My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

11.8.10

ஹைய்யா...! ஆகஸ்டு பதினஞ்சி...!

ஹைய்யா...! ஆகஸ்டு பதினஞ்சி...!

எனக்கொண்ணும் தலகால் புரியலீங்க,

இந்தா அந்தான்னு வந்துருச்சி
ஆகஸ்டு பதினஞ்சி.
சொதந்தரம் வாங்கி எத்தனியோ வருஷமாச்சாம்.
இந்தப் பாமரனுக்குப் புல்லரிக்குதுங்க...

தீவாளி, பொங்க மதிரி,
நல்ல வேளையா செலவு வைக்காத பண்டிகை.
தீவாளின்னா சங்கராச்சாரி சாமி
சன் டிவில வந்து
இன்னைனைக்குத்தான் தீவாளி,
இன்னின்னைக்கு கறி சாப்பிடலாம் / சாப்பிடகூடாது
அப்படீன்னு தெள்ளத் தெளிவா
மொத நாளே, முக்கிய அறிவிப்பா,
அற்புதமா சொல்லிப்போடுவாரு.

நல்லவேளை,
நேத்தைக்குத்தான் ஒரு குடிகாரன்
அறிவிச்சிக்கிட்டே, ஒளரிக்கிட்டே போனான் :
"டேய், தீவிரவாதிங்க
டெல்லியில ரெண்டுபேர் மாட்டிகிட்டாங்களாம்,
சுதந்திர தின விழாவிலே
குண்டு போடப்பாத்தாங்களாம்,
எண்டிடிவில சொல்றாங்களாம்.
கைது பண்ணிட்டாங்களாம்.
உளவுத்துறை செய்திடா,
எச்சரிக்கையாயிருங்க..."
அவன் உளருகிறான் என்றாலும்
அந்த உளரல் சரிதானோ?
எப்பவும் போல உளவுத்துறை அறிக்கைவிட்டால்...
அடுத்து வரப்போவது ஆகஸ்ட்டுப் பதினஞ்சி.
கண்றாவி - அந்தப்பக்கம் பாகிஸ்தான் இருக்குறதால
நம்பாம இருக்கமுடியுமா?
அட ராமா... காலங்கெட்டுப்போச்சிடா.

***

எது எக்கேடும் கெட்டுப்போகட்டும்,
டாஸ்மாக் மூடலைன்னா சரிதான்,
ஆஊன்னா, காந்திஜெயந்தி
மகாவீரு மண்ணாங்கட்டீன்னு
கடைய மூடிரானுவோ...


ஆகஸ்டுப் பதினஞ்சண்ணிக்கி
வந்தேமாதரம் - புது தொனியிலே
புத்தம்புது மெட்டுல
ஏஆர் ரகுமான் பாடும்போது
ஏகப்பட்ட இந்தியாவும்
என் கண்முன்னே
கலர் கலராய் கிளர்ந்தெழும்.

சன் டிவிய திருப்பினா
சாலமன் பாப்பைய்யா.
'சந்தோஷம் கொடுப்பது
ஆணா அல்லது பெண்ணா'
பட்ட்டிமண்டபத்தை நினைத்தாலே
பட்டா, கிளுகிளுப்பூட்டுது.
பிளஸ் - திரைக்குவந்த சில நாட்களேயான
புத்தம்புது திரைப்படம்.

கலைஞ்சர் டிவில முழு நேரத்துக்கும்
மானாட - மயிலாட.
நேரம் அனுமதித்தால்
பேரன்மார்களின் புத்தம்புது,
திரைக்கு வந்த சில நாட்களேயான...
புரியலன்னா... போடாங்கொய்யா!

ராஜ் டிவில எப்பவும்போல
வீரபண்டிய கட்டபொம்மன்.

சிறப்பு ஒளிபரப்பாக
டில்லியிலிருந்து
காலங்க்காத்தாத்தால,
டாஸ்மாக் தொறக்கரதுக்கு முன்னாலயே
உயிருள்ள ஒலிபரப்பு.
தூர்தர்ஷன்லதான்.
நாட்டுப் பற்றுள்ளவங்க
கண்டிப்பாப் பாத்தேயாகணும்.
ஜன நாயகத்தின் ஜனாதிபதி
ஓரிரு உரையாற்றுவார்.
அவரைப் பின்னூட்டமிட்டு
பிரதமரும் பிரமாதிப்பார்.
அந்தப் பேருரையில்
பாகிஸ்தான் வெட்கங்க்கெட்டுப் போகும்.
எதிரிகளை எச்சரிப்பதிலேயே
பேருரையிருப்பதால்
எதிரில் அமர்ந்திருக்கும்
சீட்டுப் பிடித்தவர்கள்
சற்று நெளிந்துதான் போவார்கள்.
நல்ல வேளையாக எலிகாப்டரும் ஏரொப்ளானும்
எமகாதக வேகத்தில் பூவைத்தூவும்போதுதான்
புளகாங்கிதமடைவார்கள்.

***

என் குழந்தைகளுக்கு
இனிக்கும் மிட்டாய்கள்.

என் மனைவியும் தயங்கித் தயங்கி
கையேந்தி ரெண்டு மிட்டாய்கள்
தவராமல் வாங்கிவிடுவாள்.
ஒன்று அவளுக்கு.
இன்னொன்று எனக்கு.
ஆனால் திரை மின்னல்காளாலும்
சின்னத்திரைச் சீரல்களாலும்
குவார்ட்டர் போதையினாலும்
மறுதலித்துக் குறட்டை விட்டதால்.
மறு நாள் காலைவரை
அதாவது -
ஆகஸ்டுப் பதினாறு காலைவரை
ஈ மொய்த்துக்கொண்டிருக்கும்
அந்த மிட்டாய்.
மறு நாள், யாரும் பார்க்காதவாறு,
அதைக் காலால் எட்டி உதைத்துவிட்டு
எப்பவும்போல 'வேலைக்கு ஓடு'.


***

ஆகஸ்ட்டுப் பதினஞ்சி -
ஒரு நாள் உற்சாகம்;
நாளை எப்போதும்போல
வாழ்க்கை ஒரு 'சாகசம்'.

- புதிய பாமரன்.

No comments:

Post a Comment