My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

30.12.12

வாய் உதாரில் வெட்டி முறிக்கும் ரஜினி...எனது முகநூலிலிருந்து... 28



"அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி,'' - ரஜினி.

தனி வழியோ, திருட்டுப் பய வழியோ... வந்தாத்தானே தெரியும்? 
மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறவனா இருந்தா எப்பவோ வந்திருப்பே. நீதான் இப்படி உதார் வுட்டே பொழைக்கறவனாச்சே?! 
உதார் வுட்டே சோறு திங்கிறவன் இந்த உலகத்திலியே நீ ஒருத்தன்தான்!

000

2012-ல் தமிழில் கலக்கிய படங்கள் 17. 
151 படங்கள் தோல்வி.

புரட்யூசர் சார்...
நல்லா தெரிஞ்சிக்கணும். 
கதை முக்கியமில்லை!! 
கால் கிலோ சதை. 
ஒரு குத்து குத்தினா ஒண்றை டன் வெயிட்டு ஸ்டண்டு.
'நான் மூத்திரம் பேய்ஞ்சா, இந்த தமிழகமே நாறிடும்...' அப்படீன்னு ஒரே ஒரு பஞ்ச்சு டயலாக். 
ஹீரோவுக்கு மட்டும் ஒரு நாலு கோடி சம்பளம்.
ஆயிரத்து முன்னூத்து நாப்பத்தெட்டு மரத்தைச் சுத்தும் டூயட்டு (சுவிஸ், டென்மார்க் லொகேஷனில்)....
பணம் இருந்தா படம் எடுக்க வாங்க.
சும்மா தேவையில்லாம எங்க நேரத்தை வீணாக்க வேணாம்!


000

"வெறும் பி.சி எம்.பி.சி மக்கள் மட்டுமல்ல எப்.சி எனும் உயர் சாதியினரும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இனி எவனாவது வாலாட்ட முடியுமா? அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன்ன வந்து நிற்போம்." - உயர் 'குடி' ராமதாஸ். 

எலே பஞ்சமப் பயலே, 
பதினெட்டு வயசை தாண்டின உடனே, "ஐ ஆம் அ பஞ்சமன், பறையன், எஸ் சி, எஸ்டி. திங்க் ட்வைஸ் பிஃபோர் யு லவ் மீ..." அப்படீன்னு ஒரு டி-ஷர்ட்டு மாட்டிக்கிட்டு தெருவுல போ! ஏன்னா எதுத்தாப்புல வாரது ஐஎஸ் ஐ முத்திரை குத்தின சொக்கத் தங்கம்னு அய்யர் சாரி அய்யா சொல்லிட்டாரு. மீறினே, ஜாமீன் வாங்க மீன் மார்க்கெட்டுதான் போகோணும்!

000

ஜெயலலிதா நடத்தியது நாடகம் - மு.க.ஸ்டாலின்.

வெளி நடப்புக்குப் பதிலா, இடியாப்பம் பாயா சாப்ட்டுட்டு, ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தா நம்ம ஸ்டாலின் ஒத்துக்குவாரு! இந்த ஒலகமே ஒத்துக்கும். ம்ஹூம்... அம்மா இன்னும் நிறைய அரசியல் கத்துக்கணும்.

000

ஊருக்குள் நுழைய தடுக்கும் உரிமை எவனுக்கும் இல்லை - ராமதாஸ் ஆவேசம்.

கலெக்டரைப் பார்த்து ஒருமையில் ஏகவசனம். யாராய் இருந்தாலும் இவருக்கு அவன் இவன் தான். ஆனா, மத்தவங்கள்ளாம் இவரைப் பார்த்து அய்யான்னு கூப்பிடணுமாம். இவர் பையனை சின்னய்யான்னு கூப்பிடணுமாம். போய்யா யோவ்!

000

எனது மகள் செல்போனுக்கு இளைஞர்களிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன: அமெரிக்க அதிபர் ஒபாமா...

காடுவெட்டியும் ராமதாசும் ஒரு பத்து நாளைக்கு வாஷிங்டன்ல இருந்தா, ஒரு பய வாலாட்டமாட்டான். வூடு பூந்து வெட்டிடுவாங்க. வரச்சொல்லவா வாத்தியார?!

000

சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள் - வெண்ணை வெட்டி ராமதாஸ்.

