ஒரு ஏரியா சேல்ஸ் மேனேஜருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்குமோ, ஒரு தமிழக முதல்வருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்குமோ, ஒரு மல்டி மில்லியனர் பிசினஸ் மேனுக்கு எவ்வளவு டென்ஷன் இருக்குமோ, அதுக்குமேல டபுள் மடங்கு டென்ஷன் ஒவ்வொரு மாணவனுக்கும். போட்டி போட்டி அப்படீன்னு ஒரு கத்தியை அவன் மண்டையில செருகிட்ட பிறகு, அவன் ஒரு நடைப்பிணமாகிடறான். பள்ளியிலும், வீட்டிலும், சமுதாயத்திலும் நடைப்பிணம்தான். யாராவது ஒரு மாணவனை நிறுத்தி 'நீ பள்ளி வாழ்க்கையை விரும்புகிறாயா' எனக் கேட்டுப்பாருங்கள்?! பதில் நெகடீவாகவே இருக்கும். காரணம் யார்? ஏசி அறையில் பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் பள்ளி முதலாளிகளும், இவர்களிடத்தில் கை நீட்டும் அரசியல்வாதிகளும்தான். போட்டி முறை மாறி, மதிப்பெண் முறை மாறி, கல்வியை புரிந்து, சந்தோஷமாக பயில்கிறவரை கொலைகள் தொடரும்.
இதில் பலர் சமூகத்தைக் காரணமாக்குவார்கள். சமூகம் எந்தவகையில் பொறுப்பாகும்? சமூகத்தைக் கேட்டா கல்வி முறை இருக்கிறது? சமூகத்தைக் கேட்டா கட்டணவிகிதம் நிர்ணயிக்கப்படுகிறது?சமூகத்தைக்கேட்டா 'கொலவெறி' பாடல் எழுதப்படுகிறது? சமூகத்தைக் கேட்டா சினிமாக்கள் எடுக்கப்படுகிறது? மேலே சொன்ன அத்தனையும் சமூகத்தின்மேல் திணிக்கப்படுகிறது. விரும்பாமலே. ஒரு முசுலீம் மாணவன் கிருத்துவப் பள்ளியில் கர்த்தரைக்குறித்த பாடலைப் பாடுவது போல, திணிக்கப்பட்டது. அத்தனையும் திணிக்கப்பட்டது. பஸ் டிக்கட் விலையேற்றத் திணிப்புக்கு நாம் ஒரே ஒரு வாரத்தில் முணுமுணுப்புகளுக்கிடையில் பழக்கிக்கொண்டோம். எதிர்த்துக் கேட்டோமா?
விலங்கினத்திற்கேயான 'சொரணை' மனித இனத்தில் மறுகிகொண்டே வருகிறது. புழுகூட குத்தினால் நெளியும். மனிதன்? வலியை சகித்து, தன் வாழ்க்கையை ஓட்டுகிறான்.அதை ஏற்காமல் சமுதாயம் விழித்துக்கொள்ளவேண்டும். என்று தனியார் கல்வி நிலையங்களின் சொக்காய்க் காலரைப் பிடித்து கேள்வி கேட்கப்படுகிறதோ, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் என்றைக்கு சமுதாயத்தினர் நம்மை செருப்பால் நையப்புடைப்பார்கள் என்று பயப்படுவார்களோ, அன்று இந்தக் கொலைகள் நிறுத்தப்படும்!
இந்தக் கொலையை, கொலை செய்த அந்த மாணவனின் கண்ணொட்டத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். ஒரு ஒன்பதாவது படிக்கும் மாணவன், ஆஃப்டர் ஆல், ஒரு கற்றுக்கொடுக்கும் டீச்சரை கொலை செய்துவிடுவானா? அவன் என்ன பைத்தியமா? அவனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது அவனுக்குத் தெரியாதா? அவனின் பெற்றோர்கள் மட்டும் அவனை ஒரு கொலைகாரனாக்கிப் பார்த்துவிடவேண்டுமென்றுதான் வளர்த்திருப்பார்களா? ஒரு இளம் கன்று கொலை செய்கிறதென்றால், அது கிறுக்குப்பிடிக்குமளவுக்கு மனரீதியில் பாதிப்படைந்திருக்கிறது என்று பொருள். இதே எண்ணத்தில் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கக்கூடும். யார் கண்டது?
