My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

23.6.12

காரிருள் கருப்பிகரும் புள்ளி 
இருளிலிருந்து
பெரு வெடிப்பு.

பெரு வெடிப்புச் சிதறலில்
பேரண்டம்.

பேரண்டத்துள்
ஒரு புவி.
புவிக்குள் உயிர்.

எனில்
இருளில் பிறந்தது ஒளி.
நெருப்பில் துளிர்த்தது நீர்.

நீருள் நெளிந்த உயிர்.

என் மூத்த தாய்
ஒரு நெருப்பு.
இல்லை.
பெரும் வெடிப்பு.
இல்லை இல்லை...
இருள்.
காரிருள் கருப்பி.

நானும்
கருப்பன் என்பதில்
கர்வம் கொள்கிறேன்!

16.6.12

எனது முகநூலிலிருந்து... 7ஓராண்டு சாதனைக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி: ஜெயலலிதா.

நீங்க எப்படியாவது இந்தியப் பிரதமர் ஆகிடணும்; நாங்க பெற்ற இன்பத்தை இந்த இந்தியாவும் அனுபவிக்கணும் அப்படீன்னு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்துகிறோம்!!
000

பதவிக்காக மாற்று வியாபாரம் செய்ய மாட்டோம்: கருணாநிதி.

2 G யாவாரமே போதும் அப்படீங்கறார்!!

000

வாஷிங்டன் : ஈரானிடம் கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதைக் நிறுத்த இந்தியாவுக்கு அளித்துள்ள அவகாசம் 6 மாதங்களுக்குத்தான் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதற்குள் இந்தியா தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்துகொள்ளவில்லை என்றால் அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ராபர்ட் பிளேக் எச்சரித்தார்.

இந்த எண்ணெயை வேறிடத்தில் வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. எனவே இந்தியா கால அவகாசம் கேட்டது. இந்த அவகாசம் 6 மாதங்களுக்குத்தான். அதன் பிறகு இந்தியா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆளாக நேரும் என்று அவர் குறிப்பிட்டார்.

இறையாண்மைன்னா இன்னாங்க அர்த்தம்? யாராவது சொல்லித் தொலைங்களேன்?!

000

கல்லூரி ஆசிரியராக எளிமையான வாழ்க்கையை தொடங்கியவர் பிரணாப் முகர்ஜி - செய்தி.

இப்போது, அமெரிக்காவின் கைக்கூலி, சுவிஸ் பேங்கின் தரகர் என பல கவுரவமான பதவிகளை வகிக்கிறார். இவரின் எளிமையை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். 'மிக நல்லவர்களாக' வளர்ந்துவிடுவார்கள்!

000

"கலாம்' என்றால் தமிழில் "கலகம்' என்று பொருள் உள்ளது - கருணாநிதி.

யோவ் பெர்சு, இந்த தத்துவத்தை கலாம் கூடங்குளம் வந்து போனப்பவே சொல்லியிருக்கலாமில்ல?!

000

'பெரியவா' கால்ல விழுந்து அருளாசி வாங்கிட்டா, கண்டிப்பா நீங்க மறுபடியும் ஜனாதிபதியாகிடுவீங்கன்னு ஒரு ஜோசியக்காரன் சொல்றான்னு வச்சிக்குவோம்; கலாம் காஞ்சீவரத்துக்கு போகமாட்டாருன்னு நினைக்கிறீங்களா?!

000

எங்கள் 'புரட்சி ஞானி' நித்தியை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரை செய்யாத இந்த தமிழ் நாடு, 108 டிகிரி வெயில்ல இன்னும் ஆறு மாசத்துக்கு புழுங்கியே சாவட்டும்!!

000

அரசு கிடங்கில் மட்கிப்போன அரிசியை எடுத்து குப்பையில் போடுவதற்குப் பதிலாக, அந்த வேலையை இளிச்சவாய் மக்களிடம் கொடுத்துவிடுகிறார்கள். மக்கள் அந்த அரிசியை ரேஷனிலிருந்து வாங்கிக்கொண்டுபோய் குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள்!!

