ஒரு புர்கா கூடாரத்துக்குள்
ஒளித்து வைக்கப்பட்ட
எம் சகோதரிகளின் பரிமாணங்கள்.
பரிமாணங்களனைத்தும்
சுதந்திரந் தேடிய கூர்மத்திலிருந்தன.
ஒளித்து வைக்கப்பட்ட
எம் சகோதரிகளின் பரிமாணங்கள்.
பரிமாணங்களனைத்தும்
சுதந்திரந் தேடிய கூர்மத்திலிருந்தன.
இருளுக்குள் இருந்துகொண்டு
அவர்களின் கண்கள் மட்டும்
அவர்களின் கண்கள் மட்டும்
ஒளிபாய்ச்சும் –
விலங்கொடிக்கும் விவரந்தேடி.
அவர்களின் கண்களில்
அவர்களின் கண்களில்
அந்த கையறு நிலையின் வீச்சம்.
அந்த ஒளிவெள்ளத்தில்
சமுதாயம் கண்கள்
கூசித்தான் போகவேண்டும்.
ஆனால் அவை
சமுதாயம் கண்கள்
கூசித்தான் போகவேண்டும்.
ஆனால் அவை
பார்ப்பதையே
தவிர்த்துக் கொண்டன!
அந்த ஒளிவெள்ளம்
ஆண்டவனை நோக்கியும்
பிரார்த்தித்துப் பாய்ச்சப்பட்டது.
அப்போது அந்த ஆண்டவன்
ஆண்களுக்கு மட்டுமே
போதனை செய்துகொண்டிருந்தான் –
பெண்களை எவ்வெவ்விதத்தில்
வழி நடத்த வேண்டுமென்று.
பிரார்த்தித்துப் பாய்ச்சப்பட்டது.
அப்போது அந்த ஆண்டவன்
ஆண்களுக்கு மட்டுமே
போதனை செய்துகொண்டிருந்தான் –
பெண்களை எவ்வெவ்விதத்தில்
வழி நடத்த வேண்டுமென்று.
செய்வதறியாது திகைத்து,
அந்தக் கண்களிலிருந்து
ஒளிவெள்ளம் ஆண்டைகளின்,
ஆண்களின் குவியலுக்குள்
அந்தக் கண்களிலிருந்து
ஒளிவெள்ளம் ஆண்டைகளின்,
ஆண்களின் குவியலுக்குள்
பாய்ச்சப்பட்டது.
அவர்களோ
அவர்களோ
போதனைகளின் போதையில்
அந்த இறைவனிடமே
சந்தேகங்களைக் மேலும் மேலும்
கிளறிக்கொண்டேயிருந்தார்கள்!
பெண்கள் எப்படியெல்லாம்
நடத்தப்பட வேண்டுமென்று!
அந்த இறைவனிடமே
சந்தேகங்களைக் மேலும் மேலும்
கிளறிக்கொண்டேயிருந்தார்கள்!
பெண்கள் எப்படியெல்லாம்
நடத்தப்பட வேண்டுமென்று!
இருளின் விடை காண
ஒளி பாய்ச்சித் தேடியபோதும்
கிடைத்தது…
மீண்டும் இருள்தான்!
ஒளி பாய்ச்சித் தேடியபோதும்
கிடைத்தது…
மீண்டும் இருள்தான்!
அடிக்குங் கைகளைத்
தடுத்த போதும்,
இயலாமையில் அறற்றிப்
புலம்பியபோதும்,
இதயம் குமைதலால்
ஏனென்று கேட்டபோதும்,
சுமை பாரம் பூமிக்குள் அழுத்த
கைதொழுது அழுதபோதும்…
எம் சகோதரிகளுக்கு
கேட்காமலேயே கொடுக்கப்பட்ட
ஆறுதல் சுதந்தரம்
தலாக்!
