My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

25.2.13

எர்வாமாடின் விக்கிறதுக்காவது சரிப்படுவாரா... எனது முகநூலிலிருந்து... 31

'பையனுக்கு பிஸ்கோத்து குடுத்திருக்கானுங்க; குடிக்க தண்ணி குடுத்திருக்கானுங்க; போர்த்திக்க லுங்கிகூட குடுத்திருக்கானுங்க; வலிக்கக்கூடாதுன்னு கிட்டத்திலேர்ந்து சுட்டிருக்கானுங்க. அவனுங்களுக்கு ரொம்பவும் இளகிய மனசு' - நாராயணசாமி அறிக்கை வந்தாலும் வரலாம்.

000

ராகுல் பிரதமரா? கிளார்க்கு வேலைக்கு கூட லாயக்கு இல்லலாத ஆளு - ஜெத்மலானி. 

சரி. எர்வாமாடின் விக்கிறதுக்காவது அந்தாளு சரிப்படுவாரா பார்த்து சொல்லுங்க..

000

நேற்று, 
சொந்த நாட்டில், போபால் படுகொலைக் காட்சிகளைப் பார்த்து கண் கலங்காத காங்கிரஸ் கயவர்கள், 
இன்று, 
அயல் நாட்டில் நடந்த ஈழப்படுகொலையைப் பார்த்தா கண்ணீர் விடப்போகிறார்கள்? 
நாளை, நமக்கு கூடங்குளத்தில் சங்கு ஊதும் காட்சிகள் கூட இந்தக் காங்கிரசுக்காரர்களின் கல்மனதை இளக்கப்போவதில்லை. 
சாவு வீட்டில் சென்று டான்ஸ் ஆடுகிறவனுக்கு துக்கம் என்றால் என்னவென்று தெரியப்போகிறது?!

000

உலகின் அடுத்த மூலையில் இருக்கும் அமெரிக்காவுக்காக கவலைப்பட்டு, ஆப்கானிஸ்தானை வம்புக்கு இழுத்து, ஒரு 'கற்பனைக் கதை' பின்னி வெளியிட்ட ஒலகமகா நடிகன், பாலச்சந்திரன் பிரபாகரனின் படங்களைப் பார்த்து, மனமிறங்கி, கற்பனை கலக்காத, பக்கத்து நாட்டில் நடந்து முடிந்த ஒரு உண்மைக் கதையை படமாக எடுத்து இந்தியாவில் வெளியிட தைரியம் இருக்கிறதா?

000

ஜெ.வுடன் சாலையில் பேசியதை வைத்து கூட்டணி என்று சொல்லக் கூடாது - வைகோ

வைகோ போயஸ் கார்டன் கேட்டை கெட்டியமா புடிச்சிக்கிட்டு, தேவுடு காத்து பேசின பொறவுதான் அதை கூட்டணின்னு சொல்லணும்.

000

அம்மா பிறந்தநாள் காவடி, பால்குடம். ஆம்புலன்ஸுக்கு வழி கிடைக்காததால் வேறு வழியில் திருப்பிவிட்ட புதுக்கோட்டை போலீசார்.

அம்மாவோட பாவக்கணக்குல இன்னொண்ணு. தொண்டர்கள் பிறந்த நாள் பரிசு. இத்தகைய தொண்டர்களுக்கு எமலோகத்தில் கொத்திக்கிற எண்ணைக் கொப்பரை ஒண்ணே ஒண்ணு போதுமான்னு தெரியலை.

000

பேச்சுக்கு கைதட்டாததால் ஆவேசம்! விவசாயிகளை கடுமையான வார்த்தைகளால் அறிவில்லாதவர்கள், உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று திட்டிய வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம்.

'இது ஒண்ணும் ஜால்ராக்கள் நிறைந்த சட்டசபை இல்லை' என்று சொல்லி, விவசாயிகள் அமைச்சர் மூஞ்சியில் கரியைப் பூசியிருக்கணும். கைதட்டலை கேட்டு வாங்குவாராம். கேவலமான புத்தி!

000

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.–சி20 இன்று விண்ணில் பாய்கிறது! ஜனாதிபதி வருகை! 

ராக்கெட்டை எதுக்கு விடுறாங்க? மேல போனப்புறம் புளியோதரை பொட்டலம் போடுறதுக்கான்னு கேக்கறான். டேய், ரெண்டுத்தையும் மூடிக்கிட்டு மாடு மேய்க்கிற வேலையப் பாருடான்னா கேக்கமாட்டேங்கறான்.

