My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

11.8.13

மிஸ்டர். கோய்பீ நாத்...!!

"எனக்கு அது கிடைக்குமா?" ஏக்கத்தோடு கேள்வி கேட்கும் நித்தியாவின் குரல். ஒரு முகம் சுளிக்க வைக்கும் பக்கா லோக்கல் அட்வர்டைஸ்மெண்ட்.
பூச்சி மருந்து செண்ட்டு அடித்தாலே காம உணர்வோடு கும்பலாகக் குவிந்துவிடும் பெண்கள்... இண்டர்னேஷனல் டிரேட் மார்க் 'ஆக்ஸ்' அட்வடைஸ்மெண்ட். 

அப்புறம் இந்தியாவையே வரி ஏய்ப்புச் செய்து கொள்ளையடிக்கும் இந்துஸ்தான் ஊனிலீவர். 

அதையும் தாண்டி, தாவாங்கட்டையைத் தடவும் ஜில்லெட் பெண்கள்...

ங்கொய்யால..., 

இத்தனைக்கும் நடுவில் பெண்ணடிமைத் தனத்தைப்பற்றி விஜய் டிவியில் சுடச்சுட சூடான விவாதம் நடாத்திக்கொண்டிருப்பார் மிஸ்டர். கோய்பீ நாத்.



பல குடும்பத்தின் படுக்கையறை ரகசியங்களையும், பிரச்சினைகளையும், புரிதலற்ற வாழ்கை முறைகளையும் அல்லது காதலையும், முற்போக்கு சிந்தனைகளையும், லஞ்ச லாவண்யங்களையும்... சிம்பிளாகச் சொல்லப்போனால், இந்தப் பூவுலகில் நிகழ்ந்திடும் பல்வேறு கடவுளாலேயே தீர்க்க முடியாத அனைத்து பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாகக் குதறிவிடும் கோபீ நாத்!! 

பார்வையாளர்களின் அறியாமையும், கண்ணீரும், கவலையும், கையறு நிலையும்தான் இந்தக் கோபீ நாத் & கோ கும்பல் கயவர்களின் முதலீடு.

அவர் செய்வது நல்ல விஷயம்தானே எனச் சொல்லும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேயொரு கேள்வி :

கோபீ நாத்தின் ஒரேயொரு 'மாமியார் வைஸ் மருமகள்' விவாதத்தில், அவரின் மனைவியோ மாமியாரோ கலந்துகொள்ள வைக்க அவரால் முடியுமா? முடியாது. ஏனென்றால் அவரே அவரது சொந்தப் பிரச்சினையை நடுத் தெருவுக்கு கொண்டுவர விரும்ப மாட்டார்.

அதையும் மீறி, அதிகப் பிரசங்கித் தனமாக கோபீ அவரின் மனைவியையும் மாமியாரையும் வற்புறுத்தினால், நாலு பேர் பார்க்காமல், சொந்த வீட்டுக்குள்ளேயே அவருக்கு செருப்படி கண்டிப்பாகக் கிடைக்கும்!

நீயா நானா விவாதத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். வியாபார நோக்கோடு நடத்தப்படும் அந்த நிகழ்வில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடக்கவே கிடக்காது.

உலகின் மிகச்சிறந்த 'பேக்கு' எனும் பேரெடுத்துகொள்வதைத் தவிற, இந்த விவாத்தில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முனைவது மிகவும் வெட்கக்கேடாது.

இதற்குப் பதிலாக, ஏதாவது பவர் ஸ்டார் படத்தைப் பார்த்தாலாவது, ஏதாவது பிரச்சினைக்குத் தீர்வு காண சுளுவான வழி கிடைக்கலாம்.

முயன்று பாருங்கள்.

4 comments:

Anonymous said...

மிகவும் சரியே. முதுகு எலும்பில்லாத பிம்பிலிகளால் நடத்தப்படும் கேடு கெட்ட நிகழ்ச்சி. பல விவாதங்களில் ஆணித் தரமாக சொல்ல முனைய வேண்டியதைக் கூட மழுப்பி முன்றானைப் போர்த்துக் கொண்டனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். முதலாளித்துவ முக்கலில் இதுவும் ஒன்று.. சர்வ நாசம்.

Anonymous said...

100%

-Sundar

Swami said...

நீயா நானவை பற்றிய தெளிவான விமர்சனத்தை முதல் முறையாக இன்று தான் பார்க்கிறேன். சபாஷ் நண்பா. உண்மையை சொன்னதுக்கு. ஆனால் நம்ம மக்களுக்கு புரியணுமே.

Anonymous said...

Exactly!

Post a Comment