பால் தாக்கரே யாருன்னு புரியிறாப்புல சொல்லுங்கன்னு மார்க்கெட்டுல மூட்டை தூக்குறவரு கேட்டாரு.
'ம்... வந்து... பாம்பேல இருக்கிற ஒரு காடு வெட்டி குருன்னு' சொன்னேன்.
'ம்... வந்து... பாம்பேல இருக்கிற ஒரு காடு வெட்டி குருன்னு' சொன்னேன்.
000
ஆங் சான் சூச்சி...
மியான்மருக்கு ஒரு பிரதிபா பாட்டியின் பிரதி. ஆனா, கொஞ்சம் ஆக்டிவ். இந்தியாவுல எலிவளை தோண்டி, மியான்மருக்கு ரிலையன்ஸ் ரூட்டு போடுவாங்க போலிருக்கே!!
000
சினிமா கிசுகிசு, வம்பு, அரட்டை இத்யாதிகளையே நம்பி பொழைப்பை ஓட்டும் குமுதம், ஆனந்த விகடன் வகையறாக்களுக்கு, ஹிந்துஸ்தான் லீவர், ப்ராக்டர் அண்ட் கேம்ப்ள், ஹார்லிக்சு, போன்விட்டா அட்வெர்டைஸ்மெண்ட்டுகள்.
பட், ஆனா, சமுதாய மாற்றம் (!) ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அரசியல் குற்றங்களை அலசும் இன்ஸ்வெஸ்டிச்கேஷன் (அடங்கொய்யால, வாய்ல வரமாட்டேங்குது...) பத்திரிகைகளான ஜூனியர் விகடன், நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறாக்களுக்கு மட்டும், வெறும் விரைக் கொட்டை வீக்கம், மூலம், சளி, ஆண்மைக் குறைவு வியாதிஸ்தர்களுக்கான முழுப் பக்க விளம்பரங்கள். இத்தனைக்கும் வாரந்தவறாம, நடுப்பக்கத்துல ஒரு சினிமா நடிகை தொப்புளை பப்பரக்கான்னு காட்டிக் கொண்டிருந்தாலும் பப்பு வேகலை.
ஏண்டா, ஏன்?!
000
புரசைவாக்கத்துல ஒரு சுமோ வளைஞ்சு நெளிஞ்சு ரோட்டுல முறுக்கு சுட்டுக்கிட்டே போய்ட்டு இருந்தது. பின்பக்க பம்பர்ல, 'யெஸ். ரோட் ஈஸ் மை பிளே கிரவுண்ட்' அப்படீன்னு ஒரு வாசகம். ஓவர்டேக் பண்ணிப் பார்த்தா, முன்னாடி கட்சிக்கொடி பறந்துகிட்டு இருந்துச்சி. உள்ற வெள்ளையும் சொள்ளையுமா நாலு பேரு. டிரைவர் கண்ணாடியத் தட்டினேன். கண்ணாடிய இறக்குன உடனே சொன்னேன். "அதோ அங்க, உங்க வண்டியோட பம்பர் கழண்டு விழுந்துறுச்சி' அப்படீன்னு. வண்டியை ஓரங்கட்டி ரெண்டுபேரு பம்பரைத் தேடி ஓடினாங்க. நானும் எடத்தை ஒடனே காலி பண்ணிட்டேன்.
ஸ்பாட் ஃபைன் போலீஸ்காரவுங்க குடுக்கறது. நம்பளோடது ஸ்பாட் பனிஷ்மெண்ட்டு!
000
போத்தீஸ் துணிக்கடை, நாதெள்ளா நகைக்கடை, ஹார்லிக்ஸ், காம்ப்ளான், வாஷிங்க் பவுடர், அப்பளம், நல்லெண்ணை, பருப்பு விளம்பரங்களுக்கு நடித்துக் கொடுக்கும் பணக்காரச் சின்னஞ் சிறுவர், சிறுமிகள், கைக் குழந்தைகள், வயிற்றில் இருக்கும் கரு... இவர்களெல்லாம் 'குழந்தைத் தொழிலாளர்கள்' இல்லையா?
