My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

25.2.12

எனது முகநூலிலிருந்து... 3# "வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வெளியிட முடியாது' என, காங்., தலைவர் சோனியா, மறுப்பு தெரிவித்துள்ளார்.

சோனியா பக்கம்தான் நியாயம் இருக்கிறது. இந்திய சட்டம் இத்தாலிக்காரிக்கு எப்படிப் பொருந்தும்?


# தமிழ்நாட்டுல எப்பல்லாம் என்கவுண்டர் நடக்குதோ அப்பல்லாம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில ரெண்டு மெத்தைய போட்டு, படுக்கைய ரெடி பண்ணிடுவாங்க! போலீசுக்குத்தான்!!

# கொள்ளை கும்பலை போலீஸ் படை சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசில், தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசில் தலையிலும் கண் அருகிலும் கையிலும் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

இருவருக்கும் காயம் பலமாக இருப்பதால் பேசக்கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த முடியவில்லை.

துப்பாக்கி, குண்டு, பாய்ந்து, தலை, உயிர் பிழைத்தல், ஒரே நாள், எழுந்து உட்காருதல்... டைரக்டர் யாரு? 'Continuity ' சரியா வரலியே?!

# அகதிகள் போல வட இந்தியர்களை, நம் சக நாட்டவரை, ஒரே இடத்துக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து, தரையில் உட்கார வைப்பதும், கைரேகை, உடல் அடையாளங்கள் எடுப்பதும், பெயர் முகவரியை வலுக்கட்டாயமாகப் பதிய வைப்பதும், அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவதும், எதோ ஹிட்லர் போர்க்குற்றவாளிகளிடத்தில் விசாரிப்பது போலிருக்கிறது. இந்தத் தமிழகப் போலீசின் வட இந்தியர்கள் மீதான அடக்குமுறை அவர்களது கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. யாரோ ஒருவன் திருடிவிட்டான் என்பதற்காக வடந்தியர்களையே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது முட்டாள்தனமான, பேடித்தனமான செயல்.

'இந்தியர்கள்' எனச் சொல்லிக்கொள்ளும் யாவரும் இந்தச் செயலுக்காக வெட்கப்படுங்கள். துப்பாக்கி சூட்டுக்கு தலையில்(!) கட்டுப்போட்டுப் படுத்திருக்கும் தமிழக போலீசை இனி ஒரு கைக்குழந்தைகூட 'இது நம்ம சிரிப்பு போலீசு' என்று கூறிவிடும்.

கையாலாகாத கோழைகளுக்கு ஸ்காட்லாந்து யார்டு அளவுக்கு அந்தஸ்து!! து... து...!!


# தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இத்தாலியக் கப்பல் ஊழியர்கள், லத்தோரே மாசிம்லியனோ மற்றும் ஷல்வசோரே கிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது அரசு விருந்தினர் மளிகையில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏன்? நெ.10, ஜன்பத் ரோடு வீட்டு பெட் ரூம்லயே, ஏசிய போட்டு படுக்க வச்சிருக்கலாமே? கரண்டு போய்டுத்துன்னா, சோனியாவ விசிறியால விசிறிவிடச் சொல்லுங்க!!

# கோர்ட்டில் ஆஜராக வந்த திவாகரனுடன் தி.மு.க.,வினர் திடீர் சந்திப்பு.

பன்றிகள் மலம் தேடுவதில் ஆச்சரியமில்லை.

# தனித்தே போட்டியிட்டிருந்தால் ஆளுங்கட்சியாகி இருப்போம்: ராமதாஸ்.

டவுசர் நாடா வெளியில தொங்கறதக் கூட கவனிக்காமப் பேசுராரு பாருங்க!

# "2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என கூறி வருகிறீர்கள். ஆனால் இன்றும் சில மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன. நாம் செல்லும் பாதை சரியானதா?"

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி 10 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020க்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தால் நம்நாடு வல்லரசாவது நிச்சயம்.

கலாமிடம் ஒரு குழந்தை கேட்ட கேள்வியும், அதற்கு கலாம் அளித்த குழந்தைத் தனமான பதிலும். இவரின் அறிவுத் திறமையை மெச்சிக்கொள்ளுங்கள்!!

# செய்தித் தாள்கள், இன்றைய தங்கம் விலை அப்படீன்னு கட்டம் கட்டி செய்தி போடுவதுபோல, 'இன்றைய திருட்டுப் பட்டியல்' அப்படீன்னும் ஒரு கட்டம் கட்டிக்கலாம்! "ஆந்திரா பக்கம் ஓடிட்டானுங்க" அப்படீன்னு கடவாய்ல கட்டியிருக்கிற தங்கப் பல் தெரியுறமாதிரி இளிச்சிக்கிட்டே சொன்னாங்க. போறபோக்கப் பாத்தா போயஸ்லயே பொந்து போட்றுவானுங்க போலிருக்கே?!

