'மதத் துவேஷம் ஏதுமில்லை; விஸ்வரூபத்தை வெளியிடலாம்' என ஒருவேளை நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பொது மக்களாகிய நாம், தயாரிப்பாளர் கமல்ஹாசனையும், மதவாதத் தலைவர்களையும், அவர்களின் கட்சி அமைப்புகளையும் சந்தேகப்பட வேண்டும். இந்தக் கிசுகிசு எங்கேயிருந்து ஆரம்பமானது என்பதும் கண்டுபிடிக்கப்படவேண்டும். பப்ளிசிட்டிக்காக இது கமல்ஹாசனால் பரப்பட்டிருந்தாலோ, அல்லது மத வாதிகள் தங்கள் சுய லாபத்துக்காக பரப்பியிருந்தாலோ, பொதுமகக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
000
காதல் கீதல்னு ஏதாச்சும் காட்சி இருந்து தொலைச்சா கமல்ஜீக்கு இன்னும் சோதனைதான். தடை வாங்கற பழக்கமெல்லாம் காடுவெட்டிக்கு கிடையாது. அப்படியே ஸ்ட்ரெயிட்டா கொளுத்துறதுதான்!!
000
சப்போஸ், கடல் படத்த்தில் மீனவர்களைக் கொச்சைப்படுத்துவதுபோல் காட்டப்பட்டிருந்தால்?
மீனவர் அமைப்பு கேஸ் போட்டு, தடை வாங்கி... இதெல்லாம் நடக்கிற காரியமா?
அல்லது மீனவர்களுக்கு மீன் சோறு போட்டு படத்தைக் காட்டுவார்களா? கோர்ட்டுதான் மனுவை ஏத்துக்குமா?
கோழி கூவியா பொழுது விடியப்போகுது?
இந்த தம்பட்டம் அடிக்கிற வேலையெல்லாம் மேல்தட்டுக்கள், மெத்தப் படித்தவர்கள், மதவாதிகள், அகிம்சாவாதிகள் செய்கிற பொழுதுபோக்கு வேலை!
000
"இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணி ஹலால் முறையில் தயார் செய்யப்பட்டது" என்று நம் கலையுலக துரக பதாதி, படத்தைத் தடை செய்ய போராட்டம் விடுப்பவர்களை தாஜா செய்யலாம். நோ பிராப்ளமோ. ஆழ்வார்பேட்டைக்கு தெரியாத சினிமாடிக்-அல்ஜீப்ராவா?!! சொல்வார். காத்திருங்கள்.
000
முகம்மது பின் துக்ளக் படம் ரிலீஸ் ஆனப்போ எந்தப் பிரச்சினையும் வரலை. ரோஜா படத்துக்கும் பிரச்சினை வரலை. அதனால, ஆழ்வார்ப்பேட்டையாரை 'அந்த மாதிரி போக்குல' படம் எடுத்து பணம் பண்ணச் சொன்னது சோவோட ஐடியாவாக்கூட இருக்கலாம். ரெண்டுபேருமே சினிமாக்காரவளாச்சேன்னு சொன்னேன். வேறெதுவும் உள் நோக்கம் இல்லை.
000
படம் நல்லபடியா ரிலீஸ் ஆகணும்னா, இஸ்லாமியர்களுக்கு மட்டும் வரிவிலக்கு குடுக்கறதுக்கு சட்டத்துல ஓட்டை ஏதும் இருக்கானு ஒரு எட்டு பார்த்துடுங்க கமல் சார்!
000
இதுகாரும் நான் எடுத்த சாதி அடிப்படையிலான தேவர் மகன், சண்டியர் போன்ற படங்கள் யார் சாதியையும் புண்படுத்துவதற்காக அல்ல என்றும், இவைகள் வெறும் கல்லா கட்டும் நோக்கத்துடனே எடுக்கப்பட்ட படங்கள் என்றும், விஸ்வரூபம் படமும் அத்தகைய அடிப்படையிலான பிரும்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்றும், எந்த மதத்தையும் புண்படுத்த அல்ல என்றும் உறுதி கூறுகிறேன். இந்த கல்லா கட்டும் எனது தீவிர முயற்சியில் தாங்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை நல்கி, சாதி மத இன பேதமற்று, அனைத்து உலகளாவிய ரசிகர்கள் திரும்பத் திரும்ப இந்தத் திரைக் காவியத்தைப் பார்த்து என் கல்லாப் பொட்டி பொங்கி வழிந்திட பேராதரவு தருமாறு...
