இந்திய கிடங்கில்
இரைந்து கிடக்கும்
நெல்லும் கோதுமையும்.
உண்மையான காரணம்...
சாக்குப் பைகள்
'ஸ்டாக்கில்'இல்லை!
கல்யாணப் பந்தியில்
கலாச்சார விருந்து.
விரல் நுனியில் தொட்டு
நக்கிப் பார்க்கும்
நாகரிகம்!
வயிறு நிரம்பியதோ
கல்யாண மண்டபத்து
குப்பைத் தொட்டிதான்.
காஃபி டே,
கெ எஃப் சி,
பெப்சி, கோக்கு,
பிஸ்ஸா கார்னரு...
உண்டு கொழுக்க வைக்கும்
உணவகங்கள்.
பணத்தால் ரெக்கை கட்டி
பொரித்தெடுத்த கோழிகளை
பதம் பார்க்கும்
பருந்துகள்.
தின்பதற்கே பிறப்பெடுத்த
மிருகங்கள்.
தின்று தின்றே
மாண்டுபோன பிணங்கள்.
ஒரு நாள் மட்டும்
உயிர் வாழ்ந்து கொள்ள
ஒரு சோறு தேடும்
மனிதன்.
அவனை
வேடிக்கை பார்ப்பவர்கள்
யாவருமே
வெறும் பிணங்கள்தான்.
உண்டு கொழுத்த
பிணங்கள்!
1 comment:
முன்பெல்லாம் கவிதையென்றாலே கனவும் கற்பனைகளுமாக இருந்தது
அதை கொஞ்சம் நகர்த்தி உண்மையின் பக்கமும்
யதார்த்தத்தின் பக்கமும் இழுத்த பெருமை
தங்களைப் போன்றவர்களின் படைப்புகளாலேயே சாத்தியமான து
கவிதையின் கரு சூடாக இருந்தாலும்
படைப்பு ரசிக்கும்படியாக இருந்தது
குறிப்பாக இறுதிப் பத்தி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment