My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

8.2.12

எனது முகநூலிலிருந்து...

https://www.facebook.com/puthiyapaamaran

# என்னைக்கு சிட்டில இருக்குற எல்லா ரோடும் வழவழன்னு, பளபளன்னு கண்ணாடி மாதிரி மின்னுதோ, அன்னைக்கு எடுக்கிறேண்டா என் ஆடிய. அதுவரைக்கும் அந்த AUDI ஷோ ரூம்லயே இருக்கட்டும். இப்போதைக்கு எனக்கு மா நகர பஸ். அதுவும் ஒயிட் போர்டு ஒன்லி!!


# தானே புயல் நிவாரணம் குடுத்து முடிச்சபிறகு, கடலூர் மாவட்டத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி வட்டம், மாவட்டம், சதுரம், முக்கோணமெல்லாம் 'ஸ்கார்பியோ' வாங்கிடும்!



# காதுகுத்து, பூப்புனித நீராட்டு, கல்யாணம் போன்ற விழாக்களை தடபுடலாக போஸ்டர் ஒட்டி, பேனர் கட்டி, ஐயர் வைத்து நடத்த முடியவில்லையே என ஏங்கித் தவிக்கும் புரட்சிகர 'தோயர்களே', பூப்புனித நீராட்டு விழா அப்படீன்ற டைட்டிலுக்கு முன்னால 'புரட்சிகரமான' அப்படீன்னு போட்டுட்டா ஈசியா தப்பிச்சிக்கலாம். அதே மாதிரிதான் 'புரட்சிகர' காதுகுத்து விழா, 'புரட்சிகர' தாலி கட்டும் கல்யாணம். கவனமா இருந்தாத்தான் நம்ம மேல யாரும் காறித் துப்பமாட்டாங்க. எல்லா வளங்களும் பெற்று வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். வர்ட்டா தோயர்!!



# சட்ட சபையில் பிட்டு படம் :

யோவ் 'பிங்க்' ஜட்டி புகழ் முத்தாலிக்.... ராம் சேனா கொரங்குங்களை வச்சிக்கிட்டு புடுங்கறியா? சட்டசபையில ஆபாசப்படம் பார்த்தவனை இன்னா பண்ணப்போற? கொய்யால, பொம்பளைங்களை அடிக்கிறதுக்கு மட்டும் அடியாளோட போற? இப்ப காட்றா பாக்கலாம் உன் வீரத்தை... இப்ப காட்டு.


# யுவராஜ் சிங்கின் "ரிப்போர்ட்டை' ஆய்வு செய்த டில்லியை சேர்ந்த டாக்டர் பவன்தீப் கோஹ்லி, உடனடியாக அமெரிக்கா புறப்படும்படி யுவராஜை வலியுறுத்தினார். "அங்கு தான் மிகச்சிறந்த சிகிச்சை கிடைக்கும்; தாமதிக்காமல் புறப்படுங்கள்,' என, இரு கைகளையும் கூப்பி கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

கூடங்குளம் டு அமெரிக்கா எவ்வளவு செலவாகும்?


# வேஷ்டியை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு, சேஃப்டி பெல்ட் மாதிரி பூணூலை காட்டிக்கொண்டு, தலை வெட்டிய பிள்ளையார் மாதிரி தொப்பையும் தொந்தியுமாக, சற்றும் கூச்ச நாச்சமின்றி மவுண்ட் ரோடு மக்கள் நெரிசலில்கூட வண்டியில் பறப்பவர்கள் எல்லோருமே ஏன் டிவிஸ் ஃபிஃப்டி, டிவிஸ் ஸ்கூட்டி, டிவிஸ் ஸ்டார், டிவிஸ் சுசுகி என்று டிவிஎஸ் டிரேட் மார்க்கின்மீது தங்களது பிட்டத்தை வைத்துச் செல்கிறார்கள்?

இதைத்தான் இனப் பற்று என்பதோ?!


# அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்.

முக நூலில் வைரஸ்!


# "இன்னாத்த படிச்சி புடுங்கறானுங்க... ஒரு கொறைஞ்சபட்சம் அறிவு வாணாம்? அம்பது காசு, ஒர்ரூவா, அஞ்சி ரூவா அல்லாம் ஒரேமாரி கீது. வைய்சான கெய்விங்க, கண்ணு மண்ணு தெரியாதவங்க எல்லாம் எப்பிடி கண்டுபுடிக்கிறது?!" - பெருமாள் கோவில் வாசலில் பூ விற்கும் கிழவி.


# பிரதமராவது ராகுலின் நோக்கமல்ல: பிரசார பிரியங்கா பேச்சு.

அந்த எழவு போஸ்ட்டுக்குத்தான் மண்ணாங்கட்டி இருக்குதுல்ல. உங்க நோக்கம் சுவிஸ் லாக்கர் பிதுங்கி வழியணும். அவ்வளவுதான்!


