My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

30.12.12

வாய் உதாரில் வெட்டி முறிக்கும் ரஜினி...எனது முகநூலிலிருந்து... 28



"அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி,'' - ரஜினி.

தனி வழியோ, திருட்டுப் பய வழியோ... வந்தாத்தானே தெரியும்? 
மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறவனா இருந்தா எப்பவோ வந்திருப்பே. நீதான் இப்படி உதார் வுட்டே பொழைக்கறவனாச்சே?! 
உதார் வுட்டே சோறு திங்கிறவன் இந்த உலகத்திலியே நீ ஒருத்தன்தான்!

000

2012-ல் தமிழில் கலக்கிய படங்கள் 17. 
151 படங்கள் தோல்வி.

புரட்யூசர் சார்...
நல்லா தெரிஞ்சிக்கணும். 
கதை முக்கியமில்லை!! 
கால் கிலோ சதை. 
ஒரு குத்து குத்தினா ஒண்றை டன் வெயிட்டு ஸ்டண்டு.
'நான் மூத்திரம் பேய்ஞ்சா, இந்த தமிழகமே நாறிடும்...' அப்படீன்னு ஒரே ஒரு பஞ்ச்சு டயலாக். 
ஹீரோவுக்கு மட்டும் ஒரு நாலு கோடி சம்பளம்.
ஆயிரத்து முன்னூத்து நாப்பத்தெட்டு மரத்தைச் சுத்தும் டூயட்டு (சுவிஸ், டென்மார்க் லொகேஷனில்)....
பணம் இருந்தா படம் எடுக்க வாங்க.
சும்மா தேவையில்லாம எங்க நேரத்தை வீணாக்க வேணாம்!


000

"வெறும் பி.சி எம்.பி.சி மக்கள் மட்டுமல்ல எப்.சி எனும் உயர் சாதியினரும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இனி எவனாவது வாலாட்ட முடியுமா? அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன்ன வந்து நிற்போம்." - உயர் 'குடி' ராமதாஸ். 

எலே பஞ்சமப் பயலே, 
பதினெட்டு வயசை தாண்டின உடனே, "ஐ ஆம் அ பஞ்சமன், பறையன், எஸ் சி, எஸ்டி. திங்க் ட்வைஸ் பிஃபோர் யு லவ் மீ..." அப்படீன்னு ஒரு டி-ஷர்ட்டு மாட்டிக்கிட்டு தெருவுல போ! ஏன்னா எதுத்தாப்புல வாரது ஐஎஸ் ஐ முத்திரை குத்தின சொக்கத் தங்கம்னு அய்யர் சாரி அய்யா சொல்லிட்டாரு. மீறினே, ஜாமீன் வாங்க மீன் மார்க்கெட்டுதான் போகோணும்!

000

ஜெயலலிதா நடத்தியது நாடகம் - மு.க.ஸ்டாலின்.

வெளி நடப்புக்குப் பதிலா, இடியாப்பம் பாயா சாப்ட்டுட்டு, ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தா நம்ம ஸ்டாலின் ஒத்துக்குவாரு! இந்த ஒலகமே ஒத்துக்கும். ம்ஹூம்... அம்மா இன்னும் நிறைய அரசியல் கத்துக்கணும்.

000

ஊருக்குள் நுழைய தடுக்கும் உரிமை எவனுக்கும் இல்லை - ராமதாஸ் ஆவேசம்.

கலெக்டரைப் பார்த்து ஒருமையில் ஏகவசனம். யாராய் இருந்தாலும் இவருக்கு அவன் இவன் தான். ஆனா, மத்தவங்கள்ளாம் இவரைப் பார்த்து அய்யான்னு கூப்பிடணுமாம். இவர் பையனை சின்னய்யான்னு கூப்பிடணுமாம். போய்யா யோவ்!

000

எனது மகள் செல்போனுக்கு இளைஞர்களிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன: அமெரிக்க அதிபர் ஒபாமா...

காடுவெட்டியும் ராமதாசும் ஒரு பத்து நாளைக்கு வாஷிங்டன்ல இருந்தா, ஒரு பய வாலாட்டமாட்டான். வூடு பூந்து வெட்டிடுவாங்க. வரச்சொல்லவா வாத்தியார?!

000

சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள் - வெண்ணை வெட்டி ராமதாஸ்.

காடுவெட்டிக்கு குந்துற இடத்துல கட்டியாம். அதான் அவருக்கு பதிலா வெட்டுற வேலைய இவுரு பாக்குறாரு. மாம்பயத்துக்கு பதிலா திருப்பாச்சிய சின்னமா மாத்திடுங்க ஆண்டவரே!

000

டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும்
பெண் போராட்டக்காரர்கள் அழகாக இருக்கிறார்கள் .. கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள். இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது - 
பிரணாப் முகர்ஜியின் மகன் குறும்புப் பேச்சு.

இவருதான் பெரிய அப்பா டக்கராச்சே. அப்பாவின் அண்டர்வேருக்குள்ள புகுந்துகிட்டு என்ன வேணுமானாலும் பேசலாம். சட்டம் அங்கேயெல்லாம் எட்டிப் பாக்காது!

000

அலைகள் ஓய்வதில்லை வெளியீடு 1981. பாமக உதயம் 1989. ஜஸ்ட்டு மிஸ்சு. ஒரு எழுத்து மாறிப்போயிருந்தா, படத்தோட தலையெழுத்தையே மாத்தியிருப்பாரு தலைவரு.. தலிவர் ரொம்ப கண்டிசனான ஆளு. ஆமாம். (தலைவரே, படத்துக்கு பிளாக்குல டிக்கெட்டு வாங்கினீங்கதானே?)

000

தனது கிழட்டு வயதிலும், தன் பேத்தி வயது நடிகையோடு டூயட்டு பாடும் ரஜினியும் கமலும் கூட, பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுக்கு முன்னால், பிரம்மாண்டமான திரையில்,   அந்த நடிகைக்கு பணத்தாசை காட்டி, வலுக்கட்டாயமாக நடிக்கவைத்து, நடிகையை கதை வடிவில் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் எனச் சொல்வதில் தவறில்லை!