000

அம்மா, 
உங்க கட்சிக்காரனுங்க உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன் பேர்வழி அப்படீன்னுட்டு, பேனர்ல உங்கள 'வஞ்சப் புகழ்ச்சி அணியில' கிண்டலடிச்சி எழுதி இருக்காங்க. 

கொஞ்சம் சேம்பிள் பாருங்க அம்மா : 

"தலைக் காவிரியையே தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்ட அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லை..."

உங்களைக் கிண்டலடித்து பேனர் வைத்த ஆசாமிகளை கையும் களவுமாகப் பிடித்து அவர்கள் மீது தக்க ஆக்சன் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

000

"பத்து டியூ கட்ட முடியாம பெண்டிங்குல இருக்கு சார். பேங்கு நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்புது. இனிஷியல் அமௌண்ட்டைக் கட்ட பொண்டாட்டி தாலியை சேட்டு கடைல அடகு வெச்சேன். இன்னைய தேதி வரைக்கும் மீட்க முடியலை. டிராவல்ஸ் காரை வச்சி மேய்க்கிறதுக்கு, நாலு எரும மாட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டு, ஊர்லயே செட்டில் ஆகியிருக்கலாம்." - ஒரு கார் 'ஓனர்' பொறுமுகிறார். 

ஆனா, காருக்கு சுத்த தமிழ்ப் பேரு 'மகிழுந்து.' 

மகிழுந்து ஓனர் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்காரு பார்த்தீங்களா?

தமிழ் 'அறிஞர்கள்' சும்மணாங்காட்டியும் திண்ணையில குந்தியிருக்கலாம். இப்படியெல்லாம் வாய்க்கு வந்தாப்ல பேர் வைக்கப்படாது...!

000

அன்று ராஜாஜி சொன்ன குலத் தொழில் தொனியில்தான் இன்று சுப்பிரமணி (சுவாமி என்று இனிமேல் விளிக்கக்கூடாது) பிரபாகரனின் மகனையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்திருக்கிறார். சு.சாமியின் குலத் தொழில் வேதம் ஓதி துட்டு வாங்குவது என்றால் அதையே ஏன் அவர் தொடராமல் வேறு ஏதேதோ அசிங்கமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்? சொந்த குலத்துக்கே துரோகம் செய்யும் துரோகி.

000

பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒரு சில நிமிடங்களிலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இலங்கை அரசின் இனப்படுகொலை! இந்தியா இன்னும் மௌனம் காப்பது ஏன்?: தொல்.திருமாவளவன் கண்டனம்.

ரொம்பக் பொங்காத ராசா. ரத்தக் கொதிப்பு ஒடம்புக்கு ஆகாது. உனக்கு ராஜபக்சேவோட கை குலுக்கிட்டு, ஒரு டீ குடிக்கணும். அம்புட்டுதானே? மத்திய அரசு கொஞ்ச நாள் கழிச்சி சாவகாசமா ஒரு பிளைட்டு அனுப்பும். அப்போ போனாப் போதும். அதுவரைக்கும் கியூவுல நில்லு!

000

பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் - முதல்வர் ஜெயலலிதா.

இது......., இந்த வார்த்தைக்குத்தான் பேனர் புகழ் சீமான் இத்தனை மணித் துளிகளாக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அடுத்த சைதாப்பேட்டை மீட்டிங்குல 'ஈழத்தை வென்றெடுத்த இனமானத் தாய்' எனும் பட்டத்தை செல்வப் பெருந்தகை சீமான் வழங்குவார்!

000

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி - கலைஞர் கீச்சு. 

ஆமாம். இனிமே, காவிரி டெல்டாவில் கேழ்வரகு விளைவதற்குப் பதிலாக நெய்யாகவே வடிந்துவிடும். தஞ்சை விவசாய்கள் அனைவரும் ஆழாக்கை எடுத்துக்கொண்டு வரிசையில் நிற்கவேண்டியதுதான் பாக்கி. (தல, பொன்னர் சங்கர் ரெண்டாம் பாகத்தை எப்ப எழுதுவீங்க?)

000

"பாவம். நடையா நடந்து வர்றீங்களே? ஒரு 'இன்னோவா' வேணும்னா அனுப்பிவிடவா? வைய்சான காலத்துல மூட்டு இன்னாத்துக்கு ஆகும்?"

"இன்னோவா வாங்கறதுக்கு நான் ஒண்ணும் நாஞ்சில் இல்லை."