(யோவ் வக்கீலு, மானே தேனே மக்களே தமிழரே இந்தியரே அப்படீன்னு சேர்த்து எழுதிக்க.... அப்படியே கடேசியா ஜெய் ஹிந்த் போட்டுடு.)
000
90 வயசு குடுகுடு கிழம்கூட விஸ்வரூபம் வந்தால் பார்த்தே தீரணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு பக்காவான பப்ளிசிட்டி. பத்து கோடியை விளம்பரத்துக்கு செலவழித்திருந்தாலும் இவ்வளவு 'ரீச்' ஆகியிருக்காது. படம் தயாரித்தது ஒண்ணும் உப்புமா கம்பேனி இல்லை; ராஜ்கமல் பிக்சர்ஸ். கத்துக்கோங்க. சும்மா இருக்கிற மக்களை சீண்டிவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்தால்... அதுதான் பக்காவான பப்ளிசிட்டி.
000
தான் ஒரு முசுலீம் நண்பன் என்று சொல்லிக்கொண்டே, சினிமாவில் முசுலீம் சகோதரர்களைப் பார்த்துப் பார்த்துப் பந்தாடி தீவிரவாத முத்திரை குத்தி துவைத்து எடுத்த விஜயகாந்தின் படங்கள் வந்தபோது இந்த 'பி.ஜெ' பிறந்திருக்கவில்லை போலும். இல்லையென்றால் இன்று கமல்ஹாசனையும் மனுஷ்யப் புத்திரனையும் மிகக் கேவலமான வார்த்தைகளால் விளாசும் இவர் விஜயகாந்தின் ரவுடித்தனமான படங்கள் வந்தபோது சும்மா இருந்திருப்பாரா? அல்லது, கமலும் மனுஷ்யபுத்திரனும் தன்னைத் திரும்ப அதே தாகாத வார்த்தைகளால் பதில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியமாக இருந்திருக்கலாமோ? அல்லது, விஜயகாந்தை அப்படிக் கேவலமாக திட்டினால், அவரும் அதே பாணியில் வார்த்தைக்கு வார்த்தை விளாசிவிடுவார் என்கிற பயமாகவும் இருந்திருக்கலாம்!
000
இனிமே இந்தப் பம்மாத்து வேலையெல்லாம் ஆகாது. ஒன்று பஜகோவிந்தம், அல்லா புராணம், எமைக் காக்கும் ஏசுவே... என்கிற ரீதியில் மட்டும் படம் எடுங்கள். அல்லது, மக்கள் அன்றாடம் சந்திக்கும் விலைவாசி, ஊழல், கேவலமான அரசியல் போன்ற பிரச்சினையை முன் வைத்து படம் எடுங்கள். முதல் வகைப் படத்துக்கு மதவாதிகள் மட்டும் வந்து முன்று நாள் ஓட வைப்பார்கள். இரண்டாவது வகைப் படத்துக்கு முழுமையான மக்கள் ஆதரவுடன் முன்னூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஏ சினிமாக் கூத்தாடிகளே, இதோ இன்றைக்கு மதவாதிகள் உங்களுக்கு கற்றுக்கொடுத்த மிகச் சிறந்த பாடம் இதுதான்!
நன்றி, மதவாதிகளே!! உங்களையே அறியாமல் 'சேம் சைட் கோல்' போட்டு சினிமாக்காரர்களை திருத்த உதவிய நீங்கள் சந்தேகமின்றி சொர்க்கம் போவீர்கள்.

4 comments:
"
நன்றி, மதவாதிகளே!! உங்களையே அறியாமல் 'சேம் சைட் கோல்' போட்டு சினிமாக்காரர்களை திருத்த உதவிய நீங்கள் சந்தேகமின்றி சொர்க்கம் போவீர்கள். "
அருமை....
பாலா வின் பரதேசி படத்திற்கு பிச்சைகாரர்கள் எதிர்ப்பு என செய்தி வரும் போல ...
இன்று
விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு
"தடை வாங்கற பழக்கமெல்லாம் காடுவெட்டிக்கு"
Excellent...:-)))))))))
Post a Comment