000

திருக்குறள் கேவலங்கள் :

ஆணாதிக்கம், பெண்ணடிமை... 
பாட நூலில் மனப்பாடப் பகுதியில் இல்லாதவரை, பெண்கள் தப்பிப் பிழைத்தனர்.

பொருட்பால் - நட்பியல் - பெண்வழிச் சேறல் : சாலமன் பாப்பையாவின் குறள் விளக்க உரை : 

1. மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
2. தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
3. மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
4. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
5. தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
6. தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
7. மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
8. தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
9. அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
10. சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.


000


"ஹல்லோ, யாரு பேசுறீங்க?"
"....."
"ஹலோ யாரு? நீங்க லைன்ல இருக்கீங்க."
"லதா."
"எங்கேருந்து?"
"...."
"எங்கேருந்துன்னு சொல்லுங்க."
"லால் குடி."
"என்னங்க நீங்க, இவ்வளவு சிக்கனமா பேசுறீங்க? நம்ம டமிலகமே இந்த புரோகிராமை பார்த்துக்கிட்டு இருக்குது. நல்லா கலகலன்னு பேசுங்க.நிறைய பேசலாம். வால்யூம் கம்மி பண்ணுங்க."
சத்தமாக, "லதா, லால்குடியிலேர்ந்து."
"ஓ, லதா. லால்குடியிலேர்ந்து. வெரி குட், வெரி குட். லதா... லத்த்தாஆஆ..."
"ஆமா. லதா. லால்குடி."
"சரி லதா. கேக்குற கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லுங்க. சாப்டாச்சா?"
"ம்."
"என்ன சாப்பாடு?"
"முட்டைக் கொழம்பு. மிளகு ரசம்."
"வாவ்... வாட் அ சாப்பாடு. உங்க வீட்ல சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குமா?"
"ஆமா."
"நல்லா வயிறு நிறைய சாப்பிடுவீங்களா, கொஞ்சமா சாப்பிடுவீங்களா."
"கொஞ்சமாத்தான்."
"சோ சாரி. சோ சாரி. நீங்க வயிறு நிறைய சாப்பிட்டாத்தானே நீங்க நல்லா இருப்பீங்க, வீடு நல்லா இருக்கும்? நாடு நல்லா இருக்கும். நாடு நல்லா இருக்கணும்னா நீங்க நல்லா சாப்பிடணும். சரியா லதா?"
"சரி."
"என்னை சாப்டாச்சான்னு கேக்கலையே?"
"நீங்க சாப்டீங்களா?"
"ம், சாப்ட்டேன். நேத்தே சாப்ட்டேன். ஹா ஹா ஹா..."
"....."
"சரி. உங்க பக்கத்துல யார்லாம் இருக்காங்க?"
"அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அத்தை, சித்தப்பு, சித்தி, பக்கத்து வீட்டு கோபு, எதிர் வீட்டு பாபு..."
"வாவ். சரி சரி. உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"மன்மத ராசா, மன்மத ராசா..."
"ஓ, வாட் அ நைஸ் சாங்? யாருக்கு டெடிகேட் பண்ணப்போறீங்க?"
"எங்க அப்பாவுக்கு. அவருக்கு இன்னைக்கு பொறந்த நாள்."
"ஓ ஸ்வீட்... ஹேப்பி பர் டே டு டாட்."
"வேற யாருக்கு டெடிகேட் பண்ணப்போறீங்க?"
"எங்க அண்ணன், தம்பி, சித்தப்பு, கோபு, பாபு..."
"வாவ். இதோ, இதோ நீங்க கேட்ட பாட்டு வந்துக்கிட்டே இருக்கு. கேட்டு எஞ்சாய் பண்ணுங்க. சீ யூ லதா. டேக் கேர். பை..."

(சன் கலைஞர் மியூசிக் சேனல்களில் அரட்டை. ஏறக்குறைய ஒரு அஞ்சு நிமிஷத்துக்கான பேச்சு வார்த்தையில் ஏதாவது உருப்படியான விஷயத்தை பேசியிருக்கானா பாருங்க. ஆனா இந்த மடச் சாம்பிராணிகளை பார்த்தீங்கன்னா, ஏதோ சிக்காக்கோ கும்மாங்கோ ஸ்டேட்ல இருந்து புடிச்சிக்கிட்டு வந்தாப்போல ஒரு பெரிய அப்பா டக்கர் லுக்கு. ஒரு ம... , சாரி, கோழி முட்டைக்கு வெள்ளை அடிக்கக்கூட லாயக்கு இல்லாத பண்டாரப் பசங்க. இந்த நாரப் பயலுங்க பேசுறதுக்கு ஒரு பிராட்காஸ்ட். ஒரு டெக்னாலஜி. தூ, அடிச் செருப்பால, நாய்களா!!)


000

நம்ம கலாம் சார் ஜனாதிபதியா இருந்தா என்ன நடந்திருக்கும்?
ஒரு ஆம்னி பஸ் விடாம ஏறி இறங்கி, "வேணாம். நல்லதில்ல. வல்லரசாகணுமா இல்லையா?" அப்படின்னு பேசியிருப்பார். எல்லாமே சுபமா முடிஞ்சி போயிருக்கும்.


000

"நைட்ல ஏன் பொண்ணுங்க தனியா போறாங்க?" ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணா.

அதாவது, நம்ம இந்தியாவுல, பொண்ணுங்க பகல்ல போனா பரலோகம்; இரவுல போனா எமலோகம். சிம்பிளா புரிஞ்சிக்கணும்.


000

பிரதமர் உரையை பதிவு செய்வதில் தாமதம்: தூர்தர்ஷன் ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்...

தேஞ்சிபோன ரிகார்டரை வச்சிக்கிட்டு, பாவம், அவங்களால என்னதான் செய்யமுடியும். இதே, என்டி டிவின்னா, பிரதமர் பேசுறதுக்கு முன்னாடியே மொத்தத்தையும் பதிவு செய்திருப்பாங்க. 'டெக்னாலஜி' அப்படி!


