My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

6.11.12

மூக்குல மாவுக்கட்டு... எனது முகநூலிலிருந்து... 20

வலுக்கட்டாயமா, தெருவுல போகிற கொய்ந்திக்கு கூட ஷோபான்னு தன்னோட அம்மா பேரை வைக்கிறான் ஒருவன். ஆனா, இந்த மர்மக் காய்ச்சலுக்குத்தான் ஒரு பேரை வைக்க முடியல்லே. பேசாம இதுக்கு "அம்மா காய்ச்சல்" அப்படீன்னு பேர் வெச்சுடலாமா?!

000

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் உயராது - அன்புள்ள அம்மா.

இந்த நல்ல செய்திய படிக்கும்போதுதான், யாரோ அபசகுனமா தும்முற சவுண்டு கேக்குது. வுட்டு ஏத்திருவாங்களோ?!

000

அஜ்மல் கசாப்புக்கு டெங்கு காய்ச்சல்...

ஏதாவது எக்குத் தப்பா ஆனாக்கூட, பாகிஸ்தான்காரனுங்க ஏன்னு ஒரு கேள்வி கேக்க முடியாது!!

000

'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' - டெங்கு கொசு.

000

லண்டன்: இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச தீர்ப்பாய விசாரணை கோரி லண்டனில் நாளை தொடங்கும் உலகத் தமிழர் மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

டி.கே.எஸ். இளங்கோவன்!! கணக்கு உதைக்குதே...! தோயர் தபாவுக்கு இங்க என்ன வேலை? அம்மா திட்டுவாங்க. ஓடு, ஓடிடு.

000

கல்வியை தனியார் மயமாக்கி காசு பார்த்ததில் முன்னோடி துரோகிகள் கிருத்துவ மிஷினரிகள்தான். சர்ச் பார்க் 1842. கிரிஸ்டியன் காலேஜ் 1837. லயோலா 1925.

000

நேத்து, விஜை டிவியில வால்மார்ட் வரவு, அன்னிய முதலீடு குறித்து 'அனல் பறக்காத' விவாதம் நடந்தது. வால் மார்ட் எதிர்ப்பாளர்கள் 'கொஞ்சம் லைட்டா அமுக்கி' பேசியதற்காகவே, தீக்கதிர் ஆசிரியருக்கும், நாகப்பனுக்கும், கிஃப்ட் வாவுச்சரும் பரிசு பாக்கிட்டும் குடுத்திருப்பாங்களோன்னு சந்தேகம். எதையும் சந்தேகப் படு. ஏன்னா, நிகழ்ச்சியை நடத்தியது விஜை டிவியாச்சே!!

000

டெங்குவை மர்மக்காய்ச்சல் என்று மாற்றிக் கூறுவதும், காதலர் கொலைகளை கருணைக் கொலை என்று விளிப்பதும் சரியென்றால்... திருட்டு அல்லது ஊழலை 'சந்தர்ப்பத் தவறு' என்றும், வறுமையில் உழல்பவனை 'விதியால் நொந்தவன்' என்றும் கூறிவிடுங்களேன்? உங்கள் அம்மாவை 'அப்பனின் மனைவி' என்று விளிப்பதும் சாலப் பொருந்தும். நீங்க பேப்பர் விக்கறதுக்கு பதில் பிச்சை எடுக்கலாம்; கவுரவமா இருக்கும்!

000

பீஜிங் - "அணுசக்தி மூலம், 20 ஆயிரம் மெகா வாட், மின்சாரம் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது,'' என அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இப்போ சீனா, அமெரிக்கான்னு சுத்துறவரு இப்படித்தான் பேசுவாரு. பிற்காலத்துல 'கூடுவாஞ்சேரி குபேரன் துணிக் கடை' திறப்புவிழாவுக்கு ரிப்பன் வெட்டுற காலகட்டம் வரும். அப்போ வேறமாதிரி பேசுவாரு பாருங்க!

000

"திருப்பதி, திருமலை கோவிலில், வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனை, விரைவில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.'' - தேவஸ்தான நிர்வாக அதிகாரி.

அப்படிப் பார்த்தா, 90% கோவணம்தான் சம்பிரதாய உடையில் கியூவுல நிக்கும். ஒருத்தர் பின்னால ஒருத்தர்! பார்க்க ரொம்ப ஆபாசமா இருக்குமேய்யா!!

000

தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார், "ஆர்டர்லி' (எடுபிடி) வேலை செய்கின்றனர். போலீஸ் வேலையே செய்யாத இவர்களுக்கு, ஆண்டு தோறும் 120 கோடி ரூபாய் வரை, அரசு கஜானாவில் இருந்து ஊதியமாக வழங்கப்பட்டு, நிதி வீணடிக்கப்படுகிறது. 

அந்த அம்மா சொன்னா, வெங்காயம் தக்காளி வாங்கி வரணும்; இந்த அம்மா சொன்னா, 'வெங்காயம் தக்காளி விலைய ஏன் எத்தினீங்கன்னு' போராட்டம் பண்றவங்களை வெளுத்து வாங்கணும். மொத்தத்துல அம்மாவோட அடிமைங்க!

000

"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்ட நிறுவனத்திற்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளதால், அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளார், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி. 

ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்கிட்ட பினிசிங் சரியில்லையேப்பா. சரி, சரி. இவரை பெர்பாமன்ஸ் பண்ண விடுங்கடா!

000

வரும் தீபாவளியன்று சரக்கு விற்பனை 125 கோடிக்கு இலக்கு...

எப்படி சரக்கை கலக்கணும்... எப்படிக் குடிக்கணும்... பிராந்தி என்றால் என்ன, விஸ்கி, ரம் என்றால் என்ன, எதில் போதை அதிகம்... அப்படீன்னு ஒண்ணாங்கிளாஸ் பாடப் புஸ்தகத்துலயே ஒரு பாடமும் (விளக்கப் படங்களுடன்) வச்சிட்டா, பிற்காலத்துல நம்ம சந்ததிங்க மிகச் சிறந்த குடிமகனா இருப்பாங்க. அரசு ஆவன செய்யுமா?

000

வழக்கு போட்டால் கோர்ட்டுக்குத்தான் செல்ல முடியும் : முதல்வருக்கு தே.மு.தி.க., பதில்.

இல்லைன்னா... அப்பொல்லோவுக்கு போகணும். மூக்குல சளின்னுட்டு மாவுக்கட்டு போட்டு பிடிவாரண்ட்டு முடியிற வரைக்கும் படுக்க வச்சிருவாங்க!

000

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு.

அவங்களால முடியலைன்னா, 'அண்ணா ஆர்ச் புகழ்' எஞ்சினீயருங்களைக் கூப்பிடுங்க. எல்லாம் நல்லபடியா ஆய்டும்!

000

"நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்தினால், தமிழகத்திலும் அமல்படுத்துவதற்கு தயார். ஆனால், பக்கத்து மாநிலங்களில், அனுமதித்து விட்டு, இங்கே அனுமதி மறுத்தால், கள்ளச்சாராயம் பெருகும்,'' - அமைச்சர் விஸ்வநாதன். 

குடிகாரன் பேச்சு மாதிரி தெரியலாம். ஆனா 'பொழுதுவிடிஞ்சா போச்சு' இல்லை. 'அம்ச்சர்' அரசாங்கத்தோட வாய்மையை அப்படியே பிழியிறாரு!


1 comment:

Anonymous said...

சரவெடி...Really superb....


By- Maakkaan.

Post a Comment