My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

30.1.13

விஸ்வரூபம் 100/100

டக்ளஸ் அண்ணே, 

கமல் கோய்ச்சிக்கிட்டு தமியகத்தை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போகப் போறதும் இல்லை; 

ரசினி காந்து 'தோ வர்றேன் தோ வர்றேன்னனு' சொல்லிட்டு அரசியலுக்கு வரப்போறதும் இல்லை. 

இது சினிமாண்ணே... டிக்கிட்டு வாங்கினோமா, பார்த்தமான்னு போய்ட்டே இருக்கணும்.

000

"டேய் மவனே, நம்மள ஏசப்பா காப்பாத்திட்டாரு. கை விடலை. அல்லேலுயா. இல்லைன்னா துப்பாக்கிக்கும் இதே கதிதான் ஆகி இருக்கும்." எஸ். ஏ. சந்திர சேகர் இப்படி இளைய தளபதியிடம் சொல்லி இருக்க சான்ஸ் நிறைய இருக்கு!

000

"கமல்ஹாசன், ஒபாமாவிடம் சூட்கேஸ் வாங்கிய புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது!"
விஸ்வரூபம் படத்துக்கான ஓசி டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், சு.சாமி இப்படியும் சொல்லக்கூடும்.

000

விஸ்வரூபம் : பட விமர்சனம் :

சினிமாட்டிக்கா சொல்லணும்னா, சரியான சிச்சுவேஷன்! 
மிகச் சரியான லொகேஷன்! 
மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டான்னு மக்களால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மெஸ்மரைசிங் மெலடி. 
நான் இந்தியனா, தமிழனா, அகெரிக்கனா, இடியட் இந்துவா அல்லது முட்டாள் முசுலீமா என நம்மையே குழப்பிவிடும் அற்புதமான எடிட்டிங். 
ட்விஸ்ட்டுமேல ட்விஸ்ட்டா வந்த திரைக்கதை அமைப்பு. 
இந்துக்களும் முசுலீம்களுக்குமான அந்தர் பல்ட்டி ஸ்டண்ட். 
"இந்தியா இடம் கொடுக்கலைன்னா நான் அமெரிக்கா போறேன்" போன்ற சென்டிமென்ட் வசனங்கள். 
கோலிவுட்டில் கோலி விளையாடிய ஹாலிவுட் தமிழ்ப்படம். ஃபன்டாஸ்டிக் ப்ரிமியர். 
நாம முட்டாளா இருந்தா, இந்தப் படத்துக்கு கண்டிப்பா, மார்க் 100/100.

000

கோர்ட்டு தீர்ப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால், "விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் கிட்னிக்கு மிகவும் நல்லது," போன்ற அறிவுபூர்வமான விஞ்ஞான விளக்கங்களை நம்ம 'பாஞ்சி நாள் புகழ் நாராசாமி' அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கலாம்!

000


29.1.13

விஸ்வரூபம் ஸ்பெஷல்

'மதத் துவேஷம் ஏதுமில்லை; விஸ்வரூபத்தை வெளியிடலாம்' என ஒருவேளை நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பொது மக்களாகிய நாம், தயாரிப்பாளர் கமல்ஹாசனையும், மதவாதத் தலைவர்களையும், அவர்களின் கட்சி அமைப்புகளையும் சந்தேகப்பட வேண்டும். இந்தக் கிசுகிசு எங்கேயிருந்து ஆரம்பமானது என்பதும் கண்டுபிடிக்கப்படவேண்டும். பப்ளிசிட்டிக்காக இது கமல்ஹாசனால் பரப்பட்டிருந்தாலோ, அல்லது மத வாதிகள் தங்கள் சுய லாபத்துக்காக பரப்பியிருந்தாலோ, பொதுமகக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

000

காதல் கீதல்னு ஏதாச்சும் காட்சி இருந்து தொலைச்சா கமல்ஜீக்கு இன்னும் சோதனைதான். தடை வாங்கற பழக்கமெல்லாம் காடுவெட்டிக்கு கிடையாது. அப்படியே ஸ்ட்ரெயிட்டா கொளுத்துறதுதான்!!

000

சப்போஸ், கடல் படத்த்தில் மீனவர்களைக் கொச்சைப்படுத்துவதுபோல் காட்டப்பட்டிருந்தால்? 
மீனவர் அமைப்பு கேஸ் போட்டு, தடை வாங்கி... இதெல்லாம் நடக்கிற காரியமா? 
அல்லது மீனவர்களுக்கு மீன் சோறு போட்டு படத்தைக் காட்டுவார்களா? கோர்ட்டுதான் மனுவை ஏத்துக்குமா? 
கோழி கூவியா பொழுது விடியப்போகுது? 
இந்த தம்பட்டம் அடிக்கிற வேலையெல்லாம் மேல்தட்டுக்கள், மெத்தப் படித்தவர்கள், மதவாதிகள், அகிம்சாவாதிகள் செய்கிற பொழுதுபோக்கு வேலை!