# அணு உலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: ஊட்டியில் அப்துல் கலாம் பேட்டி.

இந்த மனிதகுல மாணிக்கம் ஒரு இஞ்சினீயரா இருந்ததுக்கே இந்தப் பீட்டர் உடுதுன்னா, உண்மையிலயே சயின்டிஸ்டா இருந்திருந்தா என்ன பாடுபடுத்தும்? ம்ஹூம். இனிமே தாங்காது. பொடிபயல்களை விட்டு, இவர் படத்துக்கு ஹிட்லர் மீசை வரைஞ்சிடவேண்டியதுதான்!!


# ‘இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ போலீசார் குவிப்பு; தயாராக இருக்க உத்தரவு - தினமலர் நக்கல்.

மிஞ்சிப்போனால் பரமக்குடியில சுட்டதுபோல் சுட்டுப்பொசுக்குவார்களா? இதுக்கெல்லாம் உன்னைப்போல காவிரிக்கரைப் பச்சரிசிப் பிண்டங்கள்தான் பயப்படுவார்கள். பூணூலை காது மடலில் சுற்றிக்கொண்டு வந்து வேடிக்கை பார்!!

# புகையிலை இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்: அப்துல் கலாம்.

நாம் அணுஉலை இல்லாத நாடாக இருக்க போராடுவோம். கலாம் புகையிலை இல்லாத நாடாக மாற்ற முயற்சி எடுக்கட்டும். கலாமால் 'முடிந்தது' அவ்வளவுதான்!

# கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கோரி பாரதீய ஜனதா 27-ந் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

கூடங்குளம் அணு உலை கட்டிடம் இருக்குமிடத்தில்தான் ராமர் பாலம் கட்டுவதற்கு, ராமர் 'பிளான்' போட்டதாக புராணத்தில் இருக்கிறதாம். ராமர் பாலத்தைக் காட்டி, சேது சமுத்திர திட்டத்தை மூடியதுபோல, இந்த கூடங்குளம் திட்டத்தையும் நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் கண்களை ராமர் குத்தாமல் விடமாட்டார்!

# பாஸ்டன்: கிரிக்#கெட் வீரர் யுவராஜ்சிங்கிற்கு வந்துள்ள கேன்சர் கட்டி பெரும் அளவிற்கு மறைந்து விட்டதாக டூவிட்டரில் அவரே கூறியிருக்கிறார்.

இப்பத்தானே அமெரிக்காவுல போயி அட்மிட் ஆனாரு. அதுக்குள்ள சரியாகிடுமா? சும்மா 'பப்ளிக்குட்டி' வேலையா இருக்குமோ?! பிர்லா சன் லைஃப் டிவி கமர்சியலை வச்சுப் பார்த்தா அப்படித்தான் தோணுது!!

# 24 சதவீத இந்திய குழந்தைகள் பட்டினி: ஆய்வில் தகவல்.

மரம் நடணும், We can do it, India can do it அப்படீன்னு மனப்பாடமா சொல்லிக்கிட்டே இருக்கணும், கவுந்துப் படுத்து கனவு காணனும், மேல ராக்கெட் பறந்தா அத வேடிக்கை பார்க்கணும், நாடு வல்லரசாகணும்னு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்யணும். இப்படியெல்லாம் செய்தா, தட்டுல சோறு வரும்னு தெரியாது?! கேர்லெஸ் இடியட்ஸ்...

# இத்தாலி குண்டுக்கு பலியான தமிழக மீனவர் ; கடற்கொள்ளையன் என நினைத்து சுட்டனராம் - தினமலர் செய்தி.

பரவயில்ல, கவலைய விடுங்க. இங்க உங்க நாட்டு கவர்மெண்ட்டு தான் நடக்குது. சும்மா உள்ளாற வந்து போங்களேன். டீ, காப்பி, பஜ்ஜி, போண்டா சூடா இருக்கும், சாப்டுப் போலாமே?!

# கலாமின் முகநூல் புதையல் சட்டியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பொன்னான முத்துக்களில் ஒன்று :
Youth of India... have the confidence... "I can do it! We can do it! India will do it!"

Nike செருப்புக் கம்பெனி 'Just Do it... ' அப்படீங்கறான்!

ஒபாமா 'Yes, We can' அப்படீங்கறான்!!

அதாவது, 'என்னான்னு' விஷயத்தை சொல்லாமலே do it, do it, we can அப்படீன்னு சொல்றது ஃபேஷனாப் போச்சோ?

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்.

I am gonna just do it and will come back!!!

# எங்களால் போரை நிறுத்த முடியாது.
ஏனென்றால்...
எங்களுக்குத் தெரிந்த ஒரே பரம்பரைத் தொழில் இதுதான்!! - வெள்ளை மாளிகை, அமெரிக்கா.


