கடேசில, அய்யரோட ஸ்ப்ளெண்டர் மைலேஜே குடுக்கலை!
000
"இதோ இது ஈர அரிசி. அதிரச மாவு; அதோ அந்த அலுமினியத் தூக்கு, முறுக்கு மாவு. எங்கண்ணு இல்லே, நீதான் என் ராசாக் குட்டியாம். மாவு மிஷினுக்கு போயி அரைச்சிட்டு வந்துடுவியாம்." - தீபாவளிப் பட்சணத்துக்கான அம்மாவின் ரிக்வெஸ்ட். ஏழு கடா வயசு ஏதிஸ்டான என்னால் மறுக்க முடியவில்லை!!
000
2ஜி' ஸ்பெக்ட்ரம்: ரூ.9 ஆயிரத்து 225 கோடிக்கு ஏலம் போனது - தினமலர்.
சிண்டிகேட் ஜிந்தாபாத்! (நம்மூரு மதுக்கடையை ஏலம் விடும் முறையை ஃபிளாஷ்பேக்கில் ஓடவிடவும்). ஆண்டிமுத்து ராஜா பக்கம் ஞாயம் கீதுபா அப்படீன்னு சொல்லத் தோணுமே?
000
தீபாவளி வாழ்த்து இப்படியும் இருக்கலாம்:
"நல்லெண்ணை நல்லெண்ணத்தை வளர்க்கும். தலைக்கும் குளிர்ச்சி தரும்; முடி வளரும். ஈழம் மலரும். சமத்துவம் பிளிரும். தீப ஒளியில் நல்லெண்ணை தேய்த்துக் குளித்து கும்மாளமிட்டு, புது உற்சாகம் பெற, இந்த தீப ஒளித் திரு நாளில் உடன் பிறப்புக்கள் யாவரும் சபதம் ஏற்போம். (யோவ், இதை ஒரு காப்பி எடுத்து அழகிரிக்கும் அனுப்பிடு. ஆ வூன்னா கோச்சிக்கிறாரு...)" - தானைத் தலைவன், கர

ுஞ்சட்டைமேல் மஞ்ச துண்டு சுற்றி அழகு பார்த்த பெரியாரின் பேரன், அண்ணாவின் தம்பி, கலைஞர்.
"பவர் கட் சமயத்தில் கரண்ட்டு வந்தால் எப்படிச் சந்தோஷம் பொங்குகிறதோ, அத்தகைய மகிழ்ச்சியை 'கட்' இல்லாமல் இலவசமாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை இந்த இனிய தீபாவளி நன்னாளில் பிரார்த்திக்கிறேன்." - அன்புள்ள அம்மா.
"தங்கத் தாரகை, ஈழத்தாய், மாண்புமிகு அம்மா தீபாவளி வாழ்த்தா என்ன சொன்னாங்களோ அதையேதான் நாங்களும் வழி மொழிகிறோம். அம்மா நாமம் வாழ்க!" - மந்திரிப் பட்டாளங்கள்.

உண்மையச் சொல்லுங்க தலிவரே, தீவாளி அன்னைக்கு எண்ணை தேய்ச்சு குளிச்சு, தரையில விழுந்து சாமி கும்பிடுவீங்கதானே? தீப ஒளித் திருநாள் அப்படீன்னு உங்க கலைஞர் டீவி வெளுத்து வாங்கறதால கேட்டேன்!
000
தீவாளி அன்னைக்கு தமிழ் நாடு பூராவும் பவர் கட்டு இருக்காதுங்கறேன். சாமி குத்தமாய்டும் அப்படீங்கறது ரெண்டாம் பட்ச்சம்தான்! எல்லா சானல் நிகழ்ச்சிகளையும் 'வயங்குபவர்கள்' நண்டு மார்க் லுங்கியிலிருந்து, ஓடாபோன் நாய்கள் வரை என்பதே உண்மை. துட்டுணே, துட்டு!
000
அப்புக் குள்ளன் கேரக்டர் எப்படிக் குள்ளமா இருந்துச்சி அப்படீன்னு அப்பவே ஒலக நாயகன் விளக்கி இருக்கலாம். அது என்னவோ பெரிய்ய கம்ப சூஸ்திரம் மாதிரி இவுரு கம்முன்னு கிடக்க, இப்பத்தி மூணாங்கிளாஸ் பையன் சீன் பை சீனா ரகசியத்தை புட்டுப் புட்டு ஒடைக்கிறான். கமலு, மொதல்லியே மருவாதியா சொல்லியிருக்கலாமில்லே? இப்போ பார், அசிங்கமாப் போயிடுச்சி!
000
'சேரியிலேயும் ஐய்யர் இருந்திருப்பார் எனும் ஒரே நம்பிக்கையில்தான் Splendor ஐய்யர் என்று பெயர் வைத்தோம்' அப்படீன்னு ஹீரோ கம்பெனி ஜெர்க்கு வாங்கியிருக்கலாம்.
000
"வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா..." - பதினெட்டு 'பொட்டி' ராசா, காடு வெட்டி குரு.
அப்போ, வன்னிய இன ஆண்கள் கலப்புத் திருமணம் செய்துக்கிட்டா, 'நறுக்கிடலாமா...?'
அப்போ, வன்னிய இன ஆண்கள் கலப்புத் திருமணம் செய்துக்கிட்டா, 'நறுக்கிடலாமா...?'
000
அன்னைக்கு, அரிசன்னு சொல்லி காந்தி தலித்துக்களை அஹிம்சா வழியில இழிவு படுத்த ஆரம்பிச்சது.... இன்னைக்கு வெட்டுங்கடான்னு காடு வெட்டி வரையிலும் தொடருது.
'நாளைக்கு ஒரே மேடையில உக்காந்தா, ராமதாசு மூஞ்சில எப்படி முழிக்கிறதுன்னு' வெட்கப்பட்டு கம்முன்னு கிடக்குற தலித் தலைவருங்க, குறைந்தபட்ச்சம் பான்-கி-மூனை ஐநாவுல சந்திச்சி, ஏதாவது ஆக்சன் எடுக்கச் சொல்லி அப்பிளிகேசன் குடுக்கலாம்!!

கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்கிறேன்: 'தனித்தெலுங்கானா புகழ்' சந்திரசேகரராவ் .
இந்த டீலிங் அவருக்கு ரெம்பப் புடிச்சிருக்காம். பாவம்; கணபதி அய்யர் பேக்கரியை எவ்வளவு நாள்தான் லாபத்துல போறாமாதிரியே மெயிண்டெய்ன் பண்றது?
இந்த டீலிங் அவருக்கு ரெம்பப் புடிச்சிருக்காம். பாவம்; கணபதி அய்யர் பேக்கரியை எவ்வளவு நாள்தான் லாபத்துல போறாமாதிரியே மெயிண்டெய்ன் பண்றது?
000
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, இந்த மணி ரத்னம் படத்து பாடல் மட்டும் எப்பவுமே 'எம்டிவி அன்பிளக்டுல' கோர்த்து விட்டுருவாங்க. கவுரவமாம். அப்புறம், படத்துமேல ஒரு இது வருமாம்! இதுக்கு மின்னாடி, தளபதி படம் ராக்கம்மா கையத் தட்டு பாட்டுதான் உலகத்திலியே அதிகமா கேக்கப்பட்டதுன்னு பிபிசிய வச்சி ஒரு புருடா வுட்டாங்க. மேலிடத்து விவகாரம்; யார் யாரைக் காக்கா புடிச்சா இது நடக்கும்னு அவங்களுக்கு தெரியுது. ஒசந்த சாதி இல்லையா? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்.
000
கடேசி பேருந்து புறப்படும் நேரத்தில் ஞாபகம் வந்தது... ஈறு நம நமங்குதுன்னு பத்து ரூபாய்க்கு காராசேவு கேட்ட ஆயாவின் கோரிக்கை. பேருந்தை விட்டால் கோயிந்தா. சரம் சரமாய்த் தொங்கியிருந்த 'லேய்ஸ்' ரெண்டு பாக்கெட்டு பிய்த்து எடுத்துக்கொண்டு, பத்து ரூபாயை கடைக்காரன் கையில் திணித்துவிட்டு, நான் பேருந்தில் திணிந்துகொண்டேன்.
மறு நாள் காலையில் ஆயா வீட்டு வாசலைப் பெருக்கிகொண்டே என் காதுக்கு விழும்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. "செறிக்குமாடா அந்த பத்து ரூபா...! வாந்தி பேதி வந்து வாறிக்கிட்டு போவ... மூணு மூணா எண்ணி வெச்சிருக்கானுங்க. பொறம்போக்குப் பசங்க."
நல்ல வேளை, ஆயா என்னைத் திட்டலை!

தென் மாவட்ட சாதி வெறியர்களுக்கு வெற்றி மேல் வெற்றி. கொளுத்தி போட்டுவிட்டு குளிர் காயும் அரசியல் பொறுக்கிகள். அரசு சோடை போனதா அல்லது துணை போனதா?
000
'ஹையங்காரால்' மட்டுமே முடியும் என்று சின்மயியிசம் மகிழும்.
சி.வி. ராமன் பிறந்த நாள்.
சி.வி. ராமன் பிறந்த நாள்.
000
கப்பல் ஊழியர்களை துணிந்து காப்பாற்றிய 5 மீனவர்களுக்கு தலா ஒரு லட்சம். மெத்தனமாய் இருந்த இந்தியக் கப்பல் படைக்கு எவ்வளவு அபராதம்?
000
"One must divide one's time between politics and equations. But our equations are much more important to me, because politics is for the present, while our equations are for eternity." -Albert Einstein...
என்னைய்யா, இந்தாளு இப்படிக் குழப்பறாரு?
அல்ல்லோ மிஸ்டர் எய்ன்ஸ்டின், ஈக்குவேஷன் மட்டும் படிச்சா நாக்குத்தான் வழிக்கணும். பாலிடிக்ஸ் பாலபாடமாவே இருக்கணும் காணும். சோறு திங்கணுமில்லே?!
என்னைய்யா, இந்தாளு இப்படிக் குழப்பறாரு?
அல்ல்லோ மிஸ்டர் எய்ன்ஸ்டின், ஈக்குவேஷன் மட்டும் படிச்சா நாக்குத்தான் வழிக்கணும். பாலிடிக்ஸ் பாலபாடமாவே இருக்கணும் காணும். சோறு திங்கணுமில்லே?!
000
Obamaa........
சரி. வந்துட்டாரு. இனிமே வீட்டுக் கடன் அடைஞ்சிடுமா; வீட்டை திருப்பிக் குடுத்துடுவாங்களா; இல்லே தெருவுலதான் நிக்கணுமா; புதுசா எந்த நாட்டை பதம் பாக்கப் போறாரு?... ஒரு நல்ல சீட்டா எடுத்துப்போடு தாயி...
3 comments:
nalla irukke. samy
நன்றாக எழுதுகிறீர்கள் கிண்டலுடன்...I like it..
நன்று.
எல்லாஞ்சரி, கிருஷ்ணய்யர் கபே ஓ.கே.,குல்பி ஐயர் ஓ.கே., கணபதி ஐயர் பேக்கரி ஓ.கே.ங்கும்போது ஸ்ப்ளெண்டர் ஐயர் மட்டும் என்ன நாட் ஓ.கே.ங்கறேன்.
Post a Comment