My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

13.4.12

எனது முகநூலிலிருந்து... 5

# அரசு நினைத்தால் மக்களை ஜனவரி 1 அன்றே தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடவேண்டும் எனவும் சட்டம் இயற்றி அதை நடத்திக் காட்டும். அரசின் கோழி முட்டையால் அம்மிக்கல்லையே உடைக்கலாம் என்ற ஒரு கூற்று உண்டு. உலகின் எந்த மூலையிலும், மக்களுக்கேயான அரசும் இல்லை; மதங்களும் இல்லை; புராணங்களும் இல்லை; கடவுளும் இல்லை!!


"இந்தியாவின் தென் பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களால், இலங்கைக்கு கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி கழகத்திடம் புகார் அளிப்போம்." - இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் சம்பிகா ரணவாக்கா.

" கூடங்குளம் அணு மின் நிலையத்தால், கதிர் வீச்சு அபாயம் உள்ளதாக இலங்கை தெரிவித்த குற்றச்சாட்டு, தவறானது. உலகில் உள்ள அணு மின் நிலையங்களில், கூடங்குளம் அணு மின் நிலையம் தான், மிகவும் பாதுகாப்பானது.'' - இந்திய அணு சக்தி திட்ட தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி.

1. கலாம் ஐயா, கொழும்புக்குப் போயி உங்க பல்ல கொஞ்சம் இளிச்சி காட்டிட்டு வாங்க. அப்பத்தான் பயலுங்க அடங்குவானுங்க!

2. நாராயண சாமி, நீங்களும் உடனே கிளம்புங்க. நீங்கதான் சிறந்த முறையில் தமிழருக்கு வாய்க்கரிசி போடுற ஆளாச்சே!!

3. காங்கிரசு பத்திச் சொல்லிக்கவே வேணாம். அது டிஃபால்டா (Default) சிங்கள ஆதரவு கட்சி. அதனால காங்கிரசு சொன்னாலும் சிங்களப் பசங்க கேட்டுக்குவானுங்க!

4. தினமலர்! ம், ஆகட்டும். உன் சிங்களப் பதிப்பை கொழும்புவில் வெளியிடு. அணு உலை எதிர்ப்பாளர்களை அடக்க உன்னை விட்டால் சிறந்த மீடியா வேறேதும் கிடையாது.

5. 'தோயர்' நல்லக்கண்ணுவுக்கு இலங்கையில் கிளைகள் இருக்கிறதா தெரியாது. இல்லையென்றால் உடனடியாக திறந்து வைக்கவும்.


# மனித இனம் மட்டும்தான் உலகில் வாழ்க்கை நடத்துவதற்கு பணம் கட்டுகிறது!!!
# ஜனாதிபதியாக சங்கர் தயாள் சர்மா இருந்த போது, நான்கு பயணங்கள் மூலம், 16 நாடுகளுக்கு சென்றார். அப்துல் கலாம் ஏழு பயணங்கள் மூலம், 17 நாடுகளுக்கு சென்றார். கே.ஆர். நாராயணன் ஆறு பயணங்கள் மூலம், 10 நாடுகளுக்கு சென்று வந்தார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 12 வெளிநாட்டு பயணங்கள் மூலம், 22 நாடுகளுக்கு தன் குடும்பத்தினருடன் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இந்த வகையில், இவரது வெளிநாட்டு பயணத்திற்காக, 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா தனி விமானம் ஏற்பாடு செய்த வகையில், 169 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி என்பதால், இவரது பயண செலவை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுள்ளது. இந்த வகையில் ஏர் இந்தியாவுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை, 153 கோடி ரூபாய் அளித்துள்ளது. இன்னும், 16 கோடி ரூபாய் கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

எத்தனையோ ஏழை மக்களின் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, இந்த வெளி நாட்டு டூர்...! கடவுள்னு ஒரு கம்முனாட்டி இருந்தா, உங்களுக்கெல்லாம் கொதிக்கிற எண்ணைச் சட்டி கண்டிப்பா உண்டு!!