வயிற்றுப் பிழைப்புக்காக டீக்கடையில் எச்சில் டம்ளர் கழுவும் ஏழைச் சிறுவர்கள் மட்டும்தான் குழந்தைத் தொழிலாளர்களா?
000
வருங்கால முதலமைச்சராகப் போகும் சிந்தனைச் சிற்பி, இளைய தளபதி, தன் துப்பாக்கி படக்காவியத்தில் ஏன் ஒரு கிருத்துவனை தீவிரவாதியாகக் காட்டியிருக்கக்கூடாது? ஓ, அவரே ஒரு கிருத்துவர் என்பதை நான் மறந்துவிட்டேன்!
000
தர்மபுரி அருகே தலித்துக்களுக்கு எதிரே நடந்த வன்முறைகளுக்கு பாமகவும், அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் முதன்மையான காரணங்களாக செயல்பட்டுள்ளன. ஒரு வேண்டுகோள்!பாமக நிறுவனர் 'ஐயா ராமதாஸ் அவர்கள்' சாதி ஆதிக்கவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! - திருமாவளவன் பேட்டி!
அண்ண வச்சிருந்தது பென்சில்ல வரைஞ்ச மீசைடான்னா, யாருமே ஒத்துக்கமாட்டேங்குறீங்க...
000
இல்லாத ஒரு கடவுளை அடித்துத் துரத்துவதற்கான, இந்த விஞ்ஞான யுகத்தின் முயற்சிகளும்கூட பெருமளவில் தோல்வியுறுகின்றன. உண்மைகள் சுலபத்தில் பொய்ம்மையாக்கப்படுகின்றன. கடவுளைத் தோற்கடிப்பதில் விஞ்ஞானத்துக்கு 'ஜான் ஏறினால், முழம் சறுக்குகிறது.' ஆனால் விஞ்ஞானத்தின் எதிரிகள் வெறும் ஸ்வாஹா சொல்லியே கடவுளை 'நல்லா ஏத்தி விடுகிறார்கள்.' சட்டப்படியும் உலகத்தின் எந்த அரசும் கடவுளை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முன் வரவே வராது. இந்தக் கணக்குப்படிப் பார்த்தால், கடவுள் இன்னும் ஒரு நூறு இரு நூறு ஆண்டுகள் 'இருந்து' விட்டுத்தான் போவார் போலிருக்கிறது! கலிகாலம்டா சாமி!!
000
நாடார் சமுதாய மக்கள் மீதான தடியடிக்கு கண்டனம்: ராமதாஸ்
நாடார்களின் வரலாற்று உண்மைக்கு மாறான பகுதிகளை பாடப்புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் - திருமாவளவன்.
தலித்துகள் 'டிஷ்யூ பேப்பரான' கதை இப்போதைக்கு 'பெண்டிங்குலயே' இருக்கட்டும் கண்ணுஙகளா. அது எங்க ஓடிப் போயிடப் போவுது? நாடார்களை எப்படி 'கர்சீஃப்' போல பயன்படுத்தலாம் என்பதுதான் இங்கே தலையாய, கவுரவமான பிரச்சினை!
தலீவருங்க எப்பூடி கோத்துக்குறாங்கன்னு பாருங்கண்ணே!!
000
மாலை மலர் நியூசு :
வெளிநாட்டில் கணவர்: பட்டப்பகலில் காதலனுடன் கும்மாளமிட்ட இளம்பெண்- ஊர் மக்கள் எதிர்ப்பு, முற்றுகை :
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனியாக வாழ்ந்த கவிதாவும், அவரது நண்பரான ஆறுமுகமும் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) நெருங்கி பழகினர். கவிதாவி
ன் வீட்டுக்கு ஆறுமுகம் அடிக்கடி வந்து சென்றார். காலையில் வரும் ஆறுமுகமும் கவிதாவுடன் கும்மாளமடித்து விட்டு மாலையில்தான் வீட்டுக்கு செல்வார். Blaa... blaaaaa, blaaaa.
மனசாட்சி தொட்டு சொல்லுங்க எசமான்.