# பாட்டியை நம்பினீர்கள்; தந்தையை நம்பினீர்கள்;
இப்போது என்னை நம்புங்கள் : ராகுல்காந்தி பேச்சு.

உங்க அம்மாவை நம்பினோம். உங்க அக்காவையும் நம்புறோம். நீ போடபோற குட்டிகளையும் நம்புவோம். நடத்து நடத்து. நாங்க உங்களுக்கு நாட்டையே எழுதிக்கொடுத்து நூறாண்டுக்குமேல ஆகிபோச்சு!!


# 2016-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி: டாக்டர் ராமதாஸ் பேட்டி.

கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, அப்படி ஒரு நிகழ்வு நடந்துடுச்சின்னா, 2016ல தமிழக மக்கள் யாருமே சுய நினைவுல இல்லைன்னு, நீங்க எல்லாருக்கும் 'டாக்டர் சர்டிபிகேட்' கொடுக்கவேண்டி இருக்கும்!!


# திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் பேட்டி :

"திருப்பதி கோவிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட்-டிசர்ட் அணிந்து வருகிறார்கள். இதேபோல் சில இளம் பெண்கள் துப்பட்டா இல்லாமல் சுடிதார் அணிந்து வருகிறார்கள். பெண்கள் கண்டிப்பாக புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்துதான் கோவிலுக்கு வரவேண்டும். ஆண்கள் லுங்கி அணிந்து கோவிலுக்கு வரக்கூடாது. வேட்டி-சட்டை, அல்லது பேண்ட்-சட்டை அணிந்து தான் தரிசனத்திற்கு வரவேண்டும்."

ஆனா, தீட்சதருங்க மட்டும் லங்கோடு துணியோட பப்பரப்பான்னு காட்டலாமா? மொதல்ல அவங்க ஒடம்பை கோணியப்போட்டு மூடச்சொல்லுங்க!!
(பெண்களின் ஆடை விஷயத்தில் நொட்டை சொல்பவர்கள், அதே பெண்களின் முன்னால் தொப்பையும் தொந்தியுமாக இருப்பது நன்றாகவா இருக்கும்? அதான் கோனி போட்டு மூடச் சொன்னேன். பெண்களுக்கு புத்தி சொல்லும் புள்ளையாண்டான்கள், குறைந்த பட்ச நாகரிகத்தையாவது கடைபிடிக்கலாமே?!)


# விஜயகாந்துக்கு அரசியல் பக்குவம் இல்லை : திருமாவளவன்.

இவரோட அரசியல் பக்குவம்தான் ஊரறிந்த ரகசியமாச்சே!!


# நீ இன்னாதான் அப்பா டக்கரா இருந்தாலும், அரசியல்னு வந்துட்டாக்கா சமபந்தி விருந்துல உன் பக்கத்துல ஒரு பாட்டிய உக்கார வச்சிடுவாங்க. சமயத்துல பாட்டிக்கு ஊட்டியும் விடணும். இதுதான் எழுதாத சட்டம். இதுக்கு இஷ்டம்னா அரசியலுக்கு வா!!


முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டிஅரசு ஆஸ்பத்திரிகளில் மரக்கன்றுகள்: டாக்டர்கள் முடிவு.

மரக் கன்றுகள் 'பச்சைக் கலரில்' இருக்கணும். பார்த்துக்குங்க!!


# பொதுவாழ்வில் நேர்மையை உறுதி செய்ய நீண்ட நாளாகும்: பிரதமர்.

அப்போ, எப்பத்தான் 'சரண்டர்' ஆகப்போறீங்க?


# வாஷிங்டன்: தங்களை மேம்படுத்தவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

ஆசிய நாடுகள்ளகூட இந்தியா கொஞ்சம் ஸ்பெஷல்னு வச்சிக்க ஒபாமா. உங்க காலை நக்கறதுக்காகவே நாங்க எங்க ஜனாதிபதி, நிதியமைச்சர்களை தேர்தெடுத்திருக்கோம். எப்படியாவது நாங்க வல்லரசாகிடணும். தயவு பண்ணுங்க!!

4 comments:

Bala Ganesan said...

மிக நல்ல தொகுப்பு நண்பரே! தொடர்ந்து தொகுக்கவும்!

மூன்றாம் கோணம் வலைபத்திரிக்கை said...

பதிவுக்கு நன்றி!
நட்புடன்
மூன்றாம் கோணம்

Sankar Gurusamy said...

நெத்தியடி கருத்துக்கள்... தொடர்ந்து பகிருங்கள்..

http://anubhudhi.blogspot.in/

Anonymous said...

பதிவுக்கு நன்றி!


by---Maakkaan.

Post a Comment