000

அடுத்து, நம்ம நித்திக்கு ஹார்ட் அட்டாக் வந்து, அட்மிட் ஆயிடுவாரு. கரெக்டா?!

000

""பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால், இறையருள் பக்கபலமாக இருக்கும்.'' - முதல்வர் ஜெயலலிதா.

'சர்ச் பார்க் லெவலுக்கு படிச்சா' இப்படித்தான் பேசச்சொல்லும்.

000

மும்பை: "பார்சி சமுதாயத்தில், மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்குள் சம்பாதித்தால் அவர் ஏழையாகக் கருதப்படுவார்' என, அந்த சமுதாயத்தின் தலைவர் மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

அடப் பாவப்பட்ட ஏழைகளா..., மாண்டேக் சிங் அலுவாலியா அப்படீன்னு ஒரு ஆள், பிளானிங் கமிஷன் அலுவலகத்துல உட்கார்ந்து, வெட்டியா நாற்காலிய தேய்ச்சிக்கிட்டு இருக்காரு. அவருக்கு உங்க சாதிசனங்க யாராவது, ஒரு நாளைக்கு 28 ரூபாய் சம்பளத்துல வேலை போட்டு கொடுக்கமுடியுமா பாருங்க. பொழைச்சிப் போகட்டும்!!

000

"வருமான வரி சட்டங்கள் குறித்தும், தேசிய கட்டமைப்புக்கு தேவையான வரிகளின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு போதிக்கும் வகையில், இது தொடர்பான விவரங்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.'' - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி .

அப்படியே, சுவிஸ் வங்கியில் கணக்கைத் துவங்குவது எப்படி; வங்கி லாக்கர்களை திறந்து மூடுவது எப்படி என்பனவற்றையும் செய்முறை விளக்கத்தோடு கற்றுக்கொடுத்து விடுங்கள்!

000

""ஒரு ஆண்டுக்கு மேலாக பிரிந்திருந்த அண்ணன், தம்பிகள் சந்திக்கும் போது, என்ன உணர்வு இருக்குமோ, அந்த உணர்வு எனக்கும், ராஜாவுக்கும் இருந்தது,'' தி.மு.க., தலைவர் கருணாநிதி.

இன்னா தலைவரே, 'மருமகன்' வயசுல இருக்கிற ஒருத்தரை அண்ணன் தம்பின்னு சொல்லிக்கிட்டு!!

000

ராமதாஸ் செய்தியாளர்களிடம் : ‘’பிளாஸ்டிக் கழிவுகள் மனித உயிர்களுக்கு கேடு விளைவிப்பவை. பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள். தவறு."

(ஒன்று சாலையையே தோண்டியெடுத்து சாலையோரம் போட்டுவிடலாம்! அல்லது மரங்களை வெட்டி சாலையில் போடலாம்!!)

000

ஆந்திராவில், ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு தங்க மோதிரம், தங்க மூக்குத்திகள் வினியோகம் செய்வது தொடங்கியுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதி வாக்காளர்களும் ஆச்சரியத்தில் மிரண்டு போய் உள்ளனர்.

தேர்தல் ரிசல்ட்டு வந்தப்பொறவுதான் தெரியும், அவங்க குடுத்த 'கடுக்கன்' கவரிங்க் அப்படீன்னு!

000


இனக்கொலைக் குற்றவாளி இராஜபக்சேவை விரட்டியடிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்.
(வெறும் வாய்-உதார் தியரி)


எத்தனை தடவை வந்தாலும் விரட்டியடிப்போம்! ராஜபக்சே விடுதியை சுற்றி ஈழத்தமிழர்கள் முற்றுகை!
(ப்ராக்டிகல்)

000

இன்னும் ஒரு மாசத்துக்கு டீசல் தட்டுப்பாடு இருந்தா நல்லா இருக்குமோண்ணு தோணுது. அப்பத்தான், ரேஷன் கடைன்னா இன்னா, கியூன்னா இன்னா, ஏசி இல்லாத நேரம் எப்படி இருக்கும், வெய்யில்ல ஜனங்க எப்படில்லாம் கஷ்டப்படறாங்க... போன்ற விஷயங்களை மேட்டுக்குடி வர்க்கமும் கார் கண்ணாடி ஜன்னலை தொறந்து வச்சிக்கிட்டு வேடிக்கையாவாச்சும் பார்க்குமில்லே? இதையெல்லாம் அவங்களும் கொஞ்ச நாளைக்கு அனுபவிக்கட்டுமே?