# உலகக் கோப்பைன்னா இந்தியா ஜெயிக்கணும். பாகிஸ்தான் தோக்கணும். ஏன்னா பாகிஸ்தான் தான் நம் எதிரி நாடு.
ஐபிஎல் 20-20னா நம்ம சென்னை கிங்ஸ் ஜெயிக்கணும். கர்னாடகா தோக்கணும். ஏன்னா அவன் தண்ணி தர மாட்டேங்கறான்.
ஊருக்கு ஊர் போட்டின்னா, எங்க ஊர் டீம்தான் ஜெயிக்கணும். ஏன்னா பக்கத்து ஊர்க்காரன் கீழ்ச் சாதிக்காரன்.
எங்க ஊர்லியே போட்டின்னா, எங்க தெரு டீம்தான் ஜெயிக்கணும். ஏன்னா அடுத்த தெருக் காரவுங்க ரொம்ப பொறாமைக்கரங்க.
எங்க வீட்டுகுள்ளாறயே போட்டின்னா, நாந்தான் ஜெயிக்கணும். ஏன்னா... ஏன்னா, அது 'நான்' அப்படீங்கறதுனால!

வாழ்க கிரிக்கெட்! வளர்க ஐ பி எல்!! ஜெய் ஹிந்த்!!!


# ரேஷன் கடையில் புழுத்துப்போன அரிசிக்காக வாக்குவாதம் செய்பவனும் நக்சலைட்டுதான்!!
கூடங்குளம் போராட்டத்திற்கு நக்சல் தொடர்பாம்...

அரசும் அதன் அடியாட்களும் அறிவிப்பது இதைத்தான்: உங்கள் ஆயுதம் துப்பாக்கியா அல்லது உண்ணாவிரதமா என்பது முக்கியமல்ல. நீங்கள் அரசுக்கு எதிராக நிற்பீர்களேயானால் நீங்களும் நக்சலைட்தான்.

# 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்கவேண்டும்.' ஜெயலலிதா.

தலைநகரை அயோத்திக்கு மாத்திடுங்க.
மோடியை ஜனாதிபதியாக்கிடுங்க.
நீங்க பிரதமரா ஆகிடுங்க.
சோவை தலைமை நீதிபதியாக்கிடுங்க.
நாடே 'ராம ராஜ்ஜியம்' கண்டுவிடும்!
இனிமேல் 'ஜெய் ஹிந்த்' அல்ல...
ஜெய் ராம்ஜிகி ஜே!!
# 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்கவேண்டும்.' ஜெயலலிதா.

அப்படியே இலங்கையை அவமானச் சின்னமா அறிவிச்சுடுங்க.
ராஜபக்சேவை ராவணனா அறிவிச்சிடுங்க.
அப்படியாவது இந்தியா இலங்கையோட சண்டை போடுதான்னு பாக்கலாம்!!
போலோ... ஜெய்ராம்கி ஜே!!
அணுஉலையால ஆபத்து இருக்குன்னு அறிவியல் ஆதாரத்தையெல்லாம் தூக்கிப்போட்டாலும் உண்மை எடுபடவேயில்லை.
ஆனா, வெறும் காமிக்ஸ் புஸ்தகத்துல இருக்குற ராமர் பாலத்தையே உண்மையாக்கிட்டாங்களே...
பொய்ய உண்மையாக்கலாம்! உண்மைய பொய்யாக்கலாம்!! பூணூல் போட்டிருந்தா!!!

# 'ஜனநாயகத்தை' நாங்களே உங்கள் நாட்டுக்கு வந்து, சிறந்த முறையில் உடனடியாக டோர் டெலிவெரி செய்கிறோம். அணுகவும் : வெள்ளை மாளிகை.

# பழையபடி, ஈஸ்ட் இந்தியா கம்பெனியே செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்துட்டா நல்லா இருக்கும்!! நாம சம்பாதிச்சத அப்படியே மொத்தமா கவுருமெண்ட்டுக்கே திருப்பிக்கொடுக்கிற இந்த நாரப்பொழப்புக்கு, அடிமையா இருப்பதே மேல்!!

# உங்களுக்கு வேண்டாத ஆளப்பாத்து, "வாக்கிங் போறீங்களா? உடம்பை பாத்துக்குங்க," அப்படீன்னு கேட்டு வைய்ங்க. அன்னைக்கு பூரா அந்த ஆளு கலவரத்துலயே மிரண்டுபோய் கெடப்பான்!!

