My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

2.10.12

காந்தி அல்வா

'நான் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்...' அப்படீங்கற வடிவேலு காமெடிக் காட்சிக்கும், காந்தியின் இந்த ஆட்டுப்பால் தம்பட்டத்துக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. நாளெல்லாம் உழைத்தும் ஒரு சாண் வயிற்றுக்கு கேழ்வரகுக் கஞ்சி கிடைக்காத அந்தக்
 காலகட்டத்தில் வேர்கடலையை உண்ணச் சொல்வது, 'ரொட்டி கிடைக்கவில்லையென்றால் கேக் சாப்பிடுங்கள்' என்று ஒரு ஐரோப்பிய ராஜா சொன்னதை விடக் கேவலமானது. கொடுமையானது! அதைவிடக் கேவலம், 'நான் ஆட்டுப்பால் குடிக்கிறேனாக்கும்' என்று அமெரிக்கா வரையிலும் ஆட்டை கயிறு கட்டி இழுத்துக்கொண்டு போனது. 





காந்தி இந்தியாவில் வாழ்ந்த காலம் ஒரு இருண்ட காலம்!!





000








வேர்க்கடலையை வறுத்து, 'Flakes' போல தட்டையாக்கி, அதை ஸ்கிம்டு ஆட்டுப் பாலில் ஊறவைத்து, அப்படியே ரிசைக்கிள் (இயற்கையையும் பாதுகாப்போம்) செய்யப்பட்ட டெட்ரா பேக்கில் நம்ம காந்தியவாதிகளுக்காக ஸ்பெஷலாக கெல்லாக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி...

அதை மெக்-டொனால்டும், மேரி ப்ரவுனும், பிஸ்ஸா கார்னரும் விற்பனை செய்தால், துடித்துக்கொண்டிருக்கும் காந்தியின் ஆன்மா சாந்தி அடையலாம்!





000





நோட்டு வெள்ளையா இருக்கும்போது சிரித்துக்கொண்டிருக்கும் காந்தி, அதையே கருப்பாக்கி சுவிஸ் லாக்கரில் வைக்கும்போது 'ஆட்டோமாட்டிக்காக' அவர் முகத்தில் கரியை பூசினது போல மாறிவிடும் மையைக் கண்டுபிடித்து, அச்சடித்து...

கேம்பிரிட்ஜ்வாலா, இதையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. நாடு வல்லரசாகணுஞ்சாமி!





000

1 comment:

மலரின் நினைவுகள் said...

இந்த போட்டோ எல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்குது??

Post a Comment