குத்தவாளியோட பெயரையே (பிராக்கெட்டுல) மாத்திப் போடுற 'குடுப்பினை' ஒரு சாதாரண ரிக்சா தொழிலாளிக்கு கிடைச்சிடுமா என்ன? பணம் 'பிரஸ்' வரையிலும் பாயும்!
நாலந்தரத் தூண்ணே!!!
மனசாட்சி தொட்டு சொல்லுங்க எசமான்.
குத்தவாளியோட பெயரையே (பிராக்கெட்டுல) மாத்திப் போடுற 'குடுப்பினை' ஒரு சாதாரண ரிக்சா தொழிலாளிக்கு கிடைச்சிடுமா என்ன? பணம் 'பிரஸ்' வரையிலும் பாயும்!
நாலந்தரத் தூண்ணே!!!
000
தாக்கரே...
பீகாரிகளைத் தேடித் தேடி
தாக்கப்படாத வகையிலே...
உங்கள் 'சாம்னா'
சாந்தியடையட்டும்!
பீகாரிகளைத் தேடித் தேடி
தாக்கப்படாத வகையிலே...
உங்கள் 'சாம்னா'
சாந்தியடையட்டும்!
000
நம்மோட நாளைய முதல்வர் விஜய், முதல்வரான பொறவு, அண்ணா சாலை சந்திப்புல, பார்த்துப் பார்த்து, ஒரு வரி விடாம படித்து, பேருரை ஆத்திட உதவும் 'பிட்டு' உபயம் சாணக்கியன் எஸ் ஏ சி.
என்ன பெட்டு கட்றீங்க?!
என்ன பெட்டு கட்றீங்க?!
000
எண்ணை தடவிய பளபள பிஸ்டலுடன் தோயர் தாபா.
என்ன சொன்னே?
சுத்தி, அருவாவா?
யாரு... அண்ணங்கிட்டயேவா?
பேசு. இப்ப்ப்ப்பப் பேசு.
ஜோடி போட்டுக்கிறுவமா ஜோடி...!!
என்ன சொன்னே?
சுத்தி, அருவாவா?
யாரு... அண்ணங்கிட்டயேவா?
பேசு. இப்ப்ப்ப்பப் பேசு.
ஜோடி போட்டுக்கிறுவமா ஜோடி...!!
000
பால் தாக்கரே 'பிரெஞ்சு தாடி' வச்சிருந்ததால, நம்ம நாட்டு மூவர்ணக் கொடியை போர்த்தி இருப்பாங்களோ?
000
கதை 'நாட்டு' கிடைச்சிடுத்து!
மணி ரத்னம் மல்லாக்கப் படுத்துக்கிட்டு சீன்-பை-சீனா திங்க் பண்ணுவாரு.
பால் தாக்ரே = பால் நாயக்கர்.
கதா நாயகன் = ரஜினி காந்து ( அவர்தானே மிஸ்டர் பாலை எங்க அப்பா மாதிரின்னு சொன்னவரு. யூஸ் பண்ணிக்க, ராசா.)
முசுலீம் பசங்களை ஈசியா தீவிரவாதியா காட்டிடலாம். மெனக்கெடத் தேவையில்லை!
மணி ரத்னம் மல்லாக்கப் படுத்துக்கிட்டு சீன்-பை-சீனா திங்க் பண்ணுவாரு.
பால் தாக்ரே = பால் நாயக்கர்.
கதா நாயகன் = ரஜினி காந்து ( அவர்தானே மிஸ்டர் பாலை எங்க அப்பா மாதிரின்னு சொன்னவரு. யூஸ் பண்ணிக்க, ராசா.)
முசுலீம் பசங்களை ஈசியா தீவிரவாதியா காட்டிடலாம். மெனக்கெடத் தேவையில்லை!
000
2 comments:
தேச ஒற்றுமைக்காக பாடுபட்டவங்களுக்கு மூவர்ண கொடி போர்த்தினா என்ன தப்பு?
அடடா.தேச ஒற்றுமை டவுசர் கிழிஞ்சு போச்சேஃ
Post a Comment