My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

21.9.12

எனது முகநூலிலிருந்து... 14

## ராஜபக்சே மட்டும் இல்லைன்னா, சீமான், சிறுத்தை, வைக்கோ குரூப்புங்க கட்சி 'நடாத்துவதே' கஷ்டமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். எப்படியும் தூங்கப் போறதுக்கு முன்னால, கோத்தபயலின் உதவிக்கு நன்றி சொல்லிட்டுத்தான் தூங்குவாங்க!

000

## மம்தாவுக்கு இருக்கும் சூடு சொரணைல, நூத்துக்கு பத்து பர்சண்ட்டு இந்தத் தாத்தாவுக்கு இருந்திருந்தாக்கூட, கேஸ் டீசல் வெலை குறைக்கலைன்னாலும் ரெண்டு மூணு மீனவமாருங்க உசுரையாவது காப்பாத்தியிருக்கலாம். ஆனா இந்தக் கெழடு, பரலோகம் போற வயசுலயும் திருட்டுப்பயலுவலுகளுக்கு கட்டுச் சோறு இல்லே தூக்கிட்டுப் போகுது?!

000

## நம்மகிட்ட சேப்புக்கொடியும், அந்தப் பக்கம் பச்சக்கொடியும் காட்டும் 'தோயர்' நல்ல்ல்ல்ல்ல கண்ணுவை விட, டைரக்ட்டா அடிச்சு பத்தவச்ச பரட்டை கலாமை எவ்வளவோ நம்பலாம்!!

000

## முதல்வரின் தொலைநோக்குத்திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.

ஆமா, நாங்க எவ்வளவு மகிய்ச்சியா இருக்கோம். அத்த வுடுங்க. அம்மா கடவாய் தங்கப்பல்லு தெரிய உங்களப் பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறாங்க. கொஞ்சம் வாய மூடுங்க!

000

## மக்களுக்கு கெடுதல் செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி நிலவுகிறது: ராமதாஸ்.

யோவ் கூமுட்ட, 2004ல, ஆப்கானிஸ்தான்லயா அன்புமணி ஹெல்த் மினிஸ் டரா இருந்தாரு? இந்தியாவுலதான இருந்தாரு? அப்ப அவரு புடுங்கின மயிரையெல்லாம் எண்ணிக்காட்டு பாக்கலாம்! கெடுதல் செய்யுறதுல உனக்கு பங்கு கிடைக்கலைன்னு வயித்தெரிச்சல்...

000

## சந்து பொந்துலல்லாம் களி மண்ணுக்கு தேமேன்னு காவக்கெடக்கறாங்க நம்ம போலீஸ்காரவுங்க. பாக்கப் பரிதாபமாத்தான் இருக்கு!

000

## தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம்.

அப்படியே விட்டுடலாமா, இல்லே, ராக்கெட்டை கட்டி அலேக்கா மேல தூக்கிடலாமா அப்படீன்னு, எதுக்கும் நம்ம வில்லேஜ் விஞ்ஞானியை கூட்டியாந்து கன்சல்ட்டு பண்ணிடுங்க!

000

## ஒரு பண்ணைப்புரத்து சூத்திரன் வரும் வரைக்கும், கர்நாடக சங்கீத சிரோன்மணிகளால் மியூசிக் அகாடமி கேன்டீன் கீரை வடையை மட்டும்தான் காலி பண்ண வைக்க முடிந்தது!

000

## ஜட்டி போட்ட 'சீர்-கேர்ள்ஸ்' ஆப்கானிய கிரவுண்டுகளில் ரவுண்டு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!! கிரிக்கெட் சாக்கடை ஆப்கானிலும் புகுந்துடுச்சி. இனி, ஆப்கானிய கலாச்சார விளையாட்டுக்கள் காணாமல் போகும். பெப்சியும் கோக்கும் கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யும்.

000

## தன்னை எரித்துக்கொண்ட விஜயராஜ் எங்க கட்சிக்காரர்ன்னு சொல்லி, ஓட்டுப் பொறுக்கிகள் அவர் கையில ராவோட ராவா தங்களோட கட்சி சின்னத்தை பச்சை குத்திடாம இருந்தா சரி!!

000

## நேத்து, திருமாவளவு சிறுத்தைகள் ப்ரிக்ளின் ரோடுல, ரெட்டைமலை சீனிவாசனுக்கு ஏதோ சடங்கு செய்ஞ்ச கையோட, பெரம்பூர் ஜமாலியா வரைக்கும் இருந்த அத்தனை டாஸ்மக்குலயும் குமிஞ்சு கிடந்ததை பாக்க முடிஞ்சுது. பாவம், சிறுத்தைகளுக்குத்தான் எவ்வளவு தாகமான சோகம்?!

000

## பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நகர்களுக்கு மட்டும் 'ராஜாஜி தெரு, பாரதியார் தெரு' என்று தவறாமல் பெயர் வைக்கப்படுவது தற்செயலல்ல.!

