## ‘சாகறதுக்கு முன்னால ஒரு முறை சரவண பவன்ல சாப்பிட்டு சாகணும்’ அப்படீன்னு ரொம்ப நாளா என்னோட தாத்தா பொலம்பிக்கிட்டே இருக்காரேன்னு ஒரு நா அழைச்சிக்கிட்டு போனேன். சுத்திலும் பார்வையை மேயவிட்டவர் ஒரு நெய்ப்பொங்கலுக்கு ஆர்டர் கொடுத்தார். நம்ம வீட்டுல இருக்குற சின்ன குழம்புக் கரண்டியில வழிச்சிக் கவுத்து வச்ச அளவுக்குத்தான் பொங்கல் ‘தத்தியுண்டு’ சைசில் தட்டில் ஒரு மூலையில் இருந்தது. ஒரு கப்பில் சாம்பார். ஒரு கப்பில் சட்டினி. தாத்தா கட்டுப்பட்டியான கிராமத்து விவசாயி. கூச்ச நாச்சம் படாம ஒரே வாயா அள்ளிப்போட்டுக்கிட்டு, ‘டேய், இங்க எனக்கு ஆங்காது; பசி அடங்காது. வேற எடத்துக்குப்போகலாம்’ அப்படீன்னு சொல்லிட்டு என் பதிலுக்கும் காத்திருக்காம எழுந்து வெளியில போய்ட்டாரு. சுத்தி உக்கார்ந்திருந்தவங்க எங்களையே வேடிக்கை பார்த்தாங்க. பாக்கட்டுமே. ஒரேஒரு நெய்ப் பொங்கலுக்கு நாப்பதுச் சொச்சம் (டேக்சோட) குடுத்துட்டு, இன்னொரு 'உயர்தர சைவ உணவா இல்லாத' ஓட்டலாப் பார்த்து தேடிப் போனோம்!
## மிஸ்டர் ராஜபக்சே,
நித்தி - ரஞ்சிதா ஜோடி வீடியோ ஒட்டுவேலைன்னு அமெரிக்கா நிபுணருங்க ஆராய்ஞ்சி கண்டுபிடிச்சிட்டாங்களாம். நல்லவரு நித்தி அறிக்கை வுட்டு இருக்கான். நீங்களும் நித்தியா மாமாவை காக்கா புடிச்சா, சேனல் 4 விடியோவெல்லாம் டுபாக்கூர்ன்னு அமெரிக்காவுல இருந்து ஒரு சர்டிபிகேட் வாங்கிக் குடுத்துடுவான். நன்றி!
காப்பி to :
1. மன் மோகன் சிங்.
2. சோனியா காந்தி & ஃபேமிலி.
3. காங்கிரஸ் கூடாரம்.
4. சத்திய மூர்த்தி பவன், தமிழ் நாடு.
5. 'தி ஹிந்து' பத்திரிக்கை
6. சுப்ரமணிய சுவாமி.
7. சோ ராம்சாமி
## "டெல்லிக்குப் போகணும். எவ்வளவு செலவாகும்? அங்க போயி, பிரணாப் மூஞ்சில செருப்பு வீசினா, என்ன மிஞ்சிப்போனா ஒரு 420 கேஸ் போடுவானுங்களா?..." பக்கத்து இருக்கையில் கிராப்பு வெட்டிக்கொண்ட ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.
அந்த கடைக்குள்ளிருந்த அத்தனை பேருக்கும் சுரீரென்றது!!
## ஒரு குறவன் அல்லது குறத்தி, ஒரு டவுன் பஸ்ஸில் ஏறிவிட்டால், அவர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் அவமரியாதை மிகக் கேவலமாக இருக்கும்.. "டேய், யாரைக் கேட்டு வண்ணியில ஏறினே? எறங்குடா மொதல்ல" என்று கண்டக்டர்கள் டிரைவர்களே இறக்கிவிட்டுவிடுகின்றனர். ஏனென்று கேட்டால், 'சரியாக சில்லரை கொடுக்க மாட்டார்கள்; ஏமாற்றுவார்கள்' என்று சாக்குப்போக்குச் சொல்கிறார்கள். சினிமா தியேட்டர்களிலும் இதே கதைதான். குருவிக்காரர்கள் பிச்சை எடுப்பதில்லை. திருடுவதில்லை. தன்மானத்தோடும், தம் கலாச்சார உணர்வோடும் இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் - மனிதர்களாக. நம் மூதாதையர்களாக!!
