My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

21.12.12

சுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தியாரே!!


வணக்கம் வாத்தியார. 

குந்தர்துக்கு கூட குட்ச இல்லன்னு சொல்லிக்கினியாமே? உண்மையாலுமா? 
அடப்பாவமே, 
எச்ச கைல கூட காகா ஓட்டாத ஆளுன்னு பேரு வாங்கின மன்சனாச்சேய்யா நீயி?!. 
தமியகத்து சினிமா கொட்டாவையே தூக்கிப் புடிக்கிற உனுக்கு, குந்தர்த்துக்கு குட்ச இல்லன்னும்போது காஞ்சிபோன என் கம்னாட்டி வயிறுகூட கும்ட்டி அடுப்பா எரியுது.

இன்னா வாத்தியார நீ, பட்துக்கு பத்து செங்கல்லுன்னு கூலி கேட்டிருந்தாக்கூட இன்னேத்திக்கி பட்ணத்துல ஜம்முன்னு பத்தடுக்கு மாடி கட்டிக்கினு கீலாம்.
சரி, அத்த வுடு.
தெனம் தெனம் தின்சு தின்சா கிராப்பு வெட்டிக்கினு போஸ் குடுக்கிறயே, அந்தக் கிராப்பு எல்லாம் மைலாப்பூர் கொள்தங்கரையில குந்திக்கினு வெட்னதா?
நகம் வெட்டிக்கிறதுக்கும், இஸ்பாவுல குளிக்கிறதுக்கும், வெளி நாடு ஊர் சுத்தறதுக்கும் துட்டுக்கு இன்னா பண்ணுவ?
இஸ்டார் ஓட்டல்ல மூணு வேளையும் மூக்குப் பிடிக்கத் திங்கறதுக்கு காசு?
அப்புறம் தண்ணி கிண்ணின்னு செலவு ஏறிக்கிட்டே போவுமே வாத்யாரே?

என்னமோ போங்க. நான் இத்தினி நாளா, ராஜ் கமல் பிச்சர்ஸ் உங்களோடதுதான்னு நெனைச்சிக்கினு இருந்தேன். கடேசில அது, ஐசவுஸ் மார்க்கெட்டுல கருவாடு விக்கிற முனிமா ஆயாவுதுன்னு தெரியாமப் போச்சி. பாவம் வாத்தியார நீங்க.
எனக்கு கண்ணுல தண்ணி பொலபொலன்னு மூணு நாளா ஊத்திக்கினே கீது. ஜல்ப்பு இல்ல வாத்தியார; பீலிங்ஸ்.

வுடுங்க வாத்தியார.
தோ வந்துட்சி விஸ்வரூபம். வாத்தியாருக்கு வூடு இல்லைன்னு நென்ச்சி நென்ச்சி அந்தப் படத்த பத்துவாட்டி பாத்துறமாட்டேன்? இதே கணக்குல நம்ம ரசிகருங்க படம் பார்த்துட்டாங்கன்னா, எல்லைசி பில்டிங்கே உனுக்குத்தான் சொந்தம் வாத்தியாரே.

ஆனா ஒரேஒரு கேள்வி.

தன்னோட படம் ஓடனும்கிறதுக்காக நம்ம 'எதிரி' ரஜினி பேசுவாரே... 'நான் அரசியலுக்கு வருவேன்; ஆனா வரமாட்டேன்' அப்படீன்னு. அந்தமாதிரியெல்லாம் நீங்க படம் ஓடணும்னு டகால்டி வுட்றீங்களோன்னு சந்தேகமா இருக்கு.

செந்தில் ஒரு படத்துல சொல்லுவாரு; பூவை பூன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம் அப்படீன்னு. அந்த மாதிரி கோக்குமாக்கு ஸ்டேட்மெண்ட்டு எதுவும் அவுசரப்பட்டு குடுத்துட்டீங்களோன்னு ஒரு டவுட்டு.

பத்தாயிரம் கோடி பண்டு ஒதுக்கினாலும் மில்டிரிக்காரங்கிட்ட பத்து பைசா இல்லாதது மாதிரி, இஸ்கூல் பசங்களை உட்டு தெரு முனைல கொடி நாள் அப்படீன்னு உண்டி குலுக்கச் சொல்லுவான். அந்த மாதிரி கதை கிதை வுடறீங்களோன்னு ஒரு டவுட்டு.

தமிழ் நாட்டையே பாதி துண்ட்டு ஏப்பம் வுட்டுட்ட எம் எல் ஏ அண்ணன், எலக்சனுக்கு முன்னால தேர்தல் கமிஷன் கிட்ட கணக்கு சொல்லி ஒரு லிஸ்ட்டு குடுப்பாரு... அறுவத்தெட்டுல வாங்கின அம்பாசிடர் ஒண்ணு. அண்டா அடகு வச்ச ரசீது ரெண்டு. அந்துபோன செருப்பு மூணு அப்படீன்னு. அந்தமாரி போங்கு கணக்கு எதுனா எட்து அவுத்து வூட்றீங்களோன்னு டவுட்டு.

எப்பிடியோ போங்க வாத்தியார். நீங்க கிளிசரின் போட்டு அயுவுறீங்க. நாங்க உண்மையாலுமே தேம்பித் தேம்பி அயுவுறோம். அயவச்சிட்டீங்க!!


உங்க படம் ஓடணும்கிறதுக்கு நீங்க சாதிப் பெயர் வைச்ச தேவர் மகன்களோ, சண்டியருங்களோ, விருமாண்டிங்களோ உங்களுக்கு சோறு போடமாட்டாங்க வாத்தியாரே. ஓல்சேல்ல மொத்தமா ஏமாந்த  நாங்கதான் போடணும்.

உங்க பாட்டு மெட்டுலயே பாடிக் காட்டவா?


"எங்களை விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லே; எவருமில்லே...!"

வுட்டுத் தள்ளுங்க. நிம்மிதியா போயி அடையார் கேட்டு ஓட்டல்ல ரூம்போட்டு குந்துங்க. மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்.

சுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தி
யாரே!!

2 comments:

Jeevanantham Paramasamy said...

அருமை...
வாத்தியாரயே பேந்த பேந்த முழிக்கவச்சுட்டீங்க.

Anonymous said...

Really nice...


By---
Maakkaan

Post a Comment