காடுவெட்டிக்கு குந்துற இடத்துல கட்டியாம். அதான் அவருக்கு பதிலா வெட்டுற வேலைய இவுரு பாக்குறாரு. மாம்பயத்துக்கு பதிலா திருப்பாச்சிய சின்னமா மாத்திடுங்க ஆண்டவரே!

000

டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும்
பெண் போராட்டக்காரர்கள் அழகாக இருக்கிறார்கள் .. கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள். இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது - 
பிரணாப் முகர்ஜியின் மகன் குறும்புப் பேச்சு.

இவருதான் பெரிய அப்பா டக்கராச்சே. அப்பாவின் அண்டர்வேருக்குள்ள புகுந்துகிட்டு என்ன வேணுமானாலும் பேசலாம். சட்டம் அங்கேயெல்லாம் எட்டிப் பாக்காது!

000

அலைகள் ஓய்வதில்லை வெளியீடு 1981. பாமக உதயம் 1989. ஜஸ்ட்டு மிஸ்சு. ஒரு எழுத்து மாறிப்போயிருந்தா, படத்தோட தலையெழுத்தையே மாத்தியிருப்பாரு தலைவரு.. தலிவர் ரொம்ப கண்டிசனான ஆளு. ஆமாம். (தலைவரே, படத்துக்கு பிளாக்குல டிக்கெட்டு வாங்கினீங்கதானே?)

000

தனது கிழட்டு வயதிலும், தன் பேத்தி வயது நடிகையோடு டூயட்டு பாடும் ரஜினியும் கமலும் கூட, பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுக்கு முன்னால், பிரம்மாண்டமான திரையில்,   அந்த நடிகைக்கு பணத்தாசை காட்டி, வலுக்கட்டாயமாக நடிக்கவைத்து, நடிகையை கதை வடிவில் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் எனச் சொல்வதில் தவறில்லை!

000

திருக்குறள் கேவலங்கள் :

ஆணாதிக்கம், பெண்ணடிமை... 
பாட நூலில் மனப்பாடப் பகுதியில் இல்லாதவரை, பெண்கள் தப்பிப் பிழைத்தனர்.

பொருட்பால் - நட்பியல் - பெண்வழிச் சேறல் : சாலமன் பாப்பையாவின் குறள் விளக்க உரை : 

1. மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
2. தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
3. மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
4. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
5. தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
6. தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
7. மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
8. தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
9. அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
10. சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.


000


"ஹல்லோ, யாரு பேசுறீங்க?"
"....."
"ஹலோ யாரு? நீங்க லைன்ல இருக்கீங்க."
"லதா."
"எங்கேருந்து?"
"...."
"எங்கேருந்துன்னு சொல்லுங்க."
"லால் குடி."
"என்னங்க நீங்க, இவ்வளவு சிக்கனமா பேசுறீங்க? நம்ம டமிலகமே இந்த புரோகிராமை பார்த்துக்கிட்டு இருக்குது. நல்லா கலகலன்னு பேசுங்க.நிறைய பேசலாம். வால்யூம் கம்மி பண்ணுங்க."
சத்தமாக, "லதா, லால்குடியிலேர்ந்து."
"ஓ, லதா. லால்குடியிலேர்ந்து. வெரி குட், வெரி குட். லதா... லத்த்தாஆஆ..."
"ஆமா. லதா. லால்குடி."
"சரி லதா. கேக்குற கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லுங்க. சாப்டாச்சா?"
"ம்."
"என்ன சாப்பாடு?"
"முட்டைக் கொழம்பு. மிளகு ரசம்."
"வாவ்... வாட் அ சாப்பாடு. உங்க வீட்ல சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குமா?"
"ஆமா."
"நல்லா வயிறு நிறைய சாப்பிடுவீங்களா, கொஞ்சமா சாப்பிடுவீங்களா."
"கொஞ்சமாத்தான்."
"சோ சாரி. சோ சாரி. நீங்க வயிறு நிறைய சாப்பிட்டாத்தானே நீங்க நல்லா இருப்பீங்க, வீடு நல்லா இருக்கும்? நாடு நல்லா இருக்கும். நாடு நல்லா இருக்கணும்னா நீங்க நல்லா சாப்பிடணும். சரியா லதா?"
"சரி."
"என்னை சாப்டாச்சான்னு கேக்கலையே?"
"நீங்க சாப்டீங்களா?"
"ம், சாப்ட்டேன். நேத்தே சாப்ட்டேன். ஹா ஹா ஹா..."
"....."
"சரி. உங்க பக்கத்துல யார்லாம் இருக்காங்க?"
"அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அத்தை, சித்தப்பு, சித்தி, பக்கத்து வீட்டு கோபு, எதிர் வீட்டு பாபு..."
"வாவ். சரி சரி. உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"மன்மத ராசா, மன்மத ராசா..."
"ஓ, வாட் அ நைஸ் சாங்? யாருக்கு டெடிகேட் பண்ணப்போறீங்க?"
"எங்க அப்பாவுக்கு. அவருக்கு இன்னைக்கு பொறந்த நாள்."
"ஓ ஸ்வீட்... ஹேப்பி பர் டே டு டாட்."
"வேற யாருக்கு டெடிகேட் பண்ணப்போறீங்க?"
"எங்க அண்ணன், தம்பி, சித்தப்பு, கோபு, பாபு..."
"வாவ். இதோ, இதோ நீங்க கேட்ட பாட்டு வந்துக்கிட்டே இருக்கு. கேட்டு எஞ்சாய் பண்ணுங்க. சீ யூ லதா. டேக் கேர். பை..."