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!

000

13.6.12

பேசின் ப்ரிட்ஜ்அது 
என் மூதாதை 
என்றேன்.
'முடியாது' என்றார்கள்.

பட்சிகள் 
பழம் தின்று
எச்சமிடும் இடமென்றேன்.
'முடியாது' என்றார்கள்.

விழுதுகளில் தொங்கி
விளையாடிய இடம்
என்றேன்.
முடியவே முடியாதென்றார்கள்.

ஏரோட்டும் விவசாயி
இளைப்பாறு மிடமென்றேன்.
'ம்ஹூம்
முடியாது' என்றார்கள்.

இது...
'எக்ஸ்ப்ரெஸ் வேக்கு'
இடைஞ்சலென்று
வேறோடு பிடுங்கி
வெட்டிச் சாய்த்துவிட்டார்கள்.

ஆனாலும் நாம்
மரம் நடுவோம்.
மண்வளம் காப்போம்.000பொதிக்குள்
புதைந்துபோன
டயர் வண்டி.

சுளீரென்ற
சாட்டையடி வலித்தும்,
செய்வதறியாது திகைத்து
தொடைகள் நடுநடுங்கி
நின்றேபோயின
என் இளங்காளைகள்.

அதன்
நுகத்தடி வலியில்
நுரைதப்பிய வாய்கள்.

இன்னும் கொஞ்சம்
நகர்ந்துவிட்டால்
கிடைக்கும் கூலிக்கான
கணக்கில் இருந்தேன்
நான்.

வலி தாளாமல்
கொம்பால் குத்தி
எஜமானனை
கொலை செய்துவிடும்
கணக்கில் இருந்தன
என் காளைகள்.

இன்னுமொரு சாட்டையடியில்,
இந்த 'பேசின் ப்ரிட்ஜ்'
ஏற்றதில்,
கூலியா அல்லது
கொலையா
என்பது தெரிந்துவிடும்!

கார்பன் துகட்கள்...கடவுளின் தேடுதலில்
நாம்
நம்மையே
தொலைத்துவிட்டோம்.


000


வண்ணத்துப் பூச்சிகள்
வெறும் வயிற்றோடு
திரும்பிப் போய்விட்டன.
மலர்களின் இதழ்களில்
மகரந்தத்துக்குப் பதில்
கார்பன் துகட்கள்!!


000


உருண்டைச் சோற்றை
விழுங்கிக்கொள்ள
வேப்ப மரத்து
பேயைக் காட்டினாள்
என் அம்மா.
பிற்பாடு,
வேப்ப மரம்
ஓங்கி வளர்ந்து,
வீழ்ந்து,
ஒழிந்தே போனது.
பேயல்ல!!000


துப்பாக்கி...
செவ்விந்தியர்களின்
மார்பில் சுட்டது.
பறிக்கப்பட்டது
அமெரிக்கா .

பீரங்கி...
வளைகுடாவின்
முதுகில் சுட்டது.
பறிக்கப்பட்டன
எண்ணைக் கிணறுகள்.

ஆனால்
கத்தியின்றி ரத்தமின்றி
பறிக்கப்பட்டுவிட்டது
இந்தியா.
ஆம்.
நாம்
நல்ல அஹிம்சாவாதிகள்
என்று
நிரூபித்துவிட்டோம்!!000


கொடுக்காப்புளி
தழை தின்று,
கொட்டாங்கச்சி
ஊஞ்சலாடி
உறங்கிக்கொண்டிருந்தது
என்
பொன்வண்டு.
வீட்டுப் பாடம்...
வாத்தியார் விளாசல்...
எல்லாம் மறந்து
நானும் உறங்கிப்போனேன்.

இன்று,
பொன்வண்டுகளே இல்லை.
என் உறக்கமும்!