My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

7.10.12

காவேரி - நாறிப்போன ஆறு

அண்ணே, 
கர்நாடகாவுல, நண்டு சிண்டு லெட்டெர் பேடெல்லாம் பந்து நடத்தலாம்; 
சோடா புட்டி ஒடைக்கலாம்; 
ரவுடியிசம் பண்ணலாம். 

ஆனா, ரெண்டே ரெண்டு குறிக்கோள் மட்டும் இருந்தாப் போதும். 
ஒண்ணு, காவேரித் தண்ணி. 
இன்னொண்ணும் காவேரித் தண்ணிதான். 
என்னா கூட்டம் கூடுறாய்ங்க?

ஆனா இங்க?! 
தொட்டிக் கஞ்சி குடிச்சி, தொட்டுக்க எலிக்கறி தின்னாலும் எந்த எருமைமாடும் கண்டுக்காது!

ஒத்துமையில, கர்நாடகாவை பாராட்டியே ஆகணும்ணே!!

ooo


தமிழ் நாட்டுல தடாலடியா பேசின கால் மணி நேரம் கழிச்சி, 
கர்நாடகாவுல கால்ல உழுந்துறணும். 
பிராப்ளம் சால்வுடு! 

சின்னச் சின்ன பிராப்ளத்தைக்கூட 
சூப்பர் ஸ்டாராலதான் தீத்து வைக்க முடியுது!!

ooo

கருப்பு கலர்
சொக்கா போட்டு,
காவேரி காவேரின்னு
கண்ணீர் விட்டு,
கதறி அழுது,

டைரட்டக்கருங்க வருவாக; 
டாப்பு டக்கர்
ஹீரோ வருவாக; 
சீமான் வருவாக; 
சினேகா வருவாக;
சரத்குமார் வருவாக;
தவக்களை வருவாக;
தவறாம,
நமீதா வருவாக;
வடிவேலு...
சாரிண்ணே,
விவேக்கு வருவாக;
பேசுவாக;
பிச்சு ஒதறி,
புடுங்கி கடாசிடுவாக!

ஆனா,,
காவிரில
தண்ணி மட்டும்
கண்டிப்பா வராது!!

3 comments:

valampuri said...

Now where the rajnikath GO?

Kartheesan said...

Pls try to stop sending electricity from neyveli. Why the hell need to provide from us. Let them blind

Unknown said...

என்னாங்கண்ணா இந்த கிழி கிழிக்கிறீங்க... அப்படியே நம்ம கரண்டுக்கும் ஒரு வழி பண்ணக்கூடாதா...?

Post a Comment