# உண்டு கொழுக்கும் வங்கி...
கூட்டிக் கொடுக்கும் அரசு...
வெறும் தட்டை நக்கும்
விவரமான மக்கள்!!

# ஆற்றோரக் குடிசைகளைக் காலிசெய்ய, குடிசைவாசிகள் செத்தாலும் பரவாயில்லையென்று இரவோடு இரவாக கொளுத்திவிட்டு, காலையில் ஒன்றுமே தெரியாததுபோல நாடகமாடுவார்கள். வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு கதறும் தாய்மார்களைப் பார்த்து ரசிப்பார்கள். அதே வகையிலான கோழைத்தனத்தைத்தான் அரசே செய்கிறது. காலிகளுக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்? இதற்கு நாராயணசாமி, தினமலர், கலாம் போன்ற கருங்காலிகளும் உடந்தை.எட்டு மணி நேரமான மின் வெட்டு செயற்கைத்தனமானது. எட்டு பதினாராகலாம். இந்த புகை மூட்டத்தில் நாம் மூச்சுத் திணறலாம். இந்த கோழையான மத்திய அரசையும் கொடூரமான மானில அரசையும் மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு மக்களே வருத்தப்படுகிறார்கள். ஆனாலும் நாமே வெல்வோம்!!!

# வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் செயற்கை மின்வெட்டு போன்ற கோழைத்தனமான அரசின் நடவடிக்கைகளையும், கொடூர நிகழ்வுகளையும் தங்களுக்குத் தெரிந்த நேர்மையான மீடியாக்களிடம் எடுத்துச் சென்று விஷயம் வெளி உலக்குத் தெரிவிக்க உதவவேண்டும். வேண்டுமென்றே மின்சாரத்தைத் தடைசெய்யும் அரசு நடவடிக்கையை யாரும் ஹிட்லர் காலத்தில்கூட பார்த்திருக்க முடியாது. இந்தியாவில், அதுவும் தமிழகத்திலிருக்கும் நாங்கள் மிகவும் ஆபத்தான காலகட்டத்திலிருக்கிறோம்!!

# கூடங்குளம் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு நாலு மாசமா பொழுது போகலையாம். மூட்டை முடிச்சி கட்டிக்கிட்டு ஊருக்குப் போவலாமான்னு யோசனைல இருக்காங்களாம்.

பொழுது போகலைன்னா, அந்துமணி-லென்சு மாமான்னு ஒரு குருப்பு இருக்கு. அவுங்ககிட்ட போனீங்கன்னா உங்கள நல்லா குளிப்பாட்டிவிட்டு, நல்ல முறையில கவனிச்சுக்குவாங்க. அந்த வகையில பொழுதைக் கழிச்சிடுங்க. அப்படியும் முடியலைன்னா, அவங்ககிட்ட மட்டும் 'டாட்டா' சொல்லிட்டு, உங்க ஊருபக்கம் பத்திரமா போய்ச் சேருங்க!!

13.2.12

எனது முகநூலிலிருந்து... 2
# செத்த பிறகும் நிம்மதியாயிருக்கலாம் எனப் பேசி மடக்கும் இன்சூரன்ஸ் ஏஜண்டுக்கும், இந்தியா வல்லரசாகிவிடும் என்று கடிவாளத்துக்கு முன்னால் கேரட் காட்டும் அப்துல் கலாமுக்கும் என்ன வித்தியாசம்?


கடலோர காவல் படையினரின் சாகச நிகழ்ச்சி: இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடல் அருகே, கடலோர காவல் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது - செய்தி.

பார்த்து, பார்த்து! ஹெலிகாப்டர் பத்து அடி அந்தண்ட போய்டுத்துன்னா, வாய்ல இருக்கிற பல்லெல்லாம் கொட்டிப்போய்டும். உசாரா இருங்க!# ஓட்டளிப்பதை சட்டப்படி கட்டாயமாக்குவது முக்கியம்: அத்வானி.

கட்டாயப்படுத்தினா, 'ஊழலில்லா ஆட்சி அமைப்போம்னு' நீ சொல்ற வாக்குறுதிய காப்பாத்தியே ஆகணும்னு நாங்களும் 'கடுமையான' முறையிலே உங்களை கட்டயப்படுத்துவோம். ஜன நாயகக் கடமை எங்களுக்கு மட்டும்தான்னு நீங்க நினைச்சிக்கிட்டிருக்கீங்களா? பெர்சு... அதெல்லாம் அந்தக்காலம்!!


# "ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை': ஹசாரே.

அப்போ காந்தீயம்? கோய்ந்தாவா? கிரவுண்டுல இருக்குற 200 பேருகூட காணாமம் போய்டுவாங்க போலிருக்கே?!


புதுடில்லி: "நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடன் தொல்லையால் விவசாயிகள் கொடுமையான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு வலிக்காதவகையில் தற்கொலை செய்துகொள்ள, மத்திய மானில அரசுகள் வசதி செய்து தரவேண்டும் - சுப்ரீம் கோர்ட். (இப்படி செய்தி இருந்து நீங்கள் கோபப்படுவீர்களானால், தவறென்று சொல்வீர்களானால், மேலே உள்ள உண்மையான செய்திக்கும் நீங்கள் கோபப்படவேண்டும்).


# இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் - செய்தி.

கார்கில் சண்டை மாதிரி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடந்தது நாடுபிடிச் சண்டை. அதுல நம்ம ராணுவ வீரர்கள் வீரத்துடன் போராடி, தப்பிச்சு வரமுடியாம, இலங்கையிலே உயிர் விட்டுட்டாங்க. அதனால இந்திய வீரர்களின் நினைவிடத்துல கலாம் அஞ்சலி செலுத்துறார். இப்பவாவது புரிஞ்சிக்கோங்கையா... அவர் மெத்தவும் படித்தவர்னு! மனிதாபிமானின்னு!!


# "சொன்னது உண்மையாகிப் போச்சு... இப்போ! கூடங்குளத்திற்கு வந்தது வெளிநாட்டு நிதிதான்!" - தினமலர் கூவல்.

மனித இனத்தை அழிக்க வெளி நாட்டிலிருந்து 'தொழில் நுட்பம்' வரலாம். ஆனால் மனித இனத்தைக் காக்க வெளிநாட்டிலிருந்து நிதி வரக்கூடாதா? வெளிநாட்டில் மனிதாபிமானிகள் இருக்கக்கூடாதா?


# "ஓட்டுப்போடுவது ஜனனாயகக் கடமை."
ஆனா, பதவிக்கு வந்துட்டா அவங்க கடமையை செய்யறதில்லை.

அதே போலத்தான் இந்தக் கூடங்குளத்துக் கதை.

"நாட்டுக்காக இதைத் தாங்கிக்கணும். நாடு, அதன் இறையாண்மை, அதன் பொருளாதாரம் முக்கியம்."

உற்பத்தி ஆரம்பிச்சாச்சுன்னா, அம்பானியோட கரண்ட்டு பில்லு எடுத்துக்கிட்டு, பணம் வசூல் பண்ண ரவுடிங்க ஆட்டொவுல எப்புடி வருவாங்கன்னு அரசாங்கத்துக்கும் அப்துல் கலாமுக்குமே வெளிச்சம். கரண்ட்டு பில்லு கட்ட முடியாததால, கனக்ஷன் கட் பண்ணி இருட்ல இருக்குறதவிட, ஆரம்பத்துல இருந்தே இருட்ல இருக்கப் பழகிக்கலாம். காசு மிச்சமில்ல!! மிஸ்டர். கலாம். பதில் சொல்லிட்டுப் போங்க!

 # ஆட்சிக்கு வந்தால் கோமியம் உற்பத்தியை ஊக்குவிப்போம் : பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இப்படியும் வாக்குறுதி

மாற்றத்தை காணாமல் ஓய மாட்டேன்: ராகுல் சூளுரை.

வந்தா அடக்கக்கூடாது. சிரிச்சிடுங்க. ஒடம்புக்கும் நல்லது! மனசுக்கும் நல்லது!! நெக்ஸ்ட்டு யார்ரா ஜோக்கு சொல்லப்போறது?

# “100 ரூபாய்க்கு தெர்மாகோல், ஒரு ஃபெவிகுயிக், கத்திரி, கட்டர் இத்தியாதி வாங்கிக் குடுங்க சார்… அப்படியே அணுவுலைக்கூடம் எப்படி இருக்கும்னு ஒரு டம்மி செய்ஞ்சி காட்றேன். அப்பத்தான் புரியும்… அதுல எவ்வளவு ஆபத்திருக்குன்னு,” அப்படீங்கறான் ஒரு +2 பையன். ஆனா, கலாம் கண்ண மூடிக்கிட்டு எல்லாரையும் முட்டாளா நெனைக்கிறார். இவுரு இன்னும் கட்டை வண்டி காலத்துலயே இருந்தா அதுக்கு யார் பொறுப்பு?!


# அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணி: அத்வானி.

'இயல்பு' என்பதற்கு அர்த்தம் காவி. ஆம் ஐ கரக்ட் அத்வானிஜி?

# புதுச்சேரி, கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், 96 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, போர்வைகள் வழங்கப்படுகின்றன - நித்தி.

பெண்களே, கையை நீட்டாதீங்க. எதுக்கும் 'எட்ட' இருந்து குச்சிய நீட்டி வாங்கிக்குங்க. குடுக்குறதுபோல குடுத்து நோட்டம் பார்த்துடப்போறான்!

11.2.12

கடற்கரை சுடும்


"அன்பே..."
"ம்..."
"நான் கோவிலில்."
"நான் மசூதியில்."
"கவலைப்படாதே.
கட்டிடங்கள் நொறுங்கினால்
கடவுள் நொறுங்கும்.
கடவுள் நொறுங்கினால்
மதம் மரணிக்கும்.
மதம் மரணித்தால்,
மரணித்த நம் மனம்
மீண்டும் பிறக்கும்!"


"அன்பே..."
"ம்..."
"நான் ஏழை."
"நான் பணக்காரன்."
"நான் குடிசையில்."
"நான் மாடியில்."
"நிலைகுலையாதே.
உயரங்கள் சமமானால்
உள்ளங்கள் ஒன்றாகும்!"

