My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

1.9.12

எனது முகநூலிலிருந்து... 13

வட சென்னையில் சிறு வியாபாரிகளை மிரட்டி, கடை போர்டுகளில் முதலில் தமிழ் இருக்குமாறு செய்யும் அதிகாரிகள் (Givindasamy & Co Hardware Shop / கோவிந்தசாமி மற்றும் குழுமத்தினர் வன்பொருள் கடை)

இதையே நட்சத்திர விடுதிகளான அடையார் கேட் ஹோட்டலை (Adyar Gate Hotel) அடையாறு கதவு விடுதி என்றோ அல்லது லி மெரிடியன் (Le Meridian) ஹோட்டைலை தீர்க்க ரேகை விடுதி என்றோ மாற்றமுடியுமா? திராணி இருக்கிறதா?!

##

தேவாரம்-பண்ணைப்புரம் பேரூராட்சியில் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? அதிகாரிகள் சோதனை.

சார், இங்க மட்டும் பிளாஸ்டிக் கிளாசை அனுமதியுங்க. ஏன்னா, இதையும் எடுத்துட்டீங்கன்னா, டீக்கடையில மறுபடியும் கொட்டாங்கச்சியைக் கட்டிச் தொங்க விட்டுடுவாங்க!

##

இலங்கை அதிபர் ராஜபக்சே 21-ம் தேதி இந்தியா வருகிறார்.

ஈழமொன்றையே கனவில் சுமக்கும் எமது ஈழத்தாய், டெசோ கொரில்லாக்கள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் தன்மானச் சீமான்கள்... இவ்வளவு பேரையும் கிள்ளுக்கீரையாக நினைத்து, இந்தியாவில் காலடி வைக்கும் உன் வீரத்தை பாராட்டியே தீரவேண்டும். (ஆனா ஒண்ணு. தமிழ் நாட்டுப் பக்கமா வந்து இவங்க வீரத்தை சோதிச்சிடாதீங்க பாஸ். இதை வெச்சித்தான் இவங்க பொழப்பு நடக்கணும்!)

##

முகநூல் அப்பவே இருந்து தொலைச்சிருந்தா, காந்தியின் கோவணத்தை தொவைச்சி கிழிச்சிருப்பானுங்க. இன்னைக்கு தேதியில ரூவா நோட்டுல இம்மாம் பெரிய சிரிப்பு சிரிச்சிருக்கமாட்டாரு காந்தி! (மாசக் கடைசிண்ணே!)

##

புதுச்சேரி : ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர், "ஜெயேந்திரர் தற்போது சதுர்மாஷ்ய பூஜையில் (விரதம்) இருப்பதால், அவர் மடத்திலேயே தங்கி பூஜை செய்ய வேண்டியுள்ளது.

இதே வழக்கில், 2005ம் ஆண்டு செப்டம்பரில், சதுர்மாஷ்ய பூஜையில் கலந்து கொள்ள, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு அளித்துள்ளது' என்று கூறி வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை, அக்., 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கோர்ட்டு, வாய்தா, வழக்கு... போங்கடாங்...

##

குஷ்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்?: 
மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுக அனுப்பிய நோட்டீஸ்.

ஜாக்கெட்ல வெச்ச விண்டோ பெருசா இல்லையாம். அதான்! - பெயர் சொல்ல விரும்பாத அண்ணன் அழகிரி விசுவாசி.

##

2020ல், இந்தியா வல்லரசாகிவிடும் என்பது அப்துல்கலாமின் நம்பிக்கை. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை. பல்கலைக்கழகங்கள் உட்பட அரசின் அனைத்து துறையிலும், லஞ்சம் நிறைந்து இருக்கிறது. இங்கு, படித்தவர்கள் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்.சுதந்திரம் பெற
்று, 66 ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையும், வறுமையும் குறைய வில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட உத்திரவாதம் இல்லாத மக்களும், உள்ளனர். இன்றைக்கு, இந்தியாவில் 25 சதவீதம் பேர் குடிசைகளிலும், 15 சதவீதம் பேர் ரோட்டோரங்களிலும் வாழ்கின்றனர். இன்னும் தீண்டாமை ஒழியவில்லை - பாலகுருசாமி.

Copy to :
1. ஆல்-இன்-ஆல் அப்துல் கலாம்.
2. அப்துல் கலாம் கனவு காணும் குழந்தைகள்.
3. மெழுகுவர்த்தி போராட்டக் குழு.





##





1 comment:

Anonymous said...

really super..

Post a Comment