தடுத்த போதும்,
இயலாமையில் அறற்றிப்
புலம்பியபோதும்,
இதயம் குமைதலால்
ஏனென்று கேட்டபோதும்,
சுமை பாரம் பூமிக்குள் அழுத்த
கைதொழுது அழுதபோதும்…
எம் சகோதரிகளுக்கு
கேட்காமலேயே கொடுக்கப்பட்ட
ஆறுதல் சுதந்தரம்
தலாக்!
புர்காவுக்குள் இருக்கும்
மூட்டை பளுவாயிருக்குமென்று
நினக்கும் நிமிடத்திலேயே
தலாக் எனும் வார்த்தை மூலத்தால்
ஒரு மூலையில் இறக்கிவைக்கப்பட்டு
ஆண்களின் பயணம்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது…
மூட்டை பளுவாயிருக்குமென்று
நினக்கும் நிமிடத்திலேயே
தலாக் எனும் வார்த்தை மூலத்தால்
ஒரு மூலையில் இறக்கிவைக்கப்பட்டு
ஆண்களின் பயணம்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது…
***
சாத்தான்களின் வேத அலறலில்
கழுத்திலேற்றப்பட்ட தாலி.பெண்ணாய்ப்பிறந்த பெருமைக்காக
வாழ் நாள் முழுதும்
விட்டகலா விலங்கு.
விலை கொடுத்து வாங்கப்பட்டதால்
விலங்கின் மதிப்பும் அதிகம்.
பொன்னும் பொருளுமாக
விலை கொடுக்கப்பட்டே
இவ்விலங்கு பூட்டப்படுகிறது.
கைமாற்றும், கடன் பெற்றும்,
கண்ணீர் உதிரம் சிந்தியும்
பெற்ற கடனை முடிக்கும்
பெண் பெற்ற பெற்றோர்.
கல்யாணம் சுப மங்களம்
ஆனால்
கடன் பட்ட வலியோடு...
மூன்று முடிச்சு விலங்குக்கு
முப்பத்து முக்கோடி
தேவர்களும் சாட்சி.
தாலியால் வேலியிட்டதால் -
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
அப்பெண்ணின் சுதந்தரத்தை
அக் கயிறொன்றே வழி நடத்தும்.
கட்டிய கணவன்
கொடியவனென்றாலும்
கட்டவிழாது.
கடவுள் சாட்சியாக
கட்டப்பட்ட முடிச்சுகள்
நீதிமன்றத்தில் மட்டுமே
நிறுத்தி அவிழ்க்கப்படும்.
அல்லது -
அது கடைசியாக நிகழ்ந்துவிடும்...
அவளின் மரணத்தில்!
தாலி ஏற்றபின்
தாழ்ந்த தலை நிமிறக்கூடாது.
தாலி இழந்தபின்
தெருவில் எதிர் படக்கூடாது.
எனில்,
பெண்ணின் சுதந்தரம்
ஒரு தாலிக் கயிற்றுக்குள்தானா?
உதிரத்தில் மூழ்கி
உதிரத்தில் சிசு பிறந்தும்,
உதிரமென்பது தீட்டென்று
படைத்த பெண்டிரை வெறுக்கும்
பழம்பெரும் தெய்வங்கள்.
தெய்வங்களின் தராசு முட்களும்
பெண்களைத்தான் குத்துகின்றன.
***
யாதொரு மதத்திலும்
சாத்திரங்களும் சூத்திரங்களும்
பெண்களை தீது செய்வதேன்?
பெரிதும் படித்த பல்சான்றீரே,
ஞானம் முற்றிய பண்டிதரே,
யாதொரு மதத்திலும்
பாரபட்சம் பெண்ணுக்கு மட்டுமேன்
எனும் ஒரே கேள்விதான்
மனதை மாய்ந்து மாய்ந்து அறுக்கிறது.
***
பல நூறு மார்கத்திலும்
மதத்திலும் போற்றப்படும்
இவ்வண்ட சராசரத்து
சக்தியுள்ள பெருந் தெய்வங்களே...
அகிலமாளும் ஆண்டவர்களே...