## தாலாட்டு, தப்பட்டை, பறை, ஏற்றப் பாட்டு, எசப்பாட்டு, ஒப்பாரி... இவைகளை மட்டுமே கேட்டு, வளர்ந்து, உலகையே தன் இசை மழையால் நனையவிட்டார், இளையராசா. எந்த ஒரு மேற்கத்திய இசையையும் காப்பியடிக்காமல், தன் மனதளவில் தோன்றிய மெட்டுக்களால், நம் மனதுக்குள் புகுந்துகொண்ட இசையமைப்பாளர் - ஒரு விஞ்ஞானப் பரிமாணத்தையும் நமக்கு உணர்த்துகிறார். எப்படியென்றால் :
சட்டமும், நீதியும், விஞ்ஞானமும், கணிதமும், பூகோளமும், இசையும் தங்கள் இனத்துக்கு மட்டுமே உரித்தானது என 'பீலா' விடும் பிராமணர்கள், இசையை காலங்காலமாய் காவிரித் தண்ணீரில் மூழ்கி இடைவிடாது சாதகம் செய்து, சென்னை மியூசிக் அகாடமியிலிருந்து, திருவையாறு தியாகப் பிரும்ம உற்சவம் வரை, காது கிழியக் காக்காய் போலக் கத்தும் எண்ணிலடங்கா இசைச் செம்மல்கல்கள், ஏன் பாமர மக்கள் ரசிக்கும் சாதாரண மெட்டைக்கூட இன்றுவரை இசைக்க முடியவில்லை?!
ஏனென்றால் பிராமணர்கள், இசையென்பது 'தியாகையருக்காக மட்டுமே' எனும் அளவில் நிறுத்திக் கொண்டார்கள்.
'இசை மக்களுக்காக மட்டுமே' எனும் அளவில் இளையராசா தன் இசை மாலையை இன்னும்கூடத் தொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.
இளையராசாவின் கால் தூசிக்குச் சமமாகாது பிராமணர்களின் கர்னாடக இசை!!
காக்கைகளுக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாட்டை நாம்தான் கண்டுகொள்ளவேண்டும்
## ராகுல் காந்தி விரும்பினால் நள்ளிரவு 12 மணிக்கு கூட பிரதமர் ஆக முடியும்: மத்திய மந்திரி ஜெய்ஸ்வால்.
வெள்ளைக்காரங்கிட்ட நடுராத்திரி 12 மணிக்கு இந்தியா சுதந்தரம் வாங்கியபோதே மக்களோட சுதந்தரம் பறிபோயிடுச்சி. அதனால நடுராத்திரி 12 மணி அதிர்ச்சி என்பது எங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல. நடத்துங்கடா டேய்!
## போன கவர்மெண்டு பவர்கட்டுல ஆற்காட்டாரை போட்டு அடிச்சி நொறுக்கி, ஊர் ஊரா போய் மைக் போட்டு பேசி, அவரை 'பெண்டு' எடுத்தாங்க ஜெயலலிதா. இப்ப அதே பவர் கட்டுக்கு கூடங்குளம் தொறக்காததுதான் காரணம் அப்படீன்றாங்க. இப்ப இருக்கிற நெலமையப் பார்த்தா, ஆற்காட்டாருக்கு அண்ணா சாலையில வெங்கலச்சிலையே வச்சி கையெடுத்து கும்பிடலாம்!!
## அணுஉலை 10 மீட்டர் ஒசரத்துக்கு மேல கட்டப்பட்டிருக்கு. அதனால சுனாமியால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு நாராயணசாமியும், கோமாளி கலாமும் கூவராங்களே... 10 மீட்டருக்கு மேல அலை வராதுன்னு இந்த வில்லேஜ் விஞ்ஞானிங்க எப்ப கண்டுபிடிச்சாங்க?!
## ஆஃப்டர் ஆல் மெட்ராஸ்ல கொசுவைக்கூட கன்ட்ரோல் பண்ண முடியாத பிக்காளிப்பசங்க, கூடங்குளத்துல கதிர் வீச்சை கன்ட்ரோல் பண்ணிடுவாங்களாம். நம்பிட்டோம்டா!!
## அணுக்கழிவுகளை சுமார் 48 ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படவேண்டும். ஒரு ஆண்டு குறைந்தாலும் பேராபத்துதான். 'டெக்னிகல்லி ஸ்பீக்கிங்'... இந்தியாவுல இது நடக்குமா? தார் ரோடு போட்டாலே பத்து நாளுக்குள்ள பல் இளிக்குது!! கலாம் நமக்கு நல்லா குல்லா போட்றாருன்னு நெனைக்கிறேன்.