000

நீங்க நெனைச்சா காய்ஞ்சிப்போன பயிருக்கு முப்போகமும் 'அக்குவா-ஃபினா' தண்ணீர் பாசனம் செய்யக்கூட நிதி உதவி குடுக்க முடியும்.

2ஜி, கிரானைட் கருமாந்திரத்தைச் சொல்லை.... உங்களுக்கு மனிதாபிமானம் ரொம்ப ஜாஸ்தின்னு சொல்ல வந்தேன்., தல!

(சம்பா பயிர் கருகிய காரணத்தால் தற்கொலை செய்துகொண்டு உயிர்விட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளித்த பிறகும், அரசின் சார்பில் எந்தவொரு உதவி நிதியும் அளிக்கப்படவில்லையே?... -தலைவர் 'தன்னைத் தானே' கேள்வி பதில்.)


000

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான ஒரு பெண்ணை, மருமகளாக ஏற்றுக் கொள்ள தயாரா? - மீரா குமார்.

ஏறுக்கொள்ள பலகோடி முற்போக்கு இளைஞர்கள் தயார்தான். அவ்வாறு நடந்தால், பிற்போக்குவாதியே, நீங்கள் பதவி விலகத் தயாரா?! அந்தப் பெண்ணை கேவலப்படுத்த உங்களை விட்டால் இந்த உலகத்தில் வேறு ஆள் இல்லை!


000

"இவ்வளவு பேசறீங்களே..., பெரியார் சாகிற கட்டத்துல இருக்கும்போது பயந்துகிட்டு சாமி கும்பிட்டாராமே, உண்மையா?" - கடுப்பின் வெளிப்பாடு.
நக்கல் அடிக்கும் நாஸ்திகர் மனதில் பெரியார் எப்போதும் கடுப்பேற்றிக் கொண்டே வாழ்கிறார்! பெரியாரா கொக்கா?!


000

பள்ளிக்கோடம் விட்டு குழந்தைங்க பேருந்துல ஏறமுடியாம தத்தளிக்கிற நேரத்துல, ஒரு பத்து கவர்மெண்ட்டு அதிகாரிங்க படியில தொத்தாம, பின் படிக்கட்டு வழியா ஏறி, அடுத்த ஸ்டாப்பிங்குல முன் படிக்கட்டு வழியா இறங்கிக் காட்டணும். அவங்களால படியில தொத்தாம போக முடிஞ்சா, பயலுவ வேணுமின்னே படியில தொங்குறாங்கன்னு ஒத்துக்கலாம். நூறு ரூவா பெட்டு!!

000

டெல்லி மாணவிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் :அப்துல்கலாம்.

அய்யா, அந்தப் பாழாப்போன பேருந்துல கயவர்கள் குதறி எடுத்தபோது, கண்ணை இறுக்க மூடிக்கிட்டு, காப்பாத்த முன்வராத கடவுளைப் பார்த்து பிரார்த்தனை செய்யணுமா அல்லது பிரம்பால் அடிக்கணுமா? இதையும் கொஞ்சம் சொல்லிப்போடுங்க!


000

"தமிழகத்தில், சம்பா பயிருக்கு, போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில், கருகிய பயிரைக் கண்டு மனம் வெதும்பி, வறுமையின் கொடுமை தாங்க முடியாமல், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி தெரியாமல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.இறந்து போகும் இந்த விவசாயிகளைப் பற்றி, தமிழகத்தில் ஆளும் அரசுக்கு, எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை." - கல் நெஞ்சக்காரர், சாரி, கலைஞர்.

நம் தமிழினத் தலைவர் முதல்வராய் இருந்தபோது, இந்தக் கொடுமையான தற்கொலை எல்லாம் நடக்கவில்லை என்று சொல்லிட முடியாது. ஏனென்றால் நம் இன மானத் தலைவர் அப்போது அமெரிக்காவுக்கு அல்லவா முதல்வராய் இருந்தார்?!

24.12.12

நம்ம ரேஞ்சுக்கு தினத்தந்தி... எனது முகநூலிலிருந்து... 27


விலங்கு வேட்டை. போராட்டம் நடத்திய நரிக்குறவர்கள் கைது. 

அரசே முன் வந்து, இந்த நரிக்குறவர்களுக்கு ஏதாவது சாஃப்ட் வேர் கம்பெனியிலோ அல்லது கால் சென்டரிலோ வேலை வாங்கிக் கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்!

000

"தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், எங்களின் செய்திகளை சுவர்களில், கரித்துண்டுகளை வைத்து எழுதுவோம்,'' - கருணாநிதி.

பாவம், முரசொலி சர்குலேசன் டவுனுபோல.
கவலைய வுடு தலிவா.
'அதுக்கு' மாஞ்சி மாஞ்சிஎழுதினதை தினமலர் மொதோ பக்கத்துல விளம்பரமா போட்டுறுங்க. அப்ப என்ன பண்ணுவான் இந்த பேப்பர்காரன்னு ஒரு கை பார்த்துடலாம்!

000

"வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்துவது, "காதல் நாடக' திருமணங்களால் பாதிக்கும் பெண்களை, பெற்றோரை, பாதுகாக்கும் அனைத்து சமுதாய பேரவை' என்ற புதிய அமைப்பை மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

காதல் ஒன்றை மட்டுமே கதையாக்கி, கார்த்திகை மாசத்து நாய்கள் மாதிரி மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட்டு பாடும், ரஜினி, கமல், விஜை, அஜீத், தனுஷ் போன்ற வெட்டிப் பயல்கள் நடித்த படங்கள் ஓடும் திரையரங்குகளை இனிமேல் நமது சமுதாய டாக்டர் டர் டர் என்று கிழித்து எறிவார். மவனே, ஒரு பய, படம்பாக்க வாங்கடா பாக்கலாம்!

000

டாஸ்மாக்கை மூடணும்னு கூவுற தலீவருங்க, எங்க கச்சிக்காரன் / ஜாதிக்காரன் எவனாவது ஊரல் போட்டான்னா அவனை பப்பிளிக்கா கம்பத்துல கட்டி அடிக்கத் தயார் அப்படீன்னு ஒரு அறிக்கை வுடத் தயாரா?