000

"இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணி ஹலால் முறையில் தயார் செய்யப்பட்டது" என்று நம் கலையுலக துரக பதாதி, படத்தைத் தடை செய்ய போராட்டம் விடுப்பவர்களை தாஜா செய்யலாம். நோ பிராப்ளமோ. ஆழ்வார்பேட்டைக்கு தெரியாத சினிமாடிக்-அல்ஜீப்ராவா?!! சொல்வார். காத்திருங்கள்.

000

முகம்மது பின் துக்ளக் படம் ரிலீஸ் ஆனப்போ எந்தப் பிரச்சினையும் வரலை. ரோஜா படத்துக்கும் பிரச்சினை வரலை. அதனால, ஆழ்வார்ப்பேட்டையாரை 'அந்த மாதிரி போக்குல' படம் எடுத்து பணம் பண்ணச் சொன்னது சோவோட ஐடியாவாக்கூட இருக்கலாம். ரெண்டுபேருமே சினிமாக்காரவளாச்சேன்னு சொன்னேன். வேறெதுவும் உள் நோக்கம் இல்லை.

000

படம் நல்லபடியா ரிலீஸ் ஆகணும்னா, இஸ்லாமியர்களுக்கு மட்டும் வரிவிலக்கு குடுக்கறதுக்கு சட்டத்துல ஓட்டை ஏதும் இருக்கானு ஒரு எட்டு பார்த்துடுங்க கமல் சார்!

000

இதுகாரும் நான் எடுத்த சாதி அடிப்படையிலான தேவர் மகன், சண்டியர் போன்ற படங்கள் யார் சாதியையும் புண்படுத்துவதற்காக அல்ல என்றும், இவைகள் வெறும் கல்லா கட்டும் நோக்கத்துடனே எடுக்கப்பட்ட படங்கள் என்றும், விஸ்வரூபம் படமும் அத்தகைய அடிப்படையிலான பிரும்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்றும், எந்த மதத்தையும் புண்படுத்த அல்ல என்றும் உறுதி கூறுகிறேன். இந்த கல்லா கட்டும் எனது தீவிர முயற்சியில் தாங்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை நல்கி, சாதி மத இன பேதமற்று, அனைத்து உலகளாவிய ரசிகர்கள் திரும்பத் திரும்ப இந்தத் திரைக் காவியத்தைப் பார்த்து என் கல்லாப் பொட்டி பொங்கி வழிந்திட பேராதரவு தருமாறு...

(யோவ் வக்கீலு, மானே தேனே மக்களே தமிழரே இந்தியரே அப்படீன்னு சேர்த்து எழுதிக்க.... அப்படியே கடேசியா ஜெய் ஹிந்த் போட்டுடு.)


000

90 வயசு குடுகுடு கிழம்கூட விஸ்வரூபம் வந்தால் பார்த்தே தீரணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு பக்காவான பப்ளிசிட்டி. பத்து கோடியை விளம்பரத்துக்கு செலவழித்திருந்தாலும் இவ்வளவு 'ரீச்' ஆகியிருக்காது. படம் தயாரித்தது ஒண்ணும் உப்புமா கம்பேனி இல்லை; ராஜ்கமல் பிக்சர்ஸ். கத்துக்கோங்க. சும்மா இருக்கிற மக்களை சீண்டிவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்தால்... அதுதான் பக்காவான பப்ளிசிட்டி.

000

தான் ஒரு முசுலீம் நண்பன் என்று சொல்லிக்கொண்டே, சினிமாவில் முசுலீம் சகோதரர்களைப் பார்த்துப் பார்த்துப் பந்தாடி தீவிரவாத முத்திரை குத்தி துவைத்து எடுத்த விஜயகாந்தின் படங்கள் வந்தபோது இந்த 'பி.ஜெ' பிறந்திருக்கவில்லை போலும். இல்லையென்றால் இன்று கமல்ஹாசனையும் மனுஷ்யப் புத்திரனையும் மிகக் கேவலமான வார்த்தைகளால் விளாசும் இவர் விஜயகாந்தின் ரவுடித்தனமான படங்கள் வந்தபோது சும்மா இருந்திருப்பாரா? அல்லது, கமலும் மனுஷ்யபுத்திரனும் தன்னைத் திரும்ப அதே தாகாத வார்த்தைகளால் பதில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியமாக இருந்திருக்கலாமோ? அல்லது, விஜயகாந்தை அப்படிக் கேவலமாக திட்டினால், அவரும் அதே பாணியில் வார்த்தைக்கு வார்த்தை விளாசிவிடுவார் என்கிற பயமாகவும் இருந்திருக்கலாம்!

