ஏம்பா விக்ரமு..., அல்லாரும் ஆஸ்காருக்கு அவங்க அவங்க படங்களை அனுப்புறாங்களே; நீயும் உன் 'தெய்வத் திருமகள்' படத்தை அனுப்பி முயற்சி பண்ணக்கூடாதா? நல்லா குடுப்பாங்க, வாங்கிக்க. ஆஸ்காரைச் சொன்னேன்!
000
ஊருக்கு ஒரு 'கைப்புள்ள' இருக்கத்தான் செய்வானுங்க போல! நம்மூர்ல சீமான்னா, கர்நாடகாவுல வாட்டாள் நாகராஜு. ஒரு கொள்கையும் இல்ல; ஒரு கோட்பாடும் இல்ல. எதோ கட்சி நடத்தனுமுன்னு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' நடத்திக்கிட்டிருக்காங்க.
000
12:25க்கு முகப்பேர் த.பா வீட்டுக்கு வந்து பிறந்த நாள் வாழ்த்து; 12:50க்கு அண்ணா ஆர்ச் விசிட்டிங்.
அதாவது, ஆப்பசைத்த குரங்கா நிற்கும் அண்ணா ஆர்ச்சை நேரடியா வந்து பார்த்தா மக்கள் கிண்டல் அடிப்பாங்க அப்படீங்கற ஒரே காரணத்துக்காகத்தான் தபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றாப்புல சீன் செட்டப் பண்ணிட்டாங்க அம்மா. இதையெல்லாம் புரிஞ்சிக்கத் தெரியாம, வாயெல்லாம் பல்லா சிரிக்கிறாரு நம்ம பாண்டி...
000
இந்து சமய அற நிலையத்துறை, பெரிய பாளையம் திருக்கோயில். மாண்பு மிகு அம்மா அவர்களின் 'பிளாட்டினம் அட்டை' திட்டம் : அம்மாவின் அன்னதான திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குபவருக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 20 வருடத்துக்கு ஸ
்பெஷல் தரிசனம் மற்றும் கோயில் உயர் கட்டணக் குடில்களில் 10 பேர் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.
'அடிப்பாவி, ஒரு கோடியா...? எவன்னா திருட்டுப்பயதான் இந்த அட்டைய வாங்குவான்,' இந்த பேனரைப் பார்த்துவிட்டு அப்பாவி மக்கள் பதறிப்போய் அடித்த கமண்ட் இது.
இந்த பேனர் பெரியபாளையத்துக்கு சூட் ஆகாது. மயிலாப்பூர், தி.நகரில் இருக்கவேண்டிய பேனர் இது. இன்னும் ஸ்பெஷலாகச் சொல்லப்போனால், தி. நகர் நளாஸ் ஆப்பக்கடை முன்னால் இருக்க வேண்டிய பேனர் இது. ஏனென்றால் அங்கேதான் ஆப்பத்தில் தங்கம் தூவி விற்கிறார்களாம். தங்க ஆப்பத்தை தின்று ஏப்பம் விடுபவர்கள் வேண்டுமானால் பிளாட்டினம் அட்டை வாங்கலாம்!
'அடிப்பாவி, ஒரு கோடியா...? எவன்னா திருட்டுப்பயதான் இந்த அட்டைய வாங்குவான்,' இந்த பேனரைப் பார்த்துவிட்டு அப்பாவி மக்கள் பதறிப்போய் அடித்த கமண்ட் இது.
இந்த பேனர் பெரியபாளையத்துக்கு சூட் ஆகாது. மயிலாப்பூர், தி.நகரில் இருக்கவேண்டிய பேனர் இது. இன்னும் ஸ்பெஷலாகச் சொல்லப்போனால், தி. நகர் நளாஸ் ஆப்பக்கடை முன்னால் இருக்க வேண்டிய பேனர் இது. ஏனென்றால் அங்கேதான் ஆப்பத்தில் தங்கம் தூவி விற்கிறார்களாம். தங்க ஆப்பத்தை தின்று ஏப்பம் விடுபவர்கள் வேண்டுமானால் பிளாட்டினம் அட்டை வாங்கலாம்!
000
கருணா நிதிக்கு பாரத ரத்னா - திமுக பரிந்துரை.
அட கூமுட்டைகளா... போயும் போயும் லோக்கலுக்கு ஆசைப்பறீங்களே. தலிவர் ஃபேசு ஃபோர்ப்ஸ் அட்டையில வரணும்; அப்படி இல்லைன்னா ப்ளேபாய்ல அட்டைப் படமா வரணும்; சிறந்த சிரிலங்கா டிராமாவுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கணும்... இப்படி ஆசைப்படுங்களேண்டா!! ஏன்னா, இதுல ஒரு 'லாஜிக்' இருக்கு.
000
உயிரை மாய்த்துகொள்வதாக இருந்தால்
ஒரு தனுவாக மாறுங்கள் : திருமா ஆவேசம்.
தனுவா மாறப்போறவங்க அப்படியே, 'திருமா, காங்கிரஸ் துரோக கூட்டணி எம்.பி' அப்படீன்னு கையில பச்சையும் குத்திக்கோங்க. ( செத்தப்புறமா எந்தக் கட்சியை சேர்ந்தவர்னு கண்டுபுடிக்கிறது ரொம்ப ஈசி பாருங்க!!)
000
ஹாவார்டு லார்ட்டு லபக்குதாசு யூனிவெர்சிட்டியிலியே பயலுங்க காப்பி அடிச்சி பாஸ் பண்ணியிருக்காங்க. 150 பேரை புடிச்சிட்டாங்க. நாங்கதான் எகனாமிஸ்ட்டை உருவாக்குறதுல ஒலகத்துலயே பெரிய்ய மசுராண்டிங்கன்னு சொல்லிக்கிட்டு திரிந்த யூனிவெர்சிட்டிலதான் இந்தக் கேவலம். இப்ப டவுட்டு வருது. இங்கே தப்பு தப்பா கூட்டிக் கழிக்கிற சிதம்பரத்துக்கு ஒரு டெஸ்ட்டு வையுங்கடா!
000
"மிகுந்த யோசனைக்குப் பிறகு டீசல் விலையைக் கூட்டும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. எனவே டீசல் விலையைக் குறைக்கவே கூடாது. அப்படி விலைக் குறைப்பு நடக்குமானால் மத்திய அரசின் நம்பகத் தன்மை முற்றிலும் போய்விடும். ஆகையால், எக்காரணம் கொண்டும் டீசல் விலையைக் குறைக்கவே கூடாது." - மான்டேக் சிங்.
ஆமா, அவரேதான்... அதே '28 ரூவா' மாண்டேக்தான். பேசுறது போதைல இல்லை; கொழுப்பு!!
000
2 லட்சம் கோடி ரூபாய்க்கு, அதி நவீன போர் விமானங்களை வாங்க, இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, விமானப் படை துணைத் தளபதி, ஏர் மார்ஷல் ஆர்.கே.சர்மா கூறியதாவது: "ராணுவத்துக்கான ஆயுதத் தயாரிப்பில், தனியார் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தனியார் துறையை, பொதுத் துறை நிறுவனங்கள், போட்டியாளராக கருதக் கூடாது."
சிதம்பரத்தின் எக்கோ வாய்ஸ் மாதிரி இந்தாளு பேசுறாரு பாருங்க. அம்பானிக்கும் டாட்டாவுக்கும் கொட்டிக் கொடுக்கணும். அவ்வளவுதான். நாட்டின் பாதுகாப்பு அப்படீங்கறது எல்லாம் சும்மா கண் துடைப்பு. எதுக்கும் நாம காயப்போட்ட கிழிஞ்சுபோன ஜட்டிய பத்திரமா பாத்துக்குவோம். இந்த பட்டாளத்துக்காரனை நம்ப முடியாது!
000
முதல்வரின் தொலைநோக்குத்திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.
ஆமா, நாங்க எவ்வளவு மகிய்ச்சியா இருக்கோம். அத்த வுடுங்க. அம்மா கடவாய் தங்கப்பல்லு தெரிய உங்களப் பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறாங்க. கொஞ்சம் வாய மூடுங்க!
No comments:
Post a Comment