# 'மாகாத்மா காந்திக்கு 'தேசப்பிதா' அந்தஸ்தை வழங்கியது யார்?' - தகவலறியும் உரிமைச்சட்டத்தில் 10 வயது மாணவி கேள்வி. பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் அலைகழிப்பு. இந்திய தேசிய ஆவணப் பாதுகாப்புத் துறையிடமும் ஆதாரம் இல்லை!!

நல்ல வேளை! 'நேருவுக்கு மாமா பட்டம் வழங்கியது யார்?' அப்படீன்னு கேட்டிருந்தா, நாடு சிரிப்பாய் சிரித்திருக்கும்!!

"அன்னை' சோனியா வாழ்க" அப்படீன்னு இப்பத்திலிருந்தே கூவப் பழகிக்குவோம். ஏன்னா நமக்கு வரலாறு முக்கியமடா, பன்னாடைகளா!!


# மின் கட்டண உயர்வை 'மின் பகிர்மானக் கழக அதிகாரிகள்' அறிவிச்சாங்களாம். 
பிறகு அம்மா அந்த உயர்வை குறைச்சாங்களாம்.
சும்மா, கம்மாயைத் தொறந்து வுடுறதுக்கே 'அம்மாவின் உத்தரவுப்படி' அப்படீன்னு பந்தா காட்டுறவுங்க, இதுக்கு மட்டும் அதிகாரிகள் உத்தரவுப்படின்னு சொன்னா நாங்க நம்பணுமா?

# ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஆபாச நடனம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.***


***கண்டிஷன் அப்ளை. அந்த ஆபாச நடனத்தை கர்நாடக, குஜராத் எம்.எல்.ஏக்களுக்கு 'அப்லோடு' செய்துவிட்டால் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது!

# கூடங்குளம் பிரச்னை சுமுகமாக முடிந்து விரைவில் துவக்கிட வேண்டும் என மதுரை மீனாட்சியிடம் தாம் வேண்டியிருந்ததாகவும், இதனால் வேண்டுதலை நிறைவேற்றி தந்த சுவாமி சன்னதியில் அன்னதானம் வழங்கியதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

நல்ல வேளைடா சாமி. இவுரு அன்னதானம் செய்யுறதா வேண்டிக்கிட்டாரு. பெரியபாளையத்தம்மனுக்கு வேப்பஞ்சேலை கட்டி, சுத்தி வர்றதா வேண்டிக்கிட்டிருந்தா என்ன கதியாகியிருக்கும்?

# புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் சாம் பிட்ரோடாவுக்கு போட்டியாக அப்துல் கலாமை நிறுத்தலாமா என பா.ஜனதா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரும்பத் திரும்ப ஒரு 'சயின்டிஸ்டு' மட்டும்தான் ஜனாதிபதியாகணும்னு கங்கணம் கட்டியாச்சுன்னா, 'மூலிகைப் பெட்ரோல்' புகழ் மிஸ்டர். ராமர் பிள்ளையை பரிசீலனை செய்யலாமே? Such an enthusiastic, creative, marvelous scientist!!! மஞ்சத் துண்டாரை வேணும்னா கேட்டுப்பாருங்க!

# கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார்? : பாமக கேள்வி

யோவ் டவ்சர், சொம்மா கொயப்பாத! இலங்கைக்கு எதிர்ப்பா, தாயுள்ளம்(!) கொண்ட அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு, கருணையுள்ளம் கொண்ட(!) இந்தியாவும் ஆதரவு தருதே, அத்த மொதுல்ல நாயமானு சொல்லு. மத்தத அப்பால பேசிக்கலாம். பொய்து போலைன்னா, சும்மா புஸ்வாணம் வுடுவியா நீ?!!

# நெல் விளையுமெனும்
நினைப்பில்
கடனை விதைத்துவிட்டான்!
கடைசியில்...
மரணத்தை மட்டும்தான்
அவனால்
அறுவடை செய்யமுடிந்தது!!

# டிஸ்கவரி சேனல், சித்திரை ஒண்ணு புத்தாண்டுக்கு ஸ்பெஷல் நிகழ்ச்சிகளைப் போடப்போகுதாம். புத்தாண்டை தை ஒண்ணில் கொண்டாடறவங்க திமுக காரவுங்க. சித்திரை ஒண்ணு அதிமுக காரவுங்க. அறிவியல் சேனலா இருந்தாலும்கூட, அம்மாவுக்கு ஜால்ரா அடிச்சே ஆகணும் நைனா...!!

