மளிகைக்கடைகளில் எச்சரிக்கை போர்டு : பிளாஸ்டிக் பைகளை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஒரு வருடம்வரை சிறை அல்லது அபராதம்...ப்ளா, ப்ளா, ப்ளா... ஆனால், அதே மளிகைக் கடை, பெட்டிக்கடை முகப்புகளில் லேய்ஸ், கெல்லாக்ஸ், குர்குரே போன்ற பன்னாட்டு கம்
பேனி நொறுவைகள் சரம் சரமாக தொங்குகின்றன. இந்தப் பாக்கெட்டுகளெல்லாம் என்ன தங்கத்தால் செய்யப்பட்டதா; அல்லது இந்தச் சட்டம் இவர்களுக்குப் பொருந்தாதா; அல்லது சட்டமியற்றிய பக்கிகளின் கண்களுக்கு இந்தத் சரங்கள் படவில்லையா?!
000
சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா.
கவுரவமான போஸ்ட்டுதான்; ஆனா ஒரு மனுஷனால, நாள் பூரா குனிஞ்சமேனிக்கே, அதுவும் மேற்படி வரும்படி ஏதுமில்லாம, வெத்துக் கல்லாவுல எவ்வளவு நாள்தான் உக்கார முடியும்?
கவுரவமான போஸ்ட்டுதான்; ஆனா ஒரு மனுஷனால, நாள் பூரா குனிஞ்சமேனிக்கே, அதுவும் மேற்படி வரும்படி ஏதுமில்லாம, வெத்துக் கல்லாவுல எவ்வளவு நாள்தான் உக்கார முடியும்?
000
கிரானைட் குவாரியில 'வ்ளாண்டுக்கிட்டு' இருந்த குழந்தைய காணமின்னு, அஞ்சா நெஞ்சன், நெஞ்சில மஞ்சாசோறு இல்லாம பேண்டுகிட்டு கெடக்காரு. இப்பம்போயி, எழவு வீடாட்டம் கிடக்குற மதுரைக்கு தளபதிய அனுப்பி; அவருக்கு வரவேற்பு சரியில்லைன்னு சொல்லி..., தலீவா, இதெல்லாம் நல்லாவா இருக்கு? எதிர்க்கட்சிக்காரன் நம்பள பத்தி என்ன நெனைப்பான்?!!
000
நம்ம திட்டக் கமிஷன் அலுவாலியா கணக்கு இதுதான். இதுக்கு மேல் ஒத்த பைசா செலவு செய்யுறவன் ஒரு மானங்கெட்ட ஈத்தரை இந்தியனாத்தான் இருப்பான். ங்கொய்யால, பணம் இன்னா மரத்துலயா காய்க்குது?!
அரிசி அல்லதுகோதுமை - ரூ.5.50
பருப்பு வகைகள் - ரூ.1.02
பால்- ரூ.2.33
சமையல் எண்ணெய்- ரூ.1.55
காய்கறிகள்- ரூ.1.95**
**கண்டிசன் அப்ளை
(ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைந

்ததை ஒட்டி, பிரதமர் மன்மோகன் சிங், அளித்த விருந்திற்கு, 28.95 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடந்த, விருந்து நிகழ்ச்சிக்கான பூ அலங்காரத்திற்காக, 26 ஆயிரத்து 444 ரூபாயும், பந்தல் அமைப்பதற்காக, 14 லட்சத்து 42 ஆயிரத்து 678 ரூபாயும், விருந்தில் வழங்கப்பட்ட உணவிற்காக, 11 லட்சத்து 34 ஆயிரத்து 296 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.அதாவது, ஒரு நபர் சாப்பிட, "பிளேட்' ஒன்றுக்கு, 7,721 ரூபாய்.
ஆனா, மன்மோகனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் தாராளமா செலவு செய்யலாம். ஏன்னா, அவர் ஒரு அமெரிக்க இந்தியர்!)
000
தேவைப்பட்டால் அணுஉலை பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய தயார்: ஜெயந்தி நடராஜன்.
ஆண்ட்டி... பாதுகாப்பெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அணுவுலை 'ஒப்பந்தங்களை' மறு ஆய்வு செய்யயத் தயாரா...?! அதாவது 'அக்ரீமெண்ட்டு.' அத்தைச் சொல்லுங்க ஆண்ட்டி!
ஆண்ட்டி... பாதுகாப்பெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அணுவுலை 'ஒப்பந்தங்களை' மறு ஆய்வு செய்யயத் தயாரா...?! அதாவது 'அக்ரீமெண்ட்டு.' அத்தைச் சொல்லுங்க ஆண்ட்டி!
000
"ஜெயலலிதாவின் அறிவுரையைக் கேட்டு, எழுதுவதை நிறுத்துகின்ற எண்ணம் எனக்கில்லை.'' - கருணாநிதி.
தலைவா,
நீங்க எடுத்த முடிவு கொஞ்சம்கூட சரியில்லை.
எண்ணற்ற மண்ணெண்ணை தற்கொலையைத் தூண்டிவிடுகிறீர்கள்!
1. அலைக்குரல் விளக்க உரை,
2. கனித் தமிழ்,
3. ஆண்டிமுத்து ராஜர்,
4. தென்பாண்டி மலைக்கள்ளன்
முதலிய காவியங்களைப் படைத்தபின், உங்கள் பேனாவின் குரலை நெறித்துவிடுங்கள்.
இது தொண்டர்கள் மீது ஆணை!!

இந்து சமய அற நிலையத்துறை, பெரிய பாளையம் திருக்கோயில். மாண்பு மிகு அம்மா அவர்களின் 'பிளாட்டினம் அட்டை' திட்டம் : அம்மாவின் அன்னதான திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குபவருக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 20 வருடத்துக்கு ஸ
்பெஷல் தரிசனம் மற்றும் கோயில் உயர் கட்டணக் குடில்களில் 10 பேர் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.
'அடிப்பாவி, ஒரு கோடியா...? எவன்னா திருட்டுப்பயதான் இந்த அட்டைய வாங்குவான்,' இந்த பேனரைப் பார்த்துவிட்டு அப்பாவி மக்கள் பதறிப்போய் அடித்த கமண்ட் இது.
இந்த பேனர் பெரியபாளையத்துக்கு சூட் ஆகாது. மயிலாப்பூர், தி.நகரில் இருக்கவேண்டிய பேனர் இது. இன்னும் ஸ்பெஷலாகச் சொல்லப்போனால், தி. நகர் நளாஸ் ஆப்பக்கடை முன்னால் இருக்க வேண்டிய பேனர் இது. ஏனென்றால் அங்கேதான் ஆப்பத்தில் தங்கம் தூவி விற்கிறார்களாம். தங்க ஆப்பத்தை தின்று ஏப்பம் விடுபவர்கள் வேண்டுமானால் பிளாட்டினம் அட்டை வாங்கலாம்!

2 comments:
இரசித்தேன்..
மளிகைக்கடைகளில் எச்சரிக்கை போர்டு : பிளாஸ்டிக் பைகளை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஒரு வருடம்வரை சிறை அல்லது அபராதம்...ப்ளா, ப்ளா, ப்ளா... ஆனால், அதே மளிகைக் கடை, பெட்டிக்கடை முகப்புகளில் லேய்ஸ், கெல்லாக்ஸ், குர்குரே போன்ற பன்னாட்டு கம்
பேனி நொறுவைகள் சரம் சரமாக தொங்குகின்றன. இந்தப் பாக்கெட்டுகளெல்லாம் என்ன தங்கத்தால் செய்யப்பட்டதா; அல்லது இந்தச் சட்டம் இவர்களுக்குப் பொருந்தாதா; அல்லது சட்டமியற்றிய பக்கிகளின் கண்களுக்கு இந்தத் சரங்கள் படவில்லையா?!
சரியான கேள்வி.
Post a Comment