"சரி. ஃபார்ச்சூனர் அனுப்பவா?"

"ம்.... வேணாம்."

"அட, ரோசத்தைப் பார்றா! சரி. பார்த்து நடந்து போங்க. இந்த டிஎம்கே காரவுங்க வண்டிய வேகமா ஓட்றானுங்களாம். தவளக்கா மாதிரி நசுக்கிடுவானுங்க."

"......"

"என்ன, மௌனமா இருக்கீங்க? சரி, வைகோ. வரட்டா?!"

"அம்மா... கார் அது இது எல்லாம் வேணாம். கவுரதையா ரெண்டு எம்பீ சீட்டு... கொடுக்க முடியும்னா, நாம பேரம் பேசலாம்."

"யோசனை பண்றேன். ஆனா ரெண்டு சீட்டு கேக்கறீங்களே... உங்க தகுதிக்கு கொஞ்சம் ஜாஸ்திதான். பாக்கலாம்!"


000

இலங்கைப் படையின் மறுப்பிலும், ஜெவின் ஒரு சட்டசபைக் கண்டனத்திலும், கருணாநிதியின் சுயநல ஐநா சபை மனுவிலும், சீமானின் தெருவுக்குத் தெருவான பேனர்களுக்குள்ளும், புதிய தலைமுறையில் சூடான விவாதங்களிலும், தினமலரின் கொச்சைப்படுத்தலிலும், காங்கிரஸ் குண்டர்களின் மன மகிழ்விலும், கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணம் சடுதியில் புதைக்கப்பட்டு விடும்!

000

இந்தக் கருணை மனு காத்திருப்புக்கூட ஒரு விதத்தில் 'கரகரவென்று' கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் தண்டனைதான். கருணை கிடைக்குமா கிடைக்காதா என்று ஒருவனை நித்தம் நித்தம் சித்திரவதை செய்து சாகடிக்கிறது. தூக்குத் தண்டனையை விட, மிக மிகக் கொடுமையானது கருணை மனுதான். முதலில் இதை ஒழித்துக்கட்ட வேண்டும்!

000

உங்க பேரு என்னன்னு கேக்கறவுங்களுக்கு நாராயணசாமின்னு பதில் சொன்னா, 'ஓ, அவரா நீ' அப்படீன்னு ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க. - நாராயணசாமி எனும் பெயர் கொண்ட நண்பர் ஒருவரின் புலம்பல்.

000

வேளாண் துறையில் தமிழகத்துக்கு முதலிட விருது!

சரியான தேர்வு. அப்படியே, காவிரி நீர் பாய்ந்த இடத்தையெல்லாம் பாளம் பாளமாக வெடிக்க வைத்த கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும், நீதி மன்றங்களுக்கும் தலா ஒரு பித்தளை கோப்பையாவது கொடுத்து கவுரவப்படுத்தி இருக்கலாம்


000


22.2.13

இது செம ஹாட்டு மச்சி!!!

நம்ம ஊரு ரேடியோ ஜாக்கிகள் போடும் மொக்கைகள் படு கேவலமாக இருக்கும். மத்தியான சாப்பாட்டுக்கு சாம்பார் நல்லதா அல்லது காரைக்குழம்பு நல்லதா... உடனே போன் எடுங்கள் எங்களுக்கு சொல்லுங்கள். உங்களுக்கு வத்திபொட்டி ஒன்று பரிசாகக் காத்திருக்கிறது... இத்தகைய ரேஞ்சில் ஜாக்கிகளின் அரட்டை தினந்தோறும் தொடர்கிறது. விலையுயர்ந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் போட்டு சாணி மிதித்து வரட்டி தட்டுகிறார்கள் இந்த கேடுகெட்ட மடையர்கள். நீங்க நான் ராஜா சார் எனும் ரேடியோ மிர்ச்சி புரோக்கிராமில் செந்தில் என்பவர் ஒரு இரண்டு வரியில் சொல்லக்கூட ஒரு நிகழ்வை இரண்டு மணி நேரத்துக்கு இழுத்துச் சொல்வார். அவர் பாணியில் ஒரு உதாரணம் இங்கே...