000

போட்டோஜெனிக் பேஸ் கட், வெள்ளைத் தோல், ஸ்ட் ரெயிட்டன் செய்த பளபள ஹேர்ஸ்டைல், பேஷன் டிரெஸ், மொத்தத்துல ஒரு ஹையர் சொசைடி லுக். ப்ளா ப்ளான்னு இங்கிலீஷ் பேசினா அடிஷனல் கன்சிடரேஷன். இத்தகைய தகுதிகள் இருந்து ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், என் டி டிவி, சி என் என் ஐபின் நியூஸ் சேனல்கள் சப்போர்ட் கிடைக்கும். ராவும் பகலும் விவாதம் நடக்கும். (உயர்தர) செய்தித் தாட்களில் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். நாடே கொதித்தெழும். லோடு லோடாக மெழுகுவர்த்திகள் எரித்துத் தீர்க்கப்படும்.

மேற்கண்ட தகுதிகளற்ற ஒரு ஏழைப் பெண்ணுக்கு இத்தகைய கொடுமைகள் நேர்ந்தால், அந்த செய்திகள் இந்த ஊடகங்களில் வாரா. ஏனெனில் கிளாமரஸ் செய்தி ஊடகங்கள், ஆர்ட் பிலிமை எடுத்து தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளவா? எந்த செய்தியைப் போட்டால் 'டிஆர்பி' ரேட் எகிறும், விளம்பரம் கொட்டும் எனும் நுணுக்கம் அவர்களுக்கு கை வந்த கலை!

நம்ம ரேஞ்சுக்கு தினத்தந்தியில் செய்தி வருவதே போன ஜென்மத்தில் நாம் செய்த மிகப் பெரும் புண்ணியம் ஆகும்.

000


என் இனவெழுச்சிப் பேச்சாளன் இன்று மேடையேறி அம்மாவைப் போற்றி எத்தகையதொரு வீச்சுரை வீசியிருப்பார் எனுமொரு ஏகாந்த நினைப்பே என் ஆயிரம் கவலைகளை 'சிம்பிளாக' அப்பால் தள்ளிவிடுகிறது! வாழ்க எம்மான்!

000

சன் ரைஸ் டீம் கிரவுண்டுல 'ளாடும்போது', ஏ ஆர் ரகுமான் பீப்பீ ஊதலாம், தமன்னா சீர் கேர்ளாக வரலாம், திருமதி செல்வத்தில் மாமியாளும் மருமவளும் 'நம்ம சன் ரைஸ் தான் ஜெயிக்கும்' அப்படீன்னு கோரசா சொல்றாப்புல வஜனம் வரலாம்... இதெல்லாம் மாறன் & பிரதர்ஸ் டெக்கினிக்கி! நடக்காதுங்கிறீங்க?!

000

இசையில்கூட இனத்தைப் புரிந்துகொள்ளலாம்.
கர்நாடக இசைக் கச்சேரியில் ஒரு ஐந்து நிமிடம்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் நெளிந்துகொண்டே உட்கார்ந்துகொண்டு இருப்பவன் நான்-பிராமின்.

000


"எனக்கு விசாவை மறுத்தீங்கல்லே? வால் மார்ட்டு குஜராத்துக்குள்ள வரணும்னா, இன்னும் 24 மணி நேரத்துல என்னோட விசா வீடு தேடி கொரியர்ல வந்தாகணும். சொல்லிட்டேன்." - மோடி டிமாண்ட் பண்ண சரியான தருணம்!

000

இன்னைய தேதிக்கு, ரேப் கேசுக்கு ராஷ்டிரபதி பவனையே சர்வ சாதரணமா சுத்து போடலாம். ஆனா, கிஷ்ணாயில் கிடைக்கலைன்னு கோட்டையை முற்றுகை இட முடியாது.

போராட்டத்திலும் பணக்காரர்களுக்கே சலுகை!

000

தி.மு.க.,வில் ஓரங்கட்டப்படும் நெப்போலியன் : ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்காததால் "டவுட்'.

இனிமே நெப்போலியன் ஒரு 'மைதாஸ்' புராடக்ட்டு ஆகிடும்!

000

மெக் டொவல் - சோடா
கிங் ஃபிஷெர் - மினெரல் வாட்டர்
பகார்டி - பார்ட்டி சிடி....

இதில் எதுவுமே 'லிக்கர் விளம்பரம் இல்லை' என்பது நமக்குத் தெரியும். அதுதான் சோடா, மினரல் வாட்டர், பார்ட்டி சிடி அப்படீன்னு 'சின்ன்ன்ன' எழுத்துல போடறாங்களே? எனக்கென்னமோ கவர்மெண்ட்டுதான் நம்பளை சீட்டிங்க செய்யுதோன்னு ஒரு சந்தேகம்! அவங்க சம்மதம் இல்லாமையா இந்த விளம்பரத்தை டிவில போடுவாங்க?





23.12.12

அண்ணா நகர் அவென்யூ


அண்ணா நகர் 
அவென்யூக்களில்
வயிற்றுப் பசி
சவுக்கால் அடிக்க,
ஜவ்வு மிட்டாய் 
சிலுவையை
தோளில் சாய்த்து
சுமந்தபடி
சுற்றித் திரிகிறான்
அந்த
அழுக்குப் பிடித்த
ஜவ்வு மிட்டாக்காரன்.

உயிருள்ள
கட்டுமானங்கள்.
கார்கள் மட்டுமே
உலா வரும்
ஆட்களே இல்லாத
அந்த அரண்மனை
அவென்யூக்களில்,
அவன் மட்டும்
ஒரு நடைப் பிணமாய்.
தன்னந்தனியனாய்.

