My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

5.12.12

மிஸ்டர்ர்ர் சமத்து, சாரி சம்பத் அவர்களின் கவனத்துக்கு :



மிஸ்டர்ர்ர் சமத்து, சாரி சம்பத் அவர்களின் கவனத்துக்கு :

1. 'மானமிகு' என்று ஆரம்பிக்க வேண்டாம். இங்கே பொருந்தி வராத வார்த்தை.

2. துண்டை முதுகு வழியாகக் கோர்த்து, ஸ்டைலாக இரண்டு கைகளாலும் பிடித்தபடி பேசக்கூடாது. சொல்லியிருப்பாங்களே?! இடுப்புல வேணா கட்டிக்கோங்க!

3. எடுத்த உடனே 'மாண்புமிகு அம்மா' அப்படீன்னு ஆரம்பிக்கக் கூடாது. தங்கத் தாரகை, ஈழத் தாய், திராவிடம் காக்க வந்த... அப்படீன்னு பழக்கப்பட்ட பதினைந்து இருவது வார்த்தைகளைக் கோர்க்கணும். பக்கத்தில் இருக்கும் பன்னீர் செல்வத்திடம் கேட்டுத் தெரிந்து புரிந்துகொள்ளவும்.

4. மேடையில் பேசும்போது கை தட்டல் விழுதான்னு பார்க்கக்கூடாது. அம்மா தன் மெல்லிய கரங்களால் மெல்லக் கை தட்டி, சிரிக்கிறார்களா என்று அடிக்கடித் திரும்பிப் பார்த்துப் பேசவேண்டும். அம்மா சிரித்தால் உம் ஆயுள் கூடும். பதவி பல்கிப் பெருகும்.

5. சீறும் சிங்கம்; பங்கம்... இப்படியெல்லாம் அடைமொழி போட்டுக்கொண்டு போஸ்டர்களில் 'மூஞ்சியை' காட்டக்கூடாது. மக்கா நாளே சீட்டு கியிஞ்சிடும்!

6. ரோமாபுரி, ஸ்பார்டகஸ், பீனிக்ஸ், சாக்ரடீஸ், இத்தியாதி வார்த்தைகளை சுத்தமா துடைச்சி எடுத்து மூட்டை கட்டி, தலையை மூணூ வாட்டி சுத்தி, சனீஸ்வரன் கோயில்ல போட்டுடுங்க.  தொண்டர்களைக் குழப்ப வேண்டாம். சும்மா, ஒரு அடுக்கு மொழிக்காக, தாம்பரம் சிதம்பரம் அப்ப்டீன்னு பேசினாப் போதும். ஆனா, தாம்பரம் சிதம்பரம் ரைமிங்குல, வெங்காயம் அப்படீன்னு வார்த்தை விடக்கூடாது. அம்மாவுக்கு வெங்காயம்னா ஆகாது.

7. கடேசியா, முக்கியமா ஒண்ணுண்ணே... அதிமுக அதிமுக அப்படீன்னு ஆயிரம் வாட்டி சொல்லிப் பழகிக்கோங்க. மேடையில மாத்தி, மதிமுக அப்படீன்னு சொல்லிட்டு, 'நாக்கைக் கடிச்சீங்கனா' போச்சு. அப்புறம் நீங்க திரும்பவும் மதிமவுக்கு வரப்போறீங்களோ அல்லது நாக்கைக் கடிச்சுக் கண்பிச்சதால விஜயகாந்த் கட்சிக்கு தாவப்போறீங்களோன்னு தொண்டர்கள் ஜாடைமாடையா பேசிக்குவாங்க. அம்மாவுக்கும் நெத்தி சுருங்கும்!

இதுல ஒண்ணு கொறைஞ்சாலும், நீங்க ரிவர்ஸ் கியர்லியே மேடையிலேர்ந்து கீழே இறங்க நேரிடும்.
மத்தபடி, நாங்க விரலை மடக்கி வாய்ல வச்சிக்கிட்டு ரெடியாத்தான் இருக்கோம். 
விசில் விண்ணைக் கிழிக்கட்டும்!!

No comments:

Post a Comment