My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

9.12.12

இனிமே தக்காளி கிலோ ஒண்ணே முக்காற் ரூவாதான். எனது முகநூலிலிருந்து... 24

எம்ஜியார், சிவாஜி, ரஜினி இவங்களுக்கெல்லாம் ஜோசியம் பார்ப்பதுபோல 'ஒட்டு வேலை போட்டா' எடுத்து வைத்துக் கொள்ளும் தெருவோர ஜோசியர்களுக்கும், பிரபாகரனுன் பக்கத்திலேயே நிற்பதுபோல 'சூப்பர்-இம்போஸ்' செய்து தனக்குத் தானே பேனர் கட்டிக்கொள்ளும் டகால்டி தமிழீழப் போராளிகளுக்கும் பெருத்த வித்தியாசம் இல்லை.

000

கடும் உழைப்பாளியின்
மிக மலிவான, 
ஆனால்
மனநிறைவான கூலிதான்
அவனை மறந்த
அயர்ந்த உறக்கம்!

000

"நீடிக்கும் வஞ்சகம்.. மத்திய அரசின் கீழ் ஏன் நீடிக்க வேண்டும் தமிழகம்?" - வைகோ.

ரோமாபுரிச் சிங்கங்களே... 
'ஆஃப்டெர் ஆல் சம்பத்து' ஒரு கொள்கைப் பரப்பு 'துணை'ச் செயலாளர்தான்.
'முழு' செயலாளர் லைசென்சுக்கு, நமது அண்ணன் 'எட்டு' போட்டு பழகிக் கொள்கிறார். அவ்வளவுதான்!

000

"நாட்டில் தற்போது நிலவும் சிக்கலான சூழ்நிலையில் மத்தியில் உங்கள் ஒருவரால்தான் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தடைக்கற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கியவர் நீங்கள்.." சோனியாவை புகழும் கருணாநிதி.

அன்று :
"நேருவின் மகளே வருக,
நிலையான ஆட்சி தருக!."

இன்று :
"அன்னை சோனியா வருக,
அடகு வைத்த இந்தியாவைத் தருக!"

000

கருகும் பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் போதுமா? ராமதாஸ் கேள்வி...

ஆக, காவிரித் தண்ணீர் பெற பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம், பந்த் இதெல்லாம் கிரிமினல் வேஸ்ட். 

தங்களை விடத் தாழ்வான ஜாதிக்காரன் குடிசைகளை கூச்சமே இல்லாமல் கொளுத்தினால்தான் காவிரித் தண்ணீர் கிடைக்கும்; கருகும் பயிரையும் காப்பாற்ற முடியும். அய்யாவை புரிஞ்சிக்கோங்கடா மரமண்டைகளா!!

000

வலுக்கட்டாயமாக மாட்டி விடப்பட்ட டவுசரை அவிழ்த்துப் போட்டுவிட்டு, ஆறு வயது வரை அம்மணமாகவே எனது ஊர்த் தெருக்கள் அனைத்திலும் சைக்கிள் டயர் வண்டி ஓட்டியிருக்கிறேன். யாவரும் நான் டயர் வண்டியை ஓட்டுவதை பார்த்து ரசிப்பதற்காக அல்ல. அது என் அடங்காத விருப்பமாய் இருந்தது. நிறைவேறியது. அதே சமயம் வாசலுக்கு வெளியில் நிற்கவைத்து அப்பனுக்குக் கூலி கொடுத்த ஆண்டையை செருப்பால் அடிக்கவேண்டும் எனும் அடங்காத ஆசையும் இருந்தது. நிறைவேரவில்லை. இப்போது அந்த ஆசைக்கு உரமூட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். இனிமேலும் இவர்கள்தான் ஆளவேண்டுமென்றால், நான் கண்டிப்பாக செருப்பைக் கழற்றியாக வேண்டும்!

000

இனிமேலும்
தண்ணீர் திறந்துவிட
மறுக்கப்பட்டால்...