000

## உருஹுதே, மருஹுதே, உலஹமே, வருஹுதே... இதே ஸ்டைலில், தமிழில் வேண்டுமென்றே வடமொழி 'ஸ்லாங்' கலப்படம் செய்கிறார்கள் தமிழ்ப் பாடக ராஸ்கல்கள். உதாரணம் : கலஹம் = கலகம்!!

000

## ராசாவின் சினிமாப் பாடல் இசையில் மட்டும் அவரின் நேர்த்தியைக் கண்டு வியக்கிறோம். ஒவ்வொரு சினிமாவிலும், காட்சிகளின் பின்னணியில், ராசாவால் தெளிக்கப்பட்ட இசைத் துளிகளில், இன்னொரு பீத்தோவனை நாம் காணக்கூடும். ஆனாலும் குப்பை சினிமாவைப் பார்த்தா
லொழிய, அத்தகைய இசைத் துணுக்குகள் நமக்கு கேட்கக் கிடைப்பதில்லை. சினிமாக் குப்பைகளுக்குள் ராசாவின் இசைப் பொக்கிஷங்கள் வேறு வழியின்றி, ஒளிந்து கிடக்கின்றன!

000

## 
நேத்து மழை பெய்யும்னாய்ங்க; பெய்யலை. 
இன்னைக்கு பெய்யும்னாய்ங்க; பெய்யலை. 
மேக மூட்டத்தைப் பாத்து நாளைக்கும் பெய்யும்பாங்க. 
ஒரு வானிலை அறிக்கைய சரியா விடுற அளவுக்கு நம்மகிட்ட டெக்னாலஜி இன்னும்கூட வளரலை. 
'வல்லர்ர்சு' கினா காணச்சொல்றாரு கலாம். 
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே!

000

## நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன்...

கிஷ்ணாயில் கிடைக்கலை, மாசக் கடேசில காசு இல்லை, ரேஷன் கடை கியூவு, சம்பளம் பத்தலை, வெலை வாசி காய்ச்சி எடுக்கிறது, எல்லாத்துக்கும் அம்மா ஒரு வழி பண்ணிட்டாங்க.

சீரங்கம் போய்ட வேண்டியதுதான். ரங்க நாதன் கோயில்ல, நாள் பூராவும் உண்டக்கட்டி! பிரச்சினை எல்லாம் தீரணும்னா சீரங்கமே கதி!

நாள் பூரா உண்டக்கட்டி வழங்கும் அம்மா நாமம் வாழ்க!

000

## "அதாவது..., அம்பானிங்களும், பிர்லாவுங்களும், நோக்கியா, போர்டு கம்பேனிங்களும் கூடங்குளம் கரண்ட்டை எதிர்பார்த்து காத்துக்கிடறானுங்க. மொதலாளிங்களுக்கு கவுருமெண்ட்டுக்கு பயந்துதான ஆவணும்? இல்லாங்காட்டி ஜனங்க பண்ணுற இம்மாம்பெரிய போராட்டத்துக்கு 'எப்பிடின்னா போங்கடா கம்முனாட்டிகளா' அப்படீன்னு சொல்லிட்டு கவுருமெண்ட்டு கூடங்குளத்தை கைகழுவிட்டு போட்டே இருக்காது?!" - பேருந்துக் காத்திருப்பில் கேட்டது.

000

## இன்று, சரவணா ஸ் டோர்ஸ் கடைக்கு முன்னூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் வந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் லுங்கியும் சட்டையும், வெறும் ரப்பர் செருப்பையும் அணிந்திருந்தனர். ஏழ்மை அவர்கள் உருவத்தில் தெரிந்தது. அவர்கள் யாவரும் உழைக்கும் மக்கள். அத்தனை பேரும் 60 வயதைக் கடந்தவர்களாய் இருக்கலாம். யாத்ரிகர்கள் போலும். 

நல்ல வேளை... எந்த வெறி நாயும் 'தமிழன்' வேடமிட்டு அங்கே வந்து அவர்களை குதறி எடுக்கவில்லை!!

000

## 1.'அன்னாடங்காய்ச்சி' மாதிரி, அன்றாடம் கூவி அறிக்கை விட்டே பொழப்பை ஓட்டுற டுபாக்கூர் கட்சிகள்.

2. பேச்சில் மட்டும் ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறப்பே, அஞ்சா சிங்கமே, அண்ணனே, தம்பியே என்று விளித்து பிழைப்பை ஓட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு பட்டை நாமம் போடும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள்.

3. ஒரு மயிருக்கும் உதவாத, தன்னைத் தானே விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி, டாக்டர் என்று பீற்றிக்கொள்ளும் மக்கள் விரோத தனிமனிதக் குரங்குகள்.

4. ஏசி பாரில் எந்த செய்தியை எப்படிப் போடலாம் என போதையில் விவாதித்து, விடியற்காலம் ஒன்றுபோலக் கூவும் காக்காய்க் கூட்டக் காகிதப் புலிகள்...