உங்களாலேயே படைக்கப்பட்ட
பெரியாரையும் பாரதிதாசனையும்
படித்துப் பாருங்கள்.
நீங்கள் எதை மறந்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
நினைவு படுத்துவார்கள்.
நீங்கள் எதை மறுத்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
எடுத்தியம்புவார்கள்.
குறைந்த பட்ச கோரிக்கையாக
நீங்கள் கொடுக்க மறந்த -
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பேதமற்ற சம உரிமை
கொடுத்தருள்வீராக.
ஏனெனில்
நீங்கள் படைத்த காலந்தொட்டு,
வாழ்வெனும் சக்கரம்
இவ்விரு சக்திகளால்தான்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/ பின்னூட்டத்தின் தொடர்ச்சி.
5 comments:
not nice
dont attack the religion
வல்லோனின் அருள் பெற்று
வாஞ்சை நபி புவி நின்று,
கயவர்களை இனம் கண்டு,
இஸ்லாத்தின் நெறி சுழற்றி
சாட்டையடி தந்துவிட...
அத்துனையும் தகர்த்தெரிந்து
உன் பாதம் முன் வைத்து
புத்துலகு சமைத்திடவே
பொன்மங்கை நீ வாராய்...
ஈரேழு அகவை தின்று
பருவ மங்கை நீயாக...
உன்னுரிமை புர்கா உடையுரித்து
பருகிடவே எத்தனித்தான்...
கயவன் ஒருவன் புதிய பாமரன்...
உரம் கொண்டு, உன்னுரிமை கோர..
ஊர்கூடி,குரல் கூட்டி
இழிபிறவி எனப் பழித்தான்
கல்வி,முதல் கணவன் வரை
விவாகம் முதல் ரத்து வரை
சொத்து முதல் நித்தமென
அத்துனையும் கை கொண்டாய்
எத்துரையும் கால் பதிக்க
ஏகனவன் தாழ்திறக்க
இஸ்லாத்தில் உயிர்கொண்டு
இறை தூதின் நெறி நின்று,
ஈருளகின் பொருள் கொண்டு
நற்சமூகம் தான் படைக்க
இனியவளே நீ வாராய்..
கண்ணியமாம் ஹிஜாப் பேணும் புருகா அணிந்து
கயவர்களின் கனவு எரித்து
இஸ்லாத்தின் வழி கண்டு
ஈமானின் ஒளி கொண்டு...
புதியதோர் சமுதாயம்
கட்டி எழுப்ப நீ வாராய்...
உனக்குரிமை எனக்கோரி,
உன்னாடை களைந்துவிட
கள்வர்களின் கூட்டமொன்று
வெறிகொண்டு அலையுது பார்...
பாமரர்கள் தாமென்று கூறி...
உடல் மறைத்து நீ சென்றால்
அடிமைத்தளை எனச் சொல்லி
தன்னடிமைத்தனம் மறைத்து
தானிழந்த சுகம் மறந்து
கூச்சலிடும் பாமர மாந்தர் முகம்
கருஞ்சாயம் பூசிவிட
கன்னியவள் நீ வாராய்...
உனதாடைதனை யுரித்து
ஊரெல்லாம் கடைவிரித்து
விழியாலே உனை மேய
ஓலமிடும் பாமர ஓனாயின்
பசுத்தோலை அறிந்திடுவாய்...
கல்வியிலே தலைசிறந்து
அறிவினிலே நிலையுயர்ந்து
ஒழுக்கமதில் ஒப்பற்று
உன் சமூக மா'க்களுக்கு
உதாரணமாய் தலைப்படுவாய்...
தீன் கூரும் பெண்மணியே...
கவிதை புரியும் படியும் புரட்சிகரமாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்.
//இருளுக்குள் இருந்துகொண்டு
அவர்களின் கண்கள் மட்டும்
ஒளிபாய்ச்சும் –//
புர்கா பெண்ணின் படம் அடைப்பானின் வலுவான எழுத்துக்கு அங்கீகாரம்.
Post a Comment