ராஜா சார் கைக்கொழந்தையா இருந்தப்போ, ஒரு நா 'கபுக்குன்னு' திரும்பிப் படுத்தாராம். அப்போ, பக்கத்தில் இருந்த ஆர்மோனியத்துல அவர் கை பட்டு ஒரு அருமையான இசை வந்துச்சாம். சுத்தி இருந்தவங்க எல்லாம் ஆச்சரியத்தோட பார்த்தாங்களாம். எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. நமக்கு ஒரு இசை ராசா கெடைச்சிட்டாரு; இந்த உலகத்துக்கு ஒரு இசை ராசா கெடைச்சிட்டாரு அப்படீன்னு. அப்ப என்னடான்னு பார்த்தா, படபடன்னு ஒரு சத்தம் வந்துச்சாம். என்னது? படபடன்னு சத்தம். அது என்ன படபடன்னு சத்தம். அதை என்னவென்று அறிந்துகொள்ள என்னோடு இணைந்திருங்கள்.

நீங்க, நான், ராஜா சார். நான் உங்கள் செந்தில். இணைந்திருங்கள் என்னோடு. இடை வேளைக்கு அப்புறம் நான் நிறைய ராஜாசாரைப் பத்தி சொல்றேன். இது செம ஹாட்டு மச்சி!

(இடைவேளை...)

அப்போ, சுத்தி இருந்தவங்க எல்லாம் ஆச்சரியத்தோட பார்த்தபோது, படபடன்னு ஒரு சத்தம் வந்ததுன்னு சொன்னேன் இல்லையா? உங்களுக்கு கேக்க ரொம்ப ஆவலா இருக்குமே? அதே ஆவலோடதான், சுத்தி இருந்தவுங்களுக்கும் இருந்துச்சி. அது என்ன படபட சத்தம்...? யாருக்கும் ஒண்ணும் புரியலை. ஹி, ஹி, சுத்தும் முத்தும் பாக்கிறாங்க... ஆனா, அந்த சத்தம் எப்படி வந்துச்சி, எங்கிருந்து வந்துச்சி, எதனால வந்துச்சி, எதற்காக வந்துச்சி அப்படீன்னு அவங்களுக்கு பூரியவே இல்லை. எல்லாரும் ஆச்சரியத்துல அப்படியே உறைஞ்சிபோயி இருந்தாங்க. எப்படி அந்த சந்தம்? எங்கிருந்து? இடைவேளைக்கு அப்புறம் வந்து சொல்றேன். இணைந்திருங்க.

நீங்க, நான், ராஜா சார். நான் உங்கள் செந்தில். இணைந்திருங்கள் என்னோடு. இடை வேளைக்கு அப்புறம் நான் நிறைய ராஜாசாரைப் பத்தி சொல்றேன். இது செம ஹாட்டு மச்சி!

(இடைவேளை...)

வணக்கம். நாந்தான் உங்க செந்தில். என்ன, கதை சுவாரஸ்யமா போய்ட்டே இருக்கில்ல? பாருங்க. ராஜா சார் வாழ்கையில என்னவெல்லாம் நடந்திருக்குன்னு. ம். நான் எங்க விட்டேன்? ஆமா. இப்போ ஞாபகம் வந்திடுச்சி. படபடன்னு ஒரு சத்தம் வந்ததுன்னு சொன்னேன் இல்லையா, எல்லோரும் ஆச்சரியத்தில அதிர்ந்து போய் கிடந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா? இப்போ அதைப் பத்தி சொல்றேன். அது என்னன்னு தெரிஞ்சிக்க என்னோடு இணைஞ்சிருங்க. நான் உங்க செந்தில்.

நீங்க, நான், ராஜா சார். நான் உங்கள் செந்தில். இணைந்திருங்கள் என்னோடு. இடை வேளைக்கு அப்புறம் நான் நிறைய ராஜாசாரைப் பத்தி சொல்றேன். இது செம ஹாட்டு மச்சி!

(இடைவேளை...)

தோ, வந்துட்டேன். நான் உங்க செந்தில். நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது, ஹி, ஹி, உங்களுக்கே தெரியுமே? கதை சுவாரஸ்யமா போய்கிட்டு இஉர்க்குல்லே? சரி. அந்த ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான, ஒரு திருப்பம் நிறைந்த அந்த சம்பவத்தை உங்களுக்கு இப்போ சொல்றேன். படபடன்னு ஒரு சத்தம் வந்துச்சின்னு சொன்னேன் இல்லையா? எல்லோரும் ஆச்சரியத்துல கிடந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா? அது இதுதான். கைக்குழந்தை ராஜாசார் கை ஆர்மோனியத்துல பட்டு ஒரு இசைத்துளி எழுந்தவுடனே, ஏதோ ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குயில், அந்த இசையைக் கேட்டு ரசித்து, படபடவென்று தன் இறக்கைகளை அடித்துக்கொண்டே பறந்துவந்து, அவர் வீட்டுக்குள் நுழைந்து, ஒரு சிறு ரோஜாப்பூவை அவர் கையில் வைத்துவிட்டு, கூக்கூ கூக்கூ என்று கத்தியதாம். எப்படி? கூக்கூ... கூக்க்கூ...