"அன்பே..."
"ம்..."
"கடற்கரை?"
"சுடும்."
"திரை?"
"அறுக்கும்."
"பூங்கா?"
"அலுக்கும்."
"எனில்
எப்போது சந்திப்பு?"
"புவியின் வடக்கில் நான்.
புவியின் தெற்கில் நீ.
ஒரு பிரளயத்தின்போது
ஒன்றாகிவிடலாம்.
இன்றிலிருந்து,
இப்போதிலிருந்து
ஒரு பிரளயத்துக்கு
ஏற்பாடு செய்வோம்."

"அன்பே..."
"ம்..."
"அதுவரை பிரிவா?"
"ம்ஹூம்... முயற்சி.
நீயும் நானும்
நாளையொரு நாள்
மதமற்ற மேடையில்
உயரங்களற்ற அந்தரத்தில்
உனக்கும் எனக்குமான
உன்னதக் கைகோர்த்தலில்
இணைந்துகொள்ள
இன்றிலிருந்தே...
இன்றிலிருந்தே முயற்சி."

"அன்பே..."
"ம்..."
"பிரிவோம்."
"........"
"சந்திப்போம்."
"ம்...!"

10.2.12

கனவு காணுங்கள்ஒரு ஏரியா சேல்ஸ் மேனேஜருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்குமோ, ஒரு தமிழக முதல்வருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்குமோ, ஒரு மல்டி மில்லியனர் பிசினஸ் மேனுக்கு எவ்வளவு டென்ஷன் இருக்குமோ, அதுக்குமேல டபுள் மடங்கு டென்ஷன் ஒவ்வொரு மாணவனுக்கும். போட்டி போட்டி அப்படீன்னு ஒரு கத்தியை அவன் மண்டையில செருகிட்ட பிறகு, அவன் ஒரு நடைப்பிணமாகிடறான். பள்ளியிலும், வீட்டிலும், சமுதாயத்திலும் நடைப்பிணம்தான். யாராவது ஒரு மாணவனை நிறுத்தி 'நீ பள்ளி வாழ்க்கையை விரும்புகிறாயா' எனக் கேட்டுப்பாருங்கள்?! பதில் நெகடீவாகவே இருக்கும். காரணம் யார்? ஏசி அறையில் பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் பள்ளி முதலாளிகளும், இவர்களிடத்தில் கை நீட்டும் அரசியல்வாதிகளும்தான். போட்டி முறை மாறி, மதிப்பெண் முறை மாறி, கல்வியை புரிந்து, சந்தோஷமாக பயில்கிறவரை கொலைகள் தொடரும்.

இதில் பலர் சமூகத்தைக் காரணமாக்குவார்கள். சமூகம் எந்தவகையில் பொறுப்பாகும்? சமூகத்தைக் கேட்டா கல்வி முறை இருக்கிறது? சமூகத்தைக் கேட்டா கட்டணவிகிதம் நிர்ணயிக்கப்படுகிறது?சமூகத்தைக்கேட்டா 'கொலவெறி' பாடல் எழுதப்படுகிறது? சமூகத்தைக் கேட்டா சினிமாக்கள் எடுக்கப்படுகிறது? மேலே சொன்ன அத்தனையும் சமூகத்தின்மேல் திணிக்கப்படுகிறது. விரும்பாமலே. ஒரு முசுலீம் மாணவன் கிருத்துவப் பள்ளியில் கர்த்தரைக்குறித்த பாடலைப் பாடுவது போல, திணிக்கப்பட்டது. அத்தனையும் திணிக்கப்பட்டது. பஸ் டிக்கட் விலையேற்றத் திணிப்புக்கு நாம் ஒரே ஒரு வாரத்தில் முணுமுணுப்புகளுக்கிடையில் பழக்கிக்கொண்டோம். எதிர்த்துக் கேட்டோமா?

விலங்கினத்திற்கேயான 'சொரணை' மனித இனத்தில் மறுகிகொண்டே வருகிறது. புழுகூட குத்தினால் நெளியும். மனிதன்? வலியை சகித்து, தன் வாழ்க்கையை ஓட்டுகிறான்.அதை ஏற்காமல் சமுதாயம் விழித்துக்கொள்ளவேண்டும். என்று தனியார் கல்வி நிலையங்களின் சொக்காய்க் காலரைப் பிடித்து கேள்வி கேட்கப்படுகிறதோ, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் என்றைக்கு சமுதாயத்தினர் நம்மை செருப்பால் நையப்புடைப்பார்கள் என்று பயப்படுவார்களோ, அன்று இந்தக் கொலைகள் நிறுத்தப்படும்!
இந்தக் கொலையை, கொலை செய்த அந்த மாணவனின் கண்ணொட்டத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். ஒரு ஒன்பதாவது படிக்கும் மாணவன், ஆஃப்டர் ஆல், ஒரு கற்றுக்கொடுக்கும் டீச்சரை கொலை செய்துவிடுவானா? அவன் என்ன பைத்தியமா? அவனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது அவனுக்குத் தெரியாதா? அவனின் பெற்றோர்கள் மட்டும் அவனை ஒரு கொலைகாரனாக்கிப் பார்த்துவிடவேண்டுமென்றுதான் வளர்த்திருப்பார்களா? ஒரு இளம் கன்று கொலை செய்கிறதென்றால், அது கிறுக்குப்பிடிக்குமளவுக்கு மனரீதியில் பாதிப்படைந்திருக்கிறது என்று பொருள். இதே எண்ணத்தில் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கக்கூடும். யார் கண்டது? 


