My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

23.11.12

தமிழன் உணர்வு பெற சாம்பார் பொடி சூரணம்... எனது முகநூலிலிருந்து... 23

ITCன் 'ஆசீர்வாத்' சாம்பார் பொடி சாப்பிட்டா, அதன் சுவை உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் 'அசல் தமிழனின் உணர்வை' தட்டி எழுப்புமாம். 


ஈழப் படுகொலை, மீனவர் படுகொலை, காவேரி, முல்லை பெரியாறு பிரச்சினை... இந்தக் கருமாந்திரங்கள் எல்லாம் தனக்கு எப்போது
ம் தமிழன் உணர்வைத் தரவே இல்லை என்று சுரணை மறத்துப் போனவர்கள், குறைந்த பட்ச்சம் இந்த சாம்பார் பொடியையாவது வாங்கி உபயோகித்து, அசல் தமிழனின் உணர்வை தட்டி எழுப்பிக் கொள்ளுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப் படுகிறது!





000





போபாலில் யூனியன் கார்பைடு விஷவாயுவைக் கக்கி 23,000 'இந்தியர்கள்' உயிரைப் பறித்த கொலைகாரன் ஆண்டர்சனுக்கு தூக்கு எப்போது?

அவனைத் தப்பவிட்ட இந்திய நாட்டின் அரசியல் குற்றவாளி துரோகிகளுக்கு இரட்டை ஆயுள் எப்போது?

ஓ... இந்த 23,000 'இந்தியர்களும்' இன் கம் டேக்ஸ் கட்டி, கோட்டு சூட்டு போட்டு, தாஜ் ஹோட்டல் வராண்டாவில் சுட்டுக்கொல்லப் பட்டிருந்தால், அந்த ஆண்டர்சனுக்கு தூக்கு கிடைத்திருக்குமோ?!!





000





ஒரு வன்னியன் முதல்வராகும் வரை ஓயமாட்டேன்னு யாரோ ஒரு தைலாபுரத்து தத்துவ ஞானி சொன்னாராமே?

வன்னிய ஜாதியிலயே 'ஒசத்தியாவும் மட்டமாவும்' ஏகப்பட்ட பிரிவு இருக்கு. இப்ப என்ன பிரச்சினைன்னா, தைலாபுரத்து ஞானி, வன்னிய ஜாதியில எந்த உட்பிரிவுல வர்றாருன்னு பாக்கணும்.

ஏன்னா, ஒருக்கா, ஒரு வன்னியன் ஒரு முதல்வராகும் கால கட்டத்துல, தன்னோட பிரிவு ஆளு முதல்வரா வரும்வரை கண்ணை மூடமாட்டேன்னு மொதல்லேர்ந்து ஆரம்பிப்பாரு!

வீர வன்னியர்களே, உசாரு!!





000





கசாப்பை கசாப்பே போடலை; சும்மா ஏமாத்துறாங்கன்னு ஆர்வக்கோளாறுகள் கூப்பாடு போடலாம் என்பதற்காகவே, தூக்குப் போட்டவர்கள் அதை செல்போன் வீடியோ எடுத்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படி எடுத்திருந்தா, கொஞ்சம் அன்னா அசாரேவுக்கு அவசரமா போட்டுக் காட்டிடுங்க. 





இந்த அருமையான அகிம்சாவாதி 'தூக்கை பப்பிளிக்குல போட்டிருக்கணும்...' அப்படீன்னு கூவறாராமே!!






No comments:

Post a Comment