My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

9.10.12

மூன்றாம் உலக அக்கப்போர் - எனது முகநூலிலிருந்து... 17

மந்திராலயம் கோயிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை.

தலைவர் ஈஸ் கிரேட். இப்படி செய்தாத்தான் 'வாரி வழங்கும் வள்ளல்னு' பட்டம் கொடுப்பானுங்க. பீரபிஷேகம் செய்வானுங்க. அடுத்த படத்துல டிக்கெட்டு அம்பது ரூவா மேல வச்சி தாளிச்சிட்டா, விட்டதை புடிச்சிடலாம்; எல்லாம் என் தலைவனோட மனக்கணக்குத்தேன்!

000

ஓட்டுக்காக கடிதம் எழுதுகிறார் : 
எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கலைஞர் கடும் கண்டனம்.

அதை இவரு சொல்றாரு. வெட்கக்கேடு!

000

எதிர்ப்பு வலுத்ததால் உதயகுமார் வீட்டை முற்றுகையிடும் காங். போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.

அது. ங்கொய்யால!! 
சரி. அப்படியே நவுந்துகிட்டே போயி காவிரிக்காக 'கொர்லு' குடுங்க பாப்போம்.

000

"போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா?"

தனாபானாவின் இந்த தத்துவ முத்துத்தான் போராட்டக்காரர்களிடம் இன்னும் தீயை மூட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. தத்துவ ஞ்ஞ்ஞ்ஞானி தனாபானா... வாழ்க!

000

டீசல்-சமையல் எரிவாயு விலை மேலும் உயராது**: டகால்டி ஜெய்பால் ரெட்டி.

**கண்டிசன் அப்ளை. 
ராபர்ட் வதேரா பிரச்சினை தீரும் வரை இருக்கும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.

000

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குரிய நபர்களை தேர்வுக்குழு தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

தோ பார் கண்ணுங்களா! 'அமைதிக்கான' நோபல் பரிசை மன்மோகனுக்கு குடுக்கலைன்னு வச்சிக்கோ, அந்த நோபல் பரிசுக்கு மரியாதையே இருக்காது!

000

ஆகம விதிப்படி, திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் 90 நிமிடங்கள் வெங்கடாஜலபதிக்கு ரெஸ்ட்!

பின்னே, எவ்வளவு கஷ்டப்பட்டு நாளெல்லாம் கலெக்சன் பாக்கிறாரு?! பாவம், இந்த 90 நிமிஷத்துல அவரு ரெஸ்ட்டு எடுக்கணும்; மூத்திரம் பெய்யணும்; ஆய் போவணும்!

000

மூன்றாவது உலகப்போர் நூல் அறிமுக விழாவில் வைரமுத்து :

"40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குச் சென்றால் நதிக்கரையைக் காணவில்லை; குளக்கரையைக் காணவில்லை; வயல்வெளிகளைக் காணவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று யோசித்தபோது, பருவநிலை மாறிவிட்டது என தெரியவந்தது."

மதுரையில கிரானைட் மலைங்க காணமப்போனதுக்கும் பருவநிலைதான் காரணமா கவிஞரே? 
கலைஞரோட காலை அமுக்கி அமுக்கி, உங்க கைரேகை காணமப்போனதுக்கும் ஒரு காரணத்தை சொல்லிடுங்க!

000

அரியானா மாநிலத்தில், ஒரே மாதத்தில், 10 இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள், அதிக அளவில் நடப்பதற்கு, அரியானாவில், ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம்' என, "அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்' புகார் தெரிவித்துள்ளது.

ஆஹா, போட்டாங்க பாரு ஒரே போடு! 
எப்பிடித்தான் சிந்திக்கிறாய்ங்களோ? 
இவங்ககிட்ட கத்துக்கங்கடான்னு சொன்னா, கேக்க மாட்டேங்கறாய்ங்க!!

000

"ஈ.வெ.ரா, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரின் மொத்த வடிவமாகத் திகழும் ஜெயலலிதாவின் கொள்கைகளை எந்நாளும் காப்போம். அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதா மீது மாறாத பற்றுடனும், விசுவாசத்துடனும் இருப்போம்." - அம்மாவின் 'ஆணைப்படி', அதிமுக இளைஞர் பாசறை உறுதிமொழி!

அம்மா... கீழே பாருங்கம்மா; உங்க காலுக்குக் கீழே இல்ல; உங்க கார் டயருக்கு கீழே. இன்னும் இதுக்கும் கீழேன்னா, எப்புடிம்மா?!

2 comments:

தமிழநம்பி said...

சிரித்து மாளவில்லை!

Anonymous said...

:))))..excellent

Post a Comment