'கனவு காணுங்கள்' என்று ஒரு தனியார் பள்ளிக்கூடம் விடாமல், ஒவ்வொரு ஊராகச் சென்று, மாணவர்களின் மனதில் நச்சு தூபம் போட்டு, போட்டி பொறாமை மனப்பான்மைகளை பிஞ்சு மனங்களில் வளர்த்துவிடும் கலாமின் பேச்சும்கூட ஒரு வகையில் பள்ளி மாணவனை கொலைகாரனாக்கிய காரணமாக இருக்கலாம்!!


மீடியாக்களை நம்பாதீர்கள். மூன்று நாளைக்கு அவர்களுக்கு அடித்த காப்பி மொத்தமும் விற்பனையாகிவிடவேண்டும் எனும் எண்ணத்திலும், தொலைக்காட்சிகள் விளம்பர நோக்குகிற்காக வாய்க்கு வந்ததை எடுத்து விடுவார்கள்!!!

மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை, தனியார் கைகளில் சிக்குண்ட கல்விக்கூடம், பள்ளி முதலாளிகள் / அரசியலாளர்கள் தங்கள் சுயலாப நோக்குக்காக ஏற்படுத்தும் போட்டி வெறி, பொதுவில் அமைந்து விட்ட சுயனலமிக்க போட்டிகள், பொறாமைகள், கனவு காணுங்கள் எனும் கலாமின் தூபம்... இவை யாவுமே இந்தக் கொலைக்கான காரணங்கள்.

கல்வி முறை மாற்றப்படவேண்டுமென்றால், அரசியலமைப்பையே 
மாற்ற வேண்டும்!
8.2.12

எனது முகநூலிலிருந்து...

https://www.facebook.com/puthiyapaamaran

# என்னைக்கு சிட்டில இருக்குற எல்லா ரோடும் வழவழன்னு, பளபளன்னு கண்ணாடி மாதிரி மின்னுதோ, அன்னைக்கு எடுக்கிறேண்டா என் ஆடிய. அதுவரைக்கும் அந்த AUDI ஷோ ரூம்லயே இருக்கட்டும். இப்போதைக்கு எனக்கு மா நகர பஸ். அதுவும் ஒயிட் போர்டு ஒன்லி!!


# தானே புயல் நிவாரணம் குடுத்து முடிச்சபிறகு, கடலூர் மாவட்டத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி வட்டம், மாவட்டம், சதுரம், முக்கோணமெல்லாம் 'ஸ்கார்பியோ' வாங்கிடும்!# காதுகுத்து, பூப்புனித நீராட்டு, கல்யாணம் போன்ற விழாக்களை தடபுடலாக போஸ்டர் ஒட்டி, பேனர் கட்டி, ஐயர் வைத்து நடத்த முடியவில்லையே என ஏங்கித் தவிக்கும் புரட்சிகர 'தோயர்களே', பூப்புனித நீராட்டு விழா அப்படீன்ற டைட்டிலுக்கு முன்னால 'புரட்சிகரமான' அப்படீன்னு போட்டுட்டா ஈசியா தப்பிச்சிக்கலாம். அதே மாதிரிதான் 'புரட்சிகர' காதுகுத்து விழா, 'புரட்சிகர' தாலி கட்டும் கல்யாணம். கவனமா இருந்தாத்தான் நம்ம மேல யாரும் காறித் துப்பமாட்டாங்க. எல்லா வளங்களும் பெற்று வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். வர்ட்டா தோயர்!!# சட்ட சபையில் பிட்டு படம் :

யோவ் 'பிங்க்' ஜட்டி புகழ் முத்தாலிக்.... ராம் சேனா கொரங்குங்களை வச்சிக்கிட்டு புடுங்கறியா? சட்டசபையில ஆபாசப்படம் பார்த்தவனை இன்னா பண்ணப்போற? கொய்யால, பொம்பளைங்களை அடிக்கிறதுக்கு மட்டும் அடியாளோட போற? இப்ப காட்றா பாக்கலாம் உன் வீரத்தை... இப்ப காட்டு.