'கனவு காணுங்கள்' என்று ஒரு தனியார் பள்ளிக்கூடம் விடாமல், ஒவ்வொரு ஊராகச் சென்று, மாணவர்களின் மனதில் நச்சு தூபம் போட்டு, போட்டி பொறாமை மனப்பான்மைகளை பிஞ்சு மனங்களில் வளர்த்துவிடும் கலாமின் பேச்சும்கூட ஒரு வகையில் பள்ளி மாணவனை கொலைகாரனாக்கிய காரணமாக இருக்கலாம்!!
மீடியாக்களை நம்பாதீர்கள். மூன்று நாளைக்கு அவர்களுக்கு அடித்த காப்பி மொத்தமும் விற்பனையாகிவிடவேண்டும் எனும் எண்ணத்திலும், தொலைக்காட்சிகள் விளம்பர நோக்குகிற்காக வாய்க்கு வந்ததை எடுத்து விடுவார்கள்!!!
மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை, தனியார் கைகளில் சிக்குண்ட கல்விக்கூடம், பள்ளி முதலாளிகள் / அரசியலாளர்கள் தங்கள் சுயலாப நோக்குக்காக ஏற்படுத்தும் போட்டி வெறி, பொதுவில் அமைந்து விட்ட சுயனலமிக்க போட்டிகள், பொறாமைகள், கனவு காணுங்கள் எனும் கலாமின் தூபம்... இவை யாவுமே இந்தக் கொலைக்கான காரணங்கள்.
கல்வி முறை மாற்றப்படவேண்டுமென்றால், அரசியலமைப்பையே மாற்ற வேண்டும்!
4 comments:
ஆக எல்லா ஆசிரியர்களும் உத்தம உத்தமிகளா?? எல்லோரும் பாடம் நடத்துவதை தான் செய்கிறார்களா என்ன?? தன்னுடைய வீட்டு வெறுப்பை மாணவர்கள் மீது காட்டுவதால் தான் இவ்வாறு நிகழ்கிறது. இன்றைய ஆசிரியர்கள் , தாங்கள் தான் கல்வி உலகின் தாய்-தந்தை என்று எண்ணி , அவர்கள் தவறே செய்யவில்லை என மாணவர்களை அடக்குவது என்பது தவறு. அடக்குமுறை வன்முறையையே தூண்டும். அன்பால் உலகையே வெல்லலாம். ஒரு மாணவனை வெல்ல முடித என்ன?? இவ்வாறு தப்பை அந்த பக்கம் வைத்து கலாம் அய்யா அவர்களை குறை கூறுவது இந்த விஷயத்தை அரசியல் ஆகுவதர்காகவே. கலாம் காலை வாருவது இயலாத காரியம். இன்னும் முயற்சி செய்யவும்!!
இரா கணேஷ் குமார் ,
[ முன்னாள் உதவி பேராசிரியர் ]
இந்த செய்தி மிகவும் வருந்ததக்கது. நம் இளைய சமூகம் எங்கே செல்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.
//போட்டி முறை மாறி, மதிப்பெண் முறை மாறி, கல்வியை புரிந்து, சந்தோஷமாக பயில்கிறவரை கொலைகள் தொடரும்.//
வைர வரிகள்... அரசு இயந்திரம் இதை கண்கொண்டாவது பார்க்குமா???
http://anubhudhi.blogspot.in/
/அத்தனையும் சமூகத்தின்மேல் திணிக்கப்படுகிறது. விரும்பாமலே. / திணிப்பவர்கள் யார்?.. அவர்கள்தானே (Pre) Dominant சமூகம்.. ?.. திணிக்கப்படுவோர் அப்பாவி சமூகம்..
Post a Comment