எண்பத்தாறு இன்ச்
சோனிக்களில்
ஆங்கிரி பேர்டு -
திரி டி பறவையோடு
ஆக்ரோஷித்து
ஒன்றிப்போன
அரண்மனைக் குழந்தைகள்.
விளையாட்டு வினையில்
பன்றிகளாய்
தின்றுபோட்ட கழிவுகள்.
அவைகளின் காலடியில்
காட்பரீஸ் சாக்லெட்டுகள்,
பிஸ்ஸாத் துண்டுகள்,
ஜரிகையில் சுற்றிய
கே எஃப் சி கால்கள்!
வேலைகாரி வந்தவுடன்
எல்லாமும் அள்ளி
பச்சைக் கலர்
பிளாஸ்டிக் பையில்
அழுந்தத் திணிக்கப்பட்டு,
சென்று சேர்ந்துவிடும்
குப்பைத் தொட்டிக்கு.
சுற்றுச் சூழலுக்கு
சற்றேனும் மாசில்லா
மக்கும் குப்பை!

மூக்கு
முட்ட முட்ட
அசைபோட்டுத் தீர்த்ததில்
ஜவ்வுமிட்டாய்க்கு
அங்கே
இடமில்லை.
அர்த்தமுமில்லை.

ம், பாவம் அவன்.
வியாபாரம் தெரியாத
'யாவாரி.'
பார்பி பொம்மைகளுக்கிடையே
அவன்
மரப்பாச்சி விற்கிறான்.

ம், பாவம் அவன்.
ஷாப்பிங் மால் முன்னால்
பொம்மலாட்டம்
காட்டுகிறான்.

ம், பாவம் அவன்.
சித்திரான்னாம்
விற்கவேண்டிய
மியூசிக் அகாடமி
கேண்டீனில்
பரோட்டா குருமா
விற்கிறான்.

ம், பாவம் அவன்.
வானளாவிய
வால் மார்ட்
தின்பண்டகளுக்கிடையே
தேன் மிட்டாய் விற்கிறான்.

குறைந்த பட்சம்
இந்த
யாவாரி
'எகனாமிக் டைம்ஸ்'
படித்திருக்கவேண்டும்.
இல்லையென்றால்
கொருக்குப் பேட்டை
சேரிப் பயல்களுக்கு
விற்கவேண்டிய
பண்டத்தை
அண்ணா நகர்
அவென்யூவுக்கு
விற்க வருவானா?

ம், பாவம் அவன்.
வயிற்றுப் பசி
சவுக்கால் அடிக்க,
ஜவ்வு மிட்டாய்
சிலுவையை
தோளில் சாய்த்து
சுமந்தபடி
சுற்றித் திரிகிறான்.

21.12.12

சுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தியாரே!!


வணக்கம் வாத்தியார. 

குந்தர்துக்கு கூட குட்ச இல்லன்னு சொல்லிக்கினியாமே? உண்மையாலுமா? 
அடப்பாவமே, 
எச்ச கைல கூட காகா ஓட்டாத ஆளுன்னு பேரு வாங்கின மன்சனாச்சேய்யா நீயி?!. 
தமியகத்து சினிமா கொட்டாவையே தூக்கிப் புடிக்கிற உனுக்கு, குந்தர்த்துக்கு குட்ச இல்லன்னும்போது காஞ்சிபோன என் கம்னாட்டி வயிறுகூட கும்ட்டி அடுப்பா எரியுது.

இன்னா வாத்தியார நீ, பட்துக்கு பத்து செங்கல்லுன்னு கூலி கேட்டிருந்தாக்கூட இன்னேத்திக்கி பட்ணத்துல ஜம்முன்னு பத்தடுக்கு மாடி கட்டிக்கினு கீலாம்.
சரி, அத்த வுடு.
தெனம் தெனம் தின்சு தின்சா கிராப்பு வெட்டிக்கினு போஸ் குடுக்கிறயே, அந்தக் கிராப்பு எல்லாம் மைலாப்பூர் கொள்தங்கரையில குந்திக்கினு வெட்னதா?
நகம் வெட்டிக்கிறதுக்கும், இஸ்பாவுல குளிக்கிறதுக்கும், வெளி நாடு ஊர் சுத்தறதுக்கும் துட்டுக்கு இன்னா பண்ணுவ?
இஸ்டார் ஓட்டல்ல மூணு வேளையும் மூக்குப் பிடிக்கத் திங்கறதுக்கு காசு?
அப்புறம் தண்ணி கிண்ணின்னு செலவு ஏறிக்கிட்டே போவுமே வாத்யாரே?

என்னமோ போங்க. நான் இத்தினி நாளா, ராஜ் கமல் பிச்சர்ஸ் உங்களோடதுதான்னு நெனைச்சிக்கினு இருந்தேன். கடேசில அது, ஐசவுஸ் மார்க்கெட்டுல கருவாடு விக்கிற முனிமா ஆயாவுதுன்னு தெரியாமப் போச்சி. பாவம் வாத்தியார நீங்க.
எனக்கு கண்ணுல தண்ணி பொலபொலன்னு மூணு நாளா ஊத்திக்கினே கீது. ஜல்ப்பு இல்ல வாத்தியார; பீலிங்ஸ்.

வுடுங்க வாத்தியார.
தோ வந்துட்சி விஸ்வரூபம். வாத்தியாருக்கு வூடு இல்லைன்னு நென்ச்சி நென்ச்சி அந்தப் படத்த பத்துவாட்டி பாத்துறமாட்டேன்? இதே கணக்குல நம்ம ரசிகருங்க படம் பார்த்துட்டாங்கன்னா, எல்லைசி பில்டிங்கே உனுக்குத்தான் சொந்தம் வாத்தியாரே.

ஆனா ஒரேஒரு கேள்வி.

தன்னோட படம் ஓடனும்கிறதுக்காக நம்ம 'எதிரி' ரஜினி பேசுவாரே... 'நான் அரசியலுக்கு வருவேன்; ஆனா வரமாட்டேன்' அப்படீன்னு. அந்தமாதிரியெல்லாம் நீங்க படம் ஓடணும்னு டகால்டி வுட்றீங்களோன்னு சந்தேகமா இருக்கு.