# யுவராஜ் சிங்கின் "ரிப்போர்ட்டை' ஆய்வு செய்த டில்லியை சேர்ந்த டாக்டர் பவன்தீப் கோஹ்லி, உடனடியாக அமெரிக்கா புறப்படும்படி யுவராஜை வலியுறுத்தினார். "அங்கு தான் மிகச்சிறந்த சிகிச்சை கிடைக்கும்; தாமதிக்காமல் புறப்படுங்கள்,' என, இரு கைகளையும் கூப்பி கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

கூடங்குளம் டு அமெரிக்கா எவ்வளவு செலவாகும்?


# வேஷ்டியை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு, சேஃப்டி பெல்ட் மாதிரி பூணூலை காட்டிக்கொண்டு, தலை வெட்டிய பிள்ளையார் மாதிரி தொப்பையும் தொந்தியுமாக, சற்றும் கூச்ச நாச்சமின்றி மவுண்ட் ரோடு மக்கள் நெரிசலில்கூட வண்டியில் பறப்பவர்கள் எல்லோருமே ஏன் டிவிஸ் ஃபிஃப்டி, டிவிஸ் ஸ்கூட்டி, டிவிஸ் ஸ்டார், டிவிஸ் சுசுகி என்று டிவிஎஸ் டிரேட் மார்க்கின்மீது தங்களது பிட்டத்தை வைத்துச் செல்கிறார்கள்?

இதைத்தான் இனப் பற்று என்பதோ?!


# அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்.

முக நூலில் வைரஸ்!


# "இன்னாத்த படிச்சி புடுங்கறானுங்க... ஒரு கொறைஞ்சபட்சம் அறிவு வாணாம்? அம்பது காசு, ஒர்ரூவா, அஞ்சி ரூவா அல்லாம் ஒரேமாரி கீது. வைய்சான கெய்விங்க, கண்ணு மண்ணு தெரியாதவங்க எல்லாம் எப்பிடி கண்டுபுடிக்கிறது?!" - பெருமாள் கோவில் வாசலில் பூ விற்கும் கிழவி.


# பிரதமராவது ராகுலின் நோக்கமல்ல: பிரசார பிரியங்கா பேச்சு.

அந்த எழவு போஸ்ட்டுக்குத்தான் மண்ணாங்கட்டி இருக்குதுல்ல. உங்க நோக்கம் சுவிஸ் லாக்கர் பிதுங்கி வழியணும். அவ்வளவுதான்!


# பாட்டியை நம்பினீர்கள்; தந்தையை நம்பினீர்கள்;
இப்போது என்னை நம்புங்கள் : ராகுல்காந்தி பேச்சு.

உங்க அம்மாவை நம்பினோம். உங்க அக்காவையும் நம்புறோம். நீ போடபோற குட்டிகளையும் நம்புவோம். நடத்து நடத்து. நாங்க உங்களுக்கு நாட்டையே எழுதிக்கொடுத்து நூறாண்டுக்குமேல ஆகிபோச்சு!!


# 2016-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி: டாக்டர் ராமதாஸ் பேட்டி.

கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, அப்படி ஒரு நிகழ்வு நடந்துடுச்சின்னா, 2016ல தமிழக மக்கள் யாருமே சுய நினைவுல இல்லைன்னு, நீங்க எல்லாருக்கும் 'டாக்டர் சர்டிபிகேட்' கொடுக்கவேண்டி இருக்கும்!!


# திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் பேட்டி :

"திருப்பதி கோவிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட்-டிசர்ட் அணிந்து வருகிறார்கள். இதேபோல் சில இளம் பெண்கள் துப்பட்டா இல்லாமல் சுடிதார் அணிந்து வருகிறார்கள். பெண்கள் கண்டிப்பாக புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்துதான் கோவிலுக்கு வரவேண்டும். ஆண்கள் லுங்கி அணிந்து கோவிலுக்கு வரக்கூடாது. வேட்டி-சட்டை, அல்லது பேண்ட்-சட்டை அணிந்து தான் தரிசனத்திற்கு வரவேண்டும்."

ஆனா, தீட்சதருங்க மட்டும் லங்கோடு துணியோட பப்பரப்பான்னு காட்டலாமா? மொதல்ல அவங்க ஒடம்பை கோணியப்போட்டு மூடச்சொல்லுங்க!!
(பெண்களின் ஆடை விஷயத்தில் நொட்டை சொல்பவர்கள், அதே பெண்களின் முன்னால் தொப்பையும் தொந்தியுமாக இருப்பது நன்றாகவா இருக்கும்? அதான் கோனி போட்டு மூடச் சொன்னேன். பெண்களுக்கு புத்தி சொல்லும் புள்ளையாண்டான்கள், குறைந்த பட்ச நாகரிகத்தையாவது கடைபிடிக்கலாமே?!)


# விஜயகாந்துக்கு அரசியல் பக்குவம் இல்லை : திருமாவளவன்.

இவரோட அரசியல் பக்குவம்தான் ஊரறிந்த ரகசியமாச்சே!!


