# அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்.
போங்கடாங்... அமெரிக்காவுல 'நக்கீரன்' வந்து மக்கள்கிட்ட கருத்துக்கணிப்பு நடத்தி, கருத்துக்கணிப்பு சொன்னாத்தான் அது 100% உண்மையா இருக்கும். எதுக்கும் கோவாலுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க!
# கால்நடை ஆஸ்பத்திரி-மருந்தகங்களை மேம்படுத்த ரூ.25 கோடி: ஜெயலலிதா உத்தரவு.
நல்ல உத்தரவு. அப்படியே, கோமாதாக்களுக்கு மட்டும் 'ஸ்பெஷல் ஏசி வார்டுகளை' கட்டித் தருமாறு தாயுள்ளத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
# ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் முழு மன திருப்தியில் விடைபெற்றுக்கொள்கிறேன் - பிரதிபா பாட்டில்.
இத்தனை நாளா பிளைட்டே கதின்னு கெடந்தீங்க. ஒரு சேஞ்சுக்கு இந்த கடேசி 13 நாளைக்கும் ஹெலிகாப்டர்லியே சுத்தி வாங்களேன்?! எதாவது அதிசயம் நிகழுதான்னு பாக்கலாம்!!
# கால்நடை ஆஸ்பத்திரி-மருந்தகங்களை மேம்படுத்த ரூ.25 கோடி: ஜெயலலிதா உத்தரவு.
நல்ல உத்தரவு. அப்படியே, கோமாதாக்களுக்கு மட்டும் 'ஸ்பெஷல் ஏசி வார்டுகளை' கட்டித் தருமாறு தாயுள்ளத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
# "விமானங்களை ரத்து செய்தல், செய்தியாளர்களிடம் பேசுதல், நிறுவனத்தை அவமதித்தல் போன்றவற்றை செய்ததால்தான் நமக்கு சம்பளம் தந்துள்ளனர் என்று சிலர் நினைக்கலாம். அது தவறு. நமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களின் நம்பிக்கையை வைத்து நான் மறுமுதலீடுக்கு முயற்சி எடுத்ததன் பலனாக இவை நடைபெற்றன’’ - தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விஜய் மல்லையா கடிதம்.
பிச்சை கேக்குற நாய்க்கு லொள்ளப் பாரு! தெனாவட்டப் பாரு!! ஆனாலும் இந்த கேப்மாரியின் ஈகோ, போராட்டக்காரங்க கிட்ட தோத்துப்போச்சி!! ரொம்ப ரோஷமா இருந்தா, தூக்கு மாட்டிக்கிட்டு சாவுடா!
# திருமலையில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்து தந்தால் ரூ.1 லட்சம் பரிசு: தேவஸ்தானம் அறிவிப்பு.
எதுக்கும் பெருமாளோட உண்டியல்ல தேடிப்பாருங்க. நேர்த்திக்கடன்னு சொல்லிட்டு, அந்த கருமாந்துரத்துல போட்டுத் தொலைச்சிருக்கப் போறாங்க!!
# லண்டன்: விரைவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது சதிச்செயலை நடத்தி பயங்கர சேதத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக ரகசிய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்ட்டுள்ளது.
இந்தியாவுல ஆகஸ்ட்டு பதினஞ்சு வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு மின்னால உளவுத் துறை வழக்கம்போல ஒரு அறிக்கை விடும். 'சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி...' அப்படீன்னு.
தீவிரவாதிங்க மிறட்டுறாங்களோ இல்லையோ, இவங்க பத்து நாளைக்கு முன்னாலையே மூத்திரம் போயிடுவாங்க!!!
# ஜெகதீஷ் ஷெட்டர் : "ஊழலற்ற நல்ல அரசைக் கொடுப்பேன் என்றும் நான் உறுதியளி..."
"ஏய்.... போதும், போதும். நிப்ப்பாட்டு. அடுத்த முதலமைச்சர் யாரு? சீக்கிரம் ஓடியா. அந்த உறுதிமொழி பத்திரத்தை அவர் கையில குடுத்துட்டு, நீங்க மேடையை விட்டு இறங்கிடுங்க மிஸ்டர். ஷெட்டர்!!"
# "99.9% வியர்வை நாற்றம் போகும்." லைஃப்-பாய்.
"99.9% பொடுகு சுத்தமாகும்." ஹெட் & ஷோல்டர் டான்றஃப் ஷாம்பூ."99.9% கிருமிகள் போயே போய்விடும்." டெட்டால் சோபு.
"99.9% பல்லிருக்கும் கிருமிகளை அடித்து சொறுக்கும்." பெப்சோடென்ட்.