இனி
எலிக்கறிதான்
சோறுடைத்த சோழ நாட்டின்
வரலாற்று அடையாளம்.

வக்கில்லாமல்
சோடைபோன நம்
கழங்கங்களின்
சூடுபட்ட அடையாளம்.

கர்நாடக அரசு
கயமைத் தனத்தின்
கறை படிந்த அடையாளம்.

நீதி மன்ற உத்தரவு
நீர்த்துப் போனதன் அடையாளம்.

ஒன்றிணைந்த இந்தியாவின்
ஓர் உன்னத அடையாளம்...

இனி
எலிக்கறி மட்டும்தான்
காவிரி என ஒன்று
இருந்ததற்கான
உண்மையான அடையாளம்!

000

நல்ல பேச்சாளர்தான். யாரு இல்லேங்கறா?
ஆனா, இதே குவாலிபிகேஷனை வச்சிக்கிட்டு, ஏடிஎம்கேல இருந்து, ஏசு அழைக்கிறார் குரூப்புக்கு தாவமாட்டாருன்னு என்ன நிச்சயம்?

மேடைப்பேச்சு யாவாரிக்கு கொள்கை முக்கியமில்லை காணும்; காசுதான் முக்கியம்!

000

குறைந்த பட்சம் ஒரு இருபது கிமீ வேகத்தில் போனால் கூடப் பரவாயில்லை; போக்குவரத்து நெரிசலில் காலை ஊன்றி ஊன்றி, குரங்குப் பெடல் அடித்துக்கொண்டே நகர்ந்து நகர்ந்து அலுவலகம் போய் வருகிற வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் எதற்கு? ஹெல்மெட்டுக்குள் 'டெஃப்ளான்' கோட்டிங் இருந்தாலாவது ஆப்ப சட்டியாக உபயோகித்துத் தொலைக்கலாம்!

000

விஷமிகள் பரப்பிய வதந்தியை நம்ப வேண்டாம்: கலைஞர் பேட்டி.

கதவு ஜன்னலுக்கு கண்ணாடி போடுறவன் வேலையாத்தான் இருக்கும்!

000

பதினைந்து டிகிரியில் வளைந்து, இருபத்தைந்து, நாற்பத்தைந்து, அறுபது, தொண்ணூறு என்று வளர்ந்து, நெடுஞ்சாண் கிடையில் முடியும் நாஞ்சிலாரின் பரிணாமம்!

000

ஒரு உதாரணத்துக்கு...

ஒரு பிராமணச் சாதி சங்கம் 'பாட்டாளி மக்கள் கட்சி' என்று பெயர் வைத்துக் கொள்கிறது எனக் கொள்வோம். அது எப்பேர்பட்ட நகைச்சுவையாய் இருந்திருக்கும்?

ஆனால் பாருங்கள்... ஒரு வன்னியச் சாதி வெறிச் சங்கத்துக்குப் பெயர் பாட்டாளி மக்கள் கட்சி. இப்போது, எப்படி வேண்டுமானாலும் நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்!!

000

காதல் வந்தால் சாதல்...

காதலிச்ச பொண்ணை, அவளோட அப்பனோ, அண்ணன் தம்பியோ, மாமனோ அல்லது எவனோ ஒருத்தன் போட்டுத் தள்ளினா, அதுக்குப் பேரு கருணைக் கொலையாம்.

அப்போ, பிற ஜாதிப் பையனோட ஓடிப்போயிட்ட(!) பொண்ணோட அப்பனை, ஜாதி மசிராண்டிங்க உசுப்பேத்தி உசுப்பேத்தி தூக்கு மாட்டிக்க வைக்கறதுக்கு என்ன பேருடா வைப்பீங்க? கருணைத் தற்கொலையா?

சரி. அத வுடுங்க. ஒத்தத் தலைக் காதல்ல, ஒத்தத் தலைவலியா வந்து, காதலே வேண்டாம்னு சொன்ன பொண்ணோட மூஞ்சில, ஒரு பொறுக்கிப் பய ஆசிட் ஊத்துனா, அதுக்கு என்ன பேருடா வைப்பீங்க? கருணைச் சித்ரவதையா?

000

அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா.

உங்கள் அரசின் லட்சணம், நாய்கள் மட்டுமே விமர்சிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது போலும்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

000

"பொண் கொயந்தை பொறக்கலைன்னு மாமியா என்னை செருப்பாலயே மாங்கு மாங்குன்னு அடிச்சாங்க. கேசு போட்டிருக்கோம்."

"கேசு. கோர்ட்டு, சட்டம், மாவட்டம் இதைப்பத்தியெல்லாம் கவ்லை படாதீங்க. நாங்க கட்ட பஞ்சாயத்துலயே தீத்து வைக்கிறோம். ம், மேல சொல்லுங்க... செல்லம்மா, அய்வாதீங்க... அய்வாதீங்க"

"அடிச்சேன்னு எம் மேல பொய் சொல்றதே பொய். சுத்தப் பொய்."

"சரி. அதனாலென்ன? இப்பத்தான் அடிச்சிக்கோங்களேன், நாங்க 'லைவா' உண்மையா பொய்யான்னு பார்த்து, தீர்த்து வைக்கிறோம்!"

(இடைவேளைவரை காத்திருங்கள். இந்தக் குடும்பம் அடிச்சிக்கிறாங்களா, பிரிஞ்சிட்டாங்களா, நாதியத்துப் போனாங்களா அப்படீங்கறதை இடைவேளைக்கு அப்புறம் கண்டிப்பா பார்ப்போம்.)

நன்றி : ச்சீ டீவி.

000

எக்ஸ்கியூஸ் மீ, மை டியர் அண்ணாச்சீ...
எங்க தலீவர் ஆதரவு குடுத்துட்டாரு.
இனிமே தக்காளி கிலோவுக்கு, ஒண்ணே முக்காற்ரூவாதான்.
முடிஞ்சா யாவாரம் பண்ணுங்க.
இல்லேன்னா, நாங்கள்ளாம் வால்மார்ட்டுக்கு ஓடிப்போயி வாங்கவேண்டி இருக்கும்!
இனிமே மூஞ்சி மொகம் எல்லாம் பாக்க முடியாது அண்ணாச்சி!
ரெம்ப சாரி.

000

பின்னே?
பாவம்ணே...,
இவரு மட்டும் இல்லைன்னு வச்சுக்கங்களேன்..., மதவாதிங்க தமியகத்தையே தொயிச்சி, கியிச்சி, புயிஞ்சி, கிளிப்பு போட்டு, மவனே காயப்போட்டிருப்பாங்க. அடேங்கப்பா... ஒரு செகண்டு. ஜஸ்ட்டு ஒரு செகண்டுதான். இல்லைன்னா ஜஸ்ட்டு மிஸ்ஸாயிருப்போம். கலைஞரா கொக்கா?! தலிவர் வாய்க!!

000

உடன்பிறப்பே,
உடன்பிறப்பே,

எப்பொழுது வரும்
எப்பொழுது வரும்
என்று
இந்திய மக்களெல்லாம்
இருப்புக்கொள்ளாது
எட்டி எட்டிப் பார்த்து
ஏங்கிக் கிடக்கையில்,

பாரதம் மட்டுமன்றி
திராவிட நாடாம் நம்
தமிழ் நாடு தழைக்க
தமிழினம் பிழைக்க
உழவர்கள் செழிக்க
மதவாதம் மழிக்க
நம் எதிரிகளை ஒழிக்க
உதித்துவிடுவான்
இன்னொரு உதய சூரியன்...

வாருங்கள் உடன்பிறப்பே...
வருமின் வருமின்
தமிழகம் துலங்கிட
பல்பொருள் அள்ளித்
தருமின் தருமின் என்று
வரவேற்போம் வால்மார்ட்டை!!...