000

இனிமே இந்தப் பம்மாத்து வேலையெல்லாம் ஆகாது. ஒன்று பஜகோவிந்தம், அல்லா புராணம், எமைக் காக்கும் ஏசுவே... என்கிற ரீதியில் மட்டும் படம் எடுங்கள். அல்லது, மக்கள் அன்றாடம் சந்திக்கும் விலைவாசி, ஊழல், கேவலமான அரசியல் போன்ற பிரச்சினையை முன் வைத்து படம் எடுங்கள். முதல் வகைப் படத்துக்கு மதவாதிகள் மட்டும் வந்து முன்று நாள் ஓட வைப்பார்கள். இரண்டாவது வகைப் படத்துக்கு முழுமையான மக்கள் ஆதரவுடன் முன்னூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஏ சினிமாக் கூத்தாடிகளே, இதோ இன்றைக்கு மதவாதிகள் உங்களுக்கு கற்றுக்கொடுத்த மிகச் சிறந்த பாடம் இதுதான்!

நன்றி, மதவாதிகளே!! உங்களையே அறியாமல் 'சேம் சைட் கோல்' போட்டு சினிமாக்காரர்களை திருத்த உதவிய நீங்கள் சந்தேகமின்றி சொர்க்கம் போவீர்கள்.



8.1.13

'முப்பத்தாறே ரூவாயில் பூவா திங்கிறது எப்படி?..' எனது முகநூலிலிருந்து... 29

விஸ்வரூபம், எந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று முதன் முதலில் சொல்பவர்தான் அந்தப் படத்தின் மிகச் சிறந்த துல்லியமான விமர்சகர்!

000

தமிழ் புத்தாண்டு : 
தை 1 = டிஎம்கே. 
சித்திரை 1 = ஏடிஎம்கே. 
இதைப் புரிந்துகொள்ளும் அரசியல் சிற்றறிவு இருந்தாலே நாம் ஓட்டுப்போட தகுதியானவர்கள்தான்.

000

'முப்பத்தாறே ரூவாயில் பூவா திங்கிறது எப்படி...' அப்படீன்னு பொஸ்தக கண்காச்சியில பொஸ்தகம் கெடைச்சா சொல்லி அனுப்புங்கண்ணே! அப்படியே லம்ப்சமா வாங்கிக்க ஆள் இருக்கு!!

000

புரச்சித் தலைவருக்கு கருப்பு பொங்கலாம். 
தம்ப்ரீ... எங்க மஞ்சத் துண்டார், கேசரிப் பவுடர் போட்டாருன்னா அது மஞ்சப் பொங்கல். யாருகிட்ட?!

000

இந்திய விவசாயிகளை வால்மார்ட் காப்பாற்றுமென்றால், பிரதமர் எதற்கு? - தோயர் தாபா. 

அம்மா 'அங்கிட்டு' போனப்புறம்தான் எங்க தோயருக்கு திக்காம பேச வருது!

000

காவிரிப் பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர். 

கட்ட பஞ்சாயத்து பேசும்போது, புளிச் புளிச்சுன்னு துப்புறதுக்கு சொம்பை நீங்க எடுத்துக்கிட்டு வர்றீங்களா; இல்லேன்னா நாங்க கொண்டு வரட்டுமா?

000

பிரதமர் கனவு ஜெயலலிதாவை ஆட்டிப் படைக்கிறது - தலைவர். 

ஸ்டாலினை முதல்வர் ஆக்கும் கனவு, எங்கப்பனை ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டிப் படைக்கிறது - அயகிரி 

(பெத்துப் போட்டதே நாக்குமேல பல்லைபோட்டு கேக்கும்போது... வேணாம் வுட்டுடு தலிவரே...!!)

000

மதுரையாம், ராமநாதபுரமாம், தடையாம், உள்ளே நுழைய முடியாதாம்... 
யாருக்குப் போடுகிறாய் தடை? 
மரம் வெட்டினாயா? 
ரோடு தோண்டினாயா? 
கொட்டாய் கொளுத்தினாயா? 
ஜாதிச் சண்டை போட்டாயா? 
அல்லது எம்குலப் பெண்டிருக்கு குலம் கோத்திரம் பார்த்து ஜாதகம் கொடுத்தாயா?
மாமனா, மச்சானா... யாருக்குப் போடுகிறாய் தடை...?

000

எனக்கென்னவோ கண்ணகி சிலை படுத்துக் கிடந்த இடத்துக்கு அய்யன் சிலைய அனுப்பிடுவாங்களோன்னு பயமா இருக்கு. இருக்கிறது வரைக்கும் லாபம்னு விட்டுத் தொலைங்க தலிவா. அப்புறமா உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னு ஆகிடப் போவுது?!

