My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

2.2.12

பத்து மாசம்


ஐயாவும் பத்து மாசம்
அம்மாவும் பத்து மாசம்.
பழம் தின்னுக் கொட்டை போட்ட
பழைய ஆளும் பத்து மாசம்.
காங்கிரசும் பத்து மாசம்
கம்யூனிஸ்ட்டும் பத்து மாசம்
பாரதீய ஜனதா கூட
பழுதில்லாம பத்து மாசம்.
நேத்து மொளைச்சி கிளைவிட்ட
லெட்டர் பேடும் பத்து மாசம்.
சட்டசபை கால்பதிச்சா
அத்தனையும் பத்து மாசம்.
அட, கேடுகெட்ட ஜனங்க மட்டும்
எட்டுமாசப் பிரசவமா?

ஏறிப்போன பால் வெலைக்கு
எகிறிக் குதிச்சிக் கேக்குறாங்க
நாக்கை ரெண்டா கடிக்கிறாங்க
நாயிபோலக் கொலைக்கிறாங்க.
கரண்ட்டு குடுக்கும் மந்திரிய
கத்திக் குதறிக் கேக்குறாங்க.
வெலவாசி எகிறிப்போனா
மைக்க முறிச்சிக் கேக்குறாங்க.
கேக்குறாங்க கேக்குறாங்க
கேட்டுக்கிட்டே இருக்காங்க.
பத்து மாசப் பிறவிங்க
பதவிப் பித்து மேதைங்க
அஞ்சு அஞ்சு ஆண்டுகளா
ஆண்டு ஆண்டு அனுபவிச்ச
அசராத அற்புதங்க
அல்லும் பகலும் அலுக்காம
பல்லுமேல நாக்கப்போட்டு
மாய்ஞ்சு மாய்ஞ்சு கேக்கறாங்க
மல்லுக்கட்டி நிக்கறாங்க.

அறுவது வருஷமாச்சி.
ஆனது ஒண்ணுமில்ல.
ஓட்டுப்போட்ட விரல் தேஞ்சும்
ஒண்டிக் குந்த குடிசையில்ல.
குடிக்கக்கூடக் கஞ்சியில்ல
கோமணக் கந்தையில்ல.
முப்பாத்தாறு ரூபாய்ல
மென்னு முழுங்கி தின்னாக்கா
சத்துபத்தாக் குறையாலே
சவலைப் பிள்ளைதான் பிறக்கும்.

குத்துக் கல்லாட்டம்
குழந்தை பிறக்கவேணுமின்னா
சத்தான உணவு வேணும்
சம்பாதிக்க வேலை வேணும்.
அத்தனையும் வேணுமின்னா
அதுக்கு புதுப்பாதை வேணும்.
பத்து மாச மசிரானுங்க
புடுங்கிக் கிழிச்சது போதும்.
மிச்ச வாழ்க்கை வேணுமின்னா
அவங்க வாழ்க்கை நமக்கு வேணும்.

நம்மோட தேவையெல்லாம்
நாமதானே கேக்கவேணும்?
திருடியதை திருப்பிக்கேட்டு
தரும அடி கொடுக்கவேணும்.
உரிமை கேட்டு உதைச்சாக்கா
அவங்க சவலைபிள்ளை
உரிமை மொத்தம் கிடைச்சாக்கா
நமக்குக் கவலையில்லை.

கையை நீட்டிப்பேசுவோம்
நாக்கை மடக்கிக் காட்டுவோம்
மைக்கை உடைத்து மோதுவோம்
மிருகங்களை வீழ்த்துவோம்
மனிதன் என்று காட்டுவோம்.
சவலைகள் இங்கே இல்லையென்று
சாவுச் சங்கு ஊதுவோம்!

No comments:

Post a Comment