## ஜனங்க வசிக்கிற இடத்துலதான் அணுஉலை வைக்கணுமா? டெல்லி ராஷ்டிரபதி பவன், கிண்டி கவர்னர் மாளிகை... இங்கல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாம, ஏக்கர் கணக்குல காலி இடம் இருக்காமே? அங்க வைக்கக்கூடாதா?
## போயும் போயும் புயல் நிவாரணம் குடுக்கறதுக்கே 'புயல் நிவாரண நிதி' கேட்டு மக்கள்கிட்ட கையேந்தி, பிச்சை எடுக்கிற கவர்மெண்ட்டு, நாளைக்கு ஒரு கதிர்வீச்சு விபத்து நடந்தா கோடிகோடியா நிவாரணம் கொடுக்கவேண்டியிருக்குமே? அப்போ பிச்சை போடவும் ஆள் இருக்க மாட்டாங்க, நிவாரணம் வாங்கவும் ஆள் இருக்க மாட்டாங்க. கவர்மெண்ட்டு மட்டும்தான் இருக்கும்!!
## "முதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்."
தேர்தல் முடிவு வந்து, பதவி ஏற்புக்கு முன், ஜெயலலிதாவின் பேட்டி.
'ஜெலூசில்' முழு பாட்டிலை அப்படியே முழுங்கிடுங்க. அப்பத்தான் வயிறு எரியாது!!!
## "பீதி: ஜெர்மானியர் ஹெர்மானின் வாக்குமூலத்தால், அணு உலை போராட்டத்தை பாதியில் விட்டு விட்டு, தப்பியோட போராட்டக் குழுவினர் சிலர் முடிவு செய்து உள்ளனர். சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும், உதயகுமார் கும்பல் மீதான நடவடிக்கை, அதிரடியாக துவங்கும் என்றும், கூடங்குளம் போராட்டம் ஒரேநாளில் முடிவுக்கு வரும் என்றும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."
இந்த 'அதிமேதாவி' செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையின் பெயரை நீங்கள் சரியாகச் கண்டுபிடித்தால், நீங்கள் கண்டிப்பாக அந்தப் பத்திக்கையை வாங்காதவர்களில் ஒருவராகத்தான் இருப்பீர்கள்!!!
## வாஷிங்டன்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவர், மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி காண்பதில் முனைப்பாக உள்ளார் என, அமெரிக்காவின் பிரபல அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிளைட்டுலயே அமெரிக்காவுக்கு ஏத்தி அனுப்பிடறோம். ஏதாவது ஒரு ஸ்டேட்டுக்கு கவர்னாராக்கி அழகு பாருங்களேன்?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!
## சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்காது என்றும், எந்த கட்சியையும் எதிர்க்காது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்.
அதாவது... சமுதாயத்தைக் கொன்று போடுபவர்களை நாங்கள் எதிர்க்கவும் மாட்டோம்; அதே சமயத்தில் ஆதரிக்கவும் மாட்டோம். புரிஞ்சுதா? பொது மக்களே..., மொதல்ல நல்ல சிந்தனையாளரா இருக்கக் கத்துக்கங்க!!!
## பலமுறை கூறிவிட்டேன். சசிகலா பேசுவது யாருக்கும் கேட்பதில்லை. சப்தமாக பேசும்படி கூறியும் அவர் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பது புரிகிறது. அதற்காக என் கேள்வியும் புரியவில்லையா? - சசிகலா மீது நீதிபதி அதிருப்தி.
ஜட்ஜு சார், தமிழ் தெரியுது, ஆங்கிலம் தெரியுது... இதெல்லாம் முக்கியமில்லை. 'டெக்னிக்' தெரியணும். எப்படில்லாம் ஜகா வாங்கணும், எப்படில்லாம் டிமிக்கி குடுக்கணும், எப்படில்லாம் அல்வா குடுக்கணும், எப்படில்லாம் ஆக்ட்டு குடுக்கணும்னு இந்த மேன்மை தங்கிய மேடத்துக்குத் தெரியும். ஜட்ஜு... இன்னும் எவ்வளவோ இருக்கு. பாருங்க இன்னும் எப்படியெல்லாம் உங்களை புலம்ப வைக்கப்போறாங்கன்னு!!!
## வாஷிங்டன்: "ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு அந்த நாட்டைப் பெரிதும் நம்பியிருக்காதீர்கள்" என்று நாம் கூறியதன்படி இந்தியா நடக்கத் தொடங்கியிருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருக்கிறார்.