இப்படி பல சுவாரஸ்யமான ராஜாசார் கதைகளை உங்களுக்கு தினந்தோறும் வந்து சொல்கிறேன். என்னோடு இணைந்திருங்கள். நான் உங்க செந்தில். நீங்க இதுவரை கேட்டது நீங்க, நான், ராஜா சார். இது செம ஹாட்டு மச்சி!!!

14.2.13

'வெறி' புடிச்ச வேலன்டைன்ஸ்' டே....


நாங்கள் உடனடியாக முத்தமிட்டுகொள்ள வேண்டும்; 
அல்லது...

தடாலடியாக, சற்றே அத்து மீற வேண்டும். இன்றைய கண நேரத்துக்கு எங்களின் உணர்ச்சிகளை நாங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். 

உங்களால் ஒரு தியேட்டரில் 'கார்னர்' சீட்டு ரிசர்வ் செய்து கொடுக்க முடிந்தால், நீங்கள்தான் எங்கள் உன்னதக் காதலின் தூதுவர். ஒரு பார்க்கில், அல்லது, கடலோரத்த்து படகோரத்தில் நாங்கள் மெய்ம்மறந்து கிடக்கையில், நீங்கள் ஒரு பாதுகாவலராக இருந்தால், நீங்கள்தான் காதலின் அதி முக்கியமான ஏஞ்சல். 

கல்யாணமோ, கருமாந்திரமோ, இப்போதைய உணர்ச்சிகரமான நேரம் அதி முக்கியம். நீங்கள்..., எனக்கு, இன்று உதவினால், நாளை நீங்கள் காதலிக்கும்போது நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

'வெறி வெறி' ஹேப்பி வேலன்டைன்ஸ்' டே...! 

(தியேட்டர் லைட்டை எப்ப சார் ஆஃப் பண்ணுவீங்க ?!)

13.2.13

வினோதினி...

(ஒரு சாதிச்சங்க / கட்சித் தலைவரின் கூற்றைப்போல இங்கே எழுதப் பட்டுள்ளது. உதாரணமாக, நாயக்கன் கொட்டாயில் சாதிக்கலவரத்தைத் தூண்டிய தலைவர்களும், அத்தகையோருக்கு அடிபணிந்துபோன பாதிக்கப்பட்ட சாதித் தலைவர்களும் கூட்டகச் சேர்ந்து இங்கே எடுத்துச் சொல்வதுபோல, அவர்களின் பார்வையில் பொருத்திப் படிக்கவும்.)


வினோதினி...
அவள் முகத்தில்
வீசப்பட்ட அமிலத்தில்
நம் சாதிக்காரனின்
வாசனை வீசினால்
விட்டுவிடு.
தப்பு இல்லை!

கீழ்ச் சாதிக்கார
கழிசடையாயிருந்தால்
சுட்டுவிடு.
குற்றமில்லை!

வினோதினி...
மேல்சாதிக்காரனுக்கு
மகளாய் இருந்தால்
கொட்டாய்களை
கொளுத்திவிடு.
அச்சமில்லை!

வினோதினி...
கீழ்ச் சாதிக்காரரின்
மகள்தான் என்றால்,
ஜீன்ஸ் பேண்ட்டு
ஜாக்கி ஜட்டியை
பல்சர் பைக்கு
இவைகளைப் பார்த்து
மதி மயங்கிய
ஓடுகாலி என்று
ஒற்றை வரியில்
குற்றம் சாட்டு.
பாவமில்லை!

நம் ஜாதிக்காரன்
தோட்டத்தில் பூத்த
ரோஜாவை மட்டும்
வாங்கிக்கொண்டு
உனக்கான
காதலிகளைத் தேடி
காமத்தோடு
தெருத் தெருவாய்
அலை.
தவறு இல்லை!

கண்ணில் பட்ட
எந்தப் பெண்ணும்
உன்னைக்
காதலிக்க
மறுத்தாளென்றால்
இரக்கப்பட்டு
விட்டுவிடாதே.
இப்போது,
நீ ஒரு ஆண்மகன்
என்பதை
இங்கே நிரூபி.
உன் வீரத்தை
இந்த உலகுக்கு
எடுத்துக் காட்டும்
தருணமிது.