ஏன் கிருமிகள் 100% போகமாட்டேங்குது? அந்த மிச்சம் இருக்கிற 01% கிருமி என்னவாகும்? அது சட்டத்துல ஓட்டை போடும். எவனாவது வக்கீல் வண்டு முருகன் "என்னோட கஸ்டமருக்கு லைஃப் பாய் போட்டதால வியர்வை நாற்றம் போகவேயில்லை..." அப்படீன்னு கேஸ் போட்டா தப்பிச்சி ஓடுறதுக்குத்தான் மிச்சமிருக்கிற .01% நம்ம உடம்பிலயே தொத்திக்கிட்டு இருக்கும்! Consult with your physician or your advocate!!
# துணை ஜனாதிபதி தேர்தல்: சூழ்நிலையை பொறுத்து பரிந்துரைப்போம் - சூழ்நிலைவாதி கருணாநிதி.
கேப்மாறித்தனம் பண்றதுக்கு இப்பல்லாம் ஒளிவு மறைவு தேவையே இல்லை. எல்லாம் சகஜமாப் போச்சு. 'ஜெயிலுக்குப் போறவனுக்குத்தான் பதவி கிடக்கும்னு' இவரோட பையன் சொல்லிக்கலையா?!!
# "பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மக்கள், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்." - ஆர்வார்டு அல்லக்கை சிதம்பரம்.
ஏ அமெரிக்க எடுப்பே, குடிதண்ணீரையே அமெரிக்கக் கம்பெனிகள்தான் விற்பனை செய்கின்றன. குடிக்கும் தண்ணீரையும் விலையை உயர்த்தி விற்றுக்கொள்ளச் சொன்னதும் நீங்கள்தான். ஆர்வர்டு பல்கலையில் தவறான பாடம் படித்த குள்ள நரியே; உனக்கு சரியான பாடம் புகட்ட உன் மீது ஒரு இந்தியன் செருப்பு வீசியதில் சிறிதும் தவறில்லை!
# புறநானூறு, அகனாநூறு... இத்யாதிகளின் கூற்றுப்படி, அண்டை நாடு / அண்டை அரசன் என்றால் அவர்கள் யாவரும் நமக்குப் பகைவர்கள் எனும் வெறியை ஊட்டி, வீரம் வீரம் என்று பிணாத்தலிட்டு, இளஞ்சிறுவர்கள், இளைஞர்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்காமல், போர்க்களத்துக்கு அழைத்துச் சென்று, மலை மலையாகக் கொன்று பிணமாக்கினார்கள், நம் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள். இதற்கு அப்போதைய கூலி - நரவும் (கள் அல்லது மது), ஆட்டுக் கறியும், வயிறு புடைக்க சோறும்!
இதே கதைதான் இன்றைய தேதி வரைக்கும் தொடர்கிறது. அண்டை நாடு என்றால் அவன் நமக்கு எதிரி என்று மக்களை மூளைச்சலவை செய்து, அன்றைய கேடுகெட்ட மன்னர்களைப்போல, இன்றைய நவீன உலகத்து நாடுகளின் அரசுகளும் இளைஞர்களாகப் பொறுக்கியெடுத்து, அவர்களை போருக்குப் பலியாக்குகிறது. இதற்கு இப்போதைய கூலி - ரம்மும், ஜின்னும், வயிறு புடைக்க சப்பாத்தி ரொட்டியும், கை நிறையக் காசும்.
ஆனால் மூளை மழுங்கிய போர் வீரன், தான் எதற்காகச் சண்டையிடுகிறோம், எதற்காகச் சாகிறோம் என்று தன் மனசாட்சிக்குத் தெரிவிக்காமலேயே, கூலிக்கு மாறடித்து செத்து மடிகிறான்!!
#
வருஷம் ஒருக்கா,
ஊர்ல நடக்குற
கூழு வூத்துற
விழாவுக்கே
வெர்னா, விட்டாரா,
வேக்ஸ்-வேகன்னு
வந்து
பிலிம் காட்டுற
பில்டப்புகளே...
இதே ஊருல,
இதே தெருவுல,
நீங்க எப்பவோ
தவிக்க விட்டுப்போன
உங்க ஆத்தா...
பசிவேளை நேரத்துல
புல்லுக்கட்டை
சொமந்துகிட்டு
சோப்ளாங்கியா
நடந்துபோறாளே...
அவளுக்கு எப்படா
அரை வகிறு
கஞ்சி ஊத்தப்போறீங்க?!!
ஊர்ல நடக்குற
கூழு வூத்துற
விழாவுக்கே
வெர்னா, விட்டாரா,
வேக்ஸ்-வேகன்னு
வந்து
பிலிம் காட்டுற
பில்டப்புகளே...
இதே ஊருல,
இதே தெருவுல,
நீங்க எப்பவோ
தவிக்க விட்டுப்போன
உங்க ஆத்தா...
