இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ராஜபக்சேவுக்கு மத்திய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு. ராஜபக்சேக்கு இன்றிரவு மன்மோகன்சிங் விருந்து. தமிழக கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.
மிஸ்டர் கருணாநிதி, இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
கருணாநிதி : பொறுத்திருந்துதான் பார்க்கணும். அடுத்து என்ன செய்யவேண்டுமென்று கட்சிக்குழு கூடி முடிவு செய்யும். (விருந்து கொடுக்கிற பொறுப்பை எங்கிட்ட கொடுத்திருந்த
ா, அதுல நாலுகாசு அமுக்கி இருக்கலாம்...).
மிஸ்டர் திருமா, நீங்க?
திருமாவளைவு : விருந்துக்கு அனைத்து தமிழகக் கட்சிகளையும் அழைத்திருக்க வேண்டும். மாபெரும் தவறு நடந்துவிட்டது. (நல்லவேளை கூப்பிடலை. நேரா போயிருந்தா கோத்தபய நம்மளை கொன்னுகூட போட்டிருப்பான். அனாதையா செத்துப்போயிருப்போம். எவன் கேக்கறது?)
மிஸ்டர் வைக்கோ, நீங்க?
வைக்கோ : ரோமச் சாம்ராஜ்ஜியத்தில் வீறு கொண்டு எழுந்த வரலாறு நமக்கு நெஞ்சுரம் ஊட்டுகிறது (ரொம்ப வார்த்தை விடக்கூடாது. பிற்காலத்துல காங்கிரசோட கூட்டணி கிடைச்சாலும் கிடைக்கும்).
டாக்டர் ராமதாஸ், நீங்க?
ராமதாஸ் : அந்த விருந்தில் மது பறிமாரப்படுவதை தடை செய்யவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நடுரோட்டுக்கு வந்து போராட நேரிடும்.
அம்மா, நீங்க?
ஜெயலலிதா : டீ பார்ட்டி என்றால் பிரச்சினை இல்லை. அதெல்லாம் சகஜம்தானே? நான் கூடத்தான் டெல்லியில் டீ பார்ட்டி வைத்திருக்கிறேன். ஆனால் நான் கூறவருவது என்னவென்றால், கச்சத் தீவை மீட்டு தமிழர்களிடம் ஒப்படைப்பேன் என்பதை இங்கே... (எழுதிக்கொடுத்த சீட்டு எங்கேய்யா காணோம்?)
சீமான் நீங்க?
சீமான் : (அம்மா பாக்கறாங்களான்னு சுத்தும் முத்தும் பார்த்துட்டு, டேபிளை ஓங்கி ஒரு குத்து குத்துகிறார். ஒரு கையை மடக்கி, மேல் நோக்கி உயர்த்தி காறி மைக்கின்மீது துப்புகிறார்). சிங்கங்களே, என் இன மக்களே... இந்தமுறை விட்டுவிடுவோம். அடுத்தமுறையும் இது தொடர்ந்தால்..., தொடர்ந்தால்..., நன்றி! வணக்கம்!!

No comments:
Post a Comment