கேட் மெல்லத்திறக்கப்பட்டு, எட்டிப் பார்த்தவாறே பார்வை உள்ளே சென்றது.
"வணக்கம் சார், அகராதி... இங்கிலீஷ் டு தமிழ்..."
"டேய்... எருமக் கடா, டேப் தட்றா... டேப் தட்றா"
"சேவ் பண்ணலையா, முண்டக்கலப்ப... எத்தனை முறை சொல்லியிருக்கேன், அர மணி நேரத்துக்கு ஒருக்கா சேவ் பண்ணுடான்னு? எஸ்கேப் தட்டு! கண்ட்ரோல் -ஆல்ட் - டெலிட்...?"
"சார்... வணக்கம். இங்கிலீஷ் டு தமிழ் அகரா..."
"சனியன் ஹேங்க் ஆகிடுத்து..."
"என்ன பண்றது இப்போ...? எம்டி கேப்பானேடா... அர்ஜெண்ட் ஜாப்... காலையிலேர்ந்து ஒர்க் பண்ணினது எல்லாமே வேஸ்ட்!"
"பன்னாட, ஒண்ணு, காப்பிய குடிச்சுட்டு வேலைய செய்திருக்கணும்... இல்லைன்னா காப்பியே வேண்டாம்னு சொல்லியிருக்கணும். கீ போர்டையே கொளமாக்கிட்டியேடா?"
"சார்........ சார்........ அகராதி சார். லேடஸ்ட் வெர்ஷன் சார்..."
"மூதேவி, அப்-டு-டேட்ல, டேலி பண்ணி வச்சிருந்தேன். எல்லாம் போச்சு. எம்டி கேக்கப்போறான். இண்ணிக்கித்தான் ஐ டி சப்மிஷன் லாஸ்ட் டேட்..."
"10 பெர்சண்ட் டிஸ்கவுண்ட் தர்றேன் சார். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்!"
"வாட் 14% போட்டு என்ட்ரி குடுக்கறதுக்குள்ளார தாவு தீந்துபோய்டுத்து. ஒரு மாசத்து அக்கவுண்ட நாசனம் பண்ணிட்டியேடா..."
"சார்... இங்கிலீஷ் டு தமிழ்... ரொம்ப ஈசியா இருக்கும் சார்..."
"என்ன படிச்சி பிரயோஜனம்... உனக்கு மூளையே இல்லையே... மூஞ்சியப் பாரு?! எழுந்து வா... எம்டி கூப்பிடறான். பிராப்ளத்த சொல்லுவோம். கழுத, ஒத்துக்கிடுச்சின்னா சரிதான்... இல்லைன்னா வேற வேலைய பாத்து தேடிப் போகவேண்டியதுதான்..."
"சார், டிக்ஷ்னரி...?"
மூன்று பேர் எழுந்து எம் டி ரூம் கதவைத் தயக்கத்துடனே திறந்து எட்டிப் பார்த்தவாறு உள்ளே போனார்கள்.
மீண்டும் கேட் கதவு மெல்லச் சாத்தப்பட்டது.
"ஒரு நாலு டிக்ஷனரி கூவி விக்க லாயக்கில்ல... எம். காம் படிச்சிருக்கிற!" எப்பவும் போல சேல்ஸ் மேனேஜர் எறிந்து விழுவான்.
அடுத்த கேட் மெல்லத் திறக்கப்பட்டு, பார்வை தயங்கி உள்ளே சென்றது.
"வணக்கம் மேடம்... இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரி மேடம்... பத்து பெர்சண்ட் டிஸ்கவுண்ட்..."
2 comments:
படித்திருந்தும் வேலைக்கிடைக்காத கொடுமையா?இது.
கொடுமை.. யார் காலையாவது பிடிச்சு தொங்கி ஜால்ரா போட்டு, புக்ழ் மாலை சூடி வேலை வாங்குவதை விட்டுவிட்டு இப்படி அலைந்தால் ?..
Post a Comment