(சன் கலைஞர் மியூசிக் சேனல்களில் அரட்டை. ஏறக்குறைய ஒரு அஞ்சு நிமிஷத்துக்கான பேச்சு வார்த்தையில் ஏதாவது உருப்படியான விஷயத்தை பேசியிருக்கானா பாருங்க. ஆனா இந்த மடச் சாம்பிராணிகளை பார்த்தீங்கன்னா, ஏதோ சிக்காக்கோ கும்மாங்கோ ஸ்டேட்ல இருந்து புடிச்சிக்கிட்டு வந்தாப்போல ஒரு பெரிய அப்பா டக்கர் லுக்கு. ஒரு ம... , சாரி, கோழி முட்டைக்கு வெள்ளை அடிக்கக்கூட லாயக்கு இல்லாத பண்டாரப் பசங்க. இந்த நாரப் பயலுங்க பேசுறதுக்கு ஒரு பிராட்காஸ்ட். ஒரு டெக்னாலஜி. தூ, அடிச் செருப்பால, நாய்களா!!)


000

நம்ம கலாம் சார் ஜனாதிபதியா இருந்தா என்ன நடந்திருக்கும்?
ஒரு ஆம்னி பஸ் விடாம ஏறி இறங்கி, "வேணாம். நல்லதில்ல. வல்லரசாகணுமா இல்லையா?" அப்படின்னு பேசியிருப்பார். எல்லாமே சுபமா முடிஞ்சி போயிருக்கும்.


000

"நைட்ல ஏன் பொண்ணுங்க தனியா போறாங்க?" ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணா.

அதாவது, நம்ம இந்தியாவுல, பொண்ணுங்க பகல்ல போனா பரலோகம்; இரவுல போனா எமலோகம். சிம்பிளா புரிஞ்சிக்கணும்.


000

பிரதமர் உரையை பதிவு செய்வதில் தாமதம்: தூர்தர்ஷன் ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்...

தேஞ்சிபோன ரிகார்டரை வச்சிக்கிட்டு, பாவம், அவங்களால என்னதான் செய்யமுடியும். இதே, என்டி டிவின்னா, பிரதமர் பேசுறதுக்கு முன்னாடியே மொத்தத்தையும் பதிவு செய்திருப்பாங்க. 'டெக்னாலஜி' அப்படி!


000

நீங்க நெனைச்சா காய்ஞ்சிப்போன பயிருக்கு முப்போகமும் 'அக்குவா-ஃபினா' தண்ணீர் பாசனம் செய்யக்கூட நிதி உதவி குடுக்க முடியும்.

2ஜி, கிரானைட் கருமாந்திரத்தைச் சொல்லை.... உங்களுக்கு மனிதாபிமானம் ரொம்ப ஜாஸ்தின்னு சொல்ல வந்தேன்., தல!

(சம்பா பயிர் கருகிய காரணத்தால் தற்கொலை செய்துகொண்டு உயிர்விட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளித்த பிறகும், அரசின் சார்பில் எந்தவொரு உதவி நிதியும் அளிக்கப்படவில்லையே?... -தலைவர் 'தன்னைத் தானே' கேள்வி பதில்.)