ஒரு ஆணின் காதலை
மறுக்கும் பெண்;
அடங்காப் பிடாரி.
இருப்பதை விட
அணு அணுவாய்
அனுபவித்து
செத்து மடியட்டும்.
கவலை இல்லை!

அவளின்
சாதி மதம்...
பார்க்காதே.
குலம் கோத்திரம்...
பார்க்காதே.
எடு.
அந்தப் பெண்ணின்
முதுகுக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு
அமிலத்தை எடுத்து
அவள் முகத்தில்
பாய்ச்சு.
கோபம் வந்தால்
கொடுமை செய்.
பாவமில்லை!

மிச்சம்
மீதத்தை
மேல்சாதி...
கீழ்ச்சாதி என்று
எல்லாமாக
சங்கமித்த
சாதிக்காரத் தலைவர்கள்
நாங்கள் பார்த்துகொள்கிறோம்.
வெட்டிக் கொள்வதும்
விட்டுக்கொடுப்பதும்
எங்களின் கடமை.
எங்களின் கண்ணியம்.
எங்களின் கட்டுப்பாடு.
இதில்தான்
எங்கள்
பிழைப்பு.
கொன்றால் பாவம்...
தின்றால் போச்சு!

ஆளும் கட்சியா,
எதிர்க்கட்சியா,
பாராளுமன்றமா,
போலீசா, செய்தி ஊடகங்களா?
அத்தனையும்
எங்கள்
சட்டைப் பையில்.
நீ பயப்படாதே.
நீ இங்கே
ஒரு
ஆண்மகன் என்பதை
நிரூபி.
நீ இங்கே
ஒரு
சாதிக்காரன் என்பதை
நிரூபி.

டேய், டேய்
தம்பீ...
ஆண்பிள்ளை
சிங்கமே...
குலக் கொழுந்தே...
போகும்போது
அந்த
அமிலக் குப்பியை
எடுத்துச் செல்ல
மறக்காதே!

10.2.13

சிறந்த சண்டைக் காட்சியமைப்பு - விஸ்வரூபத்துக்கு ஆஸ்கர்... எனது முகநூலிலிருந்து... 30

பாமக ஆட்சி பீடத்தில் அமரும்போது மூன்று மட்டுமே இலவசமாக வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ்.

கோடாலி, வத்திப்பொட்டி, கெரசின் கேன்.

000

திரும்பத் திரும்ப ராஜ பக்சே திருப்பதி வருவதற்கு வசதியாகவே
ஆந்திராவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே தற்செயலாக
அமைந்துவிட்டதோ திருப்பதி?
என்னே ஏடுகுண்டலவாடாவின் மகிமை?

திருப்பதி மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால்.... ('இருந்திருந்தால்' என்பதை மூணு தடவை எகோ வாய்சில் படிக்கவும்) மீசை முறுக்கி தொல்லும், சிங்கமும் அல்லாத புலியும் அல்லாத சீமானும், டெசோ ஜோடுதலைகளும் ராஜபக்சேவின் கோவணத்தை அவிழ்த்து, கசக்கி காயப்போட்டு, அயர்ன் பண்ணி, திரும்பவும் அதே இடத்தில் மாட்டி விட்டு ஏர்போர்ட் வரை சென்று வழி அனுப்பி வைத்திருப்பார்கள் என்று சொல்லவந்தேன்!

000

'நாங்களும் உன்னைப்போலத்தான். சேம் பிஞ்ச்,' என ராஜபக்சே வருகையின்போது, தனது விசுவாசத்தைக் காட்டிக்கொள்ளவே குருவை தூக்கில் போட்டிருப்பார்களோ?

000

சரியான தீர்ப்புகளை மதிப்பிடக்கூடியவை, வரலாறும் அறிவியலும் மட்டுமே! ஒரு மனிதனின் சிந்தனை இவை இரண்டையும் சார்ந்திருந்தால் மட்டுமே, அவனால் சரியான தீர்ப்பை அளிக்க முடியும்.

000

உலகம் உருண்டை என்று தன் நெஞ்சுக் குழிக்குள்ளேயே 'முழுங்கிவிட்டிருந்தால்' ஒரு வன்மையான விஷக் கொலை ஏற்பட்டிருக்காது!!! 

உண்மையாயிருந்தும் மௌனமாயிருந்தால்.... அதுவும் பொய்மைதான்.

000

வேலன்ஸ்டைன்ஸ் டே!!! 