செந்தில் ஒரு படத்துல சொல்லுவாரு; பூவை பூன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம் அப்படீன்னு. அந்த மாதிரி கோக்குமாக்கு ஸ்டேட்மெண்ட்டு எதுவும் அவுசரப்பட்டு குடுத்துட்டீங்களோன்னு ஒரு டவுட்டு.

பத்தாயிரம் கோடி பண்டு ஒதுக்கினாலும் மில்டிரிக்காரங்கிட்ட பத்து பைசா இல்லாதது மாதிரி, இஸ்கூல் பசங்களை உட்டு தெரு முனைல கொடி நாள் அப்படீன்னு உண்டி குலுக்கச் சொல்லுவான். அந்த மாதிரி கதை கிதை வுடறீங்களோன்னு ஒரு டவுட்டு.

தமிழ் நாட்டையே பாதி துண்ட்டு ஏப்பம் வுட்டுட்ட எம் எல் ஏ அண்ணன், எலக்சனுக்கு முன்னால தேர்தல் கமிஷன் கிட்ட கணக்கு சொல்லி ஒரு லிஸ்ட்டு குடுப்பாரு... அறுவத்தெட்டுல வாங்கின அம்பாசிடர் ஒண்ணு. அண்டா அடகு வச்ச ரசீது ரெண்டு. அந்துபோன செருப்பு மூணு அப்படீன்னு. அந்தமாரி போங்கு கணக்கு எதுனா எட்து அவுத்து வூட்றீங்களோன்னு டவுட்டு.

எப்பிடியோ போங்க வாத்தியார். நீங்க கிளிசரின் போட்டு அயுவுறீங்க. நாங்க உண்மையாலுமே தேம்பித் தேம்பி அயுவுறோம். அயவச்சிட்டீங்க!!


உங்க படம் ஓடணும்கிறதுக்கு நீங்க சாதிப் பெயர் வைச்ச தேவர் மகன்களோ, சண்டியருங்களோ, விருமாண்டிங்களோ உங்களுக்கு சோறு போடமாட்டாங்க வாத்தியாரே. ஓல்சேல்ல மொத்தமா ஏமாந்த  நாங்கதான் போடணும்.

உங்க பாட்டு மெட்டுலயே பாடிக் காட்டவா?


"எங்களை விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லே; எவருமில்லே...!"

வுட்டுத் தள்ளுங்க. நிம்மிதியா போயி அடையார் கேட்டு ஓட்டல்ல ரூம்போட்டு குந்துங்க. மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்.

சுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தி
யாரே!!

18.12.12

மாயண்ணனா, மொக்கச்சாமிகளா?... 'எனது முகநூலிலிருந்து... 26

'அப்பவே சொன்னேன்ல...' அப்படீன்னு அத்தனை ஜோசியக்காரனும் மார் தட்டுவான். டிச.21.

000

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் தேவை: திமுக.

சென்னை டு கூடங்குளம். 
வயா : லண்டன், டுபாய் விவேகாந்தர் தெருவு, திரும்பவும் சென்னை. அங்கிருந்து கார் மூலமாக கூடங்குளம் போக ஏற்பாடு செய்து தரப்படும். தைரியம் இருப்பவர்கள் பிளைட்டில் ஏறவும்.

000

குடிபோதையில் பாரில் ரகளை: திருச்சி சிவா எம்.பி. மகன் கோர்ட்டில் சரண்!

குடி போதையில், பாரில்தானே ரகளை பண்ண முடியும்? இதுக்கெல்லாம் கூட சரண் அடைவார்களா? - தலிவரின் 'தன்னைத் தானே' கேள்வி பதிலில் வரலாம். காத்திருக்கவும்.

000

அரசாங்க வருமானத்திற்காக மதுக்கடைகளை திறப்பது நியாயமா? - வைகோ கேள்வி.

"இவுரு நாயம் கேக்குறாரு; அவுரு பூட்டுப் போடுறாரு. ஒரு நா, வாந்தி எடுத்ததை திங்கத்தான் போறீங்க.." - கொஞ்சம் டைட்டான பேர்வழி!

000

வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இனிமே 'ஊயல்' பணத்தை சுவிஸ் பேங்கு போயி போடத்தேவையில்லை. கூட்றவு பேக்குலயே போட வசதி செய்து தரப்படும்.

000

திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை...

சம்பளக் கவரை தவறுதலா உண்டியல்ல போட்டுட்டாராம். 
யோவ் பைலட்டு! இன்னும் ஒரு ஆறு மாசத்துல சம்பளம் வந்துடும். பார்த்து ஓட்டு!

000

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 60 ஆண்டுகள் கழிந்ததையொட்டி, இங்கிலாந்து அமைச்சரவையை பார்வையிட்டு வரலாறு படைத்தார்.

இத்தினி வருஷமா 'மாதம் மும்மாரி பொழிந்ததா?' அப்படீன்னு கேட்டதோட சரி.

000

சாதி, மதம், அல்லா, முல்லா, கிரைஸ்ட்டு, முப்பத்து முக்கோடி... எல்லாம் ஓடி ஒளிஞ்சிக்கிட்டது இந்த 'மாயண்ண டிரேட் மார்க்' பேதி மாத்திரைக்குத்தான். இவுங்களுக்கு 21ந்தேதிக்கு பின்னாலதான் பேதி நிக்கும்!

000

மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. 
தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா - சம்பத்

நமக்கெல்லாம் நம்ம நாஞ்சிலார் அம்மாவை நக்கலடிச்சி பேசுறாப்புல தெரியும். போகப் போக நமக்கு பழகிடும்!!

000


மின்வெட்டை கண்டித்து கலைஞர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

யாரைச் சுத்தி கூட்டம் கூடியிருக்கு பாருங்க...

000

கலாநிதிமாறனின் முகத்திரையை கிழித்தெறிவேன்;
சன் டிவி விஷயங்களை அம்பலப்படுத்துவேன் : 
- சக்சேனா.

இப்பிடி சொல்லைன்னா, முட்டிக்கு கீழவே பாத்து பாத்து அடிக்கிறாய்ங்க!

000

மாயண்ணனா, மொக்கச்சாமிகளா... 21ந்தேதி தீர்ப்பு!