இருக்காதா பின்னே?! இந்தியாவின் அரசியல் நிர்வாக அலுவலகம் வெள்ளை மாளிகை எனும்போது, நங்கள்ளாம் ஈனம், மானம், சூடு, சொரணை பார்க்க முடியுங்களா? வேற எதுனா வேலை இருக்கா சொல்லுங்க. உங்கவீட்டு கக்கூஸ் கழுவனுமா? சொல்லி அனுப்புங்க. தலப்பா கட்டி தாடி வச்ச ஒருத்தர் உடனே அங்கே ஆஜர் ஆகிடுவார்!!
## சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?
"தெரியாது."
பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?
"தெரியாது."
ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?
"தெரியாது."
'இப்படியும் பதில் வரலாம்.'
உங்கள் பெயர் என்ன?
"தெரியாது!!!!"
ஜட்ஜ் ஐயா, வேர ஊருக்கு மாத்தலாயிடுங்க. ரெம்பப் பாவம்யா நீங்க!!
## நல்ல வேளை. தமிழகத்துக் காவல்துறை வாடகைக்கு குடியிருப்பவர்களின் போட்டோக்களை மட்டுமே கேட்கிறது. அனைவரின் கைரேகைகளைக் கேட்டிருந்தால் சுயமரியாதை என்னாவது?!
##கூடங்குளம் அணு மின் உலை மிகவும் வலுவானது, பாதுகாப்பானது. ஒரு விமானமே வந்து மோதினாலும் அணு உலைக்கு ஒன்றும் ஆகாது, நொறுங்கிப் போகாது - நாராய்ன்ச்சாமி.
ஓ..., பாத்துடுவோம். ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி மோதிக்காட்டு. நல்லா மோதிக்காட்டு. அப்படி மோதும்போது நீ வேண்ணாக்கூட அந்தக் கட்டடத்துக்குள்ள இருந்துக்க, யாரு வேண்டாம்னது? (பயபுள்ளைக்கு பொய் சொல்லும்போது, வாய் எப்படியெல்லாம் கொளறுது பாரு!!)
## இது எல்லாமே இன்றைய செய்திகள் :
விழுப்புரம் : ரயில்வே துறையில் ஏற்படும் தொடர் விபத்துகளைத் தவிர்க்க, விழுப்புரம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
வடசென்னை புதிய மின் நிலையத்திற்கு, உத்தரப் பிரதேசத்திலிருந்து லாரியில் கொண்டு வரப்படும் மின் உற்பத்திக் கருவி, விபத்தின்றி பத்திரமாக வந்து சேர வேண்டும் என, மின் துறை அதிகாரிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்துகின்றனர்.
ஈரோடு, அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து எம்.எல்.ஏ., ரமணிதரன், டி.ஆர்.ஓ., கணேஷ் ஆகியோர், கடவுளுக்கு பூஜை பொட்டு புஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.
அறிவியல், டெக்னாலஜி மீது நம்பிக்கை வைக்காத அரசு, இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில், கடவுளுக்கு தேங்காய் உடைத்துக்கொண்டிருக்கிறது. வெட்கக்கேடு! இந்த லட்சணத்தில், இந்த 'பயந்தாங்கொள்ளி' அரசுகள் கூடங்குளத்தைத் திறந்துவைத்தால், அதன் பாதுகாப்பையும் கடவுளிடத்திலேயே கொடுத்துவிடுவார்கள்!!
நாம் அரசின்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா அல்லது கடவுளின்மீதா?!
## கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும்: நாராயணசாமி .
இதையெல்லாம் வீராப்பா சொல்லுவாரு.
'சானல் 4 வெளியிட்ட வீடியோவைப் பத்தி உங்க கருத்து என்ன?' அப்படீன்னு கேட்டுப் பாருங்க. 'நோ கமண்ட்ஸ். அன்னையைக் கேட்டுத்தான் சொல்லமுடியும்.' அப்படீம்பாரு. வாய்லயே வச்சி குத்தணும்போல தோணுமா தோணாதா?!
1 comment:
//இந்த 'அதிமேதாவி' செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையின் பெயரை நீங்கள் சரியாகச் கண்டுபிடித்தால், நீங்கள் கண்டிப்பாக அந்தப் பத்திக்கையை வாங்காதவர்களில் ஒருவராகத்தான் இருப்பீர்கள்!!!//
100% true...:)
By-Maakkaan.
Post a Comment