பசிவேளை நேரத்துல
புல்லுக்கட்டை
சொமந்துகிட்டு
சோப்ளாங்கியா
நடந்துபோறாளே...
அவளுக்கு எப்படா
அரை வகிறு
கஞ்சி ஊத்தப்போறீங்க?!!
#
கார்ப்பரேஷன் பள்ளிக் குழந்தைங்க கால்ல செருப்பு இல்லைன்னாலும், காட்டுக் குருவி உற்சாகத்தோட, எள்ளலும் துள்ளலுமா பள்ளிக்குள்ள நுழையறாங்க. ஆனா, பளபளன்னு போற கான்வென்ட்டு ஸ்கூல் பசங்க, ஏதோ கையிலையும் கால்லயும் விலங்கு பூட்டின ஏர்வாடி நோயாளி மாதிரி, உம்முன்னு தலை குனிஞ்சிக்கிட்டு, கப்சிப்னு போறாங்க!! மதிப்பெண் யாருக்குப் போடுவீங்க?!!
#
ஐய்யா ஏக்குன்னு சொன்னா, அம்மா பூக்குன்னு சொல்லும். நூலகம் கல்யாண மண்டபம் ஆனவரையில் சந்தோஷப் பட்டுக்கோங்க இனிய தமிழ் மக்களே. நல்ல வேளையாய் கலைஞர் 1008 கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. அப்படி கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா, அம்மா தேடிப்புடிச்சி 1008 தாலியையும் அறுத்து எறிஞ்சிருக்கமாட்டாங்க?!!
#
திருடன் லெஃப்டுல ஓடுனா, போலீசு ரைட்டுல தேடிட்டு ஓடணும்.
வாய்தா மேல வாய்தா போட்டு கேசு கட்டே மக்கிப் போகணும்.
மூணு நாளுக்கு முன்னால போட்ட தார் ரோடு, ஒரே நாள் மழையில மண் ரோடா மாறிப்போகணும்.
ரேஷன் கடைல சர்க்கரை நிறுக்கும்போது இருந்த ஒரு கிலோ, வெளியில வரும்போது முக்கா கிலோ ஆகிடணும்.
இதெல்லாம் சகஜம் அப்படீன்னு ஏத்துக்க மறுக்குற ஆளா நீ?
உன் இடுப்புக்குக் கீழ குனிஞ்சிப் பாரு. கோவணம் தொங்குமே?!!
ஏன்னா, இது நிர்வாண நரகம்!
வாய்தா மேல வாய்தா போட்டு கேசு கட்டே மக்கிப் போகணும்.
மூணு நாளுக்கு முன்னால போட்ட தார் ரோடு, ஒரே நாள் மழையில மண் ரோடா மாறிப்போகணும்.
ரேஷன் கடைல சர்க்கரை நிறுக்கும்போது இருந்த ஒரு கிலோ, வெளியில வரும்போது முக்கா கிலோ ஆகிடணும்.
இதெல்லாம் சகஜம் அப்படீன்னு ஏத்துக்க மறுக்குற ஆளா நீ?
உன் இடுப்புக்குக் கீழ குனிஞ்சிப் பாரு. கோவணம் தொங்குமே?!!
ஏன்னா, இது நிர்வாண நரகம்!
#
மூடாத பாதாள சாக்கடை குழியில நூறு பேரு விழுந்து செத்தாலும் கவலை இல்லை; ஆனா ஒரு மந்திரியோட பையன், ஸ்பீடா போயி, ஸ்பீடு பிரேக்கர்ல விழுந்து செத்துட்டான்னா, அதுக்கு காரணமான நாசமாப்போன ஸ்பீடு ப்ரேக்கருக்கு உடனடியா வெள்ளை பெயிண்ட்டு அடிக்கோணும். இதுதான் அரசோட மனிதாபிமானம்.
அப்போ, அந்த பாதாளச் சாக்கடைக் குழிக்கு இன்னாதான் தீர்வுஅப்படீன்னு கேக்கறீங்களா? பக்கத்துல இருக்கிற மரத்துல இருந்து, பச்சைக் கிளையை ஒடிச்சி, அந்தக் குழிக்கு முன்னால நட்டு வைக்கோணும். இதுதான் பாரம்பர்யம்!!
அப்போ, அந்த பாதாளச் சாக்கடைக் குழிக்கு இன்னாதான் தீர்வுஅப்படீன்னு கேக்கறீங்களா? பக்கத்துல இருக்கிற மரத்துல இருந்து, பச்சைக் கிளையை ஒடிச்சி, அந்தக் குழிக்கு முன்னால நட்டு வைக்கோணும். இதுதான் பாரம்பர்யம்!!