000

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான ஒரு பெண்ணை, மருமகளாக ஏற்றுக் கொள்ள தயாரா? - மீரா குமார்.

ஏறுக்கொள்ள பலகோடி முற்போக்கு இளைஞர்கள் தயார்தான். அவ்வாறு நடந்தால், பிற்போக்குவாதியே, நீங்கள் பதவி விலகத் தயாரா?! அந்தப் பெண்ணை கேவலப்படுத்த உங்களை விட்டால் இந்த உலகத்தில் வேறு ஆள் இல்லை!


000

"இவ்வளவு பேசறீங்களே..., பெரியார் சாகிற கட்டத்துல இருக்கும்போது பயந்துகிட்டு சாமி கும்பிட்டாராமே, உண்மையா?" - கடுப்பின் வெளிப்பாடு.
நக்கல் அடிக்கும் நாஸ்திகர் மனதில் பெரியார் எப்போதும் கடுப்பேற்றிக் கொண்டே வாழ்கிறார்! பெரியாரா கொக்கா?!


000

பள்ளிக்கோடம் விட்டு குழந்தைங்க பேருந்துல ஏறமுடியாம தத்தளிக்கிற நேரத்துல, ஒரு பத்து கவர்மெண்ட்டு அதிகாரிங்க படியில தொத்தாம, பின் படிக்கட்டு வழியா ஏறி, அடுத்த ஸ்டாப்பிங்குல முன் படிக்கட்டு வழியா இறங்கிக் காட்டணும். அவங்களால படியில தொத்தாம போக முடிஞ்சா, பயலுவ வேணுமின்னே படியில தொங்குறாங்கன்னு ஒத்துக்கலாம். நூறு ரூவா பெட்டு!!

000

டெல்லி மாணவிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் :அப்துல்கலாம்.

அய்யா, அந்தப் பாழாப்போன பேருந்துல கயவர்கள் குதறி எடுத்தபோது, கண்ணை இறுக்க மூடிக்கிட்டு, காப்பாத்த முன்வராத கடவுளைப் பார்த்து பிரார்த்தனை செய்யணுமா அல்லது பிரம்பால் அடிக்கணுமா? இதையும் கொஞ்சம் சொல்லிப்போடுங்க!


000

"தமிழகத்தில், சம்பா பயிருக்கு, போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில், கருகிய பயிரைக் கண்டு மனம் வெதும்பி, வறுமையின் கொடுமை தாங்க முடியாமல், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி தெரியாமல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.இறந்து போகும் இந்த விவசாயிகளைப் பற்றி, தமிழகத்தில் ஆளும் அரசுக்கு, எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை." - கல் நெஞ்சக்காரர், சாரி, கலைஞர்.

நம் தமிழினத் தலைவர் முதல்வராய் இருந்தபோது, இந்தக் கொடுமையான தற்கொலை எல்லாம் நடக்கவில்லை என்று சொல்லிட முடியாது. ஏனென்றால் நம் இன மானத் தலைவர் அப்போது அமெரிக்காவுக்கு அல்லவா முதல்வராய் இருந்தார்?!

4 comments:

அமுதா கிருஷ்ணா said...

பயங்கர கோவமாய் இருக்கீங்க போல இருக்கு.அடுத்த வருஷமாவது நமது கோவம் குறையட்டும்.

ஆதன் said...

ஆளும் வர்க்கத்தின் மீதான சாட்டையடிகளை படிக்க படிக்க விஷயத்தை வீரியத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமை! அருமை!...ஈட்டி போன்ற கூர்மையான வார்த்தைகள்...எல்லாம் உண்மை..

-----Maakkaan.

கரிகாலன் said...

நல்ல ஈட்டி போன்ற வார்த்தைகள் ,நல்ல வரும் போல இருக்கிறது .தொடரட்டும் .

///எனது மகள் செல்போனுக்கு இளைஞர்களிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன: அமெரிக்க அதிபர் ஒபாமா...

காடுவெட்டியும் ராமதாசும் ஒரு பத்து நாளைக்கு வாஷிங்டன்ல இருந்தா, ஒரு பய வாலாட்டமாட்டான். வூடு பூந்து வெட்டிடுவாங்க. வரச்சொல்லவா வாத்தியார?!///

வாய்விட்டு சிரித்தேன் .

Post a Comment