அடடே.., தாராளமா கொண்டாடுங்க. கட்டி அணையுங்க. முத்தமிடுங்க. உருளுங்க. பெரளுங்க. ஆனா, அய்யாகிட்ட 'நோ அப்ஜெக்ஷன்' சர்டிபிகேட் வாங்கி பாக்கிட்ல வச்சிக்கிட்டீங்களானு ஒரு முறைக்கு ஓராயிரம் முறை செக் பண்ணிடுங்க! இல்லைன்னா, அனஸ்தீசியா இல்லாம ஆப்பரேஷன் தான்!

000

என் அறிவுக்கு எட்டியவரை, முத்துக்குமார் படத்தை பேனரில் போட்டுத்தான் நாம் தமிழர் கட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வதாக, (அவர்களின் பேனரைப் பார்க்கும்போதெல்லாம்) ஒரு நினைப்பு வந்து தொலைக்கிறது. தப்பா ரைட்டானு தெரியலை!

000

ஜெயலலிதாவை சந்திக்க விரும்புகிறேன், நேரம் கேட்டுள்ளேன்: கமல்.

ஜெயலலிதாவை...!! இங்கன பாருய்யா கமலு. இப்படி மொக்கையா கேக்கப்பிடாது. அப்பாயிண்ட்மெண்டு வேணுமுன்னா ஜெவுக்கு முன்னாடி சிலபல அடைமொழிகளை சேத்து மருவாதையா சொல்லோணும். இல்லேன்னு வச்சிக்கோ, அம்புட்டுத்தேன்!

000

சட்டசபையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை...

சரி, வுடு! 
ராயப்பன் சார் மிந்தானாத்தே அதிமுக கணக்குல அக்கவுண்ட்டு ஆரம்பிச்சிட்டாருன்னு வச்சிக்க. இப்ப இன்னா செய்வீங்க?!

000

சண்டைக் காட்சிகளின் தத்ரூபமான 'அமைப்புகளுக்காக', வெள்ளை மாளிகையே விருப்பப்பட்டு, விஸ்வரூபத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புக்கள் அதிகம். மேலிடத்து விவகாரம். ஆனால், இன்னுமொரு 'தமியனுக்கு' ஆஸ்கார் நிச்சயம். 

தமிழன் வெல்க!

000

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது! விஜயகாந்த் கண்டனம்!

பரால்ல... உன்னால முடியலைன்னா விட்டுடு நைனா! 
தோ...., இந்தா அந்தான்னு குஷ்பூ அக்கா செருப்படி வாங்கி, வளர்ந்து வந்துட்டே இருக்காங்க. அடுத்த எலக்சன் முடிஞ்சிதுன்னா டெபினிட்டா அவங்கதான் எதிர்க் கச்சி!

000

'இங்கு குஷ்பு இட்லி கிடைக்கும்' என்று போர்டு போட்ட ஓட்டல்கள் அடித்து உடைக்கப்படும் வாய்ப்பு இருக்குமோ?!

000

தனிக் கட்சிதான் பெஸ்ட் மேடம். நாளைக்கே துவங்கிட்டீங்கன்னா, வரும் எலக்ஷன்ல எதிர்கட்சி அளவுக்கு வர வாய்ப்பு உண்டு. ஒரே நாள்ள ஒருகோடி மெம்பர்கள் உங்கள் கட்சிக்கு வந்துவிட ரெடியாய் இருப்பார்கள். அதே திருச்சியிலயே மானாடு போட்டுறலாம். 

சரி. இப்ப கண்ணைத் தொடைச்சிக்கோங்க. ம். எங்கே சிரிங்க? தட்ஸ் குட்!

000

விஸ்வரூபத்தை எதிர்க்கும் மதத் தலைவர்கள், குஷ்பூவின் விண்டோ ஜாக்கெட்டை துணி போட்டு மூடச்சொல்லி இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. ரசிக்கிறார்களோ?

000

இந்த உலகத்தை விட்டு, சொர்க்கத்துக்குப் போக விரும்புவர்கள் விரைந்துபோகக் கடவது. அவர்களைத் தடுப்பார் யாருமில்லை. எல்லாம் வல்ல இறைவா, உன்னால் முடியாது என்பதால், நாங்களே இந்த நரகத்தை சொக்கமாக்கிக் கொண்டுவிடுவோம்.

000

விஸ்வரூபம், படம் எப்படி எடுக்ககூடாது என்பதற்கு ஒரு உதாரணம் - 'சொம்பு' சரத்குமார். 