# 1. சுனாமி எச்சரிக்கை யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாமா? இதற்கு இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் வேண்டாமா? ஏனென்றால் பு.தலைமுறை போன்ற டிவிக்களெல்லாம் லைட் ஹவுஸ் மேலே ஏறி நின்றுகொண்டு 'பொது மக்கள் இங்கே ஏன் நிற்கிறார்கள், அங்கே ஏன் நடக்கிறார்கள்' என்று அலம்பல் செய்துகொண்டே இருந்தார்கள். இந்திய அரசு அங்கீகரிக்காத சுனாமி அறிக்கையை இவர்கள் மக்களிடத்தில் எப்படி அறிவிக்கலாம்?
2. இந்தோனேஷியாவில் 8.5 ரிக்டர் அளவு என்று நில நடுக்கத்தை உடனடியாக அளந்து அவர்கள் சொல்லிவிட்ட்டார்கள். ஏன் இந்திய அரசாங்கத்தால் இங்கே நடந்த நில நடுக்கத்த்தின் அளவை இதுவரை கணக்கிட்டு சொல்லவில்லை?

#  ஒரு மேடை கெடைச்சா போதும். சூர்யாவும், சிவகுமாரும் சேர்ந்துகொண்டு, கோரஸ் குரல்ல பராசக்தி வசனத்தை ஒரு கால் மணி நேரத்துக்கு பாராயணமாக ஒப்பிப்பாங்க. கூட்டமே அறுவையால நெளியும். ஆனாலும் இவங்க விடவே மாட்டாங்க. கடேசில கலைஞரும், ஒண்ணு ரெண்டு கட்சிக்காரங்களும் மட்டும் போனா போதுன்னு கை தட்டுவாங்க.

இதே கதைதான், இன்னைய நில நடுக்கத்துக்கு சேனல்கள் வழங்கிய நியூஸ். ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லை! வாயத் தொறந்தா புரளி!! வெட்டி பந்தா!!! உண்மை முகம் இன்னைக்கு நல்லாவே தெரிஞ்சுபோச்சு.


# நில நடுக்கத்தை சாக்காக வைத்து ஒயிட்-காலர்கள் அலுவலகம் திரும்பாமலேயே வீட்டுக்கு நடையை கட்டினார்கள். (உதாரணம் - தலைமைச் செயலகம்). ஆனால் ஆயத்த ஆடைகள் தைத்துக்கொண்டேயிருந்த ஏழைப் பெண்கள், சாரம் கட்டி, எட்டாவது மாடியில் கட்டுவேலை பார்த்துக்கொண்டிருந்த கொத்தனார், சித்தாள் முதலான தொழிலாளர் வர்கம் நடந்ததெல்லாம் தெரிந்தும், அவர்களால் ஓடிவந்துவிட முடியவில்லை. ஏனென்றால் போட்டது போட்டமேனிக்கு இன்றைக்கு அவர்கள் ஓடிவிட்டால், நாளைக்கு அவர்களின் சீட்டு கிழிக்கப்பட்டுவிடும்! தினம் செத்துக்கொண்டிருப்பவர்களை பூகம்பம் மட்டும் அசைத்துவிடுமா என்ன?!

# எனக்கு இன்னாவோ இந்த பாட்டியம்மாவே திரும்பவும் ஜனாதிபதி ஆயிட்டா நல்லா இருக்கும்னு தோணுது. கொய்ந்த மன்சு. ரொம்பவும் அல்டிக்காது. 'அணு உலை ஆபத்தில்லை' அப்டீன்னு கப்சா வுடாது. அதனால நமக்கும் கொஞ்சம் சேஃபு. இன்னா ஒண்ணுன்னா, ஆனா ஊனா கவுருமெண்ட்டு காச எடுத்துக்குனு அப்பப்போ குஜாலா டூர் போய்க்கினே இருக்கும்.

பல்ல இளிச்சிக்கினே பாதாளத்துல தள்ற  விஞ்ஞானியை விட,  சொம்மா குந்திக்கினு வேடிக்கை பாக்குற இந்தம்மா எவ்ளவோ மேலு!1 comment:

Anonymous said...

"ரேஷன் கடையில் புழுத்துப்போன அரிசிக்காக வாக்குவாதம் செய்பவனும் நக்சலைட்டுதான்"

Very Nice

Post a Comment