000

ராமதாஸ் முகத்தை பார்க்க விரும்புகிறேன் - திருமாவளவன்.

'முகத்தில் குத்தினால் நாங்கள் பிட்டத்தையும் காட்டுவோம்' அப்படீன்னு மட்டும்தான் இன்னும் இவரு சொல்லலை. 
ஆண்டை விசுவாசி! 
(அது சரி. நம்ப வீரம்லாம் இலங்கையை ஒச்சரிக்கிறதோட, சாரி, எச்சரிக்கிறதோட முடிச்சிக்கிடுவோம். எதுக்கு வம்பு?)

000

மதிமுக கொடுத்த காரை நாஞ்சில் சம்பத் திருப்பித் தர வேண்டும்: மதிமுக கூட்டத்தில் தீர்மானம்.

நீங்க திருப்பிக் கேக்கறது ரொம்ப லேட். 
ஏற்கெனவே எங்க அண்ணன் எக்ஸ்சேஞ்சு ஆஃபர்ல அதைக் குடுத்துட்டு புது இன்னோவா வாங்கியாச்சு!! 
வேணும்னா இதுல வந்து உக்காருங்க. ஒரு ரவுண்டு ஓட்டிக் காட்டுவாரு...

000

16.12.12

இன்னோவா ஓனர்ஸ் பிரைட். வைகோஸ் என்வி! எனது முகநூலிலிருந்து... 25

இன்னோவா
ஓனர்ஸ் பிரைட்.
வைகோஸ் என்வி!

இன்னோவா டிக்கியில்
மூட்டை கட்டி வைத்து,
இழுத்து மூடப்பட்டது...
இது நாள் வரை
மூச்சுவிடாமல் பேசிய
வீராப்புப் பேச்செல்லாம்!

000

ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும், யார் ஆள வேண்டும் என்பது விதிப்படி, தலையெழுத்துப்படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம் - கழிசடை ரஜினி. 

இளைஞர்களின் மூளையை மழுங்க வைப்பதில் கஞ்சா, டாஸ்மாக் சரக்கை விட முதலில் நிற்கும் போதைப் பேச்சாளி. நமக்கு எதிரி வேறு எங்கோ இல்லை; நம் கண் முன்னே, 70 எம்எம் திரையில்!

000

ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைத்து 30 நிமிடம் மாணவர்கள் படிக்க வேண்டும் : அப்துல் கலாம் "அட்வைஸ்'

அவனவனுக்கு இந்தியாவுல ஒண்ட குடிசையில்லை. இந்த நாரப் பொழப்புல, வூட்டுக்குள்ற நூலகமாம். தலைல தொங்குற முடிதான் கலாம் கண்ணை மறைக்குதுபோல. கிராப்பு வெட்டிட்டாருன்னா, அவருக்கு எல்லாம் விவரமா வெளங்கிடும்!

000

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பிலிருந்த எஸ்.ஐ.,யை, அ.தி.மு.க.,கவுன்சிலர் சின்னையன் கன்னத்தில், "பளார்' என அறைந்தார். "கூட்டத்தில் தெரியாமல் நடந்துவிட்டது. பிரச்னையை பெரிதுபடுத்தாதீர்கள்' என சின்னையன், பிறகு போலீசாரிடம் மன்றாடினார். 

ஒரு சக மனிதரை பொதுவில் வைத்துத் தாக்குவது என்பது காட்டுமிராண்டித் தனம்!
முதல்வரைப் பாதுகாக்கும் பணிலிருந்த காவல்துறை அதிகாரிக்கு பாதுகாப்பில்லை. அந்தக் கவுன்சிலரின் அதிகாரக் கொழுப்பு கண்ணை மறைக்கிறது. காவல்துறை அதிகாரி கவுன்சிலரின் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால், கட்சி பேதமற்ற பொதுமக்களின் ஆதரவு கிடைத்திருக்கும்.

000

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கும், உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவும் இந்த ஆண்டு சில கசப்பான மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர வேறு வழியில்லை - சிதம்பரம்.

ஆனா, மருந்தைக் கொடுக்குறது போலி டாக்டராச்சே. அதான் யோசிக்கிறோம்...

000

மார்க்கெட்டிங் டிரெண்டு. : 

ராம நாராயணன் நாய் குரங்குளை வைத்து படத்தில் பணம் பார்த்தார். 

பிரபுதேவா இன்று இவளைக் காதலிக்கிறார், இன்று டைவர்ஸ் வாங்குகிறார், நாளை அவளைக் காதலிக்கப் போகிறார் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தியே தான் டைரட்டு செய்த படங்களை ஓட்டிவிட்டார். 

சிம்பு எனும் குரங்கு சினிமாக் கிளையில் தொங்கிக்கொண்டிருப்பது 'பெரிய இடத்து' கிசுகிசுவை வைத்துத்தான் (சாரி, தனுஷ்!). 

லாரன்சு தன் குப்பை படங்களை ரஜினிக்கு ஐஸ் வைத்தே ஓட்டிவிடுகிறார். 

ரஜினி ஒரு ஸ்பெஷல் கிரியேச்சர் இல்லியா? அதனாலதான் முதல்வர்களை ஐஸ் வைத்து அதில் குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்!

000


கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும்
நான் பொதுவானவன் : ரஜினி.

தெரியுமே.
நீங்க ஒரு ரெண்டுங்கெட்டான்னு நல்லா தெரியும்.
தமிழ் நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் கூட நீங்க பொதுவானவர் ஆச்சே! காவிரி விவகாரத்துல பார்த்துட்டோம்.
இப்ப உங்களுக்கு 3டி சிவாஜி ஓடணும்... அவ்வளவுதானே.
பயப்படாம போயி பார்ல ஒக்காருங்க.
நாங்க பிக்பாக்கெட் அடிச்சாவது உன் படத்தை பார்த்துடுவோம்!

