்கமாயிடும்!

000

பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை; 3 ஆயுள் தண்டனை...

சங்கர்ராமன் கொலைக்கு பிந்தி வந்த கேசு. எவ்வளவு விரைவா முடிச்சிருக்காங்க பாருங்க. நாம நீதித் துறையை 'வாய்த்தினாலும்', சங்கர்ராமன் ஆவி மன்னிக்காது போலிருக்கே?!

000

அமெரிக்காவுல ஒரு சாண்டி வீசுனா, இந்தியாவுல ஒரு நிலம் வீசியாகணும். ரெண்டு நாடும் அவ்ளோ அன்நோன்யம்!

000

பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை; 3 ஆயுள் தண்டனை...

மதுரை தினகரன்ல ரெண்டு பேரை போட்டுத் தள்ளினாங்களே, அவுங்களுக்கு என்ன தண்டனை குடுத்தாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கண்ணே!

000



2 comments:

'பசி'பரமசிவம் said...

சூடான செய்திகளைச் சுடச்சுடப் பரிமாறியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

Dino LA said...

அற்புதம்

Post a Comment