#
"இன்று என் பொண்ணும் swimmingபோயிட்டு வரும்போது ஜெமினிமேம்பாலந்திலிருந்து பஸ் கீழே விழுந்து ஏற்பட்ட ட்ராஃபிக் ஜாமில் 2மணிநேரம் சிக்கினோம்.பொருமையிழந்த அவள் வெறுத்துப்போய் சொன்னாள் அப்பா நீ swimmingகத்துக்கிறதுக்குப் பதிலா Flying கத்துக்கேயன்."
சென்னை, ஜெமினி மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு, 40 பேர் படுகாயத்துடன் கதறிக்கொண்டிருந்தபோது, 'மனுஷ்யபுத்திரன்' எனும் பதிப்பாளரின் அரட்டை வார்த்தைகள் இவை. மனிதாபிமானம் இல்லாதவர்களெல்லாம் 'மனுஷ்யபுத்திரன்' என்று புனைப்பெயர் வைத்துக்கொள்வதற்குப் பதில், 'மிருகப்புத்திரன்' என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம்!!
சென்னை, ஜெமினி மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு, 40 பேர் படுகாயத்துடன் கதறிக்கொண்டிருந்தபோது, 'மனுஷ்யபுத்திரன்' எனும் பதிப்பாளரின் அரட்டை வார்த்தைகள் இவை. மனிதாபிமானம் இல்லாதவர்களெல்லாம் 'மனுஷ்யபுத்திரன்' என்று புனைப்பெயர் வைத்துக்கொள்வதற்குப் பதில், 'மிருகப்புத்திரன்' என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம்!!
#
பேருந்து கவிழ்ந்த போட்டோவோட நியூசு முடிஞ்சுபோச்சு. மருத்துவமனையில் அட்மிட் ஆனவுங்க எப்படி இருக்காங்க அப்படீங்கற விவரம், போட்டோவெல்லாம் பத்திரிக்கைல வராது. இப்ப என்ன, ரயிலா கவுந்து எல்லாரும் அடிபட்டு ஆசுபத்திரிகைல கிடக்கிறாங்க? ஏதோ ஒரு போல்ட்டு-நட்டு கழண்டு சிறு விபத்து நடந்துபோச்சு. இதுக்கெல்லாம் பத்திரிக்கைங்க கூவுமா? அவுங்க குடுத்த காசுக்குமேல கூவறங்களாச்சே?!!
# லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இளையராஜாவின் பாடல். ரெம்ப சந்தோஷம். இந்த ஒலிம்பிக் நிறைவு நாள் விழாவிலும், இளையராஜாவின் "உன் குத்தமா, என் குத்தமா, யாரை இங்கு குத்தம் சொல்ல..." என்ற இந்தப் பாடலைப் போட்டுட்டா, இந்தியக் கொடியைப் பிடிச்சிக்கிட்டு, மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கிட்டு, காலி பாக்கெட்டுக்குள்ற கைவிட்டுக்கிட்டு நடந்து வரும் நம்ம வீரர்களின் 'சிச்சுவேஷனுக்கு' ஏத்தமாதிரி பொருத்தமா இருக்கும்...!!
# சென்னை: தி.மு.க.,வினரை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடாது என வலியுறுத்தி, வரும் 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த, தி.மு.க., செயற்குழுவில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழா தமிழா,
எங்கள் கைகளில்
விலங்கு மாட்டி,
வேட்டியை அவிழ்த்து,
குண்டர் சட்டத்தில்
கொடுஞ்சிறையில் தள்ளினாலும்
நாங்கள்
அலுமினியத் தட்டுகளையும் டம்ளர்களையும்
அப்படியே அள்ளிக்கொண்டு வந்து விடுவோம்.
முடிந்தால்
கக்கூசு போகும் பீங்கானையும்
பிடுங்கிக்கொண்டு வந்துவிடுவோம்!!
# கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்.
சிரிலங்காவை சீண்டினா மாதிரியும் ஆச்சு.
ஜெயாவுக்கு ஜால்ரா போட்டா மாதிரியும் ஆச்சு.
டமிலனுக்கு டகால்டி குடுத்தா மாதிரியும் ஆச்சு.
நான் என்னமோ இந்த ஆளு வெறும் மரம் வெட்டின்னு நெனைச்சேன்!!
சிரிலங்காவை சீண்டினா மாதிரியும் ஆச்சு.
ஜெயாவுக்கு ஜால்ரா போட்டா மாதிரியும் ஆச்சு.
டமிலனுக்கு டகால்டி குடுத்தா மாதிரியும் ஆச்சு.
நான் என்னமோ இந்த ஆளு வெறும் மரம் வெட்டின்னு நெனைச்சேன்!!
No comments:
Post a Comment