My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

8.1.12

மருத்துவமனையில் ஜனநாயகம்



இந்திய ஜனாதிபதிகள் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் நம்பிக்கையற்று, வெளி நாட்டு சுற்றுப்பயணம் என்கிற போர்வையில் வைத்தியம் பார்க்க ஓடுகிறார்கள். தமிழக முதல்வர்களிலிருந்து அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லியிலிருக்கும் மத்திய அமைச்சரவைக் குழுக்களும், ஒரு சிறு தும்மலுக்குக்கூட உயர்தர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா இந்திய மருத்துவத்திலேயே நம்பிக்கையில்லாமல் அமெரிக்கா சென்று வைத்தியம் பார்க்கிறார். ஒரே உதையில் நானூறு பேரை கொன்றுபோடும் சூ.ஸ்டார் சிங்கப்பூருக்கு வைத்தியம் பார்க்க ஓடுகிறார். ஆனால், 'எனது இந்தியா, இந்தியா ஒரு வல்லரசு, ஜனகன மண, ஜன நாயகம்' எனும் வெற்றுக்கோஷங்களுக்கு மட்டும் இங்கே குறை கிடையாது!

வெறும் போஸ்ட் மார்ட்டம் செய்யும் அலுவலகமாக மட்டுமே அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன. இதற்கு ஆளும் வர்க்கத்தின் அலட்சியப்போக்குதானே காரணம்?

தனியார் மருத்துவமனைகளில்தான் கவனிப்பு சரியாக இருக்கும் எனும் தொனி சாதாரண, பாமர மக்களிடையே உருவாக்கப்பட்டுவிட்டது. இந்தக் குழப்பங்களிடையே நடந்ததுதான் தூத்துக்குடி வீச்சறிவாள் சண்டை. மருத்துவரின் கொலை நியாயமென்பதும், அனியாமென்பதும் விவ்வதகளமாகிவிட்டது.

இத்தகைய விவாதங்களை உடனடியாக நிறுத்திவிட்டு, நாம் உடனடியாகச் செய்யவேண்டிய தீர்வென்ன?

மத்திய அரசாங்கத்தையும், அரசாங்கத்தைத் தலைமை ஏற்று நடத்தும் மாநில முதல்வர்களை முதலில் கண்டிக்கவேண்டும். ஏனெனில் அவர்களின் பூரண மேர்பார்வையிலும் ஒப்புதலிலும்தானே அரசு மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன? அதை மேம்படுத்தத் தவறிய அவர்களை கண்டனத்துக்குள்ளாக்கவேண்டும். மேலும் ஜனாதிபதிகள், மத்திய முதல்வர், அமைச்சர்கள், மானில முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என, அரசை நிர்வகிக்கும் யாவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பதை நாம்தான் கட்டாயமாக்கவேண்டு. இத்தகையோர் அரசு மருத்துவமனைகளைத் தவிர்த்து, தனியார் மருத்துவ மனைகளுச் சென்றால், அந்த மருத்துவமனைகளின் முன்னால் ஆர்பாட்டம் நடத்தவேண்டும். அங்கிருந்து அவர்கள் வி
ட்டியடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகள் தரத்தை உயர்த்திட இவ்வாறான போராட்ட முறைகள் உடனடித் தேவையாக இருக்கிறது.

4 comments:

ராஜா MVS said...

நல்லா எழுதியிருக்கிங்க... தோழரே...

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களே தனியார் மருத்துவமனைகளையே நாடுகிறார்கள், அதைவிட கொடுமை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றால் தன் கௌரவ குரைச்சல் என்று நினைபவர்களும் உள்ளார்கள், நோயில் கூட ஸ்டேடஸ் பார்க்கும் நிலை வந்துவிட்டது...

இந்த நிலையில் மாநில முதல்வர்களையும், நாட்டின் தலைவர்களையும் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்லவைப்பது கடிணமே...

தாங்கள் கூறுவது போல் நடக்குமா என்றால்? 99.9%??? நடக்காது என்றுதான் தோன்றுகிறது... தோழரே...
நடந்தால் நிலை கண்டிப்பாக மாறும் என்பது நிச்சயம்...

அரசு மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் யாரென்று பார்த்தால் தினக்கூலியில் உள்ளவர்களும், ஏழைபாலை மக்களும் தான்.

அரசு மருத்துவமனை தவிர்பவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்கள் சொல்வார்கள். அதை பற்றி பேசினால் நிறைய பேசலாம்... தோழரே...

பதவியில் இருப்பவர்கள் மட்டுமல்ல அரசு வேலையில் இருப்பவர்களே தன் பிள்ளையின் படிப்புக்கு அரசு பள்ளியை நாடாதவர்கள், எப்படி சிகிச்சைக்கு மட்டும் அரசு மருத்துவமனைக்கு வருவார்கள்...
கேட்டால் ஜனநாயகம், சமத்துவம் என்பார்கள் பேச்சில் மட்டும்...

Rathnavel Natarajan said...

நிஜம் தான்.

Sankar Gurusamy said...

நல்ல சிந்தனை. நடத்துவார்களா?? சந்தேகம்தான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Anonymous said...

THE JUST RIGHT ARTICLE.

Post a Comment