இவர் வேட்டி கட்டுவது, வெறும் விளம்பரப் படத்தில் மட்டும்தான் என்பது இன்றைய தேதிக்கு உலகமே அறிந்துகொண்டுவிட்டது!! பரம சிவன், கழுத்து, பாம்பு... அடத்த் தூ...

000

கடந்து வந்த நம் பாதைகளில், கடந்துபோன சில 'வாத்தியார்களை' நம்மால் மறக்க இயலவில்லை! எனக்கு அந்தோணி சார் என்று ஒரு அறிவியல் வாத்தியார். அவர் இருக்கும் திசைக்குத் திரும்பி, இன்றும்கூட "வணக்கம் சார்," என்று சொல்லத் தோன்றுகிறது. அறிவியலை என் பாக்கெட்டுக்குள் ரூபா நோட்டை செருகுவதுபோல கற்பித்தவர். 

அந்தோணி சார்...

000

தமிழ்ப் படவுலகை ரட்சிக்க வந்த கர்த்தருக்கு (கர்த்தரோட சொந்த வாக்குமூலம்தான்!) வந்த சோதனை. 

கர்த்தரே... கர்த்தரே... எங்கள எங்க நீ கூட்டிப் போற?!

000

"அடியே..., அடியே..., என்ன எங்க நீ கூட்டிப்போற...?" 
பாட்டைக் கேட்டீங்களாண்ணே?
ப்ளடி..., குரலை ஏத்தி இறக்கி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து... 
சுடுகாட்டுக்கு, அரிச்சந்திரனுக்கு முன்னால, பிணத்துக்கு வழி விடக்கேட்டு, ஒத்தைப் பறை இசையில் பாடுவதுபோலிருக்கு. 
அடங்க... இதையும் காப்பியடிச்சிட்டீங்களாடா?!

3.2.13

கமலுக்கு பணம்! வடிவேலுவுக்கு மானம்!!



"ரெம்ப ரெம்ப சாரி; அம்மா நாமம் வாழ்க!," அப்படீன்னு ஒரேயொரு வார்த்தையை சொல்லிட்டு, வடிவேலு திரும்பவும் திரை உலகத்துக்கு உள்ளே நுழைந்துவிட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனா, நிமிஷத்துக்கு பத்தாயிரம் குபேரனைப் பார்த்த, வடிவேலு இந்தக் காரியத்தைச் செய்ய விரும்பவே இல்லை.

நேற்றுவரை ஹைகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு என்று ஹைஜம்ப், லோ ஜம்ப், டிஸ்கஸ் துரோ, கபடி, கராத்தே, மல்யுத்தம் எல்லாத்தையும் செய்து (பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்) விளாசிக்கொண்டிருந்த உலக நாயகன், அந்தர் பல்டி ஸ்டண்ட் அடித்து, 'அம்மா சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்,' என்று பணிந்து போனதன் மர்மம் என்ன?

கமலுக்கு தேவை பணம்!
வடிவேலுவுக்கு மானம்!!

கமல் கோய்ச்சிக்கிட்டு எங்க போனாலும் சாப்பாடு போடுவாங்களாம். ஏன்..., இதே வார்த்தையை 
வடிவேலு சொன்னாக்கா, அவருக்கு சாப்பாடு போட மாட்டாங்களா? வடிவேலையும் மானமுள்ள தமிழ் மக்கள் கோடானுகோடி பேர், அவரை கைப்புள்ளையாய் வளர்த்து பராமரிக்க  இருக்கமாட்டர்களா என்ன?! 

கூட்டிக் கழிச்சி, கணக்குப் பார்த்தா, மார்க்கெட்டு போன கமல்ஹாசனைவிட, வடிவேலுவுக்குத்தான் ரசிகர்கள் மிக மிக அதிகம்!

கமலுக்கு இந்தியாவில் இடமில்லைன்னா, அமெரிக்காவுக்கு தாவிடுவாராம். அது சரி. உங்களுக்கு அமெரிக்கா விசா ஒண்ணரை நிமிஷத்திலே வாங்கிக் கொடுக்க ஆள் இருக்கு. ஆனா, வடிவேலு அமெரிக்காவுக்கு ஆசைப்பட்டா, விசா கிடைக்குமா? விசா கிடைக்கிறதெல்லாம் 'ஸ்கின் டோனை' வெச்சுத்தானே? வடிவேலு தோலுக்கு, அமெரிக்கா இல்லை; 
ப்கானிஸ்தான் போகக்கூட விசா கிடைக்காது!