# நீ இன்னாதான் அப்பா டக்கரா இருந்தாலும், அரசியல்னு வந்துட்டாக்கா சமபந்தி விருந்துல உன் பக்கத்துல ஒரு பாட்டிய உக்கார வச்சிடுவாங்க. சமயத்துல பாட்டிக்கு ஊட்டியும் விடணும். இதுதான் எழுதாத சட்டம். இதுக்கு இஷ்டம்னா அரசியலுக்கு வா!!


முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டிஅரசு ஆஸ்பத்திரிகளில் மரக்கன்றுகள்: டாக்டர்கள் முடிவு.

மரக் கன்றுகள் 'பச்சைக் கலரில்' இருக்கணும். பார்த்துக்குங்க!!


# பொதுவாழ்வில் நேர்மையை உறுதி செய்ய நீண்ட நாளாகும்: பிரதமர்.

அப்போ, எப்பத்தான் 'சரண்டர்' ஆகப்போறீங்க?


# வாஷிங்டன்: தங்களை மேம்படுத்தவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

ஆசிய நாடுகள்ளகூட இந்தியா கொஞ்சம் ஸ்பெஷல்னு வச்சிக்க ஒபாமா. உங்க காலை நக்கறதுக்காகவே நாங்க எங்க ஜனாதிபதி, நிதியமைச்சர்களை தேர்தெடுத்திருக்கோம். எப்படியாவது நாங்க வல்லரசாகிடணும். தயவு பண்ணுங்க!!

2.2.12

பத்து மாசம்


ஐயாவும் பத்து மாசம்
அம்மாவும் பத்து மாசம்.
பழம் தின்னுக் கொட்டை போட்ட
பழைய ஆளும் பத்து மாசம்.
காங்கிரசும் பத்து மாசம்
கம்யூனிஸ்ட்டும் பத்து மாசம்
பாரதீய ஜனதா கூட
பழுதில்லாம பத்து மாசம்.
நேத்து மொளைச்சி கிளைவிட்ட
லெட்டர் பேடும் பத்து மாசம்.
சட்டசபை கால்பதிச்சா
அத்தனையும் பத்து மாசம்.
அட, கேடுகெட்ட ஜனங்க மட்டும்
எட்டுமாசப் பிரசவமா?

ஏறிப்போன பால் வெலைக்கு
எகிறிக் குதிச்சிக் கேக்குறாங்க
நாக்கை ரெண்டா கடிக்கிறாங்க
நாயிபோலக் கொலைக்கிறாங்க.
கரண்ட்டு குடுக்கும் மந்திரிய
கத்திக் குதறிக் கேக்குறாங்க.
வெலவாசி எகிறிப்போனா
மைக்க முறிச்சிக் கேக்குறாங்க.
கேக்குறாங்க கேக்குறாங்க
கேட்டுக்கிட்டே இருக்காங்க.
பத்து மாசப் பிறவிங்க
பதவிப் பித்து மேதைங்க
அஞ்சு அஞ்சு ஆண்டுகளா
ஆண்டு ஆண்டு அனுபவிச்ச
அசராத அற்புதங்க
அல்லும் பகலும் அலுக்காம
பல்லுமேல நாக்கப்போட்டு
மாய்ஞ்சு மாய்ஞ்சு கேக்கறாங்க
மல்லுக்கட்டி நிக்கறாங்க.

அறுவது வருஷமாச்சி.
ஆனது ஒண்ணுமில்ல.
ஓட்டுப்போட்ட விரல் தேஞ்சும்
ஒண்டிக் குந்த குடிசையில்ல.
குடிக்கக்கூடக் கஞ்சியில்ல
கோமணக் கந்தையில்ல.
முப்பாத்தாறு ரூபாய்ல
மென்னு முழுங்கி தின்னாக்கா
சத்துபத்தாக் குறையாலே
சவலைப் பிள்ளைதான் பிறக்கும்.

குத்துக் கல்லாட்டம்
குழந்தை பிறக்கவேணுமின்னா
சத்தான உணவு வேணும்
சம்பாதிக்க வேலை வேணும்.
அத்தனையும் வேணுமின்னா
அதுக்கு புதுப்பாதை வேணும்.
பத்து மாச மசிரானுங்க
புடுங்கிக் கிழிச்சது போதும்.
மிச்ச வாழ்க்கை வேணுமின்னா
அவங்க வாழ்க்கை நமக்கு வேணும்.

நம்மோட தேவையெல்லாம்
நாமதானே கேக்கவேணும்?
திருடியதை திருப்பிக்கேட்டு
தரும அடி கொடுக்கவேணும்.
உரிமை கேட்டு உதைச்சாக்கா
அவங்க சவலைபிள்ளை
உரிமை மொத்தம் கிடைச்சாக்கா
நமக்குக் கவலையில்லை.

கையை நீட்டிப்பேசுவோம்
நாக்கை மடக்கிக் காட்டுவோம்
மைக்கை உடைத்து மோதுவோம்
மிருகங்களை வீழ்த்துவோம்
மனிதன் என்று காட்டுவோம்.
சவலைகள் இங்கே இல்லையென்று
சாவுச் சங்கு ஊதுவோம்!