My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

29.3.11

இந்தியாவில் கிரிக்கெட் தடை செய்யப்பட வேண்டும்




கிராமத்திற்குச் சென்றிருந்தபோது சிறிது நேரம் கிரிக்கெட்டை பார்க்க நேர்ந்தது. அவர்கள் பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் ஃபீல்டிங்கிலும் காட்டிய வேகத்தைப் பார்த்தால் பிரமிப்பூட்டுவதாயிருந்தது. அவர்களுக்கு மட்டும் ஓரளவு பயிற்ச்சி கொடுத்துவிட்டால், நமது ஆஸ்தான இந்திய டீம் ஒருமுறை கூட அவர்களை ஜெயித்துவிட வாய்ப்பேயில்லை. இவர்கள் ஆடுவது தனது நாட்டுக்காகவவோ, தனது கிராமத்துக்காகவோ அல்ல. அந்த விளையாட்டில் அவர்கள் லயிக்கிறார்கள். அவ்வளவுதான்.
இரவெல்லம் போதையில் பெண்களுடன் கூடி கும்மளமிட்டுவிட்டு, பகலில் நாட்டுக்காக ஆடுகிறேன் என்று முட்டி செத்த முடங்களெல்லாம் நம் இந்திய டீமில் இருக்கின்றன. அல்லது கை நீட்டி காசு வாங்கிவிட்டு சும்மணாங்காட்டியும் ஆடுகிற கில்லாடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். யாரும் உண்மையில் நாட்டுப்பற்றுடன் ஆடுவதில்லை. அரசியல்வாதிகளின் அல்லது ராஜபரம்பரை வாரிசுகளின் நிழல்கள்தாம் இன்றைய கிரிக்கெட் டீமில் இருக்கிறார்கள். யாரும் குக்கிராமங்களிலிருந்தோ, படிக்காத, உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடத் தெரிந்த இளைஞர்கள் இங்கு தேர்ந்தெடுக்கப்படுவதேயில்லை. எந்தத் தகுதியில் வீரர்களை கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கிறது என்பது புரியாத புதிர்.
இரண்டாவர்தாக பெப்சி – கோக்கு விளம்பரப் படங்களுக்கு தேவையான கவர்ச்சிகரமான முகவெட்டு இருக்கவேண்டும். நுனி நாக்கு ஆங்கிலம் வேண்டும். இவை யாவும் கிராமத்தானுக்கு பொருந்துவதில்லை.
மிக முக்கியமான தகுதி : ‘தேவடியாப்பையா’, ‘சொறி நாய்’ போன்ற அறுவருக்கத்தக்க காது கூசும் வார்த்தைகளை வெள்ளைக்காரன் நம் இந்தியாவிலிருந்து கொண்டே திட்டினாலும் அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடவேண்டும். சுரணையென்பதே கூடாது. ஒரு உதாரணத்துக்கு ஒரு தமிழகத்து கிராமத்து விளையாட்டு வீரர் இந்திய டீமில் இருந்து, இந்த வசவுகளைக் கேட்க நேர்ந்தால், வெள்ளைக்காரனின் தவடை கோணிக்கொண்டு போக நேரிடும்.
மொத்தத்தில் சூடு சுரணையற்ற விளையாட்டு. மற்ற விளையாட்டுக்களை குழிதோண்டிப் புதைக்கின்ற விளையாட்டு. தேசிய விளையாட்டாகிய ஹாக்கி வீரர்கள் தங்களது சம்பளத்தைக்கூட போராடி வாங்கவேண்டிய சூழ்னிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள். காரணம் கிரிக்கெட்டு.
உடனடியாக இந்தியாவில் தடை செய்ய்யப்படவேண்டிய விளையாட்டு இது…!

20.3.11

அனைத்தையும் பகுத்தறி!




வானென்றும் பார்;
வெகுண்ட வளியென்றும் பார்;
நன் நிலவென்றும் பார்;
நீள் நதியென்றும் பார்;
சேர் முகிலென்றும் பார்;
சின்னஞ் சிறு பறவையும் பார்;


அண்ட வெளியென்றும் பார்;
அகண்ட அகிலென்றும் பார்;
பூக்கும் புவியென்றும் பார்;
புத்தம் புதுவண்டம் பார்;
காக்கும் கானென்றும் பார்;
காட்டாற்று வெள்ளமும் பார்.


ஏதில்லையோ ஏய் மனிதா?
ஈதில் ஏதுங்குறை கண்டாய்?
யாதும் பொது; யாவர்க்கு மெப்போதும்;
எக்காலும் இவை நமக்கே!
தீதாகா இவை நமக்கு
தீர்ந்திதைப் பகுத்தால்.


ஆய்; அனைத்தும்;
ஆங்கொன்றையும் விடாமல்.
ஏவி மேய், எவ்வுலகும்.
அறிவினப்பாலுள்ளதை அறி.
அறிதலின் தெரிதலால்
அண்டம் விளக்கு.


இறை யாதென் றியம்பு.
இலையென்றாலும் விளி.
இயற்கையில் புரள்.
ஏதொன்றையும் பயில்.
தீதையும் நன்மையும்
தீர்த்துப் பகுத்துவிடு.
ஈவு இருப்பின் தயங்காது
இன்னு மறி; இன்னு மறி!


பசி ஏன்; பணம் ஏன்;
பாராளும் ஆதிக்க மேன்;
கூனும் பாமரம் ஏன்;
கூர்பார்க்கும் ஆயுதமேன்;
வானிலும் வாணிக மேன்;
வர்க்கம் பேதம் ஏன்;
மதம் ஏன்; மார்க்கம் ஏன்;
மனிதத்தில் மிருகமேன்...


ஏன், ஏன், ஏனென்று,
எப்பொழுதிலும் வினவு.
வினவெனும் ஆயுதத்தால்
விடுகதைகள் விடைபெறலாம்.
தொடர்கதைகள் தடைபடலாம்.
தோட்டாக்கள் புறமிடலாம்!


- புதிய பாமரன்...

19.3.11

இந்தியா என்பது எனது அமெரிக்க நாடு


                                                                        உறுதிமொழியாளரின் படம். நன்றி : வினவு.  

                                                    உறுதிமொழி :

இந்தியா என்பது எனது அமெரிக்க நாடு. இந்தியர் அனைவரும் அமெரிக்கர்களுக்காக உழைக்கும் உடன்பிறப்புக்கள்.
அந்த நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்திய நாட்டின் புதுப்பெருமைக்காகவும் முதலாளித்துவ மரபுச் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். அமெரிக்க நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றென்றும் பாடுபடுவேன்.
என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். இவர்கள் அனைவருக்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவை மதிப்பேன். அவரிடம் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.
அந்த நாட்டிற்காக என் மக்கள் உழைத்திட முனைந்து நிற்பேன். அமெரிக்கா நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.
***
சோனியா, பிரதமர் மன்மோகன் மற்றும் அவரது அமைச்சர்கள் ,மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வாய்த்த திறமைசாலி அடிமைகள் தினந்தோறும் எடுக்கும் உறுதிமொழி.
இதை ஒன்றும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு நம் மண்டைகளுக்கு ஏற வேண்டும் என்கிற அவசியமில்லை!