வேதியர் தீயவர்.
தூயவர் ஆகிலர்.
வடவழிச் சந்திலே
வந்தவர் ஆரியர்.
தீயவர் தீண்டினர்
திராவிடம் கருகவே.
வாதிடச் சோதிடம்
சாதகம் பெருகிட
சாதிமை தோன்றிட
பேதமை மலிந்தன.
ஆதலின் ஆதலின்
வேதியர் தீயவர்.
தூயவர் ஆகிலர்.
தீயினால் வேள்விகள்
தெய்வங்கள் நீண்டன.
வேதமும் வருணமும்
புணர்தலில் பிறந்தன
சாதியும் பேதமும்.
தீண்டத் தகாரென
திராவிடர் ஆகினர்.
திரிந்தனர் பிரிந்தனர்.
ஆதலால் தீயவர்
ஆரிய வேதியர்.
தூயவர் ஆகிலர்.
தீண்டவும் தகாதவர்
ஆரியர் எனக்குறி.
பார்ப்பனம் பழிக்கவும்
ஆரியம் அகலவும்
திராவிடம் தழைக்கவும்
தினவுசேர் தோள்கொடு.
சிந்தைசேர் அறிவொடு
பெரியார் பேணுவம்!
பெரியார் போற்றுவம்!!
பெரியார் போற்றுவம்!!!
2 comments:
தினவுசேருவேன் தோள்கொடுப்பேன்.
சிந்தைசேர்ப்பேன் அறிவொடு
பெரியாரரை பேணுவேன்!
பெரியாரரை போற்றுவேன்!!
பெரியாரரை போற்றுவேன்!!!
great....
by- Maakkaan.
Post a Comment