000

ஏண்டா பீடைகளா,
சர்ச் பார்க் கோந்தைகளும், எக்மோர் டான் பாஸ்கோ, பத்துமா சேஷாத்ரி கோந்தைகளெல்லாம் எவ்வளவு சமத்தா ஸ்கூலுக்கு வந்து போறா? அவாள்ளாம் என்ன, உங்களாட்டம் ஃபுட்போர்ட்டு அடிச்சிக்கிட்டா போறா? பாரேன் கொழுப்பை... நாலாம் கிளாஸ் கார்பரேஷன் நண்டு சிண்டு கூட படிக்கட்டில தொத்திண்டு போறது. கொழுப்பு! ஒடம்பு பூரா கொழுப்பு!! ங்கொப்பனாத்தாள ஒரு கார் வாங்கச் சொல்லிட்டு அதுல ஜம்முன்னு ஸ்கூலுக்கு போகப்பிடாது?

000

விஸ்வரூபம் படத்தின் DTH ஒளிபரப்பு ஒரு நிகழ்கால டெக்னாலஜி. தேவர் மகன் படத்தின் கதை ஒரு இருண்ட கால டெக்னிக்.
அவ்வளவுதான்!
ரெண்டுமே 'டெக்னிகலான டெக்னாலஜி'!!
கமல் டெக்னாலஜி!!

000

படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கம்.

வேற வழி?

இடம் கிடக்காம, 45 டிகிரி கோணையா சாய்ஞ்சாப்புல போற பஸ் படிக்கடுல தொங்கிட்டுப் போற 'இஸ்கூலு' கொழந்தைங்க மேலதான் கை வைக்கமுடியும்.

'பஸ் டே' அப்படீன்னு மவுண்ட் ரோடுல, பஸ் கூரை மேல ஏறி நின்னு, பத்தாயிரம் பேர் பாக்கிறாப்புல, போதைல, பேருந்துல மோளம் அடிச்சி கூத்தடிக்கிற 'கொழந்தைங்க' மேல கை வைக்க முடியுமா?

அப்பேர்பட்ட கொழந்தைங்
களுக்குப் பின்னால ராவான ரவுடி இருக்கலாம், ரஜினி இருக்கலாம்; தல இருக்கலாம்; விசிலடிச்சான் குஞ்சு விஜை இருக்கலாம்; அய்யா இருக்கலாம்; அம்மா இருக்கலாம்; அப்பா இருக்கலாம்; தாத்தா இருக்கலாம்; பேத்தி பேரன் இருக்கலாம்...

உசுரைவிட ஓட்டு முக்கியம்ணே!

நீதி : கூரை மேல பிரயாணம் ஓட்டு வாங்கிக் கொடுக்கும்.

000

அப்படியே நம்முடைய அண்ணன், கருமை நிறக் கண்ணன், தமிழகத்தின் மன்னன், கர்நாடகாவை கண்டித்து பஞ்ச் டயலாக் பேசி, நார் நாராகக் கிழிச்சி தொங்க விடுவார் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணே, வாங்கண்ணே. வந்து பேசுங்கண்ணே...

000

பேரனோட குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு வரிவிலக்கு குடுத்தே ஆகணும்கிற ஒரே காரணத்துக்காக 'வ' எழுத்தை பெரிய சைசுல சேத்துக்கலையா? அதுபோலத்தான் இதுவும்.

கலைஞரே... கண்ணாடிய கயட்டிட்டு பாருங்க. குதிரை பறக்குறது தெரியுதா? கணக்கு சரியாப் போயிந்தி!

000

நான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது: அமிதாப்பச்சன்

பாவம், இந்தாளு ஏதோ சோத்துக்கு தீண்டாடினா மதிரியோ, பொண்டாட்டிய தவறவிட்ட மாதிரியோ தெரியுதில்லே? சரி. மேல படிங்க...

"இத்தாலி பட விழாவுக்கு சென்றபோது எனது லேப்- டாப்பை தொலைத்து விட்டேன். இதை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். லேப்-டாப் எனது கைக்கு வந்த பிறகுதான் நிம்மதி பிறந்தது. லேப்- டாப் இல்லாமல் நான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது."

000

பொதுவுடைமை வேண்டி பராசக்தியிடம் மண்டியிடுவாரு.
இவருக்குமட்டும், காணி நிலம் கேட்டு கண் கலங்குவாரு.
பெண்ணுரிமை பேசி, பாஞ்சாலி பதம் பாடுவாரு.
மடைமையைக் கொளுத்தச் சொல்லிட்டு, குங்குமப்பொட்டோடவே போய்ச் சேர்ந்துட்டாரு.

முற்போக்குச் சிந்தையாளர்கள் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு பாரதி ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

000

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நேற்றே நிறுத்திவிட்டோம்: சட்டசபையில் கர்நாடக முதல் மந்திரி தகவல்.

ஷட்டர் சாவி அணைக்குள்ள விழுதுடுச்சி. தேடி எடுத்துக் கொடுங்கன்னு கனம் கோர்ட்டார்கிட்ட சொல்லிட்டா, ஒன்ஸ் ஃபார் ஆல், கதை முடிஞ்சிடுமில்லே?

000

"சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தால், இரண்டு ஆண்டுகளில், இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.'' - நாராயணசாமி.

பெட்டிக்கடை, மளிகைக்கடை யாவாரிங்க கடைய ஊத்தி மூடிட்டு, வால் மார்ட்டுல வாட்சுமேன் வேலை, மூட்டை தூக்குற வேலை பார்ப்பாங்க. இதுதான் 'ரெண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு.'
புரிஞ்சுதா?

000

எம்.ஜி.ஆர். சமாதியை ஜெயலலிதா ஏன் திடீர் என்று திறந்து வைத்தார் தெரியுமா? - கருணாநிதி.

எலக்சன் கமிசன் ஒரு பத்து நாளைக்கு தார்பாய் போட்டு மூடத்தான். போதுமா?
இப்ப சந்தோஷம் தானே தலைவா?!

000

ஓலை குடிசையில் ரஜினி சாப்பிடுகிறார் - லாரன்ஸ்...

'சிட்டிக்குள்ள' ஓலைக் குடிசை இருந்துதுன்னா, அதுக்குப் பேரு பார். தண்ணி அடிக்கிற எடம்.
போடாங்...

000