My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

22.9.12

படித்தவுடன் கிழித்துவிடவும்

எச்சரிக்கை : இது கட்சித் தலைவர்கள் / வி.ஐ.பிக்களுக்கான ரகசியக் குறிப்பு. பொது மக்கள் படிப்பதைத் தவிர்க்கவும்.

அட்டென்ஷன் திரு. கருணாநிதி : 

மம்தா கூட்டணியிலிருந்து விலகியதால், மத்திய அரசு கையைப் பிசைந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 
தாங்கள் தகிரியமாக ராஜாவையும் கனிமொழியையும் 2ஜி வழக்கிலிருந்து விடுவித்தே ஆகவேண்டும் என்று சோனியாஜியிடம் 'டிமாண்டு' செய்யுங்கள். அப்படி அவர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றால், ராஜபக்சே இந்தியா வந்ததை சாக்காக வைத்து கூட்டணியிலிருந்து திமுகவும் விலகி விடுவதாக ஒரு போடு போடவும். இந்த சான்சை விட்டால் வேறு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது!

பெஸ்ட் ஆஃப் லக்.

கலைஞரின் நலத்தை மட்டுமே நாடும்...
- புதிய பாமரன்.





000





சிம்மக் குரலோன் மன்மோகன் சிங் அவர்களுக்கு :

வணக்கம். இப்பவும் தாங்கள் ரேடியாவில் நா தழுதழுக்க 'தெய்வத்திருமகள் விக்ரம்' வாய்சில
் பேசியதை கேட்க நேர்ந்தது. என்ன ஒரு அப்பாவித் தனம். இருந்தாலும் சற்றே ஏற்ற இரக்கங்களோடு பேசியிருக்கலாம். அதாவது, 'பணம் மரத்திலா காய்க்கிறது?' என்று ஒரு அருமையான கேள்வி கேட்டீர்களே... அந்த இடத்தில் கோபம் கொப்பளித்திருக்க வேண்டும். கடேசியா, 'சகோதர சகோதரிகளே...' அப்படீன்னு சொன்ன இடத்தில் குரல் ஒடிந்து மூக்கைச் சிந்தும் சப்தத்தை கொடுத்திருக்க வேண்டும். (எப்படி என்று தெரிந்துகொள்ள உங்கள் நண்பர் கருணா நிதியையோ அல்லது வைக்கோவையோ அணுகவும்). சும்மா ஜனங்கள் அப்படியே கண்ணீர் விட்டு கதறியிருப்பார்கள்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இன்னொரு முறை நான் சொன்னதுபோல பேசி அனைத்து சூரியன், மிர்ச்சி, ஆஹா எஃப் எம்முகளிலும் ஒலிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்.
-புதிய பாமரன்





000





எச்சரிக்கை : இது கட்சித் தலைவர்கள் / வி.ஐ.பிக்களுக்கான ரகசியக் குறிப்பு. பொது மக்கள் படிப்பதைத் தவிர்க்கவும்.

இந்தியர் நலன் இன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள சோனியாஜீ அவர்களுக்கு :

உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. இந்த பந்த்து, மம
்தாஓட குத்து, இதையெல்லாம் வச்சிப் பார்க்கும்போது பல்லி நெத்தியில வுழுந்துட்டாமாதிரி ஒரு பீலிங் வருது. ஆகையால் இதையெல்லாம் காரணம் காட்டி இங்கு வந்து சில்லரை விற்பனை செய்யப்போகும் வெளி நாட்டு சில்லரை கம்பேனிகளிடம், பேசினதுக்கு மேல போட்டு குடுக்குமாறு பேசிப் பார்க்கவும். நமக்கு ஆட்சியை விட பேங்கு பேலன்சு முக்கியமில்லையா ஜி!

கவனம் தேவை.

இப்படிக்கு
-புதிய பாமரன்

No comments:

Post a Comment