இன்றுதான், இவர்களைத் தெரிந்துகொண்டோம். மனிதப் போர்வையில் மிருகங்கள்!! க்ர்ர்ர்த் தூ...

000

## உயிரைக் காப்பாத்திக்க கடல்ல குதிச்சாங்களாம். 
நல்ல வேளை... 
கடல்ல குதிச்சவங்க எல்லாம் நீச்ச தெரிஞ்ச மீனவமாருங்க. இவுங்க மீனவரா மட்டும் இல்லாம இருந்திருந்தா, உயிர்ப்பலி இன்னைக்கு நூத்துக்கும் மேல இருந்திருக்கும்!

000

## தினமலர் vs கூடங்குளப் போராளிகள் :

1. வன்முறைக்கும்பல் போலீசாரை நோக்கி மணல் அள்ளி வீசினர். (போராடும் வயதான பெண்கள் சாபமிட்டு வாரி இறைக்கும் மண்).

2. இன்று நடந்த வன்முறையில் ‌போலீசார் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. (போராட்டக்காரர்கள் எத்தனை பேருக்கு காயம் பட்டது என்று சொல்ல மறுக்கிறது)

3. பல கிராமங்களுக்கு வன்முறை பரவுகிறது. (வாழ்வுரிமை கேட்டு போராடினால் வன்முறை).

4. வன்முறைக்கும்பல் போலீசார்
 மீது எதிர் தாக்குதல் நடத்தி படகு மூலம் தப்பி ஓடினர். (தடியடி தாக்குதல் நடத்தியது போலீசு; சிதறி ஓடிய பொதுமக்களை இவ்வாறு கூறுகிறது).

5. பத்திரிகையாளர்கள் காயம். (தன் சக பத்திரிகையாளர்களிடம் 'சென்டிமெண்டாக' சப்போர்ட்டு கேக்கிறது. நயவஞ்சகம்).

6. குழந்தைகள் கேடயமாக வைத்து ‌போராட்டம். (குழந்தைகள் போராடக்கூடாதா என்ன?).

7. படகு மூலம் உதயக்குமார் தப்பி ஓட்டம். (அதே செய்தியில் : தொலைக்காட்சிக்கு உதயக்குமார் அளித்த பேட்டியில், அராஜகத்தை கண்டு அஞ்ச மாட்டோம். இந்த அராஜக முசோலினி ஆட்சிக்கு முடிவு வரும் இவர்கள் போன இடத்திற்கே இந்த ஆட்சியாளர்கள் போய்சேருவார்கள். நான் இப்போது இடிந்தகரையில் தான் இருக்கின்றேன். இவ்வாறு உதயக்குமார் கூறினார்.).

8. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவி. (மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல். எரியும் வீட்டின்மேல் பெட்ரோல் ஊற்றும் வேலை)

9. கூடங்குளம் அணு உலை பகுதியில்நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர்களும், ஊழலுக்கு எதிராக இந்தியா அமைப்பினை சேர்ந்தவர்கள் , கண்டனம் தெரிவித்துள்ளனர். (உயர் வர்க்க மெழுகு வர்த்திப் போராளிகளுக்கு இருக்கும் மரியாதை, சாதாரண ஏழை கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை)

10. இடிந்தகரையில் போலீசார் வெளியேற வேண்டும் எனக்கூறி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 4.30 மணிக்கு கிளம்ப வேண்டிய மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில், 5.20 மணிக்கு கிளம்ப வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பவில்லை. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். (இப்போ, ரயில் டைமுக்கு கிளம்பணும். இதுதான் தினமலரோட பிரச்சினை!!)

000

## 
'ரிலையன்ஸ் அனிமேஷன்ஸ் வழங்கும் கோகுலத்தில் கிருஷ்ணன் - குழந்தைகளுக்கான 3டி படம்'. கருவாட்டை மடிச்சிக் கொடுத்த காகிதத்துல இந்த அடீஸ்மெண்ட்டு இருந்துச்சி.

ஒரு டவுட்டு... 

கோகுலத்தில் கிருஷ்ணன் அப்படீங்கற டைட்டிலை வச்சிப் பார்த்தா அது கொஞ்சம
் கூட தரம் குறையாத ட்ரிப்பிள் எக்ஸ் கதையாத்தான் இருக்கும். பெண்கள் அவிழ்த்துப்போட்டு குளத்தில் குளிக்கும்போது அதை மறைந்திருந்து நமது கிருஷ்ணன் ரசித்துப் பார்க்கும் பலான காட்களும் இடம் பெறும். இதை குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் என்று எப்படிக் கூறுவது?

இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு 'ஏ' சர்டிபிகேட்டுதானே குடுத்திருக்கணும்?!

000

## 
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்க்க கலைஞர் வேலூர் பயணம்.

இதையே, சிவகாசிய ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வரச்சொல்லுங்க பார்ப்போம். முதுகு வலின்னு பெரிசு ஆசுபத்திரில போயி படுத்துக்கும்! வெக்கக்கேடு!!
000
## 

No comments:

Post a Comment