My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

6.12.10

ஏழுமலை தாண்டிவந்தா ஏலேலங்கிளியே

ஏழுமலை தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
ஏழுகடல் தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
பெரிய காடு ஒண்ணிருக்கும் ஏலேலங்கிளியே
காட்டுக்குள்ளே ஊரிருக்கும் ஏலேலங்கிளியே
மொத்ததிலே நாலே வீடு ஏலேலங்கிளியே
தண்ணியில்ல கரண்டுமில்ல ஏலேலங்கிளியே
தின்பதற்கும் ஏதுமில்ல ஏலேலங்கிளியே
கொடுமயிலும் கொடுமையாச்சு ஏலேலங்கிளியே

ஆடுமேய்க்க கிளம்பியாச்சு ஏலேலங்கிளியே
ஆறு மணிக்கு திரும்பிடுவான் ஏலேலங்கிளியே
பசியெடுத்த மதியவேளை ஏலேலங்கிளியே
வயிற்றில் போட ஏதுமில்ல ஏலேலங்கிளியே
உச்சிமரக் கிளையிலதான் ஏலேலங்கிளியே
நாவப்பழம் நெறஞ்சிருக்கு ஏலேலங்கிளியே
மரமேறி உலுக்கிவிட்டான் ஏலேலங்கிளியே
கிளையொடிந்து விழுந்துவிட்டான் ஏலேலங்கிளியே

கழுத்து முறிஞ்சு கிடக்கின்றான் ஏலேலங்கிளியே
தண்ணீர் கேட்டு அலறுகிரான் ஏலேலங்கிளியே
குடிக்கத் தண்ணி வேணுமின்னா ஏலேலங்கிளியே
ஊரிலெயும் தண்ணியில்ல ஏலேலங்கிளியே
பத்து மயிலு போய்வரணும் ஏலேலங்கிளியே
பாவி உயிரு தாங்கிடுமா ஏலேலங்கிளியே

கோகா கோலா குப்பியோடு ஏலேலங்கிளியே
குட்டிப் பையன் ஓடிவந்தான் ஏலேலங்கிளியே
ஒண்டிக் குடிசைக் கடையிலே ஏலேலங்கிளியே
இதுமட்டும்தான் இருக்காம் ஏலேலங்கிளியே
"ஆபத்துக்கும் பாவமில்ல ஏலேலங்கிளியே
அவன் வாயில் இத ஊத்து ஏலேலங்கிளியே"
ஆனாலும் அவன் செத்தான் ஏலேலங்கிளியே

போஸ்ட்டுமார்ட்டம் அறிக்கை வந்தது ஏலேலங்கிளியே
செத்ததுக்கு காரணம்தான் ஏலேலங்கிளியே
கழுத்து முறிவு ஏதுமில்லையாம் ஏலேலங்கிளியே
பூச்சிமருந்து குடித்ததாலே ஏலேலங்கிளியே
செத்துப் போனானாம் பாவிப்பய ஏலேலங்கிளியே

- புதிய பாமரன்.

No comments:

Post a Comment