000

'ஒயிட்ல வாங்குற பணத்துக்கு அரசு சேவை வரி போட்டுதுன்னா, அதுவும் ஆட்டாமாட்டிக்கா 'பிளாக்' ஆகிடும். மொத்தத்துல அரசு நாமம் போட்டுக்கும்.' - ரஜினியின் குரளுக்கு விளக்க உரை!

000

'சிதம்பரம் மன்மோகன் மச்சான்ஸ்...' அப்படீன்னு நமீ ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ரஜினி & குரூப்பு பிளாட்பாரம் வந்து போராட வேண்டி இருக்காது!

000

"பந்தலிலே பாவக்கா, தொங்குது பார் ஏலக்கா..." 
ஒப்பாரி ஒண்ணுதான் பாக்கி! சோகத்தைப் பார்த்தீங்களா?!

000

பாக்கறதுக்கே பரிதாபமா இருக்கு. 
சாப்ட்டு பத்து நாளாச்சி. 
நடிக்கிறதுக்கு வாங்குற கூலி, ஒயிட்டுல ஒரு நாளைக்கு வெறும் ஐனூறு ரூவாதான். ஆனா சேவை வரி கட்டணும். 
வருங்கால முதல்வருக்கே இந்தக் கொடுமைன்னா, நாமெல்லாம் வெறும் பிஸ்கோத்து!

000

சேவை வரின்னு சொல்லிட்டு, பாவம் இந்த ஏழைகளை பிளாட்பாரத்துல உக்கார வச்சிட்டீங்களேடா பாவிகளா? நீங்க நல்லா இருப்பீங்களா? அந்த கும்பல்ல பாத்தீங்கன்னா, ஒரு வருங்கால பிரதமர், ஒரு வருங்கால முதல்வர், ஒரு வருங்கால அமெரிக்க ஜனாதிபதி... இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆவணும். பாவம்; அவங்களை விட்டுடுங்க. அவங்க கொடுக்க வேண்டிய சேவை வரி துட்டை நாங்களே கொடுத்து தொலைக்கிறோம்.

வேணும்னா, பெட்ரோல் வெலையை ராவோட ராவா ஒரு பத்து ரூவா ஏத்திக்க. நாங்க கண்டுக்க மாட்டோம். அவங்களை விட்டுடுங்க!


000

பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்றப்படும் - தமிழக அரசு.

பேசாம, மொத்தத்தையும் இரவுப் பள்ளியா ஆக்கிடுங்க.
ராத்திரில இஸ்கோலுக்கு போயி, விடியறதுக்குள்ள வூட்டுக்கு வந்துடணும். ஜனங்களுக்கு தொந்தரவே இருக்காது பாருங்க. அரசு ஆவன செய்யுமா?


000

பாலியல் பலாத்காரம் செய்யும் எம்.பி., எம்.எல்.ஏக்களை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை: சுப்ரீம் கோர்ட்.

'கைய புடிச்சி இழுத்தியா...?' அப்படீன்னு நீங்க கேட்டு, 'என்ன கைய புடிச்சி இழுத்தியா?' அப்படீன்னு ஒரு பதிலை வாங்கிக்கிட்டு, கவுரதையா கேசை தள்ளுபடியாவது செய்யமுடியாதுங்களா எஜமான்?


000

எனக்கு பின் ஸ்டாலின்: கருணாநிதி
திமுக மடம் அல்ல : அழகிரி ஆவேசம்.
ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!

பூப்போட்டுப் பார்த்துடுங்க தலிவரே.
குஷ்பூவோட கண்ணைக் கட்டி பூவை எடுக்கச் சொல்லுங்க.
பிரச்சினை முடிஞ்சிது.
சென்னை மதுரை டோட்டல் தமிழகமே மொத்தமா சரண்டர் ஆகிடும்.

7.1.13

யமுனை நதிக்கரையில் யாதுமற்றதாய் ...


வா
என் காதலியே...
யமுனை நதிக்கரையில்
யாதுமற்றதாய் 
இருமாந்து நிற்கும்
அந்த
காதல் சின்னத்தை 
யாம் கண்டு வருவோம்.
இருபத்து மூன்று
ஆண்டுகளில்
இருபத்து இரண்டாயிரம்
ஏழைத் தொழிலாளரின்
கடுமையான உழைப்பும்
வியர்வையும்
வீணடிக்கப்பட்ட
வரலாற்றை
சுமந்து நிற்கிறதாம்
ஒரு ஊதாரியின்
காதல் சின்னம்.
வா.
நாம் இருவரும்
ஒரு கரித்துண்டால்
அதன் வாசலில்
ஒரு கரும் புள்ளியிட்டு
நம்
மறுப்பை பதிந்து
வருவோம்!