000

"த்தூ... காறி உம் மூஞ்சில துப்பினாலும், அந்த எச்சைக்குத்தாண்டா அவமானம்..." அப்படீன்னு தன்னோட எல்கேஜி பையனை போட்டு வெளுத்து வாங்கிக்கிட்டிருந்தாரு பக்கத்துத் தெரு பெட்டிக்கடை 'பெரு முதலாளி.'

பாவம், அவருக்கு யார் மீது கோபமோ?!

000

ஒரு பக்கம் அன்னிய முதலீடு எனும் மாற்றந்தாய்க் கொடுமை.
மறு பக்கம் மதவாத சக்தி எனும் சித்திக் கொடுமை.
அய்யகோ...,
வாயில் விரல் வைத்தாலும் சூப்பத் தெரியாத இந்த 87 வயது அனாதைக் கைக்குழந்தை என்னதான் செய்யும்?
கடைசியில் கண்ணீர் மல்க, மாற்றாந்தாய் காலடியில் படுத்துவிட்டது! (நாடகத்தின் தொடர்ச்சி, விளம்பர இடைவேளைக்குப் பிறகு).

000

தற்கொலை பற்றி பாட்டு எழுத தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்ன? கவிஞர் வைரமுத்து பேச்சு!

'காமரசம்' கண்ணதாசனே வெட்கப்படும் ஆளவுக்கு, கேவலமாக, ஆபாசமாக நீங்கள் எழுதிய பாடல் 'வருணனைகளுக்காக', தெருவில் நடந்து போகும் தமிழச்சியின் துணியைத்தான் அவிழ்த்துப் பார்க்கவேண்டுமா? என்ன கவியரசரே, நாஞ்சொல்றது?!

000

கட்சி ஆரம்பிச்சப்போ மரத்தை வெட்டினார். இப்போ மனுஷனை வெட்டுறார்; வீட்டைக் கொளுத்துறார். இது முன்னேற்றம் இல்லையா? அந்தக் கட்சி வளறலேன்னு எவண்டா சொன்னது?! ஆண்டே... ம், ஆகட்டும் ஆண்டே!!

000

புதுடில்லி: எதிரிகளின் ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் சக்தி பெற்ற, இந்தியாவின் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது...

மிகவும் நல்லது..
நம் வல்லரசு இந்தியா வாழ்க!!!
இருக்கட்டும்.
ஆனாலும், ஒரு சந்தேகம்.
இந்த ஏவுகணை மூலமாக (மிகக் குறைந்த பட்சம்), ஒரு ராமேசுவரம் மீனவன் உசுரையாவது காப்பாத்த முடியுமா?
அல்லது...
இதுவும் வெறும் தீவாளி சங்கு சக்கரம்தானா?

000


கட்சி ஆரம்பிச்சப்போ மரத்தை வெட்டினார். இப்போ மனுஷனை வெட்டுறார்; வீட்டைக் கொளுத்துறார். இது முன்னேற்றம் இல்லையா? அந்தக் கட்சி வளறலேன்னு எவண்டா சொன்னது?! ஆண்டே... ம், ஆகட்டும் ஆண்டே!!

000

கலாம் சார் சும்மா 'தமாசுக்கு' பேசின பேச்சையெல்லாம் கம்பேனி தலைப்பா வெச்சிருக்கானுவ. 
படுபாவிப் பசங்க! 
உருப்படுவீங்களாடா நீங்க?!!

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமாரும், விவேக்கும், "பைன் ப்யூச்சர் (Fine Future)"
பைன் இந்தியா (Fine India), 
பெஸ்ட் வே (Best Way), 
வேஸ் டூ சக்சஸ் (Way to Sucksuss)', என்ற பெயர்களில், 
நிதி நிறுவனங்களை நடத்தி ரூ.2000 கோடி மோசடி.

000


2 comments:

Tamil News Service said...

நல்ல பல தகவல்களின் தொகுப்பு \
மிக்க நன்றி

Anonymous said...

Really fantastic...

By--Maakkaan.

Post a Comment